SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
டாஸ்மேனியாவில் நீரில் தள்ளப்பட்டு உயிரிழந்த இந்தியர்: குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு! 28.11.2025 3:10
டாஸ்மேனியாவில் Deepinderjeet Singh என்ற 27 வயது இளைஞர் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
MiniPod: Take it easy | Words we use - MiniPod: Take it easy | Words we use 28.11.2025 3:51
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'take it easy'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'take it easy' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
இன்றைய செய்திகள்: 28 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை 28.11.2025 4:51
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
செய்தியின் பின்னணி: Black Friday விற்பனைகளில் பரவும் Ghost Store மோசடிகள்! 28.11.2025 7:26
எச்சரிக்கை - Black Friday விற்பனை பரபரப்புக்கிடையில், புதிய வகை இணையவழி மோசடி ஒன்று பெருமளவில் பரவி வருகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 27.11.2025 9:37
மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்களத்தின்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு. அமைதியாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பலபகுதிகளில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றைமுன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர்மதிவாணன்.
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 27.11.2025 7:37
ரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நிலை; அமெரிக்கா- வெனிசுலா மோதல் போக்கு: பல நாடுகளின் முக்கிய விமானங்களுக்கு தடை; அமெரிக்காவில் தேசித காவல்படையினர் மீது ஆப்கானியரின் தாக்குதல்; மேற்குக்கரையை குறிவைத்துள்ள இஸ்ரேலிய படைகள்; வங்கதேச குடிசைப்பகுதிகளில் தீ விபத்து; ஹாங்காங்கில் அடுக்குமாடிகள் தீ விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்...
$1200 அபராதம் வரக்கூடிய சீட் பெல்ட் தவறு – பலர் அறியாமலே செய்யும் குற்றம்! 27.11.2025 3:33
ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது சீட் பெல்ட்டை கைகளுக்கு கீழே வயிறு பகுதியில் அணிந்திருந்தால் அபராதம் விதிக்கபடும். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
இந்து சமயக் கூறுகளோடு ஆறுதல் கூறும் ஜெயந்தி 27.11.2025 9:51
சிட்னி மருத்துவமனைகளில் இந்து சமய பிராத்தனையாளராக பணிபுரியும் ஜெயந்தி ரமணன், தனது பணி குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
ஒட்டகம்: அழைத்து வந்த விருந்தாளியை பகையாளியாக்கிய ஆஸ்திரேலியா! 27.11.2025 9:04
ஒட்டகம் ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஒட்டகம் தாவரங்களை அழிக்கிறது, தண்ணீரை குடிக்கிறது என்பதால் ஒட்டகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த நாட்டுக்குள் ஒட்டகம் எப்படி வந்தது, விருந்தாளியாக அழைத்துவரப்பட்ட ஒட்டகத்தை ஆஸ்திரேலியா எப்படி பகையாளியாக்கியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
செய்தியின் பின்னணி: அதிக வாடகைச் செலவு – பெர்த் நகரம் தொடர்ந்தும் முன்னிலை 27.11.2025 8:01
மேற்குத் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நாட்டின் மிக அதிகமாக வீட்டு வாடகைக்கு செலவாகும் தலைநகரம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இன்றைய செய்திகள்: 27 நவம்பர் 2025 வியாழக்கிழமை 27.11.2025 5:05
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
விசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நாடுகடத்தும் திட்டத்தை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் 26.11.2025 2:47
விசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு அனுப்பும் திட்டத்தை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
MiniPod: Call it a day | Words we use - MiniPod: Call it a day | Words we use 26.11.2025 4:06
Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'call it a day'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘call it a day’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
Obesity: Causes, Effects and Prevention - உடற்பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள் 26.11.2025 13:10
Obesity is one of the major health issues affecting many people in our community. The causes of obesity, its impact on health, and ways to overcome it are explained in a simple and easy-to-understand manner by General Physician Dr Thiyagarajah Srikaran. The interview is conducted by Praba Maheswaran. - நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதொன்று உடற் பருமன் ஆகும். உடற்...
செய்தியின் பின்னணி: உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க ஒப்புதல்! 26.11.2025 6:15
ஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 26 நவம்பர் 2025 புதன்கிழமை 26.11.2025 3:23
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை: புதிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியின் முதல் மிகப்பெரிய போராட்டம் 25.11.2025 8:11
"மாபெரும் மக்கள் குரல்" என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று கூட்டு எதிர்க்கட்சியால் நடாத்தப்பட்டது. இது அரசை சீர்குலைக்கும் முயற்சி என ஆளுந்தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினாினதும் கருத்துக்களோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு: நீங்களே பரிசோதனை செய்யலாம்! 25.11.2025 9:41
நவம்பர் 17 முதல் 23ஆம் தேதி வரை Cervical screening கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும்பரிசோதனை குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும் பரிசோதனை குறித்த விரிவான விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான விசா: விண்ணப்பிப்பது எப்படி? 25.11.2025 10:49
இந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் MATES - Mobility Arrangement for Talented Early professionals Schemeஇன் அடுத்த கட்டம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 25 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை 25.11.2025 4:20
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/11/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
விமானப் பயணத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை வருகிறது 24.11.2025 3:43
விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இது குறித்த செய்தியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் குரலில் அவரது கவிதை! 24.11.2025 3:31
தமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். "பாரதியாருக்குப்பின் யாருடைய கவிதைகளையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழன்பன் போன்றோர் நல்ல கவிதைகளைப் படைக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கவிதை வளர்ந்துகொண்டுதான் உள்ளது, நாம்தான் இத்தனை காலம் அவற்றை படிக்காமல் விட்டுவிட்டோம் என்று கவலைப்பட்டேன்...
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கிய நேர்முகம்! 24.11.2025 20:53
தமிழில் பெரும் இலக்கியவாதிகள் முதல் சாதாரண வாசகன் வரை பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் சமீபத்தில் தனது 92வது வயதில் காலமானார். ‘வணக்கம் வள்ளுவ’ எனும் கவிதை நூலுக்காக 2004ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டபோது SBS தமிழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்முகத்தின் மறுபதிவு இது. அவரோடு உரையாடியவர் றைசல்.
பில்லியன் டாலர் மாணவர் கடன் ரத்து – 1 லட்சம் மாணவர்களுக்கு நிவாரணம் 24.11.2025 3:04
s
செய்தியின் பின்னணி : சிங்கப்பூரின் புதிய SAF வரி விமான கட்டணத்தை உயர்த்துமா? 24.11.2025 7:43
சிங்கப்பூர் அரசு உலகில் முதன்முறையாக ‘Sustainable Aviation Fuel Levy’ SAF என்ற புதிய வரியை அறிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் இருவரும் கரியமில உமிழ்வு இல்லாத பசுமையான விமான எரிபொருளின் செலவை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த SAF வரி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos