SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Μην παραλείψεις να επισκεφτείς τη σελίδα του podcast και να στηρίξεις τον δημιουργό: www.sbs.com.au
Πού να ακούσεις;
Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομαΤα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast
Επεισόδια
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை 16.10.2026 8:56
அவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வர...
இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 16.10.2026 4:23
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)
2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்? 15.10.2026 15:01
நோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்...
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026) 15.10.2026 8:33
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026)
யானைச் சாணத்தால் செய்யப்பட்ட பொருளுடன் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி 15.10.2026 2:20
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு யானைச் சாணத்தால் செய்யப்பட்ட Fridge Magnets-ஐ பயணி ஒருவர் கொண்டுவந்தமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
Stroke-பக்கவாதத்தின் அறிகுறிகள் எவை? 15.10.2026 12:27
Stroke/பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவர் சுமிதா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருது வாங்கிய திரைப்படம் 15.10.2026 14:48
திரைக்கு வருவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்ற திரைப்படமான “To Let" திரைப்படத்தின் இயக்குனர் செழியன் அவர்களுடன் ஒரு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Interview with Chezhiyan, the director of "To Let" movie
Payday Super: மூன்றே மாதங்களில் இரட்டிப்பான சூப்பர் கொடுப்பனவுகள் 15.10.2026 9:15
Superannuation ஓய்வூதியநிதியில் சேர வேண்டிய தொகை இப்போது சம்பளம் கொடுக்கப்படும் போதே செலுத்தப்படுகிறது. இந்த மாற்றம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் செலுத்தத் தவறிய தொகைகளைக் கண்டறிவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 14.10.2026 5:06
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
எக்கிட்னா: ஆஸ்திரேலியாவின் முள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள் 14.10.2026 9:17
எக்கிட்னா ஆஸ்திரேலியாவின் மிகவும் வித்தியாசமான உயிரினங்களில் ஒன்று. அதன் அபூர்வமான வாழ்க்கை முறை மற்றும் தனிச்சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Echidna: Australia’s fascinating spiny mammal
தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்! 14.10.2026 2:33
Northern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன? 14.10.2026 15:32
இளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோட...
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன? 14.10.2026 18:41
ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Liv...
வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்? 14.10.2026 12:55
சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்கள...
இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை 14.10.2026 4:00
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
சுமார் 43 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள் 13.10.2026 8:32
இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜூலை கலவரத்திற்கு அரசிடம் நீதிவிசாரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Tamil people still waiting for justice after nearly...
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம் 13.10.2026 2:19
விக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம் 13.10.2026 2:33
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - புதன்கிழமை 13.10.2026 4:45
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுகிறது? 12.10.2026 9:30
How are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? யர்ரா நதி என்றும் அழைக்கப்படும் பரரங் பற்றிய வுருண்ட்ஜெரி மூத்தவரான David...
Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி? 12.10.2026 14:11
Money Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிற...
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 12.10.2026 8:40
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி; ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய் சந்திப்பு; இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 12 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 12.10.2026 4:31
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
13 கோடி பெயர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வீதிக்கு வந்த இளைஞர்கள் 11.10.2026 9:06
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026) 09.10.2026 6:14
ஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)
Παρόμοια podcast
Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS