SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Mindenképp látogasd meg a podcast oldalát, és támogasd a készítőjét: www.sbs.com.au
Hol hallgathatod?
Podcastok az alkalmazásban Replaio Radio HamarosanA podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz
Epizódok
இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 17.11.2026 4:11
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (17 November 2026 - Tuesday)
Commonwealth வங்கி மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்குப்பதிவு! 17.11.2026 3:20
ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees
இரு கலாச்சாரங்கள்... ஒரே குடும்பம்: பிரிஸ்பன் தம்பதியரின் கதை 16.11.2026 9:43
வியட்நாமியப் பெண் ஒருவர், இலங்கைத் தமிழ் பின்னணிகொண்டவரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், தமிழ் கலாச்சாரத்தையும் தீபாவளிப் பாரம்பரியங்களையும் எவ்வாறு தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டார்? பிரிஸ்பனில் வாழும் Thương- ரஜீஹன் தம்பதியின் சுவாரசியமான கதை இது. SBS Vietnamese நிகழ்ச்சியின் Olivia Nguyenனின் உதவியுடன் இதனை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Bringing two...
தரவு மையங்கள் என்றால் என்ன? ஏன் எதிர்ப்பு அதிகரிக்கிறது? 16.11.2026 11:52
Data Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are...
Breast screening: What to expect and why it matters - மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? 16.11.2026 13:05
Regular breast screening can help find breast cancer early, before you notice any signs or symptoms. Screening is free for eligible women or people at risk of breast cancer. It takes about 20 minutes, once every two years, and it’s an effective way to take charge of our health. Let’s take a closer look at why a breast screen is nothing to be anxious about. - Mammogram மார்பகப் பரிசோதனை என்பது பெண்...
உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது? 16.11.2026 8:57
Microsoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast The Microsoft service ou...
இன்றைய செய்திகள்: 16 நவம்பர் 2026 - திங்கட்கிழமை 15.11.2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (16 November 2026 - Monday)
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) 14.11.2026 6:57
ஆஸ்திரேலியாவின் இந்த வார (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (08 November – 14 November 2026)
Reports of child abuse have risen, but most of us still underestimate the problem - குழந்தைகள் மீதான முறைகேடு : அடையாளம் காண்பதும் தடுப்பதும் எப்படி? 13.11.2026 12:26
Two in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின...
வீகன் உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா? 13.11.2026 13:52
World Vegan Day உலக வீகன் தினம் நவம்பர் முதலாம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு விவரணம். பங்குபெறுபவர்கள் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் மற்றும் வீகன் உணவு முறை அனுபவம் கொண்டவரும் தொழில்துறை நிபுணரும், சமூக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சிட்னியில் வசிக்கும் வினித்ரா ஜெயராமன்...
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (நவம்பர் 07– நவம்பர் 13, 2026) 13.11.2026 8:29
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளிவரை ( நவம்பர் 07 - நவம்பர் 13 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின்இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 07– November 13, 2026)
இன்றைய செய்திகள்: 13 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை 13.11.2026 4:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (13 November 2026 - Friday)
விக்டோரியாவில் பரீட்சைக் காலத்தில் கல்வி இணையத்தளம் மீது இணைய ஊடுருவல் 12.11.2026 7:39
விக்டோரியா மாநிலத்தில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், பரீட்சைகளை நிர்வகிக்கும் VCAA நிறுவனத்தின் இணையத்தளம் இணைய ஊடுருவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளதாக இணைய ஊடுருவி ஒருவர் கூறியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பான செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #...
Glaucoma-கண் அழுத்த நோயைத் தடுக்க முடியுமா? 12.11.2026 7:49
பார்வை இழப்பு ஏற்படுவதில் Glaucoma என்று அழைக்கப்படும் கண் அழுத்த நோயும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தநிலையில் Glaucoma பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What causes glaucoma?
நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம் 12.11.2026 14:50
விடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான போல்ராஜ் மற்றும் மெல்பனில் வசிக்கும் கந்தையா குமாரதாசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Before a long drive: What eve...
இந்த தடகள சாதனைப் பெண் - காலணி அணிவதில்லை, வயது ஒரு எல்லையில்லை 12.11.2026 16:31
பிலிப்பைன்ஸ் இல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி சிறீசேயாநந்தபவன் அவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தில் வென்றார். அப்போது 72 வயதாகியிருந்த இவர்...
850 வேலைகள் இந்தியாவுக்குப் பறக்கின்றன - Qantasஸின் பணியிடக் குறைப்பு 12.11.2026 9:21
‘Spirit of Australia’ – ‘ஆஸ்திரேலியாவின் ஆன்மா’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நம் விமான நிறுவனம் Qantas தனது அலுவலகப் பிரிவுகளில் சுமார் 850 பணியிடங்களைக் குறைத்து, அந்தப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Qantas jobs take flight - 850 roles head to India
இன்றைய செய்திகள்: 12 நவம்பர் 2026 - வியாழக்கிழமை 11.11.2026 4:33
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (12 November 2026 - Thursday)
பாத்திரம் கழுவத் தேவையில்லை - Airbnb-இன் புதிய விதிகள் 11.11.2026 8:16
விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules)...
அரசு முன்மொழிந்துள்ள இரு சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு 10.11.2026 8:31
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் என அரசால் முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு.இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Strong opposition to two proposed laws in Sri Lanka
இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2026, புதன்கிழமை 10.11.2026 3:47
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday)
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி? 10.11.2026 5:22
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம், அதாவது PR, பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதற்கான அழைப்பு - Registration of Interest, நவம்பர் 6 முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தால் ஏற்கப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Live regional, head for PR - Queensland's 491 explained
பாதுகாப்பு விசா நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கட்டாயக் கட்டணம்! 10.11.2026 2:41
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர், அவர்களது பாதுகாப்பு விசா நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Asylum seekers face $1,863 upfront fee to challenge visa refusals
இன்றைய செய்திகள்: 10 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 10.11.2026 4:39
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (10 November 2026 - Tuesday)
கண் முன்னே ஒரு கள்ளச்சந்தை - பணத்துக்கு விற்கப்படும் Demerit points 09.11.2026 10:56
Demerit points எனப்படும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் விழும் தண்டப் புள்ளிகளைப் பணம் கொடுத்து நீக்கி விடலாம் என்று சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்திருக்கிறது. அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதில் சிக்கினால் என்ன நடக்கும் என்பதன் செய்தியின் பின்னணியையும் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast 'We'll wipe your points' - the offer that could cost you your...
Hasonló podcastok
A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.