Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ 241 episodios

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

No dejes de visitar la web del podcast y apoyar a su creador: podcasters.spotify.com

Autor

Raja Nagarajan

Categoría

Kids

Web del podcast

podcasters.spotify.com

Último episodio

15 de abr. de 2026

¿Dónde escuchar?

Podcasts en la app Replaio Radio Muy pronto

Los podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts

Descárgala en Google Play Instálala gratis Android casi 10 M de descargas · valoración de 4,8 iOS muy pronto

Episodios

நூற்றி பதினாலாவது கதை:வாழ்க்கையில், நண்பர்கள் அவசியம்,முக்கியமானவர்கள்:(Friends are essential and important in life) 15.07.2022

இது ஒரு ஜாதக கதை. வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும்,நமக்கு தேவையான  முக்கிய நபர்,ஒரு நண்பர். நல்ல நண்பரின் பங்கு அளவிடமுடியாது. இந்த கதையில் வரும் ஒரு பருந்து  தன் நண்பர்களின் உதவியால்  தனக்கு  நேரவிருந்த ஆபத்திலிருந்து  தப்புகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி பதிமூன்றாவது கதை:காஷ்மீர் பிறந்த கதை:(The Story of Kashmir) 07.07.2022

பூலோக சுவர்க்கம் என்று அழைக்கப்படும் இன்றைய காஷ்மீர்,ஒரு காலத்தில்  ஒரு ஏரியாக இருந்ததாம். காஷ்யபர் என்ற மஹரிஷியினால், இது ஒரு புனித இடமாக ஆயிற்றாம். காஷ்யபபுரி,மருவி,காஷ்மீராக அழைக்கப்படுகிறதாம் அது என்ன கதை ? கதையை கேளுங்கள் ....  

நூற்றி பன்னிரண்டாவது கதை:2 ஜாதககதைகள்:1.குற்றமுள்ள நாய்கள்(The Guilty dogs):2.சரபா என்ற மான் (Sarabha,the Deer) 30.06.2022

இந்த 2 கதைகளும் ஜாதக கதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.ஒவ்வொரு கதையிலும் ஒரு நல்ல குணம் படைத்த மிருகம் வரும்.அவைகள் புத்த்ரின் முந்திய அவதாரங்களாக கருத படுகிறார்கள். அவர்கள் தங்கள் செய்களின் மூலம் நாம் எப்படி நல்லவர்களாக நடக்க வேண்டும் என்பதை நமக்கு வழிகாட்டுவார்கள். அவர்களை பற்றி இப்போ தெரிந்து கொள்ளலாமா? கதைகளை கேளுங்கள்.....  

நூற்றி பதினொன்றாவது கதை:ஒரு குருடன்,ஒரு செவிடன் மற்றும் ஒரு கழுதை (A Blind Man,a Deaf Man and A Donkey) 22.06.2022

இது ஒரு இந்திய நாட்டுக்கதை. ஒரு குருடனும் ஒரு செவிடனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். குருடன், செவிடனுக்காக கேட்க  வேண்டியது. செவிடன்,குருடனுக்காக பார்க்க  வேண்டியது. அவர்கள், ஒரு ராக்‌ஷச கூட்டத்தை ஜெயித்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பணத்தை பிரித்து கொள்வதில்  அவர்களுக்குள் சண்டை வருகிறது. அதில் ஒரு எதிர்பாராத திருப்பம்  வருகிறது. அது என்ன? கதையை கேளுங்கள்....

நூற்றி பத்தாவது கதை: மிரட்டல் (Blackmail) 02.06.2022

இது ஒரு ஜாதக கதை தொகுப்பில்  உள்ள கதை. பரம்பறை எதிரிகளான,  எலியையும் பூனையும் பற்றிய  ஒரு வித்தியாசமான கதை. கதை, 2 அருமையான அறிவுரைகளை சொல்கிறது. கதயை கேளுங்கள்....

நூற்றி ஒன்பதாவது கதை: கடுஞ்சொற்கள் (Harsh Words) 26.05.2022

இது ஜாதக கதை தொகுப்பில் உள்ள கதை. புத்தபிரான்,புத்தராக அவதாரம் செயவதற்கு முன் சிங்கம்,மான்,குரங்கு என்று பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறராம்.எல்லா சமயத்திலும் அவர். நியாயம்,தர்மம்,மனிதாபிமானம்,கருணை என்ற நல்ல குணங்களை மட்டும் தான் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வார். அவர் சொன்ன நீதி போதனை கதைகளில் இது ஒன்று. கதையை கேளுங்கள்....

நூற்றி எட்டாவது கதை: இளவரசி லபாம் (Princess Labam) 20.05.2022

இது இந்தியாவின் வடகிழக்கு  மானிலங்களில் சொல்லப்படும் கதை. இளவரசி லபாம்,தன்னை மணக்க வரும் இளவரசர்களுக்கு கடுமையான வேலைகள் கொடுக்கிறாள்.தோற்றவர்கள் சிறையில்  அடைக்கப்படுகிறார்கள். விக்ரம் என்ற இளவரசன்,அவளுடைய பரிக்‌ஷைகளில் வெற்றி பெற்று அவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி ஏழாவது கதை:அலக்சாண்டரின் உயிரை காப்பாற்றிய ஒரு ராக்கி நூல்(A Rokhi thread that saved the life of Alexander) 12.05.2022

சரித்திர வகுப்பிகளில்,அலக்சாண்டருக்கும்  போரஸ் மன்னருக்கும் நடந்த போரில்  போரஸ் தோற்றதாகவும்,பிறகு  அலக்சாண்டருடன், நட்பாக  இருந்ததாக படித்திருக்கிறோம். ஆனால்,அந்த போர் நடந்த இடத்தில்  வசிக்கும் மக்கள் பரம்பறையாக சொல்லும் கதை  வித்தியாசமானது. அதன்படி,போரஸ் தான்  ஜயித்தான். அது என்ன கதை? கதையை கேளுங்கள்...

நூற்றி ஆறாவது கதை;கன்சிபிலி (Hunchibili) 05.05.2022

கதாசரித் சாகர கதை தொகுப்பில் உள்ள கதை. நாகாலந்த் மாநிலத்தில்  பிரபலமான கதை. ஒரு வீர வாலிபன்,மிருகங்களின்  கடவுளின் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டு,  அவளை ஒரு கூடையில் வைத்து சுமந்து வருகிறான். அவன் மேல் ஆசைப்பட்ட ஒரு கெட்ட பெண் கூடையில் உள்ள பெண்ணை தூக்கி எறிந்து விட்டு அதில் உட்கார்ந்து கொள்கிறாள். இந்த ஆள் மாறாட்டத்தின் முடிவு என்ன? தூக்கி எறியப்பட்ட பெண் என்ன ஆனாள்? கதையை கேளுங்கள்....

நூற்றி ஐந்தாவது கதை:விவசாயி மற்றும் லேவாதேவிகாரர்:(The Farmer and The Money-Lender) 28.04.2022

இது ஒரு பஞ்சாப் மாநிலக் கதை. தமிழில் ஒரு பழமொழி உண்டு. "எனக்கு ஒரு கண் போனாலும் சரி. எதிரிக்கு 2 கண்கள் போகட்டும்" பொறாமையாலோ,பழி வாங்கும் குணத்தாலோ இந்த மாதிரி எண்ணம் வரலாம். இந்த கதை ,கதாநாயகனுக்கும அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஏன் வந்தது? என்ன ஆயிற்று? கதையை கேளுங்கள்...

நூற்றி நாலாவது கதை:காஞ்சனமாலா (Kanchanamala) 21.04.2022

இது கதாசரித் சாகர கதை தொகுப்பில்  உள்ள ஒரு கதை.  சகோதரிகளின் சதியால்,ஒரு அரசி தன் 3 குழந்தைகளயும் இழந்து அரண்மனையை  விட்டு துரத்தப்படுகிறாள். அவளுடையை குழந்தைகளால், குறிப்பாக அவளுடையை மகள்,காஞ்சனமாலாவினால், தான் இழந்ததை திரும்ப பெறுகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....   

நூற்றி மூன்றாவது கதை:மந்திர கட்டில் (The Magic Cot ) 14.04.2022

இது சோமதேவர் என்ற காஷ்மீர் பண்டிட் தொகுத்த கதாசரித்சாகரம் கதைகளில் ஒன்று. ஒரு திறமையான நல்ல மனம் படைத்த  தச்சர் (carpenter) ஒரு கட்டிலை அரசருக்கு  விற்கிறார். அது ஒரு மந்திர கட்டிலாக  ஒரு சந்நியாசியால் மாற்றப்பட்ட விவரம்  தச்சருக்கு தெரியாது. அதை வாங்கிய அரசருக்கு அந்த கட்டில் அவருக்கு வரபோகிற ஆபத்துகளை தெரியப் படுத்துகிறது. அரசர் தச்சருக்கு பரிசுகள் கொடுக்கிறார். கதையை கேளுங்க...

நூற்றி இரண்டாவது கதை:போபோலூசி (Bopoluchi) 05.04.2022

இது இந்திய நாட்டின் பஞ்சாப்   மாநிலத்தில்  சொல்லப்படும் கதை. ஒரு அனாதையான இளம் பெண்  ஒரு ரவுடியினால் ஏமாற்றப்படுகிறாள். அவன் அவளை கல்யாணம் பண்ணிக்கொள்ள ஏற்பாடுகள்  செய்கிறான். அவள், அவனிடமிருந்து தப்பி  அவனை தண்டிக்கிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....

நூற்றி ஒன்றாவது கதை: ஒரு பை தங்க நாணயங்கள் (A Bag of Gold Coins) 26.03.2022

இது பஞ்சதந்திர கதைகளில் ஒன்று. நாம் உழைத்து சம்பாதித்த எந்த  பொருளையும் யாராலும் அபகரிக்க முடியாது என்பதற்கு இந்த கதை ஒரு ந்ல்ல எடுத்துக்காட்டு.

நூறாவது கதை:உலகத்தில் வாழும் முறை (The Way of Life in this World) 17.03.2022

இது ஶ்ரீ ராமகிருஷ்ண பரஹம்ஸர்  சொல்லும்  கதைகளில் ஒன்று. இந்த கதை மூலமாக, வாழ்க்கைக்கு தேவையான்  ஒரு நல்ல பாடத்தை சொல்கிறார். கதையை கேளுங்கள்....

தொண்ணூத்தி ஒன்பதாவது கதை: பொறுமையான மனைவி (The Patient Wife) 12.03.2022

இது ஒரு லெபனான் நாட்டுக் கதை. ஒரு கோபக்கார இளவரசனை அவன் மனைவி தன் பொறுமையினால்,எப்படி நல்லவனாக ஆக்குகிறாள் என்பது தான் கதை கதையை கேளுங்கள்...

தொண்ணூத்தி எட்டாவது கதை:உப்பு (Salt) 08.03.2022

இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை. உப்பை பற்றி கேள்வி படாத  ஒரு அரசரிடம் உப்பை விற்று  பணம் சம்பாதித்து,அதோடு அரசருடைய  மகளையும் கல்யாணம் பண்ணி கொள்ளும்  ஒரு வாலிபனை பற்றிய கதை. கதையை கேளுங்கள்..... ..

தொண்ணூத்தி ஏழாவது கதை:ஜட்ஜ் ஊக்காவும் 3 விசித்திர வழக்குகளும் ( Judge Oaka & 3 Strange Cases) 03.03.2022

58வது கதையில் ஜட்ஜ் ஊக்காவைப் பற்றி  தெரிந்து கொண்டோம். அவரை ஜப்பான் தேசத்து சாலமன் அரசர்  என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவர் ஒரு திறமையான  நீதிபதி. கஷ்டமான வழக்குகளை கூட  திறம்பட  விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்குவார். அவர் விசாரித்த 3 விசித்திர  வழக்குகளை  இப்போது பார்ப்போம். 1.வாசனை திருட்டு (Theft of a Smell) 2.உண்மையான தாயார் (True Mother) 3. வரி ஏய்ப்பவர...

தொண்ணூத்தி ஆறாவது கதை:முல்லா நஸ்ருதீனும் 3 பண்டிதர்களும் (Mullah Nasrudheen & 3 Scholars 26.02.2022

ஒவ்வொரு கலாசாரத்திலும்  ஒரு  நாடோடி கதை  Hero இருக்கிறார். இந்த கதையில் வரும் Hero  டர்கி நாட்டை சேர்ந்தவர். 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  ஒரு மத குரு, ந்கைச்சுவை மன்னன். அவரை பற்றி நூற்றுக்கணக்கான்  கதைகள் இருக்கின்றன. யார் அவரி? அவர் பெயர் முல்லா நஸ்ருதீன் ஹோஜா கதையை கேளுங்கள்...

தொண்ணூத்தி ஐந்தாவது கதை: மூன்று அநான்சி கதைகள்: Three Anansi Tales 21.02.2022

அநான்சியை பற்றிய  கதைகள்  நிறையவே இருக்கின்றன. அவைகளில் மூன்று கதைகள்  இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. 1.அநான்சியும் மந்திர குச்சியும்  (Anansi and The Magic Stick) 2.அநான்சியும் பாசிபடர்ந்த பாறையும். (Anansi and The Moss-covered Rock) 3.அநான்சியும் கதை பெட்டியும்  (Anansi and The Story Box) கதைகளை கேளுங்கள்.....

தொண்ணூத்தி நாலாவது கதை:சிலந்தி மனிதன்அநான்சி-ஒரு அறிமுகம் (Anansi,The Spider Man-An Introduction) 18.02.2022

மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கரீபியான்  தீவுகளுக்கு இடம் பெயர்ந்த  பழம்குடி மக்கள்  தங்களுடன்  தங்கள் ஊர். நாடோடி கதைகளையும்  கொண்டு வந்தார்கள். அந்த கதைகளின் Hero தான்  இந்த அநான்சி. தந்திரகாரன் கூட. இவர் வரும் இடங்களை மக்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பார்களாம். பலவீனமான் சிலந்தி, பலமுள்ள  மிருகங்களை தன் புத்திசாலித்தனத்தினால்  வெல்வதை ரசித்து கேட்பார்களாம். இத்த்...

தொண்ணூத்தி மூன்றாவது கதை:புலிக்கு எப்படி உடலில் கோடுகள் வந்தன:(How The Tiger Got His Stripes) 14.02.2022

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை. காட்டு மிருகங்களில் புலிதான் மிகுந்த தற்பெறுமை காட்டும் மிருகம். அதற்கு, அதனுடைய ,அழகான தங்க நிறமுள்ள தோலை பற்றி, ரொம்ப ரொம்ப பெறுமை. அந்த தோலில் எப்படி வரி வரியாக கோடுகள் வந்தன? யார் அந்த வேலையை செயதார்கள்? கதையை கேளுங்கள்.... .

தொண்ணூத்தி இரண்டாவது கதை:ஒரு மீனவன் மகனின் சாகசங்கள் (The Adventures of A Fisherman's Son) 09.02.2022

இது ஒரு பிரேஸில் நாட்டுக்கதை. ஒரு மீனவன்,ஒரு நதியில் வாழும்  பூதத்திடம் கொடுத்த வாக்குக்காக,  தன் கடைசி பையனை கொடுக்கிறான். 15 ஆண்டுகள் அந்த பூதத்தினால் வளர்க்கப்பட்ட அந்த பையன், அங்கிருந்து தப்பி,  பல சாகஸங்களை  செயது  ஒரு அரச குமாரியை கல்யாணம் பண்ணிக்  கொளகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...... 

தொண்ணூத்தி ஒன்றாவது கதை:தடித்த போர்வை-ரஜாய்-நெய்பவரின் பரிசு (The Quilt Maker's Gift) 02.02.2022

இது ஒரு அமெரிக்கா நாட்டுக் கதை. ரஜாய் நெய்யும் பெண்மணி  அந்த நாட்டு அரசருக்காக   ஒரு ரஜாய் நெய்ய சம்மதிக்கிறார்- ஒரு நிபந்தனையுடன். அது என்ன நிபந்தனை? அரசர் ஏற்றுக் கொணடாரா? அதன்படி நடந்தாரா? கதையை கேளுங்கள்....

தொண்ணூறாவது கதை:கீரிப் பிள்ளையும் பாணடவர்கள் யாகமும்(The Mongoose and Pandavas's Yaga) 27.01.2022

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மஹாபாரத்தில் வரும் இந்த கதையை சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்வார். பாரத போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஒரு யாகத்தை நடத்துகிறார்கள்.நிறைய தானம் செயகிறார்கள்.திடீரென்று அங்கே ஒரு கீரிப்பிள்ளை தோன்றி,,ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகம் பாண்டவர்கள் தியாகத்தை விட பன்மடங்கு சிறந்தது என்று சொல்லிற்று. எப்படி,என்று கேட்ட போது , கீரி கதையை சொல்லிற்று. கதையை கேளுங்கள்... ....

Escucha el podcast ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) en Replaio

Radio y podcasts en una sola app - gratis y sin registro. Instálala hoy y no te pierdas el estreno

Descárgala en Google Play

Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos