SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Επεισόδια: 2198

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Δημιουργός

SBS

Κατηγορία

News

Ιστοσελίδα του podcast

www.sbs.com.au

Τελευταίο επεισόδιο

11 Ιουλ 2026

Πού να ακούσεις;

Podcast στην εφαρμογή Replaio Radio Έρχεται σύντομα

Τα podcast έρχονται σύντομα στην εφαρμογή. Εγκατάστησέ την τώρα και δες πρώτος μια εντελώς νέα προσέγγιση στα podcast

Κατέβασέ το από το Google Play Δωρεάν εγκατάσταση Android 5 εκατ.+ λήψεις · βαθμολογία 4,8 iOS σύντομα

Επεισόδια

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஜூலை 2026) 11.07.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (5 – 11 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

இந்தியப் பிரதமரின் ஆஸ்திரேலியப் பயணம்: இருதரப்பு உறவை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லுமா? 10.07.2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியா இந்திய உறவு எந்த திசையில் நகர்கிறது என்பதை அளவிடும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. யுரேனியம் ஏற்றுமதி உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்திய பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகக் கோப்பை தினசரி: அரையிறுதிக்கு சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது 10.07.2026

ஃபிஃபா உலகக் கோப்பையின் 29-வது நாளில், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. Kylian Mbappé எட்டு கோல்களுடன் Lionel Messi [[lee-oh-NEL MESS-ee]] அடித்த கோல்களுடன் சமநிலையை எட்டிய அதே வேளை, Ousmane Dembélé பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தொன்பதாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் க...

Qantas இழப்பீடு தொடர்பான SMS: மோசடி என்று நினைத்து தவறவிடாதீர்கள்! 10.07.2026

Qantas கோவிட் Flight Credit வழக்கில் இழப்பீடு பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு Qantas நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

தமிழுக்கு தனி அடையாளம் தந்த தனித்தமிழின் தந்தை 10.07.2026

தமிழ்மொழி அதன் சொந்தச் செழுமையோடும் தனித்தன்மையோடும் வளர வேண்டும் என்று வலியுறுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவர் மறைமலை அடிகள். எழுத்தாளர், சைவ சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி என பல தளங்களில் அவர் நினைவுகூரப்படுகிறார். மறைமலை அடிகள் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

தமிழர்களும் ஏன் NAIDOC வாரத்தைக் கொண்டாட வேண்டும்? 10.07.2026

NAIDOC வாரம், இந்த வருடம் ஜூலை 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. NAIDOC வாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு நேர்காணல். Dr ராமா ஜெயராஜ் அவர்கள், சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர். உயர்கல்வியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், தமிழ், மற்றும் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராயும் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளரும் ஆவார். பூர்வீகக் குடிமக்கள...

ஆஸ்திரேலியர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமாகவா? 10.07.2026

ஆஸ்திரேலியர்கள் முன்பைவிடத் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கையாக இருக்கிறதா? Australian Institute of Health and Welfare (AIHW) வெளியிட்டுள்ள "Australia's Health 2026" அறிக்கை, நாட்டின் தற்போதைய சுகாதார நிலை குறித்த முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 10 ஜூலை 2026 -வெள்ளிக்கிழமை 10.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 09.07.2026

வடக்கு . கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்; சமூக ஊடக செயற்பாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகக் கோப்பை தினசரி: அரையிறுதி இடத்திற்காக ஃபிரான்சும் மொராக்கோவும் மறுபடியும் மோதுகின்றன 09.07.2026

ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள், வெள்ளிக்கிழமை அன்று, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியுடன் மீண்டும் தொடங்குகிறது. கத்தார் நகரில் 2022 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதியிருந்தன. மொராக்கோ தனது பழிவாங்கலைத் தீர்க்குமா, அல்லது பிரான்ஸ் மீண்டும் வெற்றி பெறுமா? உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொக...

உங்களுக்கு வரும் SMS உண்மையானதா? இனி தெரிந்துகொள்ளலாம் 09.07.2026

ஆஸ்திரேலியாவில் SMS Sender ID தொடர்பான புதிய விதிமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், நிறுவனங்களின் பெயரில் வரும் குறுஞ்செய்திகள் உண்மையானதா என்பதை மக்கள் எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதை றைசெல் விளக்குகிறார்.

எல்லோரும் சேர்ந்து பேசுவார்கள்... செய்பவர்கள் ஒரு சிலரே! 09.07.2026

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியத்தையும், மக்களிடையே ஒழிந்திருக்கும் கலை வளங்களையும் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறனுடன் நிரந்தரப் படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும்...

‘50 Years of Deadly’: ஆஸ்திரேலியாவின் பூர்வீக மக்களின் வரலாறும் வலியும் — NAIDOC வாரம் என்றால் என்ன? 09.07.2026

NAIDOC வாரம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமக்களான Aboriginal மற்றும் Torres Strait தீவு மக்களின் வரலாறு, பண்பாடு, மொழிகள் மற்றும் சாதனைகளை கொண்டாடும் தேசிய நிகழ்வாகும். இந்த ஆண்டின் கருப்பொருள், ‘50 Years of Deadly’. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. NITVயின் கூடுதல் செய்தியறிக்கையோடு இந்த செய்தியின் பின்னணியை ஆங்கிலத்தில் தயாரித்தவர் SBS News யின் Angelica Waite. தமிழில் முன்வைத்தவர் றைசெல...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் 09.07.2026

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அரும்பிய ஆயுர்வேதம் வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும் என்றும் அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வர்மக் கலை பற்றி உரையாடுகிறார் சிட்னியில் ஆயுர்வேத மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் நிக்கிலா வேணுகோபால். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

வயிற்றுப் பொருமல் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? 09.07.2026

நமது வயிறு மற்றும் சமிபாட்டுத் தொகுதியைப் பாதிக்கக்கூடிய சில நோய்நிலைமைகள் உட்பட சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் Gastroenterologist குமணன் நலங்கிள்ளி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

இன்றைய செய்திகள்: 09 ஜூலை 2026 - வியாழக்கிழமை 09.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 09/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

NSWஇல் வேகம் தொடர்பான சாலை விதியில் மாற்றம் 08.07.2026

வாகன ஓட்டிகளுக்கு ஒரு நல்ல செய்தி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், சாலைப் பணி நடக்கும் பகுதிகளில் விதிக்கப்படும் வேக வரம்புகள் தொடர்பாக இந்த மாதம் முதல் ஒரு முக்கிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை: வாங்க நல்ல நேரமா? காத்திருக்க வேண்டுமா? 08.07.2026

ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலைகள் குறைந்து வருவதாக செய்திகள் உறுதி சென்கின்றன. இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய property market எப்படி நகர்கிறது? Queensland இன்னும் வலுவான சந்தையா? குறிப்பாக Cairns மீது வாங்குபவர்களின் கவனம் ஏன் அதிகரித்துள்ளது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் Cairns நகரில் real estate agentயாக பணியாற்றும் விஜி அவர்கள். விஜி லட்சுமி அவர்கள் One Agency Cairns நிறுவனத்தில...

உலகக் கோப்பை தினசரி: ஆர்ஜென்டினாவும் சுவிட்சர்லாந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின 08.07.2026

எகிப்துக்கு எதிராக ஆர்ஜென்டினா அபாரமான மீள் எழுச்சியுடனான வெற்றியை உறுதிப்படுத்தியதாலும், பரபரப்பான பெனால்டி கோல்கள் அடித்து கொலம்பியாவை சுவிட்சர்லாந்து வீழ்த்தியதாலும், உலகக் கோப்பையின் காலிறுதி அணிகள் இப்போது உறுதியாகிவிட்டன. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தேழாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

விக்டோரியாவில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான போட்டியில் எவ்வாறு பங்கேற்கலாம் ? 08.07.2026

விக்டோரியாவில் நடக்கவுள்ள Young Scientist போட்டியில் எவ்வாறு பங்கேற்கலாம்? பதிவு செய்வது எப்படி? போட்டியின் சிறப்பம்சங்கள் என்ன? போன்ற அனைத்து தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிரார் VJ Academy-யின் நிறுவனர் விஜிஷா வெங்கட்ராம் அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.

ஆஸ்திரேலியா முழுவதும் Telstra சேவை முடக்கம்: ரயில் சேவைகள் பாதிப்பு! 08.07.2026

தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra-வின் மொபைல் மற்றும் இணைய சேவைகள் திடீரென முடங்கியதால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உட்பட ரயில் வலையமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 08 ஜூலை 2026, புதன்கிழமை 08.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 08/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 27 பேர் உயிரிழப்பு 07.07.2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதலில் 27 பேர் உயிர் இழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் செய்திகள் உறுதி செய்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

ஆஸ்திரேலியா வரும் இந்திய பிரதமருக்கு இணைய கொலை மிரட்டல்! 07.07.2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையம் வழியாக விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை தொடர்ந்து ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஏன் வேகமாக உயருகிறது? 07.07.2026

கடந்த ஆண்டில் மட்டும் 25,000-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் புதிய கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Άκου το podcast SBS Tamil - SBS தமிழ் στο Replaio

Ραδιόφωνο και podcast σε μία εφαρμογή - δωρεάν, χωρίς εγγραφή. Εγκατάστησέ την σήμερα και μη χάσεις την πρεμιέρα

Κατέβασέ το από το Google Play

Το Replaio δεν είναι εκδότης podcast - τα ονόματα των εκπομπών, τα εξώφυλλα και ο ήχος ανήκουν στους δημιουργούς τους και διανέμονται μέσω δημόσιων ροών RSS