Kamaraj J

குறிஞ்சி மலர்

Arts TA ↓ 203 episodes

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Author

Kamaraj J

Category

Arts

Podcast website

podcasters.spotify.com

Latest episode

May 21, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

கடவுளின் பிரதிநிதி-சிறுகதை-புதுமைப்பித்தன்-Project Madurai 07.11.2020

ஆலயப்பிரவேசம் அனைவருக்குமானது என புரட்சியாளர் ஒருவர் வேதத்தையே மேற்கொள் காட்டி கோயில் பூசாரி ஒருவரின் மூடநம்பிக்கைக்கு சம்மட்டி கொடுப்பதாகவும், அதனால் ஏற்படும் மனமாற்றத்தையும் , 1934ல் இந்த சிறுகதையின் மூலம் மணிக்கொடி இதழில் பதிவு செய்திருக்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்... வேதாந்தம் எனப்படும் வேதத்தின் இறுதிப்பகுதி வலியுறுத்துவதும் அனைத்தும் அனைவரும் ஒன்றே என்பதைத்தான். நடைமுறையில்தான் எவ்...

ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி-இறுதிப்பகுதி-15/15 01.11.2020

இந்திய அரசியலை மகாத்மாவுக்கு முன் ,மகாத்மாவுக்கு பின் என வரையறுக்கும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட விழுமியங்களை நாம் காண்பதை ராஜாராமனின் மனஓட்டங்களாக இந்த இறுதிப்பகுதியில் பதிவு செய்கிறார் நா. பார்த்தசாரதி. ஒற்றை நோக்கத்திற்காக, ஆத்மபலத்தால் தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு சகாப்தத்தையும் , அதன் பிரயோஜனங்களுக்காக சுயநலத்தின் உச்சத்தில், பிறரை வருத்தும் ஒரு சகாப்தத்தையும் இப்பகுதியில் விவரிக்கிறார். தற்...

ஆத்மாவின் ராகங்கள் -நா.பார்த்தசாரதி-பகுதி-14 29.10.2020

ஆத்மாவின் ராகங்கள் நாவலின் கடைசி இரு பகுதிகளை நெருங்கியுள்ளோம்...🙏🙏🙏 பதவியில்லாத அரசியல் சாத்தியமில்லை... பிரிவுகளும் பேதங்களுமே பதவிக்கான அடிப்படைகளாகிவிடுகின்றன. விரத நியமங்களோடு முழுமை பெற்ற காந்திய அரசியல் தொடருமா என்ற கேள்விகளோடு, அதைவிட விசாலமான பணிகளே தேச நிர்மாணத்திற்கு பயன்படும் என்ற புரிதலோடு பயணப்படும் ராஜாராமன் உள்ளிட்ட நண்பர்கள், காணும் அத்தனையிலும் நிறைந்திருக்கும் "மதுர"மான நினைவ...

ஆத்மாவின் ராகங்கள்- நா,பார்த்தசாரதி-பகுதி-13 24.10.2020

அன்பு உயரிய நோக்கங்களின் பொருட்டு, தன்னலமற்றதாய் விரிவடையும் போது தியாகமாய் மலர்கிறது. ஆத்மாவின் ராகங்களாய் அந்த தியாகத்தின் தன்மையை உணர்த்த முயல்கிறார் ஆசிரியர்... ஆத்மாவின் ராகங்கள்- பகுதி-13/15

ஆத்மாவின் ராகங்கள்-நா.பார்த்தசாரதி-பகுதி-12 23.10.2020

சுபாஷ் போஸின் மதுரை பயணத்தின் போது ஏற்பட்ட அணி, காங்கிரஸிலிருந்து ராஜாஜி விலகல், செய் அல்லது செத்து மடி என்ற மகாத்மாவின் அறைகூவலுக்கு பிந்தைய கொந்தளிப்பு, அடக்குமுறை, கைது,மதுரையில் 144 உத்தரவு, ராஜாராமனின் அமராவதி கொடூர சிறைவாசம், கோபுரங்கள் இல்லாத மதுரையைப்போல, சிறைவாசம் முடிந்து வந்தவனின் முகத்தில் அறையும், நம்பமுடியாத அதிரடி மாற்றங்கள், அதிர்ச்சிகள் என அடுக்கடுக்கான சம்பவங்களின் தொகுப்பாய் இந்...

ஆத்மாவின் ராகங்கள்- நா. பார்த்தசாரதி-பகுதி-11 18.10.2020

தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்வானது, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு தலைவர்கள் கைது, சிறையிலிருந்தபடியே முனிசபல் தலைவராக காமராஜர் தேர்வாவது, சத்திய சேவாசிரம நிர்மாணப்பணிகள்,இயற்கையோடு இயைந்த ஆசிரமத்தின் அமைப்பு, ஆசிரம நிர்மாணத்தின் அடிப்படையாக மதுரம் உள்ளிட்டோரின் தியாக உணர்வு ஆகியவற்றின் தொகுப்பாய் இந்த பகுதி. ஆத்மாவின் ராகங்கள். பகுதி- 11/15🙏🙏🙏💐💐💐

ஆத்மாவின் ராகங்கள்-நா.பார்த்தசாரதி-பகுதி-10 16.10.2020

பதவி அரசியலின் விளைவால் பெருகி வந்த குழுமனப்பான்மையால், போட்டி, பகை அதிகரித்து, தேசிய மகாவிரதம் போன்ற அமைப்பு சராசரி கட்சியாகிவிடுமோ என்ற அச்சம் ,காந்திய வாழ்வியலையும், கிராம புனரமைப்புப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள ஆசிரமம்- அதன் இடத்தேர்வு, 1930- களின் தமிழக அரசியல் நடவடிக்கைகள்,காந்தியடிகள் மற்றும் நேதாஜியின் மதுரைப்பயணம் உள்ளிட்டவற்றின் தொகுப்பாய் இந்தப்பகுதி- ஆத்மாவின் ராகங்கள் - பகுதி- 10/1...

ஆத்மாவின் ராகங்கள்- நா.பார்த்தசாரதி-பகுதி-9 10.10.2020

ஜாமீன் வழக்கில் கைதாகி கடலூர் சிறை அசோஷியேஷன் ப்ளாக்கில் அனுபவிக்கும் வேதனைகள்,அரசியல் விடுதலையே கிடைத்தாலும் சமூக பழக்கவழக்கங்களிலுள்ள அடிமைத்தனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் விடுதலை பெற தேவைப்படும் அமைப்பு, காமராஜர், அருணாசலம், முத்துசாமி உள்ளிட்ட தலைவார்கள் மீதான வெடிகுண்டு வழக்கிற்காக வக்கீல் ஜார்ஜ் ஜோசப்புடன் பாடுபடுவது, பரிசுத்தமான அன்பால் மிருகங்களை மனிதராகவும் மனிதர்களை தெய்வமாகவும் ஆ...

ஆத்மாவின் ராகங்கள்-நா.பார்த்தசாரதி-பகுதி-8 03.10.2020

மதுரை மாகாண மாநாடு , மாநில கமிட்டி தலைவர் மற்றும் செயற்குழுவினர் தேர்வு, முன்னுரிமைகளின் வேகத்தில் நடைபெறும் வாழ்க்கை ஓட்டத்தில் பிறந்த ஊரும் அதைச் சார்ந்தவையும், ரயில் பயண ஜன்னல் காட்சி போல் ஓடி மறைவது உள்ளிட்டவைகளோடு, மதுரத்தின் அன்பையும் அரவணைப்பையும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்கிறான் ராஜாராமன்- ஆத்மாவின் ராகங்கள்- நாவல்-பகுதி-8/15🙏🙏🙏

ஆத்மாவின் ராகங்கள்-நா.பார்த்தசாரதி-பகுதி-7 01.10.2020

வேறொரு சிறையில் இருந்ததனால் முக்கியத் தலைவர்களை சந்தித்து அவர்களோடு அளவளாவும் வாய்ப்பு தவறிவிட்டதே என வருந்தும் தொண்டர்கள், மேங்காட்டு பொட்டல், தல்லாகுளம் என முக்கிய இடங்களில் கதர் விற்று மாநாட்டு நிதி திரட்டல் ஆகிய இவற்றுக்கிடையே, தான் இவளால் இப்படி மாறிவிட்டோமே என ஒருபுறம் ஆச்சர்யப்படும் ராஜாராமன், தன்னை அறியாமல் உரிமை கொண்டாடி, கோபத்தால் தடுமாறி பிடிவாதம் காட்டுகிறான் மதுரத்திடம்...ஆத்மாவின் ரா...

ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி-பகுதி-6 27.09.2020

தலைவர்கள் சத்தியமூர்த்தி காமராஜர் உள்ளிட்டோர் பங்கேற்கும் , மதுரை மாகாண காங்கிரஸ் மாநாட்டு ஏற்பாடுகளுக்கிடையே,முழுமனதாக தேசத்திற்காக உழைத்தாக வேண்டிய உறுதிப்பாட்டிற்கு புதிதாக மலர்ந்து வரும் பந்தம் சாதகமா, பாதகமா என அஞ்சுகிறான் ராஜாராமன். பொதுநலம், தேசபக்தியின் அடிப்படையில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் பிரியமும் உருவாக முடியும் என்பதைக் காண்கிறான் ராஜாராமன். ஆத்மாவின் ராகங்கள் - நாவல் -...

ஆத்மாவின் ராகங்கள்-நா.பார்த்தசாரதி-பகுதி-5 25.09.2020

காந்தி-இர்வின் உடன்படிக்கைக்கு பிந்தைய விடுதலைகள் நிகழ்ந்த பின்னணி. அம்மா மற்றும் வாசகசாலையோடு ஒரு மாலை இருட்டில் மதுரையை விட்டு கைதியாய் சென்றவனை நினைத்து நினைத்து இன்னொரு மனமும் நொந்து அழுததை அவன் அறிந்திருக்கவில்லை. சிறைவாசம் ஏற்றதனால் அன்றாடக் கடமைகளை மறந்தேயாக வேண்டும் என்ற நிலையில், அவனே வியக்கும் வண்ணம் நடந்தேறும் ஆச்சர்யங்கள். பிறப்பால் அல்ல, எண்ணத்தால், செயலால் வருவதே மேன்மை - உதாசீனமும்...

ஆத்மாவின் ராகங்கள்- நாவல்-நா.பார்த்தசாரதி-பகுதி-4 22.09.2020

எண்ணத்தால் ஒன்றியுள்ளவர்களுக்கு சிறைச்சாலையும் தவச்சாலையாய் மாறுவது, தாய்நாட்டிற்காக ஏற்றுள்ள சிறைவாசத்தை பந்த பாசத்திற்காக இழக்க மறுத்து பரோல் அழைப்பை புறக்கணித்து மீளாத்துயரை நெஞ்சுரத்தோடு ஏற்பது, தேசபக்தி ஒரு புதிய தவமாய் நாட்டுமக்களை ஒருங்கிணைத்தது, கல்கத்தா மற்றும் லாகூர் காங்கிரஸ் குறித்த துணுக்குகள் என சரித்திர ஏடுகளில் நாம் கேள்விப்பட்ட சுதந்திர போராட்ட காலத்தை அனுபவமாக நமக்கு ஆக்குகிறார்...

ஆத்மாவின் ராகங்கள்- நாவல்-நா. பார்த்தசாரதி- பகுதி-3 19.09.2020

வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரகத்தில் தவறவிட்ட கைது வாய்ப்பை ஈடுசெய்ய, சீட்டுக்குலுக்கிப் போட்டதில், கைதாக வேண்டியோர் பட்டியலில் தன் பெயர் வரவில்லையே என வருத்தப்படும் நண்பர்கள், படிப்பைக் கெடுத்துக்கொண்டு பாழாய் போகிறானே என்ற தாயின் பரிதவிப்பு, ஆயுள் முழுவதும் ஆத்மார்த்தமாக ராஜாராமன் நன்றி கூறும் "அவளுடனான" மோதல் சந்திப்பு... உள்ளிட்ட ரீங்காரங்களின் தொகுப்பாய் இந்தப் பகுதி - ஆத்மாவின் ராகங்கள்- பகுதி...

ஆத்மாவின் ராகங்கள்-நாவல்- நா. பார்த்தசாரதி -பகுதி-2 17.09.2020

நாட்டின் அடிமைத்தனத்தை வேரறுக்க வேண்டும் என்ற ஆசை உண்டு,உபாயங்கள் புலப்படவில்லை. முகமறியா ஒருவர், பத்திரிக்கை அளவிலான பரிச்சயம் மட்டுமே. ஒரே ஆயுதம்.அஹிம்சை. எப்படி இளைஞர்களை இந்த மனிதர் ஆட்கொண்டார்? அப்படி கல்லூரிப் படிப்பையும் உதறி, காந்தியடிகளுக்காக போராட்டக்களத்தில் குதிக்கிறான் ராஜாராமன். ஆத்மாவின் ராகங்கள் நாவலின் பகுதி- 2/15.

ஆத்மாவின் ராகங்கள்-சமூக நாவல்-நா.பார்த்தசாரதி- பகுதி-1 14.09.2020

காந்தீய சகாப்த நாவல் இது என்று குறிப்பிடும் ஆசிரியர், சத்தியாக்கிரகி ஒருவரின் வாழ்வை, அவரின் அறவழிப்போராட்டங்களின் வழியே கூறியுள்ளார். ஆத்மாவால் வாழ்ந்த சகாப்தத்தையும், மனதால் வாழ முற்படும் வேறுபட்ட சகாப்தத்தையும் அந்த சத்தியாகிரகியின் வாழ்வு மற்றும் எண்ணங்களின் ஊடாக நம்மிடம் பகிர்கிறார். பதினைந்து பகுதிகளாக விரியும் நாவலின் முதல் பகுதி இது...

தாம்பத்யம் -சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 15.08.2020

விளிம்புநிலை மனிதர்களின் அற உணர்வை எப்போதுமே பாராட்டும் ஆசிரியர், பிளாட்பாரவாசிகளின் வாழ்நிலையை விவரிப்பதோடு, இருட்டை த் துருவி திருட்டைக் கண்டுபிடிக்க சொல்லும் சட்டம், மனசைத் துருவி உணர்ச்சியைப் பார்க்க சொல்லிக்கொடுக்க வில்லையே என வருத்தப்படுகிறார்.

அந்தரங்கம் புனிதமானது- சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 09.08.2020

கடந்த தலைமுறையின் வார்ப்பில் தாத்தா- பாட்டியின் வாஞ்சையில், வளர்ந்து,வேலை நிமித்தமாய், பட்டணத்து நாகரீக வாழ்க்கையில் உள்ள தாய், தந்தையரோடு வாழ முற்படும் ஒரு இளைஞன், அறியக்கூடாததை அறிந்து மனங்குழம்பி, "உங்கள் வாழ்க்கைநெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் என தாய் தந்தையருக்கு கடிதம் எழுதுகிறான்... சொல்லாமல் கொள்ளாமல் பட்டணத்தை விடுத்து தாத்தா பாட்டியிடமே ஓடிப்போகிறான்...

தமிழ் இலக்கியக் கதைகள் - 2 ஆசிரியர்- நா பார்த்தசாரதி நூல் - தமிழ் இலக்கியக் கதைகள் 03.08.2020

வள்ளலை சந்திக்கப்போகும் துள்ளலில் வறுமையை எள்ளிநகையாடும் புலவர், இல்லாத பண்புகளை பாடிய பொருந்தாத பொய்யுரைகளே இல்லானாய் ஆக்கியதோ என்ற வேதனையின் வெளிப்பாடு, தேனீயும், கரையானும் அதனதன் நிலையில் அபாரப்படைப்புகளே என்று சோழனிடம் வாதாடும் புலமை,காதையடைக்கும் பசியில் வரகரிசியும் கத்தரிக்காய் வதக்கலும் படைத்திட்ட ஏழையை போற்றும் மூதாட்டி என கதம்பச்சுவையாய் இந்த பகுதி..... நன்றி- தமிழ் புத்தகாலயம்.

தரக்குறைவு -சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 01.08.2020

வஞ்சிக்கப்பட்டாலும், வெறுப்பிற்கு பதிலாய் பொறுப்பை வெளிப்படுத்தும் கணவனை தந்தையானவன் என பெருமைப்படுத்துகிறார் ஜெயகாந்தன். பாஷையும் தோற்றமுமே தரத்திற்கான இலக்கணமாகி விட முடியுமா என கேள்வி எழுப்பி, எளிய மனிதர்களோடு தோள் சாய்த்து நிற்கிறார் ஆசிரியர்.

உண்மை சுடும் - சிறுகதை ஆசிரியர் - ஜெயகாந்தன் 26.07.2020

பிரம்மச்சர்யம் மற்றும் மண வாழ்க்கையின் நோக்கம், இல்லற வாழ்வில் , பொய்யாகிவிட்ட உண்மைகளுக்கு உயிரூட்டுவதன் பயனற்றதன்மை ஆகியவற்றை உணர்த்தி நடைமுறை வாழ்வின் மேன்மைகளை உரைக்கிறார் ஜெயகாந்தன்.

நம்பிக்கையின் நான்கு கால்கள்- கட்டுரை ஆசிரியர் -எஸ் ராமகிருஷ்ணன் நூல்- இந்தியவானம் 23.07.2020

ஒரு மரமேஜையின் மதிப்பு பல கோடி என்னும் டோரன், பத்து ரூபாய் வெறும் பத்து ரூபாய் மட்டுந்தானா எனக் கேட்கும் தாய் உள்ளிட்டவர்களின் அனுபவமொழிகளின் மூலம் பணத்தின் எல்லையை விவாதிக்கும் ஆசிரியர், மனித வாழ்வின் மாண்பை வியக்கிறார்...

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்- சிறுகதை ஆசிரியர்-ஜெயகாந்தன் 19.07.2020

கணவனே கண்கண்ட தெய்வம் என அவனது ஒவ்வொரு பெருமைகளையும் ரசித்து ருசித்து குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து வரும் ஒருத்தி, ஒரு நாள் நிகழ்வில், அவன் முகத்தில் முழிக்கக்கூடாது என தீர்மானிக்கிறாள்.

தமிழ் இலக்கியக் கதைகள்-பகுதி-1 - நா. பார்த்தசாரதி - தனிப்பாடல்கள்- ௧தை வடிவில்... 17.07.2020

எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் தமிழ் இலக்கிய பற்றில் விளைந்த நூல்- தமிழ் இலக்கியக் கதைகள். என்ன காரணத்தாலோ பிரபலமாகாமால் போன தனிப்பாடல்கள், பாமர மக்களை அவசியம் சேர வேண்டும் என கதை சொல்லும் பாங்கில் விவரிக்கிறார் ஆசிரியர். தமிழ் இலக்கியங்களில் நகைச்சுவை சிறப்பான இடம் தனிப்பாடல்களுக்கே என உறுதியாக கூறுகிறார் நா.பா. சுவைப்போம் வாருங்கள் நகையோடு... நன்றி- தமிழ்ப் புத்தகாலயம் &Project Madur...

தலைமுறையின் தூரம் -௧ட்டுரை ஆசிரியர்- எஸ் ராமகிருஷ்ணன் நூல் - இந்திய வானம் 13.07.2020

மாறிவரும் காலச்சூழலில், பிள்ளைகள் தங்களை அந்நியமாக நினைக்கிறார்களே என வருத்தப்படும் பெற்றோர்கள்... தன்னை புரிந்துகொள்ள பெற்றோர் மறுக்கிறார்களே என ஏங்கும் பிள்ளைகள்... இடையிலான தலைமுறையின் தூரத்தை சுட்டிக்காட்டி, சில உதாரணங்கள் மூலம் விடை தேட வலியுறுத்துகிறார் எஸ்ரா...

Listen to the குறிஞ்சி மலர் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.