uk

SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Епізодів: 2675

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: www.sbs.com.au

Автор

SBS

Категорія

News

Сайт подкасту

www.sbs.com.au

Останній епізод

2 лис 2026

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

How people shape change, and why your voice matters - மக்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறார்கள், உங்கள் குரல் ஏன் முக்கியமானது 26.10.2026

Can a small group change a local council decision? Through Julie’s community campaign, Padma’s reflections and practical examples including voting, petitions and contacting representatives, this episode explores how everyday actions can make people’s voices heard. - ஒரு சிறிய குழுவால் உள்ளூராட்சி மன்றத்தின் முடிவை மாற்ற முடியுமா? ஜூலியின் சமூகப் பிரச்சாரம்; வாக்குப்பதிவு, மனுக்கள் சமர்ப்பித்தல், ம...

Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு 26.10.2026

Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்...

போலியோ இல்லா உலகை நோக்கி… சிட்னியில் ஒரு விழிப்புணர்வுப் பயணம்! 26.10.2026

போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, Rotary Club-ன் அனுசரணையுடன் உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ரயில் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வரும் மார்க் மற்றும் அவருடன் பயணித்த ரெங்கராஜன் ஆகிய இருவருடன் இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Sydney train travel challenge raises awareness to...

மறைந்தார் செஃப் தாமு : SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் 26.10.2026

தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செஃப் தாமு அவர்கள் சமையல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது எமக்கு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவ...

Superannuation பணத்தை முன்கூட்டியே எடுப்பது ஏன் அதிகரிக்கிறது? 26.10.2026

ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களது Superannuation ஓய்வூதியச் சேமிப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Why is the early withdrawal of superannuation increasing?

இன்றைய செய்திகள்: 26 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை 25.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 25.10.2026

தமிழக அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்! ; கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு; திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்ட பரபரப்புத் தகவல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (18 – 24 அக்டோபர் 2026) 23.10.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (18 – 24 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (18 – 24 October 2026)

கதைகளும் அனுபவங்களும்: ஆஸ்திரேலியாவில் கதை சொல்லி பவா செல்லத்துரை 23.10.2026

தமிழுலகு நன்கறிந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது நிகழ்வுகள் பிரிஸ்பேன், மெல்பன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன. அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்தும் கதை சொல்லல் அனுபவம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

கொழும்பு–பெர்த் நேரடி விமான சேவை குறித்து SriLankan Airlines பரிசீலனை 23.10.2026

SriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

What does it mean to be an upstander? - பிறரின் நலனுக்காகத் துணிந்து நிற்பது என்றால் என்ன? 23.10.2026

Advocacy groups and researchers have called for more upstander intervention to combat racism and discrimination. What happens when someone steps in to help? - ஒருவர் துன்புறுத்தப்படுவதையோ, இனவெறி அடிப்படையில் அவமதிக்கப்படுவதையோ நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? #sbsaudiopodcast - #sbsaudiopodcast

இந்தவாரம் திறக்கப்படும் புதிய விமான நிலையம் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை 23.10.2026

மேற்கு சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில், விமானப் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கவுள்ளன? விமானக் கட்டணங்கள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை 23.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (23 October 2026 - Friday)

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 17 – 23, 2026) 22.10.2026

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 17 – 23) என்று கடந்த 07 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 17 – 23, 2026)

வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம் 22.10.2026

ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Wombat...

சாலைகளில் ஓடும் கார்கள் இனி வானிலும் பறக்குமா? Teslaவின் புதிய தொழில்நுட்பம்! 22.10.2026

Tesla நிறுவனம் புதிய Roadster கார் - பறக்கும் கார் ஒன்றை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து பறக்கும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தக் காரின் தொழில்நுட்பம் என்ன? இது உண்மையிலேயே பறக்குமா? இதன் விலை என்ன? என்று பல கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். Will cars soon tak...

மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்திற்கு அவசியமான குறிப்புகள்! 22.10.2026

விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்த கலந்துரையாடல். இதில் பங்குபெறுபவர்கள் பயண முகவர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட யசோ ஷண்முகசோதி மற்றும் ஹோட்டல் வர்த்தகத்தில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட ரவி நானா. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Travel tips for holiday travellers!

குழந்தையா, வேலையா? - 12 ஆண்டுகளாக மாறாத கர்ப்பகால பாகுபாடு 22.10.2026

‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல பெண்களுக்கு, இதே சொற்களை வேலையிடத்தில் சொன்ன நாளிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன, பதவி உயர்வு கை நழுவுகிறது, வேலை நேரம் குறைகிறது, சில நேரங்களில், வேலையே பறிபோகிறது. இது ஒரு சிலரின் கதை அல்ல - பரவலான, ஆழமான பிரச்சனை என்கிறது இந்த வாரம் வெளியான ஒரு தேசிய அறிக்கை. இது குறி...

இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை 21.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 22/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

வன்முறை உறவிலிருந்து வெளியேறுவோருக்கான சட்டப் பாதுகாப்பும் நிதி உரிமைகளும் 21.10.2026

குடும்ப வன்முறை உறவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருளாதார ரீதியாக உள்ள உரிமை என்ன? அதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sb...

உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நிதி தேவையா? என்னென்ன தெரிவுகள் உள்ளன? 21.10.2026

வணிகங்கள் வங்கிக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Finance & Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast

இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2026, புதன்கிழமை 21.10.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசாரர் என்கின்ற பௌத்த துறவியின் விவகாரம் 20.10.2026

நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசார தேரர் விவகாரம்; அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பௌத்த பிக்குகள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

பெருநகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்குக் குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன? 20.10.2026

ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு regional-பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast

நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines மீதான தாக்குதலை நடத்தியது யார்? பிந்திய தகவல்கள் 20.10.2026

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines, விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே வாகனம் மோதியதில் ஆபத்தான நிலையில் உள்ளார். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் என வர்ணிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் A warning this story contains distressing descriptions, please listen with care.

Слухайте подкаст SBS Tamil - SBS தமிழ் у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали