Kamaraj J
குறிஞ்சி மலர்
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...
Où écouter ?
Les podcasts dans l'appli Replaio Radio Bientôt disponibleLes podcasts arrivent très bientôt dans l'appli. Installe-la dès maintenant et découvre en avant-première une toute nouvelle façon de vivre les podcasts
Épisodes
நாயன்மார் வரலாறு -46- பத்தராய் பணிவார் 21.05.2026 9:38
சிவனடியார்களை கண்ட மாத்திரம் மெய்யுருகி நின்று தொண்டாற்றும் பித்தர்கள், எம்பெருமான் நினைப்பிலேயே நித்தமும் தம்மை இழக்கும் சிவத்தொண்டர்களின் வகைகளுக்கு வரம்பு உண்டா!?
நாயன்மார் வரலாறு -45-இடங்கழி - கோட்புலி நாயனார் 13.10.2025 11:40
சிவனடியார்களுக்கு அமுது படைக்க அரண்மனை நெற்கட்டில் நெல் திருடிய திறம், பஞ்சத்திலும் குன்றாத சிவபூஜை, இறைவனுக்குண்டான நெல்குவியலை தொட்ட உறவினர் பாலகர் என அனைவரையும் மாய்த்த வகை என சிவப்பித்தின் தன்மைகள் ஏட்டில் அடங்குபவையா!?
நாயன்மார் வரலாறு -44-காரி -கழற்சிங்கர் 10.09.2025 9:55
தமிழ் மாலை சூட்டி அழகு சேர்த்த அண்ணல், சமணர் சூழ்ச்சி வென்று சம்பந்தரால் ஞானம் கைவரப்பெற்ற மன்னர், மயிலையின் மன்னனை போற்றியவர், படை நடத்தி திருப்பணி போற்றியவர், அபச்சாரம் செய்த அரசியின் மூக்கை துண்டித்த சிவனடியார் என சூழல் மாறினும் குணம் மாறாத நாயன்மாரின் பக்தி வேட்கைக்கு ஈடு ஏது!?
நாயன்மார் வரலாறு -43-கலியர் -கண ம்புல்லர் 09.08.2025 9:31
திருவிளக்கு திருப்பணிக்கு நெய் ஈட்ட வழியின்றி உதிரம் போக்க கழுத்தை அரிந்த அன்பர், அடியாரை பழிப்பவரின் நாக்கினை துண்டாக்கும் அன்பர் என பாசத்தால் பிணித்து ஆடல் ஆயிரம் நடத்தும் அம்பலத்தரசனை உள்ளபடியே அறிந்தவர் உண்டா!?
நாயன்மார் வரலாறு-42-புகழ்ச்சோழர் -கலிக்கம்பர் 22.04.2025 11:01
அடியார் ஒருவரை தம் படை கொன்றதை அறிந்து பொறுக்காது தீயில் மாண்ட பேரன் பாளர், கொடுநோய் உற்றாலும் நீரணிந்தவரை எம்பெருமானாய் போற்றியவர், வறுமை வாட்டிய போதும் பொன் மீனை முதல் மீனாக இறைவனுக்காக கடலில் எறிந்தவர்,அடியார் உருவில் வந்த எதிரி ஒருவரிடம் முகம் கோணிய மனைவியின் கரத்தினை துண்டித்த அன்பர் என அம்பலவாணர் நிகழ்த்தும் ஆடல்கள் கோடி!
நாயன்மார் வரலாறு - 41-கணநாதர் - கூற்றுவர் 27.02.2025 10:07
சீர்காழி அருளிய கணநாதர், சோழ மணிமகுடம் வேண்டி தில்லைவாழ் அந்தணரை நாடிய கூற்றுவர், சிவனார் புகழ் பாடும் 49 பொய்யடிமையில்லா புலவர்கள் ஆகியோரின் புகழ் அறிவோம்!
நாயன்மார் வரலாறு -40-சேரமான் பெருமான் 11.01.2025 22:55
இறையன்பர்கள் பக்தியினால் காவிரி விலகி அக்கரை சேர்ந்து இறை தரிசனம் சாத்தியமான வரலாறு அறிவோம்... திருவெண்ணீறு காணும்கால் திருச்சடையான் திருமுகம் காணும் பக்தி நிலை சாத்தியமா!?
நாயன்மார் வரலாறு -39- சிறுத்தொண்டர் 02.01.2025 18:58
சிவனடியார் பிள்ளைக்கறி கேட்டும் சிறிதும் கலங்காமல் சமைத்து பரிமாறும் பக்குவமுடைய சிவ நேசர்களாக இல்லற பெருமக்களை பார்க்க முடியுமா!? நினைக்கவே இயலாதவற்றையும் இயற்றி வைக்கும் ஈசன் வழி வாய்ப்பதுண்டோ!?
நாயன்மார் வரலாறு-38-மாறர் -சாக்கியர்- சிறப்புலி 21.12.2024 8:39
சைவத்தின் மேன்மை அறிந்து எவ்வகையிலும் சிவனை வழிபடலாம் என தினமும் சிவலிங்கத்தை கல்லால் அடித்த நாயன்மாரோடு, சோமாசி மாறர், சிறப்புலியார் பக்தி காண்போம்..
கு ப ரா சிறுகதைகள் -40- லட்சிய வீரன் - 1943 16.12.2024 12:41
அவுரங்கசீப் அழைப்பை ஏற்று தில்லி செல்வது குறித்த சத்ரபதி சிவாஜியின் குழப்பத்திற்கு நண்பர் தானாஜியுடனான உரையாடல் தெளிவு தந்ததா? அவரின் முடிவு ஏற்றம் தந்ததா?
நாயன்மார் வரலாறு-37-தண்டியடிகள்-மூர்க்கர் 30.11.2024 9:57
திருவாரூர் திருக்குளத்தை செப்பனிட்ட பார்வையிழந்த நாயனார், சமணர்களினால் தடுக்கப்பட, ஈசனை வேண்டி சமணர்களுக்கு பாடம் புகட்டுகிறார்... சிவனடியார்களுக்கு அமுது படைக்க பொருள் அனைத்தையும் இழந்த பிறகும், சூதாடி பொருள் ஈட்டி அடியார் சேவையில் தன்னை மறக்கும் நாயன்மார்
நாயன்மார் வரலாறு- 36-கலிக்காமர்- திருமூலர் 14.11.2024 18:23
சிவனடியார் ஒருவருக்காக சுந்தரர் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்படுகிறார் ! மேய்ப்பனின்றி பசுக்கள் வாடுமே என்று கூடுவிட்டு கூடு பாய்ந்து பசுக்களை வீடுகளில் சேர்த்து , தன் வீடு திரும்ப இயலாமல் , மூவாயிரம் திருப்பாடல்களை இயற்றிய யோகியானார் ஒரு நாயன்மார் !
நாயன்மார் வரலாறு -35- ஞானசம்பந்தர் -3 14.10.2024 33:26
பாண்டியனின் நோய் தீர்த்த சம்பந்தர் சமணர்களின் புனல்வாத அழைப்பை ஏற்று ஐந்து எழுத்து மந்திரத்தின் மகிமையை உணர்த்துகிறார். சமணம் வீழ்ந்து சைவம் ஓங்கியது. பௌத்தர்களையும் வாதத்தில் வீழ்த்துகிறார். சோழ நாடு தொண்டை நாடு என சம்பந்தரின் திருத்தொண்டு பரவுகிறது. மண வாழ்க்கையில சிறிதும் நாட்டமில்லாது சிவனில் ஐக்கியம் பெறுவதே உத்தமம் என எண்ணுகிறார். பிள்ளையார் மனம் அறிந்த பெருமான் மணக்கோலத்திலேயே பிள்ளையையும்,...
நாயன்மார் வரலாறு -34-ஞானசம்பந்தர் -2 23.09.2024 42:02
சிவத்தலங்களை வழிபட்டு வரும் சம்பந்தர், வழி தோறும் சிவதொண்டில் ஒழுகும் பிற நாயன்மார்களோடு அளவளாவுகிறார். அப்பரோடு இணைந்து திருமறைக்காட்டு திருக்கோயிலின் வாயில் கதவை திருப்பதிகங்கள் பாடி திறக்கும் பணியில் மெய்மறக்கிறார்.. தொடர்ந்து சமணம் கோலோச்சும் மாமதுரையில், மன்னனின் வெப்பு நோய் நீக்கி, சமணம் வென்று சைவம் நிலைபெற செய்கிறார் ஞானசம்பந்தர்.
நாயன்மார் வரலாறு -33- ஞானசம்பந்தர் - 1 14.09.2024 22:49
அன்னை பராசக்தியிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரின் திருப்புகழ் அறிவோம். சீர்காழியிலே அன்னையின் அருளை பெற்ற ஞானசம்பந்தர், அடி நோக நடந்து வருவதை பொறுக்காத அரனார் திருநெல்வாயிலில் முத்துச்சிவிகை முத்துக்குடை அளித்து வரவேற்கிறார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் திருப்பதிகம் பாடி மழ நாட்டு தலைவனின் மகளின் வலிப்பு நோய் நீக்குகிறார்.
அமுதமொழிகள்-14-பக்தர்களுடன் -4 19.08.2024 32:01
யார் நெருக்கமானவர்கள், ஞானத்தின் இரு அடையாளங்கள், மகா மாயையின் கண்ணாமூச்சி விளையாட்டு, உலக மக்களின் அடிமைத்தனம் என படிப்படியாக நிவிருத்தி மார்க்கத்தின் ரகசியங்களை தெய்வ வாக்காக அருள்கிறார் குருதேவர்
நாயன்மார் வரலாறு- 32- நீல நக்கர் -நமி நந்தியடிகள் 30.07.2024 17:04
அடியாரின் மனைவியாரும் அரனாரின் மீது மிகுந்த பேரன்பு கொண்ட சிவச்செல்வியாக திகழ முடியும் என்கிறது நீல நக்கர் வரலாறு... பக்திப் பெருக்கால் நீராலும் திருவிளக்கு ஒளிரும் என்கிறது நமி நந்தியடிகள் புகழ்...
நாயன்மார் வரலாறு-31- அப்பூதி அடிகள் 16.07.2024 15:55
அடியார் தொண்டில் அரனையே காணும் அப்பூதி அடிகள் அப்பரின் சிவதொண்டின் மகிமையில் தன்னை இழக்கிறார்... நாவுக்கரசரெனும் நாமமே தனது தொண்டு சிறக்க உதவும் என வாழ்ந்து வருபவர், அப்பரை தரிசிக்கும் பேறு பெற்றால்...!? சிவச்செல்வர்களின் அன்பிற்கு தாழுண்டோ?
அமுதமொழிகள் -13-பக்தர்களுடன் -3 06.07.2024 30:51
இறைபக்தி சர்வ மத சமரச திருஷ்டியை அருளும் என உரைக்கும் குருதேவர், ப்ரஹ்மசமாஜத்தினருடனான உரையாடலில், கண்திறந்த தியானத்தின் அற்புதத்தை கூறுகிறார்... எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அதி உத்தம நிலையை அனுபவத்தை அனாயசமாக பகிர்கிறார் அருளோடு!
நாயன்மார் வரலாறு- 30 - காரைக்கால் அம்மையார் 29.06.2024 22:06
தான் கொண்ட இறைபக்தி, கணவரே வேறுபட்டு நிற்க காரணமாக, இளமைக் கோலத்தால் பயன் யாது, ஈசனே எல்லாம் எனும் போது பேயுருவும் நல்லுருவே என இல்லற விளக்காகவும், இறை நேசச் செல்வியாகவும் வாழ்ந்து ஈசனுக்கே தாயான அம்மை பாதம் போற்றி போற்றி! சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்து சைவம் திளைக்க சேவை செய்த குலச்சிறையார், சுந்தரரின் தொண்டராய் அடியார் தொண்டில் சிறந்த பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆகியோரின் திருவாழ்வும் இப...
நாயன்மார் வரலாறு-29-நாவுக்கரசர்-4 30.05.2024 18:37
ஸ்ரீ சைல தரிசனத்திற்கு பிறகு காசி விஸ்வநாதரை பாடிப் பரவும் அப்பர் பெருமான் கயிலை நாதனின் திருக்காட்சிக்காக ஏங்கி உடல் நீக்கும் அளவிற்கு கயிலை பயணம் மேற்கொண்டு சிவநேசராய் திருவையாற்று பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பாண்டிய நாட்டிலிருந்து மீளும் சம்பந்தரோடு உறவாடுகிறார். தாமும் பாண்டியநாட்டு பயணம் மேற்கொண்டு பரமனை பல தலங்களில் பணிந்து திருப்புகலூரில் எம்பெருமானோடு சிவானந்த சோதியில...
அமுதமொழிகள்-12-பக்தர்களுடன்-2 25.05.2024 29:17
உண்மை இயல்பை உணர்த்தும் குருவருள் - மாயைக்கும் தயைக்கும் வேறுபாடு - பழுத்த நான் /பழுக்காத நான் என அடுகடுக்காக மண்ணில் வாழும் வகை குறித்து பக்தர்களுக்கு ஞான ஒளி அருள்கிறார் குருதேவர்
நாயன்மார் வரலாறு-28-நாவுக்கரசர் -3 22.05.2024 18:34
திருமறைக்காட்டில் திருப்பதிகங்களால் திருக்கதவம் நீக்கி சிவதொண்டில் மெய்மறக்கிறார்கள் அப்பரும் சம்பந்தரும். பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க சம்பந்தர் செல்ல, வடதளியில் சமணர்களால் மறைக்கப்பட்ட எம்பெருமான் அப்பரின் வைராக்கியத்தால் சோழ மன்னனால் மீட்கப்படுகிறார். தொடர்ந்து சோழ நாட்டு திருத்தலங்கள், தொண்டை நாடு, காஞ்சி என திருக்காளத்தி, ஸ்ரீ சைலம் வரை பரமனை பாடியவண்ணமே சிவனில் உறைகிறார் அப்பரடிகள்
நாயன்மார் வரலாறு-27-நாவுக்கரசர் -2 07.05.2024 22:32
திருவதிகை திருத்தலத்தில் மீண்டும் சைவ திருத்தொண்டராய் அரனாரில் ஐக்கியம் ஆகும் நாவுக்கரசர், சிவ யாத்திரையில் நடுநாடு கடந்து சோழ நாட்டு சிவப்பதிகளில் சைவநெறி தழைக்க பரமனை பாடிப் பரவுகிறார்... திருவீழிமிழலை வரை... அப்பரே என அன்போடு அரவணைத்த ஆளுடைய பிள்ளையாரோடு...
அமுதமொழிகள் -11- பக்தர்களுடன்- 1 05.05.2024 30:15
எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலை எல்லோருக்கும் சாத்தியமா என்பது குறித்து குருதேவர் விளக்குகிறார். முக்குணங்களின் தன்மையும் சத்வத்தால் பக்தர்கள் உய்யும் வழி பகர்கிறார் குருதேவர்
Podcasts similaires
Replaio n'est pas éditeur de podcasts ; les noms des émissions, les visuels et l'audio appartiennent à leurs auteurs et sont diffusés via des flux RSS publics