Nandhini Bala

Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels

Arts TA ↓ 255 episodes

Become a Paid Subscriber: https://anchor.fm/nandhini-bala/subscribe வணக்கம் நான் நந்தினிபாலகிருஷ்ணன். சிலருக்கு புத்தகங்களை வாசிக்க பிடிக்கும், சிலருக்கு புத்தகங்களை வாசிக்க நேரம் இருக்காது, இன்னும் சிலருக்கு பிறர் வாசித்து கேட்க, கதை கேட்க பிடிக்கும். அவர்களுக்காக நாவல்களையும், சிறுகதைகளையும் ஒலி வழியாக உங்கள் செவிக்கு விருந்தாக அளிக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றிnandhiniyinkuralosai@gmail.com

Author

Nandhini Bala

Category

Arts

Podcast website

www.facebook.com

Latest episode

Aug 13, 2023

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

குழந்தையின் சிரிப்பு/ kulanthaiyin siripil/purananutru sirukathai/ilakiya kathai/kaltamil audio book 09.04.2020

வணக்கம். குழந்தையின் சிரிப்பில். போரில் தோற்றுப்போன மலைமானுடைய இரு குழந்தைகளையும் யானையின் காலிட்டு இடரி கொல்ல முடிவு செய்கிறான் கிள்ளிவளவன். அவனுடைய இந்த செயல் நியாயமற்றது என்று எடுத்துரைக்கிறார் கோவூர் கிழார். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறும் கதையை இந்த கதை. நன்றி

வள்ளலின் அருமை/vallal varumai/tamil ilakkiya kathaikal/purananutru sirukathai/tamil audio books. 08.04.2020

வணக்கம். வள்ளலின் அருமை. கீரத்தனார் என்ற புலவர் ஒல்லையூர் வள்ளல் பெருஞ்சாத்தனார் அவரின் வீட்டின் முன்பு அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூறுகிறார். அந்த நினைவுகள் என்ன என்பதை கூறுவதே இந்த கதை. நன்றி.

Sivantha viligal/tamil ilakkiya story/purananutru sirukathaikal/tamil audio book/சிவந்த விழிகள் 07.04.2020

வணக்கம். சிவந்த விழிகள். அதியமான் ஒருமுறை போருக்கு செல்கிறான். அந்நேரம் அவனுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவளுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. அவனுக்கு வெற்றி கிட்டிய நேரம் ஆண்குழந்தை பிறந்த செய்தியும் வருகிறது.அந்த குழந்தையை பார்ப்பதற்காக போர் உடையில் வருகிறான் அதியமான். அப்பொழுது நடக்கும் நிகழ்வை விவரிப்பது இந்த கதை நன்றி.

Pen kolai perum pavam/purananutru sirukathai/ilakkiya kathai/tamil audiobook/பெண் கொலை பெரும் பாவம் 06.04.2020

வணக்கம். பெண்கொலை பெரும்பாவம். ஒருமுறை கடையேழு வள்ளல்களின் வழிவந்த சிற்றரசர்களாக இளவிச்சிக்கோ இளங்கண்டிரங்கோ என்ற இரு அரசர்களைப் பார்க்க பெருந்தலைச்சாத்தனார் செல்கிறார். அப்பொழுது இளங்கண்டிரங்கோவின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் புலவர் இளவிச்சிக்கோவை உதாசீனப் படுத்துகிறார் அதற்குக் காரணம் என்ன என்பதை கூறும் கதையை இந்த கதை நன்றி.

Vera pulium,verum pulium/purananutru sirukathai /tamil audio book/வீர pulium வெறும் புலியும். 05.04.2020

வணக்கம். வீர புலியும் வெறும் புலியும். இருங்கோவேள் என்னும் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் செல்கிறான் அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் முனிவரை புலி ஒன்று தாக்க வருகிறது. அந்த புலியை சாமர்த்தியமாக அவன் தடுத்து விடுகிறான் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த கதை நன்றி

Pannan vaalga/tamil ilakkiya kathaikal/tamil audio book /purananutru sirukathai /பண்ணன் வாழ்க 04.04.2020

வணக்கம். பண்ணன் வாழ்க. ஒருமுறை கிள்ளிவளவன் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறான் அங்கு மக்கள் ஒரு இடத்தில் தினமும் அன்னதானம் நடக்கிறது அந்த இடத்தில் அன்னதானம் உண்டுவிட்டு திரும்பி வருகின்றனர். யார் அந்த கொடை வள்ளல் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார் கிள்ளிவளவன். கொடைவள்ளல் என் பெயர் கண்ணன் என்று அறிந்து கொள்கிறார். தான் யார் என்னும் அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களைப் போல உணவருந்த செல்கிறார் கிள்ளிவளவன...

Vanmaium menmaium/tamil kathaikal/tamil ilakkiya kathaikal/tamil audio book/வன்மையும் மென்மையும். 03.04.2020

வணக்கம். வன்மையும் மென்மையும். செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனும், புலவர் கபிலரும் நடந்து செல்கின்றனர் அப்பொழுது கபிலரின் கையை பிடித்த மன்னனுக்கு அவரின் கை பெண்ணின் கை போல மென்மையாக இருப்பதை கண்டு அவரிடம் கேட்கிறார் அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்பதை இந்த கதை நன்றி.

Evano oru vetan/purananutru sirukathai/tamil ilakkiya kathaikal/tamil audio books/எவனோ ஒரு வேடன் 02.04.2020

வணக்கம். எவனும் ஒரு வேடன். புலவர் ஒருவரும் ஓய்வெடுப்பதற்காக காட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கிறார். அப்பொழுது அங்கு வரும் வேடனின் ஆற்றலைப் பார்த்து அவர் வியக்கிறார்வேடனின். பின்பு அவனிடம் சென்று அவனைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறார். அவன் யார் என்பதை இந்த கதை நன்றி.

Kani kodutha kanivu/purananutru sirukathai/tamil ilakiya story/tami audio books/கனி கொடுத்த கணிவு 01.04.2020

வணக்கம். கனி கொடுத்த கணிவு. அதியமான் தனக்குக் கிடைத்த ஒரு அற்புதமான கனியை அவ்வையாருக்கு கொடுக்கிறான். அதன்மூலம் அவ்வையாரின் வீடு அவன் கொண்டுள்ள அந்த அன்பு வெளிப்படுகிறது. அந்தக் கனி எப்படி அதியமானுக்கு கிடைத்தது என்பதைப் பற்றிய விரிவான கதை தான் இந்த கதை. நன்றி.

Kaalkatu/purananootru sirukathaikal /tamil audio books/ilakiya sirukathaikal /கால்கட்டு. 31.03.2020

வணக்கம். கால் கட்டு. புலவர் ஒருவர் தன் மனைவி மக்கள் வறுமையில் வாடுவதை பார்க்க முடியாமல் கண்காணாத தேசம் போக முடிவெடுக்கிறார். அவர் செல்லும் வழியில் ஒரு மானின் வாழ்க்கை நிலையைப் பார்த்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்கிறார். அந்தமானின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை விவரிப்பது இந்த கதை நன்றி

Anbin ariyaamai/tamil sirukathaikal /purananotru sirukathai/அன்பின் அறியாமை /tamil audio books 30.03.2020

வணக்கம். அன்பின் அறியாமை. மயிலுக்கு போர்வை தந்த பேகன் என்ற கதை நம்ம எல்லாருக்குமே தெரியும். அந்த நிகழ்ச்சி உண்மையிலே எப்போது எப்படி நடந்தது என்பதை விளக்குவது தான் இந்த கதை நன்றி.

Thotravan vetri/purananutru sirukathai /tamil audio books/தோற்றவன் வெற்றி /நா. பார்த்தசாரதி 29.03.2020

வணக்கம். தோற்றவன் வெற்றி. வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் போர் போர் நடக்கிறது. அந்தப் போரில் கரிகாலன் வெற்றி பெறுகிறான். அதற்கான வெற்றிக்கொண்டாட்டம் அவையில் நடக்கிறது. அப்பொழுது ஒரு புலவர் நீ வெற்றிபெறவில்லை தோற்றுப் போய் விட்டாய் என்று கூறுகிறார். எவ்வாறு தோற்றான் என்பதை விளக்கும் கதையே இந்த கதை நன்றி

Paranar keta parisu/purananutru padal /sangakala kathaikal /tamil audio books/பரணர் கேட்ட பரிசு 28.03.2020

வணக்கம். பரணர் கேட்ட பரிசு. பேகன் தன்னோட ஒழுக்கத்தை மறந்து, மனைவியையும் பிரிந்து வேறொரு பெண்ணின் அழகில் மயங்கி கிடக்கிறான். இந்த செய்தி அறிந்த பரணர் பேகனை எவ்வாறு அவன் மனைவியோடு சேர்ந்து வைக்கிறார் என்பதே இந்த கதை. நன்றி.

Adipatai onruthan/purananootru sirukathai/sangakala kathaikal /tamil audio books/அடிப்படை ஒன்றுதான் 27.03.2020

வணக்கம். அடிப்படை ஒன்று தான். மன்னன் ஒருவருக்கு இறைவன் படைத்த இந்த உலகில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதை அரசவையில் அவர் கேட்கிறார். அவை புலவர்களுக்கு இதற்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியவில்லை. அதற்கு நக்கீரர் பதில் தருகிறார். அந்த பதில் என்ன என்பதே இந்த கதை. நன்றி

Natpu kathai/ purananootru sirukathai/tamil audio book/tamil kathaikal/ நட்பு கதை/ நா. பார்த்தசாரதி 26.03.2020

வணக்கம். நட்பு கதை. பிசிராந்தையார் என்ற புலவரும், கோப்பெருஞ்சோழன் என்ற சோழ அரசனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்பு கொள்கிறார்கள். சில பிரச்சனைகளால் கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பு இருந்து வடக்கு நோக்கி உயிர் நீக்க முடிவு செய்கிறான். அப்பொழுது என்னுடன் என் உயிர் நண்பன் பிசிராந்தையாரும் வடக்கு நோக்கி உயிர் விடுவார் என்று அவர் கூற அனைவரும் ஏளனமாக சிரிக்கின்றனர். இறுதியில் பிசிராந்தையார் வருகிறாரா இல்லையா...

Veera kudumpam/purananooru sirukathaikal/tamil thathuva kathaikal/tamil audio book/வீர குடும்பம் 25.03.2020

வணக்கம். வீர குடும்பம். ஒரு போரில் தன் தம்பி மற்றும் கணவனை இழக்கிறார் ஒரு பெண்மணி. இருப்பினும் இந்த போரில் தன் குடும்பத்தின் சார்பாக ஒருவர் இருக்க வேண்டும் என்று தன் ஒரே மகனையும் போருக்கு அனுப்பி வைக்கிறாள் அதை பற்றிய கதைதான் இந்த சிறுகதை

Tamil kapatriyathu/purananootru sirukathai /tamil audio book/தமிழ் காப்பாற்றியது/tamil short story 24.03.2020

வணக்கம். மோசிகீரனார் என்ற புலவர் ஒருவர் நெடுதூரம் நடந்து வந்த களைப்பில் அரண்மனை மண்டபத்தில் உள்ள முரசு வைக்கும் கட்டிலில் படுத்து உறங்கிவிடுகிறார். அந்த முரசு கட்டிலில் படுபோர்க்கு மரண தண்டனை கொடுப்பது வழக்கம். இதில் இருந்து புலவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த கதை. நன்றி

Or ariurai/tamil audiobook/purananootru sirukathai /tamil kathaikal /ஓர் அறிவுரை 23.03.2020

வணக்கம். ஓர் அறிவுரை. அறிவுடை நம்பி என்ற மன்னன் நாட்டில் மக்கள் மீது செலுத்தப்படும் அதிக வரி பற்றி பிசிராந்தையார் என்ற புலவர் மன்னனிடம் ஒரு யானை கதை மூலமாக எடுத்துரைப்பதே இந்த கதை. நன்றி

Parisilanukku eliyan/purananootru sirukathai/tamil kathaikal /tamil audio book/பரிசிலர்க்கு எளியன் 22.03.2020

வணக்கம். பரிசிலர்க்கு எளியன். மூவேந்தர்கள் பாரி மன்னன் உடைய அந்த பறம்பு மலையை முற்றுகை இடுகிறார்கள் . பாரியின் நெருங்கிய நண்பரான கபிலர் மூவேந்தர்களை சந்தித்து பாரியை வாள் வேல் வில் இவைகளால் வெற்றி பெற முடியாது என்றும் அன்பால் மட்டுமே அவனை வெற்றி பெற முடியும் என்று அவர்களுக்க எடுத்துரைப்பதே இந்த சிறுகதை

Avanukuthaan vetri /purananootru sirukathai /tamil audio book /அவனுக்குத்தான் வெற்றி/tamil story 21.03.2020

வணக்கம். அவனுக்குத்தான் வெற்றி. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி  என்று ஒரு சோழ மன்னன்.அவன் பேரழகன் அவன் ஒருமுறை போருக்கு செல்லும் போது அவன்மீது நக்கண்ணை என்ற பெண் காதல் வயப்படுகிறாள். போர் முடிந்து அவன் நாடு திரும்பும் போது அவன் பிரிவாள் அவள் படும் துயரத்தை விவரிக்கும் கதை தான் இந்த சிறுகதை. நன்றி.

Thalai kodutha tharmam/tamil sirukathai/tamil audio books/purananootru sirukathai/தலை கொடுத்த தர்மம் 19.03.2020

வணக்கம். தலை கொடுத்த தர்மம். குமணன் என்ற மன்னன் தன் தம்பியின் சூழ்ச்சியால் அரசாட்சி இழந்து காட்டுக்கு செல்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பல ஆயிரம் பொற்காசுகள் வழங்க படும் என்று இளங்குமணன் அறிவிக்கிறான். அந்த சமயம் கட்டில் தன்னை சந்திக்க வந்த பெருந்தலைச்சாத்தனாரின் வறுமையை போக்க தன் தலையை தர முன்வருகிறான் குமணன். இதை பற்றிய செய்தி தான் இந்த சிறுகதை.

Paravaium pavalanum/purananootru sirukathai/tamil audio books/பறவையும் பாவலனும்  17.03.2020

வணக்கம். Paravaium pavalanum. தங்களுக்குள் இருக்கும் போட்டியால் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் அடுத்தவர் நாட்டில் இருந்து வருபவர்களை ஒற்றர்களாக கருதி தண்டனை கொடுத்துவந்தனர். அப்படி சிக்கிக்கொண்ட ஒரு பாவலரை கோவூர் கிழார் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த கதை. நன்றி.

Elimaum valimaium /எளிமையும் வலிமையும்/tamil sirukathaikal/purananutru sirukathai/tamil audio book 13.03.2020

வணக்கம். எளிமையும் வலிமையும். அவ்வையாருக்கு அதியமானும் ஒரு முறை உலா சென்ற போது சிறுவர்கள் சிலர் பட்டத்துயானையை பாகனுடன் சேர்ந்து குளிக்க வைப்பதை பார்க்கின்றனர். சில நாட்களுக்கு பின் அதே யானைக்கு மதம் பிடிக்கிறது அதை காரணமாக வைத்து அவ்வையார் அதியமானை எவ்வாறு ஒப்பிடுகிறார் என்பதே இந்த கதை.

Pulavar thoothu/purananooru sirukathai/tamil audio books/புலவர் தூது/tamil short story 12.03.2020

வணக்கம், புலவர் தூது. ஔவையார் போர் தூதுக்காக தொண்டைமானை சந்திக்க செல்கிறார். அங்கு அவன் தற்பெருமை பேச, ஔவையார் அதற்கு தக்க பதிலடியும், புத்திமதியும் புகட்டுகிறார். அது எப்படி என்பதை விவரிப்பதுதான் இந்த கதை.

Oru sol/ஒரு சொல்/tamil ilakiyam/purananooru/tamil audio book/tamil sirukathai 11.03.2020

வணக்கம். ஒரு சொல் சிறுகதை. விளையாட்டு வினையானது போல , கோவத்தில் வெளிவந்த வார்த்தையால் விளைந்த நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த கதை.

Listen to the Tamil Novel Oli - தமிழ் நாவல் ஒலி / Tamil Audio Books/Tamil podcast/tamil Novels podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.