SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ 2198 episódios

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.sbs.com.au

Autor

SBS

Categoria

News

Site do podcast

www.sbs.com.au

Último episódio

11 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Anzac தினம் ஏன் முக்கியமானது? 24.04.2026

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நினைவுகூரப்படும் அன்சாக் தினம் பற்றியும் அது ஏன் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 24 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை 24.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 24/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

தமிழக தேர்தல்: வரலாறு காணாத வாக்குப்பதிவு! 23.04.2026

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் ஏறக்குறைய 85% வாக்குகள் பதிவாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.85 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி குறித்த விவரணங்களை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

செய்தியின் பின்னணி: NDIS மோசடிக் கட்டுப்பாடு - விதிகளை மாற்றும் அரசின் புதிய நடவடிக்கைகள் 23.04.2026

நாட்டின் முக்கிய சமூக ஆதரவுத் திட்டமான NDIS, தற்போது பெரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கவும் அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

மேற்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமானசேவை எப்போது தொடங்குகிறது 23.04.2026

ஆஸ்திரேலியாவின் புதிய மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான டிக்கெட்டுகள் விற்பனையாக ஆரம்பித்துள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி: அரசு தரும் தொழில்சார்ந்த வட்டி இல்லா கடன் யாருக்கு? ஏன்? 23.04.2026

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை உயர்வு பல தொழில்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு அரசு வட்டி இல்லா கடன் வழங்க ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்யை முன்வைக்கிறார் றைசெல்.

ANZAC தினம்: ஒரு எளிய விளக்கம் 23.04.2026

ஆஸ்திரேலிய தினத்தைப் போன்றே ஆஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினம் ANZAC தினம். ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் அனுசரிக்கப்படும் ANZAC தினம் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

'எனக்குப் பிடித்த புத்தகம்' 23.04.2026

உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் மெல்பனைச் சேர்ந்த அசோக், விஜி ராம் மற்றும் சிட்னியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணமூர்த்தி ஆகியோர்.

எண்ணெய்களின் ராணி - நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள் 23.04.2026

நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள் மற்றும் அன்றாடம் நாம் எவ்வாறு நல்லெண்ணெயை பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் விளக்குகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி. அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 23 ஏப்ரல் 2026 வியாழக்கிழமை 23.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 23/04/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

மர்மங்கள் ஒரு தொடர்கதை: D. B Cooper மாயமானது எப்படி? 22.04.2026

D. B Cooper என்பவர் 1971 இல் அமெரிக்காவில் Oregon மாநிலத்திலுள்ள Portland என்ற இடத்திலிருந்து வாஷிங்டன் Seattle என்ற நகரத்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தைக் கடத்தியதோடு அதிலிருந்து பாரசூட் மூலமாக வெளியே குதித்தார். அவருக்கு என்ன நடந்தது? அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மர்மமாக இது இன்றுவரை பார்க்கப்படுகிறது. ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற தொடரில் D. B Cooper குறித்த சம்பவத்தை முன்வைக்கி...

நீரிழிவு: உண்மைகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு வழிகள் 22.04.2026

நீரிழிவு என்பது நம்மில் பலரையும் பாதிக்கின்ற நோய் நிலைமைகளில் ஒன்று. இந்நீரிழிவு தொடர்பில் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Endocrinologist Felix Jebasingh அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இந்திய கலாச்சார மையம் அமைக்கும் பணி ஆரம்பம் 22.04.2026

குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் இந்திய சமூகத்திற்கான “House of India” எனும் புதிய சமூக மற்றும் கலாச்சார மையத்தை உருவாக்கும் முயற்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

செய்தியின் பின்னணி: நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: காரணம் என்ன? 22.04.2026

மத்திய கிழக்கில் நிலவும் மோதல், ஆஸ்திரேலியாவின் உர விநியோகம், விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

தமிழக தேர்தல் களம் – 22 ஏப்ரல் 2026 22.04.2026

தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23) தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார செய்திகளுடன் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இன்றைய செய்திகள்: 22 ஏப்ரல் 2026, புதன்கிழமை 22.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 22/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: இந்திய துணை குடியரசுத்தலைவரின் இலங்கை வருகை 22.04.2026

இந்திய துணை குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் இரு நாட்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். இலங்கை அதிபர், தமிழ் தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்ததோடு, மலையக பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

‘எல்லாவிதத்திலும் ‘திமுக, அதிமுக’வை விட விஜய்யின் தவெக முன்னிலையில் உள்ளது’- தவெக பெலிக்ஸ் 21.04.2026

தமிழ்நாட்டில் முதல் தேர்தலை சந்திக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சியின் செயல்பாடுகள், விஜய் மீதான விமர்சனங்கள், திமுக-அதிமுக வழிவந்த திட்டங்களை தவெக பின்பற்றுவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு. அவருடன் உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

ஆபத்தான வைரஸுக்கு எதிராக முதியவர்களுக்கு இலவச தடுப்பூசி- அரசு அறிவிப்பு 21.04.2026

ஆஸ்திரேலிய அரசு நாட்டிலுள்ள முதியவர்களை Respiratory Syncytial வைரஸிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இலவச தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு அரசு வழங்கவுள்ள $1000 வரிச்சலுகை திட்டம்! 21.04.2026

ஆஸ்திரேலிய அரசின் $1000 வரிச்சலுகை திட்டம் மூலம் சுமார் 6.2 மில்லியன் தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 21 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை 21.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/04/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

விக்டோரியா மாநிலத்தவர்களுக்கான இலவச பொதுப் போக்குவரத்து சலுகை நீட்டிப்பு! 20.04.2026

விக்டோரியாவில் இலவச பொதுப் போக்குவரத்து வசதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டு முடிவுவரை போக்குவரத்து கட்டணம் அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சமூக வலைத்தளங்கள்: குழந்தைகளையும் நம்மையும் சிக்கவைக்கும் மாயவலையா? 20.04.2026

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கில் இளம் பயனர்களுக்கு கேடு விளைவித்ததாக சமூக வலைத்தளங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைத்தளங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அமெரிக்க வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து விளக்குகிறார் சமூக ஊடகம் தொடர்பான தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்டவரும், பி...

செய்தியின் பின்னணி : நாட்டின் சில பகுதிகளில் ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைகிறது! 20.04.2026

நாட்டில் மின்சார கட்டணங்கள் அடுத்த நிதியாண்டில் குறையக்கூடும் என ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள முன்மொழிவு ஆவணம் தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 20 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை 20.04.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 20/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

Ouça o podcast SBS Tamil - SBS தமிழ் no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos