SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: www.sbs.com.au
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் 14.09.2026 10:51
வீட்டுக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Secure Lending Solutions என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்
‘சதையைத் தின்னும்’ புண்: ஆஸ்திரேலியாவில் பரவும் Buruli ulcer குறித்து புதிய ஆய்வு 14.09.2026 8:39
வெப்பமான காலநிலை தொடங்குவதையடுத்து, கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் ஒரு வகை தோல் நோய் குறித்து மருத்துவ மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். ‘Flesh-eating’ ulcer: New research into the spread of Buruli ulcer in Australia
இன்றைய செய்திகள்: 14 செப்டம்பர் 2026 - திங்கட்கிழமை 14.09.2026 4:55
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 13.09.2026 9:41
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம்; திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு! வலுக்கும் கண்டனங்கள்; தமிழக இடைத்தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். India & Tamil Nadu: News highlights from the past 7 days
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) 12.09.2026 5:57
ஆஸ்திரேலியாவின் இந்த வார (06 செப்டம்பர் – 12 செப்டம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடம் 11.09.2026 2:42
ஆஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் விக்டோரியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Prostate cancer in Australia: Testing, treatment and support - புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 11.09.2026 11:41
About one in five Australian men will be diagnosed with prostate cancer in their lifetime. Understanding the prostate, your risk and the options for testing can help with early detection and treatment. In this episode of Australia Explained, learn about prostate cancer, PSA testing, treatment and support. - ஆரம்ப கட்டங்களில் புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை....
Sunscreen சர்ச்சை - SPF50 பாதுகாப்பில் கேள்விக்குறி 11.09.2026 8:15
ஆஸ்திரேலியாவில் SPF50+ என விற்பனை செய்யப்பட்ட சில சன்ஸ்கிரீன்கள், எதிர்பார்த்த அளவிலான சூரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்ற சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் சந்தையில் இருந்து மீளப்பெறப்பட்ட நிலையில், அவற்றின் உற்பத்தியாளர் Wild Child Laboratories மீது தற்போது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 11 செப்டம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 11.09.2026 4:53
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 11/09/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். Today's highlights ( 11 September 2026 - Friday)
SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்! 10.09.2026 11:04
SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். What’s popular on SBS On Demand
ஆஸ்திரேலிய மணலில் மலர்ந்த இயற்கை அதிசயம்! 10.09.2026 8:41
வெண்மணல் கடற்கரை… பளிங்கு போன்ற நீர்நிலைகள்… மணலில் வளரும் மழைக்காடுகள்… இயற்கை இவ்வளவு அழகாக ஒன்றாகச் சேரும் இடங்கள் உலகில் மிகச் சிலவே. அத்தகைய ஓர் இயற்கை அதிசயம்தான் Fraser Island — இன்று K’gari என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மணல் தீவு. UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தத் தீவின் அழகு, வரலாறு மற்றும் ஆச்சரியமூட்டும் சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் அறிமுகப்ப...
'No one looks Aussie': Photos of missing Australians in Nepal-Tibet floods prompt racist comments - துயரத்திலும் இனவெறியா? நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்த கருத்துகள் 10.09.2026 7:01
Amid the death and devastation of the Nepal-Tibet floods, racism is emerging on social media platforms. - நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தத் துயரத்துக்கும் பேரழிவுக்கும் மத்தியில், ஒரு குறிப்பிட்ட வகையான இனவெறி வெளிப்பட்டுள்ளது.
பிள்ளை வளர்ப்பு பராமரிப்பாளர்(Foster carer) ஆவது எப்படி? 10.09.2026 11:29
Foster carer - பிள்ளை வளர்ப்பு பராமரிப்பாளர் ஆவது எப்படி ? மேலும் இதில் கலாச்சார பின்னணி எவ்வாறு பெரிதும் பங்களிக்கிறது? என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார் பிரிஸ்பனை சேர்ந்த சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. How to become a foster carer?
வீட்டுக் கடனை அடைக்க ஓய்வூதிய நிதி – ஆஸ்திரேலிய அரசியலில் புதிய போர்க்களம் 10.09.2026 10:01
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், வாடகை கட்டவோ, வீட்டுக் கடனை (mortgageஐ) அடைக்கவோ சிரமப்படும் ஆஸ்திரேலியர்கள் ஏராளம். இந்த நிலையில், "உங்கள் ஓய்வுகாலத்துக்காகச் சேமிக்கப்படும் Superannuation பணத்தில் ஒரு பகுதியை, இப்போதே வாடகை அல்லது வீட்டுக் கடனுக்குப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்ற கேள்வி இப்போது ஆஸ்திரேலிய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்த செய்தியின்...
உளவியல் பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் எங்கே உதவி பெறலாம்? 10.09.2026 15:55
ஆஸ்திரேலியாவில் பல murder-suicide சம்பவங்களை, அதாவது ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியான மனநிலைக்கு ஒருவர் செல்வதற்கான காரணம் என்ன? இதனை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பில் மனநல மருத்துவர் அமுதநிலா காசியானந்தன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 10 செப்டம்பர் 2026 - வியாழக்கிழமை 10.09.2026 4:53
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 10/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
தொழிலாளர்களுக்கு விரைவான தொழில்துறைத் தகுதிகள்: ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை 09.09.2026 2:14
கட்டுமானத் துறையில் ஏற்கனவே அனுபவமும் திறனும் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, தங்களது தொழில்துறைத் தகுதிகளை விரைவாகப் பெறுவதற்கான லேபர் அரசின் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
உங்கள் Social Media Feed-ஐ முடிவு செய்வது நீங்களா? – புதிய சட்டம் வருகிறது 09.09.2026 7:51
சமூக ஊடகப் பயன்பாட்டில் அல்காரிதம்களின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், புதிய digital duty of care சட்ட முன்வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
பறை இசை – பாரம்பரியமும் புதிய தலைமுறையும் 09.09.2026 11:12
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தமிழர்களின் பாரம்பரிய இசைக்கலையான பறை இசை, புதிய தலைமுறையினரை சென்றடைகிறதா? இதன் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் ஆர்வம் குறித்து மெல்பன் பறை இசைக் கலைஞர்களுடன் உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன். #sbsaudiopodcast
உளவியல் ஆலோசனையை AI வழங்க முடியுமா? 09.09.2026 14:16
அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் சுமார் 20 சதவீதமானோர் (19.2% பேர்), சோகம், கோபம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணரும்போது ChatGPT, Gemini, Character. AI மற்றும் Meta AI போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) chatbotsஐப் பயன்படுத்தி ஆலோசனை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டில் இந்த அளவு 13.1% ஆக இருந்தது; அதேவேளையில், மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்ற...
இன்றைய செய்திகள்: 09 செப்டம்பர் 2026 - புதன்கிழமை 09.09.2026 4:43
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/09/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
நாமல் ராஜபக்ஸ கைது விவகாரம் – பின்னணி என்ன? 09.09.2026 8:33
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இன்றைய செய்திகள்: 08 செப்டம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 08.09.2026 4:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 08/09/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
குடும்ப உறவில் நிதி வன்முறை: உரிமைகளும் பாதுகாப்பும் 07.09.2026 11:41
குடும்ப உறவில் நிதி வன்முறையை ஒருவர் எவ்வாறு அடையாளம் காண்பது? மேலும் நிதி குறித்து அவர்களின் உரிமைகள் யாவை? அதனை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்ப...
Private health insurance மாற்றங்கள்: மாநிலங்களின் எதிர்ப்பை மீறி முன்னேறும் பெடரல் அரசு! 07.09.2026 8:31
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தனியார் மருத்துவக் காப்பீட்டுத் தள்ளுபடியைக் குறைக்கும் பெடரல் அரசின் திட்டத்திற்கு மாநில மற்றும் பிராந்திய அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். Private health insurance changes: Federal government pushes ahead despite opposition from the states!
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály