மேகம்

ஒலிவட்டம்

Arts TA ↓ 60 episodes

பரபரப்பான ஒரு வேலை வேளையில் உங்களை பார்த்து டீ சாப்பிட போலாமா என்ற ஆசையை தூண்டி கடத்திவருகிறேன். பெரிய மழைக்கு முன் டீ கடையை அடைய சாரல் மழையில் சாலையை தாண்டி வந்த நமக்கு, பிடித்த சூடான ஸ்டார்ங்க் டீயுடன் பேசி களிக்க, ஆசுவாசம் அடைய எதுவும் இல்லாமலா போகும்? வாங்க பேசலாம்! History, Culture, Literature, Books, Food, Movies, Art etc..This could be your favourite tea time conversation collectives in the form of podcast. Make sure you follow @olivattam.raj in Instagram for more updates.

Author

மேகம்

Category

Arts

Podcast website

rajgajendran.wordpress.com

Latest episode

Mar 16, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

S2E4: புலம்பெயர் இலக்கியம் 06.10.2023

நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுகம். வீடியோ பதிவிலிருந்து எடுக்கப்பட்டதால் குறைகள் இருக்கலாம். சிறுகதை: மிக உள்ளக விசாரணை - ஷோபா சக்தி. மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்: மண்டோ சிறுகதைகள், ஸலாம் அலைக் - ஷோபா சக்தி, ஜாப்னா பேக்கரி - வாசு முருகவேல், நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - தெய்வீகன், ஓர் கூர்வாளின் நிழலில் - தமிழினி.

S2E3: Apocalypto 30.07.2023

And a Man sat alone, drenched deep in sadness. And all the animals drew near to him and said, "We do not like to see you so sad. Ask us for whatever you wish and you shall have it." The Man said, "I want to have good sight." The vulture replied, "You shall have mine." The Man said, "I want to be strong." The jaguar said, "You shall be strong like me.&qu...

S2E2: எட்டுத்திக்கும் மதயானை 11.07.2023

குருதி மேலெழுந்து கிளைகளாக பிரிந்து செல்லும் நரம்புகளின் ஊடே ரயில் தண்டவாளங்கள் தாங்கி செல்கின்றன பூலிங்கத்தின் தலையெழுத்தை

S2E1: மெட்ராஸ் 05.07.2023

Importance and evolution of prominent writers from Madras. How Madras literature has fascinated me?

ஒலிவட்டம் Ep 30: தோட்டி 18.09.2022

எனக்கு அறிமுகமான தகழியின் சுடலைமுத்து ஒரு தோட்டியின் மகன்

ஒலிவட்டம் Ep 29: Guantanamo Bay 20.08.2022

Events happened before and after 9/11 attack. About the most controversial detention center USA has built to capture war prisoners from Afghanistan

ஒலிவட்டம் Ep 28: VERTIGO 04.08.2022

ஹிட்ச்காக்கின் வெர்டிகோ மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் தாதா மிராசி இயக்கிய புதிய பறவை ஆகிய கிளாசிக் திரில்லர்களை கொண்டாடும் ஒரு உரையாடல். 1958 மற்றும் 64 இல் வெளிவந்த இப்படங்கள் இன்றும் படத்தின் கடைசி நொடி வரை நம்மை கட்டி இழுத்து வைத்திருப்பதுதான் இதன் சிறப்பு

ஒலிவட்டம் Ep 27: Kitchen Capitalism 04.07.2022

உழைப்பு சுரண்டலுக்கு எதிரான போர், அரசியல் மாற்றம், புரட்சி, சமத்துவம் இவையெல்லாம் உன் வீட்டு அடுப்பங்கரையிலிருந்து தொடங்கவில்லை என்றால் எல்லாம் வெறும் பொய் பிரச்சாரமே!

ஒலிவட்டம் Ep:26 Tamil Indie Music 17.06.2022

தமிழுக்கு கிடைத்த தங்கமான தனி இசை கலைஞர்களை கொண்டாடும், பலருக்கு அறிமுகம் செய்யும் ஒரு முயற்சி. ‘கலை’ - மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது!

ஒலிவட்டம் Ep 25: Villains • வில்லன்கள் 05.03.2022

இன்றைய Meme culture க்கு தீனி போட்டு வளர்க்கும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத 90களிலிருந்த crazy, weird வில்லன்களை பற்றிய ஒரு ஜாலியான எபிசோட். Ft. Nishanth.

ஒலிவட்டம் Ep 24: Wall of Berlin 23.02.2022

இன்றைய உக்ரைன், ரஷ்யா போர் பதற்றத்தின் நூற்றாண்டு கால வரலாறு. இரண்டாம் உலகப்போரின் பின் முதலாளித்துவ நாடுகளுக்கும், சோவியத்திற்கு இடையே இருந்த பகைக்கும் இன்றைய போருக்கும் என்ன சம்பந்தம்? அதில் பெர்லின் சுவரின் பங்கு என்ன?

ஒலிவட்டம் Ep 23: DAM | நிலம் 08.02.2022

உலகெங்கிலும் நிலமற்று ஒடியாடி திரிந்துக் கொண்டிருக்கும் சில மக்களின் குரல். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கள்ளிப்பட்டியின் கதை மட்டுமல்ல. இவ்வுலகில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் கதை.

ஒலிவட்டம் Ep 22: தமிழ் போல் வளர்க • 05.01.2022

மதம், இனம், சாதி இவையாவும் கடந்து தமிழை நேசிப்பவர்கள் இம்மொழி வளர என்னதான் செய்ய முடியும்? கர்வம், செருக்குகளைத் தவிர்த்து உண்மை தமிழை அறிய கொஞ்சமாவது முற்பட வேண்டும். நம் சாதி, நம் மதம் என்றக் காரணங்களை கொண்டுப் பெயர்கள் கூட ஒட்டுண்ணிகள் இல்லாத தமிழில் வைக்கமுடியாத நிலையில் நாம். என் மனம் கவர்ந்த சிறந்த தமிழ் மொழியைக் கொண்டாடும் புத்தகமான 'அறியப்படாத தமிழ் மொழி'யை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஒலிவட்டம் Ep 21: வ•ந்•தே•றி 18.11.2021

யார் தமிழன்? நீ தமிழனா? நான் தமிழனா? DNA test செய்முறை என்ன? இதைப்பற்றி நண்பர்களின் கருத்துகளை நிஷாந்த், சுதேஷுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல்

ஒலிவட்டம் Ep 20: பவா என்னும் கதை சொல்லி 12.10.2021

ஒவ்வொரு கதையும் நம்மை போன்ற இன்னொரு சாமானிய மனிதனை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும். எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் 'பவா'. எனக்கு பல கதைகளை, கதவுகளை, எழுத்தாளர்களை திறந்து காண்பித்தவர். என் நெஞ்சோடு சேர்ந்து வைத்திருக்கும் அவரையும், அவர் குரலையும், கதைகளையும் உங்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.

ஒலிவட்டம் Ep 19: Justice Party • தமிழ்நாட்டின் அரசியல் 12.08.2021

நமக்கு உடுத்த உடை, உணவு, இடம், தண்ணீர், பணம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு உங்களின் அரசியலும் அதன் அடிதளமும் முக்கியம். தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைகளுக்கு முதல் புள்ளி வைத்து நம்மை தலை நிமிர செய்த நீதிக்கட்சியை பற்றிய சில குறிப்புகள். இம்மண்ணின் அரசியலை சுருக்கமாக கேட்க உங்களின் 30நிமிஷம் போதும்.

ஒலிவட்டம் Ep 18: War of Currents • Edison vs Tesla 05.08.2021

Direct Current, Alternating Current இன் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றை தலைகீழ் புரட்டி போட்ட சமயம், எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் இடையே நடந்த மின்சார போர் பற்றிய பதிவு. எடிசனின் காழ்ப்புணர்ச்சி மற்றும் வியாபார நோக்கம் டெஸ்லாவை எப்படி நசுக்கியது என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். பல உண்மைகள் கசக்கதான் செய்யும்

ஒலிவட்டம் Ep 17: என்றென்றும் Cricket • Part 1 29.07.2021

மனசுக்கு நெருக்கமான, நம் வீட்டு வாசப்படியில் ஆட தொடங்கிய ஒரு விளையாட்டு நம்ம கூடவே எவ்வளவு தூரம் பயணிச்சிகிட்டே வருது! மறக்க முடியாத பல cricket தருணங்களை ஜாலியா பேசியிருக்கோம். Ft. Nishanth

ஒலிவட்டம் Ep 16: காதலும் கடந்து போகும் 11.07.2021

சில திரைப்படங்களை, கதைகளை, கதை மாந்தர்களை நம் மனதில் தீரா காதலோடு பூட்டி வைத்து அடிக்கடி ஆசையாய் திறந்து பார்த்து கொஞ்சிக் கொள்வோம். அப்படிப்பட்ட செல்லங்களான கதிர் மற்றும் யாழினியை இன்று நானும் நண்பன் Prem-உம் கடந்து செல்கிறோம். வந்து இணைந்துக் கொள்ளுங்கள் ❤️

ஒலிவட்டம் Ep 15: Columbus discovered Racism • Slavery 07.07.2021

வரலாற்றின் மாபெரும் பயணியும் வணிகருமான Christopher Columbus உண்மையில் என்ன செய்தார்? ஏற்கனவே தோன்றி மனிதன் வாழ்ந்து வந்த அமெரிக்காவை ஒரு மனிதனால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? அங்கிருந்த பழங்குடியினரின் நிலைமை என்னவானது ? இன்றைய அமெரிக்க நிறவெறிக்கும் சர்வதேச Slave Tradeக்கு அன்றைய Columbusஇன் பங்கு என்ன? வாங்க உண்மையை பேசலாம்!

ஒலிவட்டம் Ep 14: வீடு • பாலுமகேந்திரா 03.07.2021

வீடு என்ற இந்த படம் எதனால் காலம்காலமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பு? பாலு மகேந்திரா எனும் மகத்தான கலைஞனின் இந்த திரைப்படத்தை பெரும் வியப்புடன் ரசித்து ரசித்து சிலாகித்து கொண்டே நடந்த ஒரு உரையாடல் ❤️ நிச்சயம் இது இந்த திரைப்படத்தை எடைபோடும் அல்லது review செய்யும் முயற்சி இல்லை. படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. முக்கிய பங்காற்றிய நண்பன் ராஜேஷ்க்கு நன்றி 🙏♥️

ஒலிவட்டம் Ep 13: பௌத்தம் Starter Pack • Buddhism 29.06.2021

நமக்கு புத்தரை நல்லா தெரியும். ஆனா பௌத்தம் என்பது அடிப்படையில் என்னவாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறோமா? இந்தியா - நேபாளத்தில் தோன்றிய ஓர் சித்தாந்தம் நம் மரபுகள் மதங்களை காட்டிலும் எப்படி வேறுபட்டு இருக்கிறது என்று எளிதில் சொல்ல முயற்சித்து இருக்கிறேன். கடலளவில் ஒரு துளியை காட்டத்தான் எனக்கு புரிதலும் அறிவும் இருக்கிறது 🙏

ஒலிவட்டம் Ep 12: பிரியாணினா எவ்வளவு பிடிக்கும்? • Biriyani 22.06.2021

பிரியாணி எனும் உணவை பற்றி, எனக்கு பிடித்த பிரியாணி வகைகளைப் பற்றிய ஒரு சுவையான உரையாடல். கூடுதல் இணைப்பாக எங்கள் வீட்டு பெஸ்ட் பிரியாணியின் ரெசிபி மற்றும் செய்முறையை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். நிச்சயம் அனைவரும் முயற்சி செய்யலாம். என்னை தொடர்பு கொள்ளலாம் ♥️

ஒலிவட்டம் Ep 11: Biblioclasm • யாழ்ப்பாணம் | Cultural Genocide 12.06.2021

பல போர்களில், நிலத்தையும் மக்களையும் கைப்பற்றும் ஒரு பேரரசு அந்த மண்ணின், மக்களின் வரலாறு, இலக்கியம், கலாச்சாரங்களை மறைக்கவும், மறக்கடிக்கவும் அந்நாட்டின் புத்தகங்களை மற்றும் நூலகங்களை எரிப்பது வழக்கம். இது 20ஆம் நூற்றாண்டில் நடந்தேறிய மிகப் பெரிய 'Cultural Genocide' பற்றிய பதிவு.

ஒலிவட்டம் Ep 10: Pradeep Kumar விசிறி ❤️ 06.06.2021

ஓடிக்கிட்டே இருக்கின்ற பல தருணங்களில் எப்போது தேவைப்பட்டாலும் இன்ப தேன் பாய்ச்சும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு குரல் பிரதீப்குமாரினுடையது. அவரின் இதுவரையான திரை மற்றும் இசை பயணத்தை பதிவிடுகிறேன். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல விலைமதிக்க முடியாத பாடல்கள் பாடி இசைத்துள்ளார். அவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த பதிவின் எண்ணம். Cover Picture: Vidya Vijay அவர்களுடையது

Listen to the ஒலிவட்டம் podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.