Kamaraj J

குறிஞ்சி மலர்

Arts TA ↓ 203 episodi

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Autore

Kamaraj J

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

21 mag 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

நினைவில் எறிந்த கல் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 09.05.2020

ஒவ்வொரு ஊருக்கும் பிரத்யேக வாசனை உண்டு என சிலிர்ப்படையும் எஸ்ரா, அவை சிலரைப் பற்றிய நினைவுகளின் சுகந்தமாக இருப்பதாக ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்...

அரவணைத்தாண்ட வல்லமை & தாளாளர் அம்பா ஆசியுரை - நூல்: விவேகதீபம் 08.05.2020

அடுப்படியே வகுப்பறையாய், 75 பைசா வருகைப்பதிவேட்டோடு துவங்கிய குருகுலம், அன்பால் மெருகேறி அழகான ஆலமரமாய் அருள் சாம்ராஜ்யமானது எப்படி? அரவணைத்தாண்ட வல்லமை எது? முதல்பகுதியில் குருகுல தாளாளர் அனந்தப்ரேம ப்ரியா அம்பாவின் வாழ்த்துரை...

சுவாமி அனந்தானந்தர் & ஸ்ரீ ராமகிருஷ்ணப்ரியா அம்மா ஆசியுரை நூல்: விவேகதீபம் 07.05.2020

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தின் வெள்ளி விழா ஆண்டு மலர் விவேக தீபத்தை குருகுல முன்னாள் மாணவர்களே வடிவமைத்து 2015ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் திரு இறையன்பு ஐ ஏ எஸ் வெளியிட்டார். விழாமலருக்கு மதிப்பிற்குரிய மகராஜ் மற்றும் அம்மா அளித்த வாழ்த்துச்செய்தி...ஆசியுரைகளாக...குரல் வடிவில் ....

காலத்தின் வேர்கள் - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 06.05.2020

மரங்கள் மழைதரு மேகங்களுக்காக மட்டுமே காக்கப்படவேண்டுமா...? மரங்கள் மகத்தான படிப்பினைகள் என புதிய பரிமாணம் படைக்கிறார் எஸ்ரா🙏🏽🙏🏽🙏🏽

கல்லில் மலர்ந்த பூக்கள் - ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன் நூல்: தேசாந்திரி 04.05.2020

எல்லாக் கோயில்களும் கலையின் சங்கம வெளிகள் என உருகும் எஸ்ரா , நமது பாரம்பரியமான சிற்ப மரபுகளும், ஓவியபாணிகளும் பின்தொடரப்படாமல் கைவிடப்படுவதாக வருந்துகிறார்...

பாடப்புத்தகங்களுக்கு வெளியே - ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் - தேசாந்திரி 02.05.2020

சரித்திரம், சாமான்யர்களின் வாழ்வை பிரதிபலிப்பதில்லையே என வருத்தப்படும் எஸ்ரா, சரித்திர நிகழ்வுகள் உணர்த்தும் பாடங்கள் விலைமதிப்பில்லாதவை என்கிறார் ...

பெரிய உப்பு ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன் நூல் - தேசாந்திரி 02.05.2020

தண்டி யாத்திரையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்பட்டது முதல் , இதயத்தின் ஈரத்தை உரைக்கும் நேசம் வரை உப்பு உணர்வுப்பிழம்பானது என உருகுகிறார் எஸ்ரா

காற்றின் ஊற்று- ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 27.04.2020

மனிதனின் தேவைக்கு எல்லையுண்டா...? தேவைகளே இல்லாத, இயற்கையோடு இயைந்த வாழ்வு சாத்தியமா... ? காணிகள் வாழ்வை சிலாகிக்கிறார் எஸ்ரா...🙏🏽🙏🏽🙏🏽👍

திரைக்குப் பின்னால்- ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 27.04.2020

மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதில் சினிமாவின் பங்கு மகத்தானது என்று கூறும் எஸ்ரா, அதீத வணிகநாட்டத்தால் அந்த ஊடகம் சீர்கெடுவது குறித்து வருந்துகிறார்...🙏🏽🙏🏽🙏🏽

கூவாகத்தின் பெளர்ணமி- ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 26.04.2020

ஆண், பெண் என்பது பால் அடையாளம் என்பதைத் தாண்டிய உடல் அரசியல் எனக்கூறும் எஸ்ரா , பால்திரிபு கொண்டவர்கள் அவமதிக்கப்படுவதையும் அலட்சியப்படுத்தப்படுவதையும் சாடுகிறார்...🙏🏽🙏🏽🙏🏽

மழையை அழைப்பவர்கள் - ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 24.04.2020

மனிதர்கள் இயற்கை அல்லாத உதவியை வேண்டுபவரல்லர்... தங்கள் துயரங்களை தாங்களாகவே போக்கிக்கொள்ளும் எளியர்கள்... என்பதை உணர்வுப்பூர்வமாக விளக்குகிறார் எஸ்ரா...

கடலளவு வெளிச்சம்-ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன் நூல்: தேசாந்திரி 24.04.2020

வெயில் என் முதல் தோழன் என நெஞ்சுயர்த்தும் எஸ் ராமகிருஷ்ணன், ஊர்விட்டு ஊர் செல்லும் தேசாந்திரியாய் உருப்பெற்ற நியாயங்களை பசுமை மாறாத பால்ய நடையில் விவரிக்கிறார்...

கூந்தல்கிணறு - ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன் நூல் : தேசாந்திரி 24.04.2020

பெண்களுக்கும் கிணற்றடிக்கும் இடையேயான உறவைக் குறிப்பிட்டு அவர்களின் உலகை உணராத மடமையை, ஆதிக்க மனப்பாங்கை சாடுகிறார் எஸ்ரா...🙏🙏🙏

உலகம் யாவையும் - 2 சிறுகதை - ஆசிரியர் : ஜெயமோகன் நூல் : அறம் 22.04.2020

தனித்தன்மைகளை தக்க வைத்துக்கொண்டு எல்லை வரையறையில்லாமல் உலகை ஒற்றை மானுடவெளியாய் மாற்றிட முடியும் என்ற இலக்கிற்காக, தியாகத்தை உபாயமாக தேர்ந்தெடுத்த கெரி டேவிஸ் ஒவ்வொரு நாட்டிலும் வலுக்கட்டாயமாக சிறைவாசத்தை ஏற்று, ஓருலகம் கருத்தை வல்லமைமிக்கதாய் ஆக்குகிறார்... தென்னாப்பிரிக்காவில் நான்கரை ஆண்டுகள் தனிமைச்சிறையில் நூறு சொற்றொடர்களைக்கூட பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என கூறும் டேவிஸ், மனநோயாளியாகாமல் மீ...

உலகம் யாவையும் - 1 - சிறுகதை - ஆசிரியர் :ஜெயமோகன் நூல்: அறம் 22.04.2020

நாடு , கண்டம் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதகுலம் முழுவதும், ஒருநாடு ஓருலகம் என உரைத்து, உலகக்குடிமகன் என்ற அந்தஸ்தோடு ஒரே பாஸ்போர்ட் என்பதை நடைமுறைப்படுத்தி, நாடுகளின் சுயநல போராட்டங்களில் சிக்காமல், போரில்லா அன்பு சமுதாயம் காண முற்பட்ட , இரண்டாம் உலகப்போரில் விமானியாக பணியாற்றி , அமெரிக்க குடியுரிமையை உதறித்தள்ளி, உலகக்குடிமகனாக அறிவித்துக்கொண்ட அமைதிப்போராளி கேரி டேவிஸை சந்தித்த தருணங்...

ஓலைச்சிலுவை - 2 - சிறுகதை ஆசிரியர்: ஜெயமோகன் 21.04.2020

மனிதத்தின் மொழி அன்பு... என்பதை உரக்கக் கூறும் உன்னத வாழ்வுக்கு சொந்தமானவர்கள் மிகச்சிலரே... டாக்டர் சாமர்வெல் அதில் முதன்மையானவர்... மருத்துவ வசதிகளும் புதுமைகளும் புகாத காலங்களில், குமரி மக்களுக்காக உயர்சேவை செய்தவர் இவர் என்கிறார் ஜெயமோகன்... குறிப்பாக 1949ல் பரவிய காலரா நோயின் போது...சாமர்வெல்லின் மானுட சேவை மகத்தானது என்று பாராட்டியுள்ளார் ஜெயமோகன்... ஓலைச்சிலுவை - இரண்டு மற்றும் நிறைவுப்பகுத...

ஓலைச்சிலுவை 1 - சிறுகதை-ஆசிரியர் :ஜெயமோகன் நூல்:அறம் 21.04.2020

மனிதத்தின் மொழி அன்பு... என்பதை உரக்கக் கூறும் உன்னத வாழ்வுக்கு சொந்தமானவர்கள் மிகச்சிலரே... டாக்டர் சாமர்வெல் அதில் முதன்மையானவர்... மருத்துவ வசதிகளும் புதுமைகளும் புகாத காலங்களில், குமரி மக்களுக்காக உயர்சேவை செய்தவர் இவர் என்கிறார் ஜெயமோகன்... குறிப்பாக 1949ல் பரவிய காலரா நோயின் போது...சாமர்வெல்லின் மானுட சேவை மகத்தானது என்று பாராட்டியுள்ளார் ஜெயமோகன்...ஓலைச்சிலுவை பகுதி -1 🙏🙏🙏🙏

நான் இருக்கிறேன்- சிறுகதை - ஆசிரியர்:ஜெயகாந்தன் 21.04.2020

தன்முயற்சியில் சிறந்து விளங்குபவருக்கு குறையேதும் இல்லை என தற்கொலைக்கு முயல்பவனுக்கு ரயிலடி ஞானம் அருள்கிறான் கதை நாயகன்...அவநம்பிக்கையால் தன்னை மாய்த்துக் கொள்ளும் மடத்தனம் மனிதனை பீடித்துள்ள கொடூர வியாதி என சாடுகிறார் ஜெயகாந்தன்.

நூறு நாற்காலிகள்-3 சிறுகதை - ஆசிரியர்: ஜெயமோகன் நூல்: அறம் 20.04.2020

பல்லாயிரமாண்டு அடிமைத்தளைகளையும், அவமானங்களையும் வேரறுக்க, நூறல்ல, கோடி நாற்காலிகளில் அதிகார உச்சத்தை தொட்டாக வேண்டும், நெஞ்சுயர்த்தி ஆதிக்கக் கொடுமைகளை சுட்டெரிக்கும் உத்தரவுகளை பிறப்பித்தாக வேண்டும் என உறுதிகொள்கிறார் தர்மபாலன்...தாயின் மரணப்படுக்கையில்... அவள் பரிதவிப்புகளின் ஊடாக... நூறு நாற்காலிகள் கதையின் நிறைவுப்பகுதி...3/3 ஜெயமோகனின் "அறம் "தொகுப்பிலிருந்து...

நூறு நாற்காலிகள் 2- சிறுகதை -ஆசிரியர் : ஜெயமோகன் நூல்: அறம் 20.04.2020

ஆதிக்க சாதியினரால் விதிக்கப்பட்ட தெருவாழ்க்கையிலிருந்தும் பாசமான தாயிடமிருந்தும் மீட்டு, சிவில் சர்வீசில் சும்மா ஜெயிக்காம ரேங்கோட ஜெயிக்கணும்னு கட்டளையிட்ட குருவின் அன்பினையும், அவர் இட்ட கட்டளையின் தாத்பர்யத்தையும் நினைத்து உருகுகிறார் தர்மபாலன்... அறம்-ஜெயமோகன்- நூறுநாற்காலிகள்- பகுதி 2/3 🙏🙏🙏

நூறு நாற்காலிகள்-1 சிறுகதை - ஆசிரியர் :ஜெயமோகன் நூல்: அறம் 20.04.2020

ஜெயமோகனின் - அறம் - கதைத்தொகுப்பிலிருந்து "நூறு நாற்காலிகள்" ... மரணத்தறுவாயில் தாயைக் கண்டெடுத்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனத்தவிப்புகள் குறித்த கதை...🙏🙏🙏 பகுதி- 1

யானை டாக்டர்- சிறுகதை- ஆசிரியர்:ஜெயமோகன் நூல்:அறம் 20.04.2020

யானைகளின் உலகத்தை துல்லியமாக உணரும் திறன்படைத்த யானை டாக்டரின் ஆலோசனையின் படிதான் யானைகள் புத்துணர்ச்சி முகாம் துவக்கப்பட்டதாம்... Dr. K - யின் யானைப்பிரியத்தால் ஈர்க்கப்பட்டு , அவரோடு அளவளாவத் தக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் வனத்துறை அதிகாரியின் மன ஓட்டங்கள்...யானை டாக்டர் ..பகுதி 1... ஜெயமோகனின் "அறம்" தொகுப்பிலிருந்து...🙏🙏🙏மனிதர்களுடனான அளவளாவலை விட மிருகங்கள் உள்ளிட்ட பிற உயிர்கள் உட...

அறம்-சிறுகதை - ஆசிரியர் : ஜெயமோகன் நூல்: அறம் 19.04.2020

தாய்மொழியின் மேல் கொண்ட அதீதப் பற்றால் எழுத்தையே பிழைப்பிற்கான உபாயமாய் கொள்வதற்கு ஒரு துணிவு வேண்டும்... துணிந்துவிட்டால் , அதிர்ச்சிகளும் அவமானங்களும் அன்றாடங்களாம் அவர்களுக்கு ... மூத்த எழுத்தாளர் ஒருவரின் அனுபவங்களை அவர் வாயிலாகவே எடுத்துரைக்கிறார் ஆசிரியர்... அறம்... ஜெயமோகனின் "அறம்" - உண்மை மனிதர்களின் கதைகள்- தொகுப்பிலிருந்து..

சோற்றுக்கணக்கு - சிறுகதை - ஆசிரியர் :ஜெயமோகன் நூல்: அறம் 19.04.2020

பதின்வயதில், வீட்டுச்சூழல் காரணமாக சொந்தஊரைவிட்டு எங்கோ வேறூரில் ,வைராக்ய பிடியால் வறுமையின் கோரப்பிடியை புறந்தள்ளி கால்வயிற்று கஞ்சியோடு, கல்வி பயில நேர்ந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்... அந்தக்காலங்களில், ஒரு பைசாக்கூட வாங்காம சோறுபோடும் கெத்தேல் சாகிப் நமக்கு வாய்த்தாரா...அன்னமிட்ட அந்த கரடிக்கரத்தானே என் தாய் என உருகுகிறார் ...ஒருவர்..... சோற்றுக்கணக்கு,..ஜெயமோகனின் அறம் தொகுப்பிலிருந்த...

நிக்கி- சிறுகதை- ஆசிரியர்: ஜெயகாந்தன் 19.04.2020

யாரும் உரிமை கொண்டாட மறுக்கும் பெண் நாயின் பரிதாப வாழ்வை உணர்ச்சிகளோடு விவரிக்கும் போக்கில், சமூகத்தின் அவலங்களை ...சாடியிருப்பார் ஜெயகாந்தன்... 🙏🙏🙏

Ascolta il podcast குறிஞ்சி மலர் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici