SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
How does media work in Australia? - ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? 04.06.2025 12:41
A free, independent and diverse press is a fundamental pillar of democracy. Australia has two taxpayer-funded networks that serve the public interest (ABC and SBS), plus a variety of commercial and community media outlets. Although publicly funded media receives money from the government, it is unlike the state-sponsored outlets found overseas. - ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலு...
ஏன் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா வருகின்றனர்? ஏன் பல இந்திய பல்கலைக்கழகங்கள் இங்கு ஏற்கப்படுவதில்லை? 04.06.2025 17:42
இந்தியாவின் உளவியல் துறை (Psychology), ஆற்றுப்படுத்தும் கலை (Counselling), மற்றும் இந்தியக் கல்வி முறை பற்றி உரையாடுகிறார் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள். அவர் இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள UGC–Malaviya Mission Teacher Training Centreயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க அவர் உளவியல் துறையில் முனைவர் பட...
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமா? 04.06.2025 5:53
ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கூற்றை பிரதமர் Anthony Albanese நிராகரித்துள்ளார். இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி 04.06.2025 7:47
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு; டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்து வந்த மகராசி கேம்ப் பகுதி இடிப்பு; அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு; வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு; ஆப்ரேஷன் சிந்தூர்: சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்த கோரிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது 04.06.2025 4:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Alfred and Clinton are unlikely friends. Their friendship can teach migrant communities about reconciliation - SBS Examines : நல்லிணக்கப் பயணத்தில் குடிபெயர்ந்த சமூகங்களின் பங்கு என்ன? 03.06.2025 8:29
Alfred is an Indonesian migrant, and Clinton is an Aboriginal man from Western Australia. Their friendship changed the way Alfred understood his identity as a migrant Australian. - Alfred இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், Clinton மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பூர்வீகக்குடியின பின்னணி கொண்டவர். Clinton உடனான நட்பு புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியராக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளும்...
குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு! 03.06.2025 3:05
ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.5 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
கிரீன்ஸ் கட்சி செனட்டர் Dorinda Cox லேபர் கட்சியில் இணைந்தார் 03.06.2025 4:29
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
ஐம்பதாவது ஆண்டு நிறைவில் SBS வானொலி, மன நிறைவில் நேயர்கள் 02.06.2025 15:51
SBS வானொலி தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள SBS வானொலி நேயர்கள் குறித்து, நான்கு நீண்டகால நேயர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 02.06.2025 10:00
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3700 ஆக உயர்வு; தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்ததாக நடிகர் கமலஹாசனின் சர்ச்சை பேச்சு - கர்நாடகாவில் வலுக்கும் போராட்டங்கள்; அதிமுக கூட்டணிக்கு வந்தால், துணை முதலமைச்சர் ஆக்குவதாக வாக்குறுதி! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின...
வீடு வாங்கும்போது நாம் தவறவிடக்கூடாத முக்கிய அம்சங்கள் என்ன? 02.06.2025 10:19
ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்று வாங்குவது என்பது வெறும் கனவு மட்டும் அல்ல அது ஒரு குறிக்கோளாகவும் பார்க்கப்படுகிறது. வீடு ஒன்று வாங்க திட்டமிடும் போது அதற்கு எவ்வாறு நாம் தயாராவது மற்றும் 'Open House ' போன்றவற்றிக்கு சென்று வீடுகளை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் Real Estate துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate ந...
அமெரிக்காவின் எஃகு மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு ஆஸ்திரேலியாவை பாதிக்குமா? 02.06.2025 7:18
அமெரிக்கா இறக்குமதி செய்யும் steel எஃகு மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி ஜூன் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
நாட்டில் வீடுகளின் விலை மீண்டும் அதிகரிப்பு! 02.06.2025 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு 30.05.2025 5:17
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (25 மே – 31 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 31 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
சிட்னியில் சட்டவிரோதமாக மரக்கழிவுகளை கொட்டிய நபருக்கு 30,000 டொலர்கள் அபராதம் 30.05.2025 2:15
சிட்னி Mount Colahஇல் மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டிய நபருக்கு 30 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்: செக்ஸ் டாயிஸ் 30.05.2025 11:47
டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்...
Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker 30.05.2025 3:15
காலத்துளி நிகழ்ச்சியில் தற்கொலையைத் தவிர்க்க வைக்கும் Lifeline அமைப்பை ஆரம்பித்த Dr Alan Walker குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் 30.05.2025 8:16
தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை அடுத்து வடக்கில் சுமார் 6000 ஏக்கர் நில சுவீகரிப்பினை மீளப்பெற்றது இலங்கை அரசு; இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 800 கிலோ போதைப் பொருளுடன் இரு படகுகளில் 11 பேர் கைது; பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
NSW-இல் வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு நிவாரணம் இன்று முதல் வழங்கப்படுகிறது 30.05.2025 4:52
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இந்த வார உலகம்: அமெரிக்காவுக்கான மாணவர் விசா நிறுத்தம், இனப்படுகொலை தின அனுசரிப்பு 29.05.2025 8:25
மாணவர் விசா நேர்காணலை நிறுத்திய அமெரிக்கா; இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் ராஜாங்க மோதல்; வங்கதேசத்தில் ஜூன் 2026க்குள் தேர்தல்; ரஷ்யா- உக்ரைன் இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு; முதல் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுசரித்த நமீபியா; காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
ஜூன் 1 முதல் மாணவர் கடன்களில் 20% குறைப்பு 29.05.2025 7:13
ஆஸ்திரேலிய அரசு HECS-HELP மற்றும் பிற மாணவர் கடன்களில் 20% குறைப்பு செய்யும் திட்டத்தை நவம்பர் 2024இல் அறிவித்தது. இந்த குறைப்பு 2025 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
வான்வழியாக, ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்கள் அளவை செய்யப்பட்டது 29.05.2025 3:17
காலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய outback என்று சொல்லப்படும் தொலைதூர இடங்களை நிலஅளவை செய்ய ஊக்குவித்த Donald George Mackay குறித்தும், 1930ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அளவை குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..! 29.05.2025 10:44
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அரும்பிய ஆயுர்வேதம் வாழ்க்கை மற்றும நீ்ண்ட ஆயுளுக்கான அறிவியலாகும் என்றும் அதுவே உலகின் மிகவும் பழமையான ஆரோக்கிய பராமரிப்பு அமைப்பாகும் எனக் கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மற்றும் வர்மக் கலை பற்றி உரையாடுகிறார் சிட்னியில் ஆயுர்வேத மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் நிக்கிலா வேணுகோபால். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
உள்ளூர் விமானக் கட்டணங்கள் குறைகின்றன 29.05.2025 6:47
விமான எரிபொருளின் விலைகள் குறைவாக உள்ள காரணத்தினால் Domestic Airlines உள்நாட்டு விமானச் சேவைகளின் விமானக் கட்டணங்கள் குறைத்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
சிரிப்பு யோகா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 29.05.2025 17:03
யோகாவில் பல வகைகள் இருப்பதை நாம் அறிவோம். இது சற்றுவித்தியாசமான சிரிப்பு யோகா. இதை பல இடங்களில் பரப்பி வருகிறார் சிரிப்பானந்தா. அவருடன் தொலைபேசிவழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos