SBS

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Auteur

SBS

Categorie

News

Website van de podcast

www.sbs.com.au

Nieuwste aflevering

11 jul. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android 5 mln+ downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

இன்றைய செய்திகள்: 07 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை 07.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 07/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

ஆஸ்திரேலிய வீசா கட்டணங்கள் உயர்வு - யாருக்கு, என்ன பாதிப்பு? 07.07.2026

ஒவ்வொரு ஆண்டும், நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு ஏற்ப, வீசா கட்டணங்களை ஆஸ்திரேலிய அரசு ஜூலை முதல் தேதி சற்று உயர்த்துவது வழக்கம். பொதுவாக இந்த உயர்வு மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை என்று இருந்தாலும், இந்த ஆண்டு அதை விட பன்மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

சாலை விதிகளில் அறிமுகமாகும் மாற்றங்கள் மற்றும் அபராதங்கள்! 06.07.2026

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய சாலைகளில் புதிய போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

உலகக் கோப்பை தினசரி: சொந்தமண்ணில் மெக்ஸிக்கோவின் பயணத்திற்கு முடிவு, பிரேஸிலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நார்வே 06.07.2026

உலகக் கோப்பை தினசரி: சொந்த மண்ணில் மெக்ஸிக்கோவின் கனவுப் பயணம் முடிவுக்கு வந்தது, நார்வே அணி பிரேஸில் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை அதிர்ச்சிக்குள்ளாக்கி, நார்வே உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிக்கோவும், உணர்ச்சிமிக்க உள்ளூர் இரசிகர்களின் முன்னிலையில் இங்கிலாந்திடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று, உ...

Uber சேவையில் அறிமுகமாகும் முக்கிய மாற்றம்! 06.07.2026

Uber Rideshare சேவையில் ஜூலை 16 முதல் பணம் (Cash) செலுத்தும் வசதி அறிமுகமாகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

SMSF ஓய்வூதிய நிதி மூலம் முதலீட்டு சொத்துகள் வாங்கும் முறையில் புதிய மாற்றங்கள்! 06.07.2026

Self Managed Superannuation SMSFஐ பயன்படுத்தி முதலீட்டு வீடுகள் வாங்குவதை தடை செய்யும் சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வருகிறது. இது குறித்து விளக்குகிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பின...

முதியோர் பராமரிப்பு திட்டம்: விமர்சனமும், அரசின் தீர்வுகளும் 06.07.2026

முதியோர் பராமரிப்பில் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Integrated Assessment Tool ஒருங்கிணைந்த மதிப்பீட்டு கருவி கணினி கணக்கீட்டு வழிமுறை (Algorithm) கொண்டு மேற்கொள்ளும் முதியோர் பராமரிப்பு மதிப்பீடுகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெடரல் அரசு அதில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

இன்றைய செய்திகள்: 06 ஜூலை 2026 - திங்கட்கிழமை 06.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு 05.07.2026

தமிழக அரசியலை உலுக்கி வரும் "குதிரை பேரம்"; தமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வரும் 'நெல்லை, இரட்டை கொலை' சம்பவம்; திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என்று விசிக தீர்மானம் உள்ளிட்ட செய்திகளோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (28 ஜூன் – 4 ஜூலை 2026) 04.07.2026

ஆஸ்திரேலியாவின் இந்த வார (28 ஜூன் – 4 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

உலகக் கோப்பை தினசரி: குரோஷியாவின் இதயங்களைப் போத்துக்கல் அணி உடைத்தது, ஸ்பெயின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது 03.07.2026

FIFA உலகக் கோப்பையின் இருபத்திரண்டாம் நாள் ஆட்டங்களில், (Luka Modrić) லூகா மோட்ரிச் ஆடிய கடைசி கால்பந்துப் போட்டியில், குரோஷியாவை போத்துக்கல் வீழ்த்தியது, ஸ்பெயின் ஆஸ்திரியாவை எளிதாக வென்றது, மற்றும் சுவிட்சர்லாந்து அல்ஜீரியாவைத் தோற்கடித்து Group of 16 என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

தினமும் 3 மணி நேரம் இலவச மின்சாரம் - யாருக்கு? எப்படி பெறலாம்? 03.07.2026

ஆஸ்திரேலியாவில் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், சில மாநிலங்களில் புதிய இலவச மின்சாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது, யார் தகுதி பெறுகிறார்கள், இதன் மூலம் எவ்வளவு சேமிக்க முடியும் போன்ற விடயங்களை செய்தியின் பின்னணியாக முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

ட்ரோன் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் எவை? 03.07.2026

ஆஸ்திரேலியாவில் பலரும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதை நாம் அவதானித்திருப்போம். இப்படியாக ட்ரோன்களை பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் என்னென்ன என்பது உட்பட மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் ட்ரோன் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்டவரும் SynTel Corp என்ற நிறுவனத்தின் Chief Technology Officer-ஆகவும் உள்ள Dr பிருந்தன் கீர்த்திநாதன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

இன்றைய செய்திகள்: 03 ஜூலை 2026 - வெள்ளிக்கிழமை 03.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை (03/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

What to expect when visiting the veterinarian - உங்கள் செல்லப்பிராணியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் போது கவனிக்கவேண்டியவை 03.07.2026

Regular veterinary visits play an important role in keeping your pet healthy and happy. Find out what to expect at a veterinary clinic in Australia, from routine check-ups and vaccinations to advice on caring for your pet’s wellbeing. - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் நல மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னென்ன எதிர்பார்க்கலாம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சை பற்றி Phil Tucak ஆங்கிலத்தில் தய...

ஆஸ்திரேலியாவில் குளிர்கால விவசாயமும் ஆரோக்கியமான வாழ்வும் 03.07.2026

நாட்டின் குளிர்கால விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றி எம்முடன் உரையாடுகிறார் ஆஸ்திரேலிய வேளாண்மைத் துறையைச் சேர்ந்த பாரதி சண்முகன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 02.07.2026

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு. 32 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுடன் 35 நாட்களுக்கும் மேலாக இணைந்தே பயணம் செய்யும் சுப்ரமணியன் என்ற நாயின் கதை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

உலகக் கோப்பை தினசரி: பெரும் சவால்களிலிருந்து இங்கிலாந்தும் பெல்ஜியமும் மீண்டன, அமெரிக்கா முன்னேறிச் செல்கிறது 02.07.2026

நாயகர்களான Harry Kane மற்றும் Youri Tielemans ஆகியோர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தை Group of 16 என்ற சுற்றுக்கு முன்னேற்றினர், அதே நேரத்தில் Bosnia / Herzegovina வை வென்று அமெரிக்கா தனது இடத்தை பாதுகாப்பாக உறுதி செய்தது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

மாணவர் கடன் – திருப்பிச் செலுத்துவது ஏன் இப்போது இலகுவாகிறது 02.07.2026

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகம், TAFE எனும் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் மேற்கல்வி படிப்பதற்காக அரசிடம் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை முப்பது இலட்சத்திற்கும் அதிகம். இந்தக் கடன், HECS அல்லது HELP கடன் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்தும் முறை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது. பலருடைய கடனின் அளவே, ஒரே தடவையில் இருபது சதவீதம் குறைந்திருக்கிறது. புதிய நிதியாண்டு நேற்று தொடங்கிய...

அயலவருடனான தகராறுகளை அதிகரிக்காமல் தீர்ப்பது எப்படி? 02.07.2026

ஆஸ்திரேலியாவில் அயலவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

ஞானப்பற்களை(wisdom teeth) கட்டாயம் அகற்ற வேண்டுமா? 02.07.2026

Wisdom Teeth எனப்படுகின்ற ஞானப்பற்களால் நாம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கலாம். இந்தப் பற்களைப் பிடுங்குவது அவசியமா என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 02 ஜூலை 2026 - வியாழக்கிழமை 02.07.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

ஆஸ்திரேலியாவை வந்தடைந்த புகலிடக்கோரிக்கையாளர் படகு! 01.07.2026

புகலிடக்கோரிக்கையாளர் படகொன்று வடக்கு குயின்ஸ்லாந்தின் தொலைதூரப் பகுதியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவில் இந்திய விசா, Passport, OCI சேவைகள் இடைநிறுத்தம் 01.07.2026

ஆஸ்திரேலியாவில் செயல்படும் இந்தியாவின் Passport மற்றும் Visa சேவைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.

கோழியும் அல்ல, வான்கோழியுமல்ல,: ஆஸ்திரேலிய புதர்க்கோழியின் அதிசய வாழ்க்கை 01.07.2026

ஆஸ்திரேலியாவில் பலருக்கும் தெரிந்த ஆஸ்திரேலிய புதர்க்கோழியின் வாழ்க்கை முறை இயற்கையின் வியப்பூட்டும் அதிசயங்களில் ஒன்று. இவை வான்கோழியுமல்ல, கோழியினத்தைச் சார்ந்தவையும் அல்ல. அப்படி என்றால் இந்த பறவை எது? ஆஸ்திரேலிய புதர்க்கோழி குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Luister naar de podcast SBS Tamil - SBS தமிழ் in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds