SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
அரசு அலுவலகங்களுக்கு தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு சிறைத்தண்டனை 25.09.2025 2:16
1100-க்கும் மேற்பட்ட தொந்தரவு அழைப்புகளை மேற்கொண்ட நபருக்கு மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: குடியேற்றவாசி & அகதிகளுக்கு எதிர்ப்பு அதிகரிக்க என்ன காரணம்? 25.09.2025 10:18
ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கும், அகதிகளுக்கும் எதிராக எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த எதிர்ப்பு மனநிலை உயர என்ன காரணங்கள்? இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
கற்றாழையின் மருத்துவ பயன்கள்!! 25.09.2025 9:07
இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை. இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன என்றும் எப்படி கற்றாழையை பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 25 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 25.09.2025 5:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
இசையமைப்பாளர்களே எல்லா பாடல்களையும் பாட வேண்டியதில்லை - தேவன் ஏகாம்பரம் 24.09.2025 22:02
திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தேவன் ஏகாம்பரம் அவர்கள் அண்மையில் மெல்பன் வருகை தந்திருந்தார். அவரை SBS மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
குழந்தைகளுக்கான கார் இருக்கை பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்! 24.09.2025 11:41
குழந்தைகளுக்கான கார் இருக்கை (Child car seat) பயன்படுத்துவது ஏன் அவசியம்? அதனை சரியாக பொருத்துவது எப்படி? குழந்தைகளுக்கான கார் சீட் வாங்கும்போது பெற்றோர் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் NSW Blacktown-இல் 18 ஆண்டுகளாக Supreme Driving School நடத்தி வரும் சிவகுருநாதன் ஶ்ரீகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 24 செப்டம்பர் 2025 புதன்கிழமை 24.09.2025 3:11
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: சிக்கலான கச்சத்தீவு 24.09.2025 7:21
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே காணப்படும் இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை மீளப்பெறுமாறு தமிழக அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
மெல்பன் தொழிற்சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி 23.09.2025 2:00
மெல்பன் வடக்கிலுள்ள recycling plantஇல் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
அமெரிக்க work visa கட்டணம் 150,000 டொலர்களாக உயர்வு: பிந்திய தகவல்கள் 23.09.2025 2:36
அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் 100,000 அமெரிக்க டொலர்கள் அதாவது 150,000 ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டமை தொடர்பாக வெள்ளை மாளிகை முக்கிய விளக்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 23 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 23.09.2025 4:06
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கிறோம்-ஆஸ்திரேலியா ஐநா சபையில் அறிவிப்பு 22.09.2025 6:54
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளுடன் ஆஸ்திரேலியா இணைந்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி : பழைய Superannuation விதிமுறையினால் சுமார் 50 கோடி சேமிப்பு இழப்பு! 22.09.2025 8:14
ஆஸ்திரேலியாவில் வாழும் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் சுமார் 50 கோடி டாலர்கள் வரை Superannuation சேமிப்பு இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என ஓய்வூதிய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 22செப்டம்பர் 2025 திங்கட்கிழமை 22.09.2025 4:50
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
இறுதி கோட்டை கடந்தேன்: சிட்னி மாரத்தான் அனுபவம் – சையது அலி 22.09.2025 10:42
சிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த Sydney Marathon 2025 எனும் பெருந்தூர ஓட்டப்பந்தயத்தில் காலந்துகொண்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சையது அலி அவர்கள். சுமார் 35,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் 59 வயதிலும் இளைஞராக ஓடும் சையது அலி அவர்கள். அவரோடு உரையாடியவர் றைசெல்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 21.09.2025 9:41
ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் - விலை குறையும் பொருட்கள்! பிரதமர் நரேந்திர மோடியின் உரை; நாம் தமிழர் சீமான், விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது ஏன்?;தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ரோபோ சங்கர் SBS தமிழோடு பேசியது... 21.09.2025 9:09
தமிழ்நாட்டில் கடந்த வாரம் காலமான நகைச்சுவை நடிகர் “கலைமாமணி” ரோபோ சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு சிட்னியில் கலைநிகழச்சி படைப்பதற்கு வருகை தந்திருந்தார். அவ்வேளையில் அந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் நம்முடன் உரையாடியதை மறுபதிவு செய்கிறோம். அவரோடு உரையாடியவர் றைசெல்.
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (14 – 20 செப்டம்பர் 2025) 20.09.2025 5:25
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (14 – 20 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 20 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
1800 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு! 19.09.2025 2:19
Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1800 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
How to respond when encountering wildlife on your property - உங்கள் வீட்டிற்கு வரும் வனவிலங்குகளை சமாளிப்பது எப்படி? 19.09.2025 10:35
Australia is home to an array of diverse and beautiful wildlife, and knowing how to respond when you encounter wildlife in your home or on your property will help protect our precious wildlife species whilst keeping you, your family and your pets safe. - உங்கள் வீட்டிற்குள் அல்லது காணிக்குள் வரும் வனவிலங்குகளை எவ்வாறு கையாள்வது என்பதை அறிவது, நமது விலைமதிப்பற்ற வனவிலங்கு இனங்களைப் பாதுகாக்க உதவுவத...
முக அங்கீகாரத் தொழில்நுட்பம்: சட்ட மீறலில் சிக்கிய Kmart 19.09.2025 7:05
Kmart நிறுவனம் facial recognition technology - முக அங்கீகாரம் தொடர்பிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் ஆஸ்திரேலிய தனியுரிமைச் சட்டங்களை மீறியுள்ளது என்று privacy commissioner - தனியுரிமை ஆணையர் கண்டறிந்துள்ளார். இது பற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 19 செப்டம்பர் 2025 வெள்ளிக்கிழமை 19.09.2025 4:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
தென்னிந்திய திரை உலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார்! 19.09.2025 12:18
தென்னகத்து சினிமாவின் பெண் ஆளுமைகளில் தவிர்க்க முடியாதவர் நடிகை பி. பானுமதி அவர்கள். அவரின் நூற்றாண்டு பிறந்த நாள் (7 Sep 1925 – 24 Dec 2005) கொண்டாட்ட வேளையில் அவர் குறித்த விவரணத்தை முன்வைப்பவர் சுமார் முப்பது ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் சுந்தரதாஸ் அவர்கள். ஒலிக்கும் குரல்கள்: சுந்தரதாஸ் & கர்ணன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 19.09.2025 8:20
யுத்த குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறி முறையிலேயே விசாரணை என உறுதியாக நிற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு; பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலிய மன்னனின் யாழிலுள்ள மந்திரிமனை சேதமடைந்துள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 18.09.2025 8:59
காசா நிலவரம்; கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான இஸ்லாமிய நாடுகளின் சந்திப்பு; லிபியாவில் படகு விபத்து; இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சர்ச்சை; சவுதி அரேபியா- பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்; தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னனியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos