ODB India Tamil

Our Daily Bread Ministries Tamil

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.tamil-odb.org

Autor

ODB India Tamil

Categoria

Religion

Site do podcast

www.tamil-odb.org

Último episódio

4 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

உங்களுக்குத் தேவையான அனைத்தும் 29.09.2021

தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.  சங்கீதம் 73:26 பிதாவே, கிறிஸ்துவுக்குள் எங்களை முழுமையடையச் செய்ததற்காக நன்றி. சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும் “எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” (73:28) என்று சொல்ல உதவி செய்யும்.

மகிழ்ச்சியான கற்றல் 28.09.2021

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.  ரோமர் 12:2 அன்புள்ள தேவனே, என்னுடைய மனதைப் புதிதாக்கி என்னை மறுரூபப்படுத்தும்படி உம்மை அழைக்கிறேன். நான் உமக்கு ஒப்புக்கொடுக்கும்போது எல்லாவற்றையும் சாத்தியமாக மாற்றுவதற்காக நன்றி.

இக்கபோத் விலகிப் போயிற்று 27.09.2021

தேவனுடைய பெட்டி பிடிப்பட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப் போயிற்று.  1 சாமுவேல் 4:22 அன்புள்ள தேவனே, நீர் உம்முடைய மகிமையை இயேசுவின் மூலம் வெளிப்படுத்தினதற்காக நன்றி. உம்முடைய பிரசன்னத்தை நாள் முழுவதும் நினைவில் கொள்ள உதவி செய்யும்.

வரம்பற்றவர் 26.09.2021

பூமியின் கடையாந்தரங்களை சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துப் போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை.  ஏசாயா 40:28 அன்பான தேவனே, வாக்குப்பண்ணினதை எல்லாம் செய்து முடிக்கிற வரம்பற்றவர் நீர்.

நன்றாக ஓய்வெடுங்கள் 25.09.2021

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  மத்தேயு 11:28 அன்புள்ள இயேசுவே, உம்மோடு தொடரும் உறவில் ஓய்வெடுக்க என்னை அழைத்ததற்காக நன்றி.

நாம் உணருகிறோம் என்று தேவன் அறிவார் 24.09.2021

பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார். இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுள்ள தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.  சங்கீதம் 42:8 மாறாத தகப்பனே, நான் உணருகிறேன் என்றும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் என் உணர்ச்சிகளை செயல்படுத்த நீர் எனக்கு உறுதியளிக்கிறதற்காக நன்றி.

எதுவாக இருந்தாலும் 23.09.2021

சகோதரரே உண்மையுள்ளவைகளெவைகளோ… புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.  பிலிப்பியர் 4:8 பிதாவே, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, இவைகளுக்குப் பின்னால் நீர் இருக்கிறீர் என்பதை அறிவேன். நான் உம்மை நேசிக்கிறேன்.

சுதந்திரத்தோடு அலைவது 23.09.2021

நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய் கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள்.  மல்கியா 4:2 இயேசுவே, நீர் மட்டும் அளிக்கும் சுதந்திரத்தை நினைவுகூர்ந்து, அதிலே மகிழ்ச்சியோடு வாழ எனக்கு உதவிச் செய்யும்.

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை 22.09.2021

தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 தேவனே, நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறப்படியால் உமக்கு நன்றி. அதற்காகவும் இன்னும் அநேக காரணங்களுக்காகவும் உம்மை நேசிக்கிறேன். என்னுடைய எண்ணங்களை உம்மிடம் வெளிப்படுத்தவும், புரிந்துக்கொள்ள உம்மை நம்பவும் உதவி செய்யும்.

உண்மை, பொய், கண்காணிப்பு 21.09.2021

அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக.  யாத்திராகமம் 23:1 தேவனே, வெகு விரைவாக காரியங்கள் நடைபெறும் இந்தக் காலத்தில், உண்மையை அறிந்துக் கொள்வது பெரும்பாலும் கடினம். கவனமாய் கேட்டு, நிதானித்து உண்மையைப் பேச எனக்கு உதவி செய்யும்.

எதிர்பாராத விருந்தினர் 20.09.2021

இயேசு அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்றார்.  லூக்கா 19:5 இயேசுவே, நான் பாவத்தினால் தொலைந்திருந்தபோது என்னைத் தேடி வந்து குழப்பமான வாழ்க்கையிலிருந்து என்னை மீட்டெடுத்ததற்காக நன்றி.

கிறிஸ்துவுக்குள் உடையாமலிப்பது 19.09.2021

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.  எரேமியா 1:8 இயேசுவே, எந்தப் புயலைப் பார்க்கிலும் நீர் வல்லமையுள்ளவர். இப்போது நான் எதிர்கொள்ளும் பிரச்சனையில் என்னை நடத்தும்.

கிறிஸ்துவின் நற்கந்தம் 18.09.2021

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.  2 கொரிந்தியர் 2:15 பரிசுத்த ஆவியானவரே, மற்றவர்களிடத்தில் அன்பு, சாந்தம் மற்றும் இரக்கத்தைக் காட்ட என்னை நிரப்பும்.

உங்கள் வேலியை நகர்த்தவும் 17.09.2021

இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். ஏசாயா 43:19 கிருபையுள்ள தேவனே, என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய கண்ணோட்டத்தை உமக்குள் அளித்ததற்காக நன்றி. உம்மோடு நடக்க புதிய வழிகளைப் பார்க்க என்னுடைய கண்களைப் புதுப்பியும்.

குழப்பத்திலிருந்து ஒரு நற்செய்தி 16.09.2021

கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி.  மாற்கு 5:19 அழகான இரட்சகரே, உம்முடைய அற்புதமான வல்லமைக்காக உம்மைத் துதிக்கிறேன். எந்த இருளும் உமக்கு எதிராக நிற்க முடியாது. இன்று உம்முடைய வெளிச்சத்தில் நடக்க உதவி செய்யும்.

தேவனால் உருவாக்கப்பட்ட கருவிகள் 15.09.2021

நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. ஏசாயா 64:8 பிதாவே, நான் உம்முடைய குமாரன் இயேசுவைப் போல மாற, நீர் என்ளை இரட்சித்து, உருமாற்றியதற்காக நன்றி. என்னை உருமாற்ற உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஒப்புக்கொடுக்க கற்றுத்தாரும்.

பாளயத்துக்குப் புறம்பே 14.09.2021

இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.  எபிரெயர் 13:12 இயேசுவே, நீர் பட்சபாதமில்லாதவராகையால் உமக்கு நன்றி. எனக்காக நீர் பாளயத்துக்குப் புறம்பே சென்றதற்காக நன்றி.

ஒரு ஜீவனுள்ள பத்திரம் 12.09.2021

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  சங்கீதம் 1:2 தேவனே, வேதத்தை ஜீவனுள்ள பத்திரமாக அனுபவிக்க எனக்கு உதவி செய்யும்.

அன்பின் மகா பெரிய செயல் 11.09.2021

ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.  ரோமர் 5:18 தேவனே, இயேசுவின் மூலம் நீர் கொடுத்த இரட்சிப்புக்காகவும் நித்திய ஜீவனுக்காகவும் நன்றி. உம்முடைய இரட்சிப்பின் வழிகளை அநேகருக்கு வெளிப்படுத்த உதவி செய்யும்.

ஞானத்திலிருந்து மகிழ்ச்சி வரை 10.09.2021

அதின் (ஞானம்) வழிகள் இனிதான வழிகள்.  நீதிமொழிகள் 3:17 அன்புள்ள தேவனே, நான் கடினமான பாதைகளில் நடக்கும்போது, என்னை உம்முடைய ஞானம் மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் நடத்தும்.

இசைக்குழுவைப் போல 09.09.2021

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.  பிலிப்பியர் 2:2 அன்புள்ள இயேசுவே, என்னை இரட்சித்ததற்காக நன்றி. உம்முடைய ஆவியானவர் என்னை உம்முடைய சாயலாக மாற்றட்டும். என்னுடைய மனப்பான்மை மற்றும் செயல்களில் உம்முடைய தாழ்மையையும், தியாகமான அன்பையும் பிரதிபலிக்க உதவி செய்யும். என்னுடைய வாழ்க்கை மற்ற விசுவாசிகளோடு அதிக ஒற்றுமை...

ஹோட்டல் கொரோனா 08.09.2021

கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது: ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம். 2 கொரிந்தியர் 5:14 , 2 கொரிந்தியர் 5:16 கடினமான நேரங்களில், இயேசுவே, மற்றவர்களுடைய அன்பு மற்றும் மகிழ்ச்சியின் மூலம் பிரம்மிப்பான அழகைக் காணக்கூடிய தருணங்களுக்காக நன்றி. ஒவ்வொரு நாளும், யாரையும் உலகப் பிரகாரமான கண்ணோட்டத்தில் பார்க்காமல் வாழ உதவி செய்யும்.

என்னை அனுப்பும் 07.09.2021

இயேசுவே, என்னை அழைத்து உமக்கு ஊழியம் செய்ய வைத்ததற்காக நன்றி. இதை ஒரு பாக்கியமாகக் கருதவும் உமக்கு மனமுவந்து சேவை செய்யவும் உதவியருளும்.

கிறிஸ்துவில் பரிபூரணம் 06.09.2021

'அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.'  கொலோசெயர் 2:10.  தேவனுக்கு பதிலாக மக்களிடமிருந்து உங்களுடைய ஆவிக்குரிய முழுமைக்காக எவ்வாறு நாடிச் சென்றீர்கள்? இயேசு உங்களை முழுமையடையச் செய்தபின் உங்களுடைய திருமணம் அல்லது தனிமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தேவனிடத்தில் பாதுகாப்பாக இருப்பது 05.09.2021

'கர்த்தருக்குப் பிரியமானவன் அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான். அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்.'  உபாகமம் 33:12 “உங்கள் எல்லைக்குள்ளே தேவன் வாசமாயிருப்பார்” என்பதை அறிவது தேவன் மேல் உள்ள உங்கள் அன்பை எவ்வாறு அதிகரிக்கிறது? நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ள இது எவ்வாறு உங்களை ஆழப்படுத்துகிறது?

Ouça o podcast Our Daily Bread Ministries Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos