SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆஸ்திரேலியர்கள் எந்த brand-ஐ அதிகம் நம்புகின்றனர்? 12.09.2025

ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

NSW மாநிலத்தில் தற்கொலை தடுப்பு புதிய சட்டங்கள்! 12.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

நேபாள அரசியல் நெருக்கடி: அடுத்தது என்ன? 12.09.2025

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான் இளைஞர் யுவதிகள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை கடந்த திங்களன்று ஆரம்பித்தார்கள். இதன் பின்னணியை எடுத்துவருகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி: மில்லியன் டாலர் பரிசு- Dezi Freeman யாரின் கையில் சிக்கப் போகிறார்? 12.09.2025

விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Dezi Freeman என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்ய விக்டோரியா காவல்துறையினர் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளனர். இச் செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 11.09.2025

முன்னாள் அதிபர்களுக்கு அரசு வழங்கிய வரப்பிரசாதங்களை நீக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்; இவ்வருட இறுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 11.09.2025

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டமும் ஆட்சி கவிழ்ப்பும்; காசா மீதான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; கத்தாருக்குள் இஸ்ரேல் தாக்குதல்; டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை; கொரிய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யத் தயங்கும்-தென் கொரிய அதிபர்; அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

நேபாளத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள தமிழ் மாணவி தரும் தகவல் 11.09.2025

நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பகிர்ந்துகொள்கிறார் வைஷ்ணவி. அவரோடு உரையாடுகிறார் றைசல்

நம்மவர் நம்மோடு: “பாப் சக்கரவர்த்தி” A.E. மனோகர் 11.09.2025

தமிழில் பாப் இசை மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கவர்ந்தவர் மறைந்த பிரபல பாப் இசை பாடகர் A.E. மனோகர் அவர்கள். “பாப் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்படும் மனோகர் சிலோன் பாப் தமிழிசையையும், தமிழ், சிங்களம் கலந்த பாப் பாடல்களையும் உலகெங்கும் பரவச் செய்ததில் பெரும் பங்காற்றியவர். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரோடு நாம் நடத்திய நேர்முகத்தின் மறு பதிவு. உரையாடியவர்: றைசெல்.

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய பெண்கள் ஆண்களைவிட அதிக நாட்கள் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே நல்ல செய்தி அல்ல! 11.09.2025

ஆஸ்திரேலியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: SBS Newsயின் Peggy Giakoumelos.

நீங்கள் நலமா என்று விசாரிப்பது ஏன் முக்கியம் : R U OK 11.09.2025

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை RUOK தினம் கடைபிடிக்கப்படுகிறது. RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது ஒருவரின் மனநல ஆரோக்கியத்தை எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 11 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 11.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

சிட்னி புதுவருட வாணவேடிக்கையைப் பார்வையிடுவதற்கான இலவச டிக்கட்டுகள்! 10.09.2025

சிட்னி புத்தாண்டு கொண்டாட்ட வாணவேடிக்கையை இலவசமாக பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கான வலைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மல்லிகைச் சரத்துடன் மெல்பன் வந்த இந்திய நடிகைக்கு அபராதம்! 10.09.2025

ஆஸ்திரேலியா வரும்போது மல்லிகைப்பூ சரத்தைக் கொண்டுவந்த இந்திய நடிகைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னியில் மேடையேறுகிறது கேதாரன் பார்த்தீபனின் 'Twice Upon a Time' 10.09.2025

சிட்னியைச் சேர்ந்த கேதாரன் பார்த்தீபன் எழுதி இயக்கிய தமிழ்–ஆங்கில இருமொழி நாடகமான 'Twice Upon a Time' எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று UNSW-இல் மேடையேறுகிறது. இதுதொடர்பில் கேதாரன் பார்த்தீபனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி: மெல்பனில் இரு சிறுவர்கள் குத்திக்கொலை- பிந்திய தகவல்கள் 10.09.2025

வார இறுதியில் மெல்பனின் மேற்கில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, gang crime-கும்பல் குற்றங்களை கையாள்வதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் தேவையா என்பதை விசாரித்து வருவதாக விக்டோரிய Premier Jacinta Allan தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 10 செப்டம்பர் 2025 புதன்கிழமை 10.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை தொடர்பில் ஐ,நா மனித உரிமை பேரவை கூறுவதென்ன? 09.09.2025

ஐ,நா மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

அமெரிக்காவுக்கு பொதி(parcel) அனுப்பும் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள Australia Post 09.09.2025

அமெரிக்காவுக்கு பார்சல் - பொதிகளை அனுப்பும் சேவையை Australia Post மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஏன் “Ute” வாகனம் ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்டது? Uteன் வரலாறு என்ன? 09.09.2025

ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் சிறப்புகளில் “Ute” வாகனமும் ஒன்று. ஆஸ்திரேலியாவில்தான் இந்த Ute வாகனம் முதன் முதல் வடிவமைக்கப்பட்டது. அதன் வரலாற்றை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.

இன்றைய செய்திகள்: 09 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 09.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

கீதவாணி விருதுகள் - 2025 08.09.2025

சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்தும் கீதாவணி விருதுகள் 2025 நிகழ்ச்சி செப்டம்பர் 14 ஆம் தேதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ராஜ் வேலுப்பிள்ளை அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

பிரமாண்டமான கர்நாடக இசை நிகழ்ச்சியில் தாள வாத்திய தனி ஆவர்த்தனம் இசையுடன் இணைகிறது 08.09.2025

குரு காரைக்குடி மணி அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி இசை நிகழ்ச்சி ஒன்றை ஸ்ருதி லய கேந்திரா, ஆஸ்திரேலியா என்ற அமைப்பின் சாய் சகோதரர்கள் வழங்க உள்ளார்கள். கர்நாடக தாள வாத்தியத்தில் புரட்சியை ஏற்படுத்திய, மிகச்சிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான காரைக்குடி மணி அவர்களை நினைவுகூரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உள்ளன, அத்துடன் இந்தத் தலைமுறைய...

செய்தியின் பின்னணி: Centrelink சில கடன்களை தள்ளுபடி செய்கிறது! 08.09.2025

அரசு நலன்புரி கொடுப்பனவு பெறும் சுமார் 12 லட்சம் பேரின் $250 டாலர்கள் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. சுமார் $300 மில்லியன் அளவிலான தவறான கடன்களை வசூலிக்க முயற்சிக்கும் போது, அதன் நிர்வாகச் செலவுகள், வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு வாதிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

இன்றைய செய்திகள்: 08 செப்டம்பர் 2025- திங்கட்கிழமை 08.09.2025

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 07.09.2025

இந்தியாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது; நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு; செங்கோட்டையன் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்...

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos