SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Podcast'in sitesini ziyaret etmeyi ve yapımcısını desteklemeyi unutma: www.sbs.com.au

Yazar

SBS

Kategori

News

Podcast web sitesi

www.sbs.com.au

Son bölüm

11 Tem 2026

Nereden dinlenir?

Uygulamada podcast'ler Replaio Radio Çok yakında

Podcast'ler çok yakında uygulamaya geliyor. Şimdi yükle ve podcast'lere yepyeni bir bakışı ilk gören sen ol

Google Play'den indir Ücretsiz yükle Android 5 Mn+ indirme · 4,8 puan iOS yakında

Bölümler

இன்றைய செய்திகள்: 22 ஜூன் 2026 -திங்கட்கிழமை 22.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/06/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்

MiniPod: Banger | Words we use - சிறு வலையொலி: Banger | நாம் பயன்படுத்தும் சொற்கள் 22.06.2026

Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like ‘Banger’. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். Banger போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொ...

உலகம்: கடந்த வார செய்திகளின் தொகுப்பு 21.06.2026

ஈரான்- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; லெபனானை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்; பிரிட்டன் பிரதமருக்கு நெருக்கடி; ஜி7 உச்சிமாநாடு; அல்பேனியாவில் டிரம்ப் மருமகனுக்கு எதிராக போராட்டம்; பொலிவியாவில் அவசர நிலை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (14 – 20 ஜூன் 2026) 20.06.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (14 - 20 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

உலகக் கோப்பை தினசரி: அடுத்த சுற்றுக்கு மெக்சிக்கோ முன்னேறியது, வரலாறு படைத்தது கனடா 19.06.2026

எட்டாவது நாள் ஆட்டங்களில் கொரியக் குடியரசு அணியை வீழ்த்தியதன் மூலம், FIFA உலகக் கோப்பை 2026™இன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை மெக்சிக்கோ அணி பெற்றது. அதே நேரத்தில், கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா வரலாறு படைத்தது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து தனது நிலையை வலுப்படுத்தியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் எட்டாம் நா...

ஆஸ்திரேலியாவில் குடிவரவாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 3 லட்சத்தைத் தாண்டியது! 19.06.2026

ஆஸ்திரேலியாவில் 2025 ஆம் ஆண்டில் நிகர வெளிநாட்டுக் குடிவரவு-NOM 301,000 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் Capital Gains Tax சீர்திருத்தங்கள் – யார் பயனடைவர்? 19.06.2026

ஆஸ்திரேலியாவில் முதலீட்டாளர்கள் மற்றும் சிறு வணிகங்களை பாதிக்கக்கூடிய முக்கிய வரி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CGT எனப்படும் Capital Gains Tax (மூலதன ஆதாய வரி) தொடர்பான இந்த புதிய சீர்திருத்தங்கள் பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 19 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை 19.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

Waratah Seed-1: ஆஸ்திரேலியாவின் சிறிய செயற்கைக்கோள், பெரிய விண்வெளிக் கனவு! 19.06.2026

சிட்னி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் Iver Cairns அவர்கள் ஆஸ்திரேலியாவின் முன்னணி விண்வெளி அறிவியலாளர்களில் ஒருவர். Space physics, space weather, solar research மற்றும் satellite technology துறைகளில் பல ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் முதல் ride-share satellite mission ஆன Waratah Seed-1 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். Waratah Seed-1 satellite-இன் முக்கியத்துவத்தை Su...

Are electric vehicles worth it in Australia?| Fuel in Focus - ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்கள் உண்மையில் பயனுள்ளதா? 19.06.2026

Electric vehicles are becoming more common on Australian roads as fuel prices remain unstable and more drivers look for cheaper ways to travel. Here's what you need to know if you are thinking about making the switch. - கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்தை உணர்ந்து, மின்சார வாகனத்திற்கு மாற நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் உள்ள ஓட்டுநர்...

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 18.06.2026

இலங்கையில் மிகப்பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ள செம்மணி; சூடு பிடித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் 18.06.2026

ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்த புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை கடும் ஏற்பாடுகள்; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்; தொடரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

தனது தமிழ் அடையாளம் குறித்து நிஷான் வேலுப்பிள்ளை கூறும் பதில்! 18.06.2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணியான Socceroos அணியில் இடம்பெற்றிருப்பவர் தமிழ் வேர்களைக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை. Melbourne-ல் வளர்ந்த இளம் வீரரான Nishan, தனது திறமை, வேகம் மற்றும் அர்ப்பணிப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது அவருக்கான தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம். நிஷான் வேலுப்பிள்ளை SBSயின் Sunil Awasthiக்கு வழங்கிய ஆங்கி...

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் முதல் 10 தொழில்கள் எவை? 18.06.2026

ஆஸ்திரேலியாவில் அதிகூடிய வருவாய் ஈட்டும் முதல் 10 தொழில்துறைகளின் பட்டியலை ATO வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகின் மிக நீண்ட பயணிகள் விமான சேவை-புதிய வரலாறு படைக்கும் Qantas! 18.06.2026

Qantas விமான நிறுவனம் உலகின் மிக நீண்ட இடைநிறுத்தமற்ற (non-stop) பயணிகள் விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகக் கோப்பை தினசரி: குரோஷியாவை இங்கிலாந்து வீழ்த்தியது, வெற்றி-தோலிவியற்ற போத்துக்கல்-கொங்கோ ஆட்டம் 18.06.2026

போத்துக்கல் மற்றும் பனாமாவுக்கு எதிராக கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் கானா அணிகள் சாதகமான முடிவுகளைப் பெற்றதைத் தொடர்ந்து, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ஏழாவது நாளிலும் ஆபிரிக்க அணிகள் தொடர்ந்து முன்னிலையில் நிற்கின்றன. குரோஷியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தீர்க்கமான வெற்றியில், Harry Kane முக்கிய நட்சத்திர ஆட்ட வீரராகத் திகழ்ந்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் ஏழாம் நாள் நிகழ்வுகளின் த...

வீட்டுக்கடன் வட்டிவீதத்தை ஏன் வங்கிகள் குறைக்கின்றன? 18.06.2026

ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (Reserve Bank of Australia) RBA, (cash rate) வட்டி வீதத்தை மாற்றாமல், அதே 4.35 சதவீதத்தில் வைத்திருக்க ஒருமனதாக ஜூன் மாத கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், மே ஆகிய மாதங்களில் தொடர்ந்து மூன்று முறை வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி, இம்முறை அதில் மாற்றம் செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இது நிரந்தர நிறுத்தம் அல்ல என்றும், தாம் விரு...

ஆண்கள் தங்களின் நலத்தில் அக்கறையா அசட்டையா!! 18.06.2026

Mens Health Week இந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஆண்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இது குறித்து விரிவான விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.

நடன உலகில் தனித்தடம் பதித்த அனிதா ரத்னம் 18.06.2026

அனிதா ரத்னம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர். பரத நாட்டியம், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று உள்ளிட்ட கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.

இன்றைய செய்திகள்: 18 ஜூன் 2026 - வியாழக்கிழமை 18.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/06/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

உலகக் கோப்பை தினசரி: ஆறாம் நாள் ஆட்டத்தில் அசத்திய Messi, Mbappé மற்றும் Haaland 17.06.2026

FIFA உலகக் கோப்பையின் 6-வது நாளில், பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன, சூப்பர் ஸ்டார்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆறு உலகக் கோப்பைகளில் இடம்பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை Lionel Messi பெற்றார், மேலும் ஹாட்ரிக் அடித்து அதைக் கொண்டாடினார். அதே நேரத்தில், Kylian Mbappé மற்றும் Erling Haaland இருவரும் ஆளுக்கு இரண்டு கோல்கள் அடித்து அசத்தலான வெற்றிகளைப் பெற்றனர். உலகக் கோப்பை தினசரித் தொகுப்ப...

Global Tamil Musical Night : இசை, கலாச்சாரம், சமூக ஒன்றிணைவு 17.06.2026

மெல்பனில் ஜுன் மாதம் 20ம் திகதி Global Tamil Musical Night என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: பெட்ரோல் விலை குறையுமா? 17.06.2026

மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நீடித்து வந்த பதற்றத்திற்கு முடிவாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அமைதி ஒப்பந்தத்தையடுத்து பெட்ரோல் விலை குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

தமிழ் மரபுகள்: எதை காப்பது? எதை மாற்றுவது? 17.06.2026

ஆஸ்திரேலியாவில் வளரும் தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மொழியும் பண்பாடும் முக்கிய அடையாளங்களாக உள்ளனவா என்பது குறித்த சிறப்பு கலந்துரையாடல் இது. நமது இளைஞர்கள் பாதுகாக்க விரும்பும் தமிழ் மரபுகள் எவை? காலத்தோடு மாற வேண்டிய பாரம்பரியங்கள் என்ன? அடுத்த தலைமுறை தமிழுடன் இணைந்திருக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளோடு இடம்பெறும் கலந்துரையாடல். Homebush தமிழ் பாடசாலையில் HSC படிப்பில் தமிழ் மொழியை பாடமாக...

இன்றைய செய்திகள்: 17 ஜூன் 2026 புதன்கிழமை 17.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

SBS Tamil - SBS தமிழ் podcast'ini Replaio'da dinle

Radyo ve podcast'ler tek uygulamada - ücretsiz, kayıt gerektirmez. Bugün yükle ve lansmanı kaçırma

Google Play'den indir

Replaio bir podcast yayıncısı değildir; program adları, kapak görselleri ve ses içerikleri yazarlarına aittir ve herkese açık RSS beslemeleri aracılığıyla dağıtılır