இsai அmuthan
கூடாரவாசி
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Author
இsai அmuthan
Category
Podcast website
Latest episode
Jan 13, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Karpanaiyin Porul // The Ten Commandments // Introduction //Bro.Joel Davit 20.11.2022 32:53
தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளின் முக்கிய விளக்கமாக கருதப்படுகிற சத்திய வேதத்தின் மறைபொருளை அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் நமக்கு விளக்கி கொடுத்துள்ள வேத வசனத்தின் முன்னுரை இதுதான் ... எனவே இந்த முன்னுரையை கேட்டு தொடர்ந்து பத்து கட்டளைகளுக்கான உண்மை சத்தியத்தை அறிந்து கொள்ள எங்களோடு கூட தொடர்ந்து பயணம் செய்யுங்கள் பதிவுகளை கேளுங்கள் ..!
10 Karpanaiyil Porul Intro // 10 கட்டளைகள் 19.11.2022 1:49
போதகர் ஜோயல் டேவிட் அவர்கள் 10 கட்டளையின் ஆவிக்குரிய பொருளை குறித்து தேவனுடைய வார்த்தையை கொண்டு நம்மிடம் தேவசெய்தி பகிர்ந்து அளித்துள்ளார் என்பதை குறித்து சகோதரி அவர்கள் சிறிய விளக்கம் கொடுத்துள்ளார். !
DM-38 எதை நோக்கி ஓடுகிறோம்? What are we running towards ? 01.10.2022 7:22
இந்த உலகத்தில் நாம் ஓடுகிற ஓட்டமானது கடவுளுடைய பாதையில் ஓடுகிறோமா? வழிமாறி பாவத்தின் பாதையில் ஓடுகிறோமா? என்பதைபற்றி நம்மை நாமே நீதானிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைப்பாகும்.!
Prayer 21.09.2022 0:55
Namathu eakkangalai kartharidam kanneeeodu muraiyittaaal kavalai illamal vaazha mudium.!
Deva Anbu // The God Love // Jesus Loves You 15.08.2022 4:23
Jesus Loves You
உனக்கு நீதான் தடை .! 13.04.2022 5:43
மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்பு நம்மை பற்றி நாமே யோசித்துப் பார்ப்போம், சிந்தித்துப் பார்ப்போம் .!
DM - Try your best இயன்றதை முயன்று செய்.! 27.02.2022 7:17
Trying
அன்பின் தினம் // Lovers Day // 15.02.2022 7:56
As
DM-33.ஆபத்துக்காலத்தில் அசதியாய் இராதே ..! 02.02.2022 7:03
ஆபத்து காலத்தில் சோர்ந்து போவாய் ஆனால் உன் பலன் புரிகிறது என்று சொல்லும் கர்த்தர் நீ சோர்வு ஏற்பட்டு இருக்கும் போது உன் பலவீன நேரத்தில் அவர் உனக்கு உதவி தந்து உன்னை வெளிப்படுத்தி தொடர்ந்து நடத்துகிறார்.. ஆகவே நம் வாழ்வில் சோர்ந்து போகும் போது மனதை உடைக்கிற மனிதனை தேடுவதை விட உடைந்த மனதை ஒட்டுகிற கர்த்தரை தேடி நாம் கடந்து போவோம் இந்த வாழ்க்கையை...! எவ்வளவுதான் உடலில் பலம் நிறைந்த மனிதனாக இருந்தாலும...
DM-32..சாதிக்க வா. 31.01.2022 7:51
இந்த உலக வாழ்க்கையில் சாதனை படைக்க ஆயிரம் பேர் முயற்சி செய்து கொண்டு தான் இருக்காங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாதனை படைத்தும் இருக்காங்க ஆனாலும் இந்த சாதனைகள் எல்லாம் ஒரு நாள் மாறும், மாற்றமுடியும்..! ஏனென்றால் இந்த சாதனைகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவைகள். அநித்தியமான உலகத்தில் செய்யப்படும் சாதனைகளும் செய்கின்ற மனிதர்களும் மாயைதான் ஆனால் நித்திய உலகத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையும், அங்க நாம் பெற...
DM-31.சத்தியத்திற்கு செவிகொடு 31.01.2022 7:34
வீணான கெட்ட காரியங்களுக்கு செவி கொடுக்கின்ற நாம் நல்ல உண்மையான, சத்தியமான விஷயத்திற்கு செவிகொடுக்க தயங்கக்கூடாது. சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று சொன்ன கர்த்தர் நாம் சத்தியத்திற்கு செவி கொடுக்கும் போது நமக்கு உதவி செய்து நமக்கு அநேக விடுதலை தருகிறார். ஆகவே சத்தியத்திற்கு செவி கொடுப்போம் விடுதலை அடைவோம் தேவனோடு நடப்போம்...!
விடுதலை தருகின்ற தேவன் 30.01.2022 13:23
விடுதலையோடு வாழ்கின்றேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் இது போல நாம் அனேக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதும் உண்மை. ஆகையால் இதேபோல அனேக கெட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் பாவம் சாபம் இது போன்ற காரியங்களில் அடிமையாக இருக்கும் நம்மை விடுவிக்கும் தலைப்பே இந்த விடுதலை தருகின்ற இயேசு...!
DM-30.பாடுகளின் பாத்திரம்.!The role of pain 30.01.2022 9:16
அன்பானவர்களே நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற இன்பமும் துன்பமும் கசப்பும் நல்லதும் கெட்டதும் எல்லாம் நம்முடைய வாழ்க்கையோடு சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பமும் இன்பமும் ஏற்றமும் தாழ்வும் அவன் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும்.. நமக்கு துன்பம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள கடவுளிடம் பலத்தை கேட்க வேண்டுமே தவிர எனக்கு துன்பமே இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று கேட்பவர் முட்டாள்... காரணம் வழிகள் தான்...
DM-29.செவிட்டு விரியன் 28.01.2022 7:01
GTG
DM-28.மிஞ்சாதே..Do not overdo it 28.01.2022 6:18
எல்லையில்லாத இந்த உலகில் நாம் எல்லையோடு வாழவேண்டும் சிலர் மிஞ்சி சில காரியங்களை செய்து அதனால் வருகின்ற கஷ்டங்களையும் கவலைகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டு தெரிகின்றனர். ஆகையால் நாம் மிஞ்சி வாழாமல் நாம் அடக்கம் உள்ளவர்களாய் அளவோடு கூட நாம் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நமது சிந்தனை ஆசையோ கோபமோ மிஞ்சிப்போனால் அதனால் நமக்கு லாபம் அல்ல நஷ்டமே வரும் ஆகையால் நாம் எந்த ஒரு காரியத்திலும...
DM-27. இடம் பிடி..Hold the place 27.01.2022 7:07
இந்த பூமியில் வாழ்கின்ற நாம் அனேக இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ஏக்கர் கணக்கில் நிலங்களை பிடித்துக் கொண்டிருக்கிறோம் மனிதர்களுடைய மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்... என்றாலும் எல்லாம் மாயை இருக்கிறது ஆம் வானத்துக்குக் கீழே பூமிக்கு மேலே அனைத்தும் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறார்.. எல்லாம் மாயை என்றாலும் நாம் பிடிக்க வேண்டிய ஒரு இடம் உண்டு அட ஆமாங்க கடவுள் கொடுத்த இரட்சிப்பை நாம் பெற...
DM-26.தேசபற்றூம்,தேவபக்தியும்.Patriotism and piety. 26.01.2022 5:02
இங்கு தேசத்தை நேசிப்பவர்கள் எவருமில்லை தேசத்தை நாம் எவ்வாறு நேசிக்கிறோமோ அதுபோல தேவனையும் நாம் நேசிக்க வேண்டும். காரணம் நமக்கு ஜீவனைக் கொடுத்து நம்மை பராமரித்துக் கொண்டு வருகின்ற நம்முடைய தேவன் நல்லவராய் இருந்து பல நன்மைகளை நமக்கு செய்து வருகிற படியால் அவரை நாம் கணப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் நம் தேவனை நேசிக்க வேண்டும் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரை நாம...
DM-25. மனந்திரும்பிய மனிதன்.Repentant man.! 25.01.2022 7:58
ஒரு மனிதனுடைய மனதை மாற்றக்கூடிய சக்தி கடவுளுக்கு மாத்திரமே உண்டு அப்படிப்பட்ட கடவுளை குறித்துதான் பார்க்க இருக்கிறோம். தன் இஷ்டப்படி வாழ்ந்த ஒரு மனிதனுடைய வாழ்வை மாற்றின தேவன், நம்முடைய வாழ்க்கையும் மாற்ற வல்லவர் என்பதை விசுவாசத்தோடு நாம் நம்புவோம். தொடர்ந்து தேவனானவர் நம்முடைய பேச்சையும், குணத்தையும், இருதயத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி நம்மை ஆசீர்வதிப்பாராக.
DM-24.கர்த்தரை கனம்பன்னு.Glorify God.! 24.01.2022 7:31
மனிதர்களை கனம் பண்ணுகின்ற நாம் கடவுளை கனம் பண்ண முயற்சிப்பதில்லை, கடவுளை கனம் பண்ண வேண்டிய விஷயத்தில் கனம் பண்ணியே ஆக வேண்டும், அப்படி பண்ணா விட்டாலும் அதுவும் பாவமே.. இதை செய்யாதே என்று கடவுள் சொல்லும்போது அவர் வார்த்தைக்கு இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து, மதிப்பு கொடுத்து நாம் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை மீறி செய்யும்போதுதான் பாவமும் சாபமும், நோயும், பிரச்சனைகளும் வருகிறது. ஆகையால் பிரச்சனைக...
DM-23.ஓற்றைக் காலணி.Single shoe 23.01.2022 9:21
தேவனிடத்தில் நம் தேவைகளை மட்டுமே கேட்டுவந்த நாம் தேவனுடைய திட்டம் ( ம ) இறைவனுக்கான காரியம் என்ன என்பதை நாம் கேட்டு அவருக்காக நாம் வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு ஏக்கத்தை தோன்றச் செய்யும் செய்திதான் இந்த ஒற்றைக் காலணி...!
DM-22.திரும்பி வராது.! NO MORE RETURN. 22.01.2022 7:14
ஒருவராலும் பிடிக்க முடியாதபடி மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறதும்,யார் கையிலும் சிக்காததுமான காலத்தையும், நேரத்தையும் பற்றிதான் நாம பார்க்கப் போறோம். கடவுள் கொடுத்த மிகச் சிறந்த ஒரு கிப்ட் தாங்க இந்தக் காலம். இந்தக் காலத்தை அநேகர் தவறாக பயன்படுத்திகிட்டு இருக்காங்க, வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இப்படி செய்யாமல் காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள கடவுள் உதவி செய்வாராக..!
DM-21. சுய கட்டுப்பாடு.Self Control. 21.01.2022 7:04
கட்டமைக்கப்பட்ட காலை போல கண் கண்ட இடமெல்லாம் சுற்றித் திரிவது வாழ்க்கையல்ல தனக்கென்று ஒரு கட்டுப்பாடு வாழ்வதுதான் வாழ்க்கை. ஆம் நம்முடைய ஆண்டவரும் சில கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளை வைத்திருக்கிறார். அதன்படி வாழ்பவர்களே கடவுளுக்கு பிரியமானவர்கள் மாறாக தன் விருப்பபடி நடப்பவர்கள் அனைவரும் பொய்யர்..! பொய்யில் நடவாதே..! நேர்மையை மறவாதே..!
DM-20.நேர்மை.! HONESTY 20.01.2022 4:09
நேர்மையும் உண்மையும் மனித வாழ்க்கையின் சிறந்த குணங்களாகும் நற்குணங்களை நாம் இழக்காமல் வாழவேண்டும் நல்ல குணங்களை இழந்து நாம் வாழும் வாழ்க்கையானது மிகவும் மிருகங்களுக்கு சமமானதாகும். ஆகவே நாம் எங்கு இருந்தாலும் எங்கு சென்றாலும் எங்கு கிடைத்தாலும் நாம் உண்மையும் நேர்மையும் ஆக இருக்க வேண்டும். கடவுள் உங்களோடு கூட இருந்து உங்களை ஆசிர்வதிக்க வேண்டுமானால் நீங்கள் எப்பொழுதும் யார் முன்பும் நேர்மையும் உண்ம...
Q and A.கேள்வியும் பதிலும்.! 19.01.2022 14:35
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியானது உங்கள் இருதயத்தில் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் தருவது ஆகும். மேலும் உங்களை சிந்திக்க வைக்கவும், அனேக உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சியானது உருவாக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் யாரையும் காயப்படுத்துவதோ, கஷ்டப்படுத்துவதோதோ நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையை உணருங்கள் மாற்றம் அடையுங்கள்..!
DM-19.அவரே காக்கிறவர்.! 19.01.2022 6:27
Glory to God
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.