Kamaraj J
குறிஞ்சி மலர்
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நீ இன்னா சார் சொல்றே- சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 09.07.2020 14:55
எளிய மனிதர்களின் வலிமையை வலியை உள்ளபடியே உணர்த்தும் ஊடகமாக நமக்கு மிகவும் பரிச்சயமானது மெட்ராஸ் தமிழ்... எளியவர்களின் வாழ்வை மிகவும் நெருக்கமாக ரசிக்க வைக்கும் ஜெயகாந்தன், தமக்கு பிடித்த -ஒரு கதாபாத்திர கதை சொல்லும் நடையில் - வெயிட்டர் பாய் பாண்டியனை பேச வைத்திருக்கிறார்...
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே- கட்டுரை ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் நூல்- இந்திய வானம் 07.07.2020 12:22
மகிழ்ச்சியை தேடும் பயணங்கள் எல்லாம் தன்னையறிதலில்தான் முற்றுப்பெறுகிறது என்ற மகத்தான ரகசியத்தை பொருத்தமான உதாரணங்களால் படிப்படியாக வெளிப்படுத்துகிறார்...எஸ்ரா...🙏🙏🙏
துறவு - சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 03.07.2020 46:53
வார்த்தைகளின் கனம் அறியாத பருவத்தில், வாழ்வின் கனம் புரிந்த பாவனையில்... மாய உலகடா என பரிகசிக்கும் பலரை நம் பால்யத்திலிருந்தே கண்டிருக்கலாம்... நமக்கே சொந்த அனுபவமாகவும் இருந்திருக்கலாம்... இக்கதையில் வரும் சோமுவைப்போல...
கங்கையும் கோடம்பாக்கமும் - கட்டுரை ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் 29.06.2020 12:48
இயற்கையை உள்ளபடியே நேசிக்கும் மனநிலை எளிதில் வாய்ப்பதில்லை...இயற்கையை, வாழ்வை அதன் போக்கில் ரசிக்கும் அந்த பேரனுபவம் தன் வாழ்க்கையில் நம்பிக்கை கீற்றுகளை விதைத்ததாக இக்கட்டுரையில் உரைக்கிறார் எஸ்ரா...ரிசிகேசத்தின் கங்கைக்காட்சியும், மார்கழிப்பனி இரவின் கோடம்பாக்க பாலத்தடி வாசமும் ஏற்படுத்திய மன ஓட்டங்களை பகிர்ந்து கொள்கிறார் எஸ்ரா...🙏🙏👍👍
முன் நிலவும் பின் பனியும் -சிறுகதை ஆசிரியர் -ஜெயகாந்தன் 25.06.2020 36:05
தவிர்க்க இயலாத முதுமையை தவிப்பில்லாமல் எதிர்கொள்ளும் துணிச்சல் எளிதில் சாத்தியமில்லை.எங்கோ தூரத்தில் பிரிந்து வாழும் உறவுக்காக ஏங்கி தவிப்பதில், அருகில் நெருங்கி வாழும் அன்பிற்குரியவர்களை அந்நியமாக்கிக்கொள்கிறோம். இதை உணர்ந்து மருகும் நேரம், கடமைகள் அற்றுப்போன பருவத்தையும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. இக்கதையின் பெரிய கோனாரை தொற்றியது போல...
வாழ்வாங்கு வாழ வேண்டும் - விவேகதீபம் வெள்ளிவிழா மலர்- SVAA முகப்புரை - 2 23.06.2020 5:55
சில திரைப்படங்களுக்கு அமையும் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகளைப்போல, உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தின் 25ஆம் ஆண்டு விழா மலருக்காக,சுவாமி விவேகானந்த முன்னாள் மாணவர் சங்கம்-SVAA குறித்து நான் எழுதிய இரண்டாவது முகப்புரை... பிரசுரிக்கப்படாதது... பிரசுரிக்கப்பட்ட "விவேக யக்ஞம்" முகப்புரை அருமைச் சகோதரர் சத்தியராஜ் கைவண்ணம்... மன ஓவியம்...அவர் குரலில் பதிவிட வேண்டும் என்பது நம் விருப்பம்...
சினிமா - கட்டுரை ஆசிரியர் - ராமகிருஷ்ணன் நூல்- இந்திய வானம் 21.06.2020 12:17
சினிமா... மன எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மகத்தான உணர்வு... சினிமா அல்லாத பால்யத்தில், கூறுவதற்கு மிஞ்சுவது மிகக்குறைவே...நினைவுகளுக்கு சுகந்தம் பரப்பும் பண்பு கொண்டது சினிமா... சினிமா போன்ற பண்பாட்டுக்களஞ்சியம் காக்கப்பட வேண்டும்... உள்ளிட்ட பல சிந்தனைகளை விதைக்கிறார் எஸ்ரா...🙏🙏🙏🙏👍
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் -சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 18.06.2020 26:26
பிறருக்கு இயல்பாக விட்டுக்கொடுப்பதை தியாகம் என மெய்ச்சிலிர்க்கும் இதே சமூகம், ஆதிக்கவெறியால் அடிமைப்படுத்தி சிலரை சீரழிக்கவும் செய்கிறது. பெயரும் முகமும் வாழ்வும் இழந்த அந்த சிலரின் பிரதிநிதியாக இங்கே ஒரு "நான்" .....
இதயத்தின் ஜன்னல்- கட்டுரை ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் நூல் - இந்திய வானம் 15.06.2020 13:03
சக மனிதர்களுடன் நம்பிக்கையோடு உறவாடும் அவசியத்தை உணர்த்தும் அற்புத கட்டுரை.... வீட்டின் ஜன்னல்களின் எண்ணிக்கை இதயத்தின் இளகிய தன்மையை குறிப்பது என அடைக்குந்தாழில்லா அன்பின் அடர்த்தியை உணர்த்துகிறார் எஸ் ராமகிருஷ்ணன்... "இதயத்தின் ஜன்னல்" கட்டுரையில்.🙏🙏🙏
சுயதரிசனம் - சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 11.06.2020 38:14
ஏளனங்களும் ஏச்சுகளுமே நிரந்தரங்களாகிப் போகும் சூழலில், தன்முனைப்பு இல்லா வெற்று வாழ்க்கை பழகிவிடும்.. அந்த போலித்தனத்தை தோலுரிக்கும் அவமானங்கள் ஆசிர்வாதங்களே...
குறைப் பிறவி -சிறுகதை ஆசிரியர் -ஜெயகாந்தன் 08.06.2020 19:19
ஊனத்தைத் தூற்றுவது ஈனம் என்பதை பலவீனமான தருணங்கள்தான் மனிதர்களுக்கு உணர்த்துகின்றன. மாறாக ஈனம் சிறிதும் இல்லாத குழந்தை மனதிற்கு காண்பதெல்லாம் அழகே...ஆனந்தமே...
மெளனத் துணை - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : இந்திய வானம் 05.06.2020 10:45
புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணராத, உணர்த்தாத சமூகம் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்யும் எஸ் ராமகிருஷ்ணன், அந்த மெளனத்துணையின் அற்புதங்களை அனுபவித்த ஒரு சிலரை அறிமுகம் செய்கிறார்...🙏🙏🙏
ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் - ஆசிரியர் : ஜெயகாந்தன் 30.05.2020 34:43
ராணுவ வாழ்க்கை மென்று எறிந்த சக்கையென இரண்டு உலகப்போரிலும் போரிட்டு காயத்தால் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவன், யாருக்காக வாழ்வது என இழந்த வாலிபத்தை எண்ணி மயங்கி நிற்கும் வேளையில் , ஒரு பொக்கிஷத்திற்கு சொந்தக்காரனாகிறான்.வாழ்வைக் கொண்டாட பயணிக்கிறான்...ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்...
சந்தோசத்தின் மறுபக்கம் - ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் நூல் - இந்திய வானம் 28.05.2020 11:20
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உண்மையான பயன் என்ன? அந்த மகிழ்ச்சியின் முழுமையான வெளிப்பாடு எது..? போன்ற முக்கியமான கேள்விளை எழுப்பி , நியாயமான பதில்களை அளிக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்...."சந்தோசத்தின் மறுபக்கம்"....🙏🙏🙏🙏😄
அதிகம் பேசாதே - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் - இந்திய வானம் 26.05.2020 11:17
தேசாந்திரியைத் தொடர்ந்து இந்திய வானத்தின் வழியாக எஸ் ராமகிருஷ்ணனுடன் நாம் பயணிக்க உள்ளோம்.goodreads.com இணையப்பக்கத்தில் தரப்பட்டுள்ள இந்நூல் குறித்த அறிமுகவுரை :பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக...
நோக்கும் திசையெல்லாம் - "தேசாந்திரி"யின் நிறைவுப்பகுதி ஆசிரியர் - எஸ் ராமகிருஷ்ணன் 21.05.2020 10:02
வெயில் என் முதல் தோழன் என ஊர் சுற்றும் தேசாந்திரியாய் தன் உலகு அறிதலை துவங்கிய எஸ்ரா, இமயத்தின் உச்சியில் சூரியனின் கம்பீரத்தை சிலாகித்து , தன் வீடும் உலகின் எந்த அதிசயத்திற்கும் சளைக்காத மயக்கம் மிகுந்தது என தேசாந்திரியை நிறைவு செய்கிறார்...நிகழ்கால முத்திரை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரியின் 41 கட்டுரைகளில் 19 முக்கியமான பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் மகத்தான வாய்ப்பு அடியேனுக்கு கிட...
நிறம் அழிந்த பூக்கள் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் - தேசாந்திரி 20.05.2020 8:48
பெயர் தெரியாத சித்திரக்காரனின் வழியாக காலம் தன்னை தக்கவைத்துக்கொண்ட பலநூறு முயற்சிகளை இன்றைய சமூகம் அலட்சியப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் எஸ்ரா...
அலையோரம் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல்- தேசாந்திரி 18.05.2020 12:58
ராபர்ட் க்ளைவ் பார்த்த சென்னையும் நாம் பார்க்கும் சென்னையும் ஒன்றா என வியப்புறும் எஸ்ரா, அமீபா போன்று உருமாறிக்கொண்டே இருக்கும் நாகரீகத்தின் சமகால கலைப்படைப்புகளை, அடையாளங்களை வெகுசனம் ரசிப்பதே இல்லை என வருந்துகிறார்...
உறங்கும் கடல் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் - தேசாந்திரி 16.05.2020 9:19
கடல் கொண்ட தனுஷ்கோடி கடற்கரையில் புத்தாண்டு இரவை கழிக்கும் எஸ்ரா, கடலின் அன்றைய உக்கிரம் இன்றளவும் பல மனங்களின் கொந்தளிப்பாய் மிரட்டுவதாக கூறுகிறார்...
உள்ளங்கை ரேகைகள் உருமாற்றம் பெறும் இடம் - ௧விதை : இரா. நீலமோகன் நூல் - விவேகதீபம் 15.05.2020 4:53
உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தின் 1992-93 முதல் Batchஐ சேர்ந்த இரா. நீலமோகன் குருகுலத் தாய் வீட்டில் தாம் வளர்க்கப்பட்ட விதத்தை இக்கவிதை மூலம் அவர் குரலிலேயே பகிர்ந்து கொள்கிறார். கருவியல் காணாத விந்தையென, மீண்டும் தாய்க் குருகுல கருவாகி...இன்று பல உள்ளங்களின் கருப்பொருளாய் விளங்க முடிந்ததாக விவரிக்கிறார்.காரணம் குருகுல பெரியோர் தந்தது மனதளவிலான மாற்றங்கள் அல்ல ...மரபணு அளவிலான மாற...
உலகு அறிதல் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 13.05.2020 8:06
கல்விச்சாலைகள் வணிகநோக்கால் சீர்கேட்டுக்களங்களாக உருமாறி வருவது குறித்து வருந்துகிறார் எஸ்ரா ...🙏🏽🙏🏽🙏🏽
கடல் சொன்னது - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 13.05.2020 9:15
கடல் காலத்தின் நாவா என ஆச்சர்யப்படும் எஸ்ரா, உப்புத் தண்ணீர் என்பதைத் தாண்டி கடலை புரிந்து கொள்ளவில்லையே நாம் என பரிகாசம் செய்கிறார்... 🙏🏽🙏🏽🙏🏽
விவேக தீபம் வெளியீட்டு விழா - பொதிகையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் ஒலிவடிவம் 12.05.2020 36:51
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தின் வெள்ளி விழா ஆண்டை குருகுலத்தின் 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒரு விழாவாக 26.4.2015ல் சிறப்பாக கொண்டாடினர். குருகுலத்தின் பயின்ற அனுபவத்தையும், தங்கள் வாழ்வு அதனால் மேம்பட்டதையும் கட்டுரைகளாக விவேக தீபம் என்ற பெயரிலான விழாமலரில் பகிர்ந்துள்ளனர். தவத்திரு சுவாமி அனந்தானந்தஜீ, தவத்திரு ஸ்ரீ ராமகிருஷ்ண ப்ரியா அம்மா ஆகியோர் முன்னிலையில் தி...
கண்ணால் வரைந்த கோடு - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் - தேசாந்திரி 10.05.2020 11:53
சென்னையின் புராதன சின்னங்களின் ஒன்றான புனித தாமஸ் மலை, இமயமலையின் சிறப்பை பறைசாற்ற பயன்பட்ட வரலாறை எடுத்துரைக்கிறார் எஸ்ரா..🙏🏽🙏🏽🙏🏽
கற்றுக்கொடுக்கும் காலம் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 09.05.2020 9:13
ஒரு நாட்டின் சுதந்திரப்போராட்டம் வெறும் காகிதக்குறிப்புகளாக சுருங்கிவிடக்கூடாது என எச்சரிக்கும் எஸ்ரா, நம் வாழ்விடத்தின் சரித்திரத்தையும் கலாச்சாரத்தையும் அறிந்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.