SBS

SBS Tamil - SBS தமிழ்

News TA ↓ Epizody: 2198

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: www.sbs.com.au

Autor

SBS

Kategorie

News

Web podcastu

www.sbs.com.au

Nejnovější epizoda

11. čvc 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

சிட்னியில் நடைபெறவுள்ள ‘இராக சங்கமம்–4’ இசை நிகழ்வு 26.06.2026

சிட்னியில் ஜுலை 4ம் திகதி இராக சங்கமம்- 4 நிகழ்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சண் குமாரலிங்கம் அவர்களும் பாவலன் விக்கிரமன் அவர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் 25.06.2026

தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அமோனியா கசிவு விபத்து; தமிழக சட்டமன்றத்தில் தவெக திமுக கடும் மோதல்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 25.06.2026

யாழ். செம்மணியில் மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 400க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு; தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பல இடங்களில் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

விக்டோரியாவில் Taxi, Rideshare ஓட்டுநர்களுக்கு கடும் கட்டுப்பாடு 25.06.2026

Victoria மாநிலத்தில் taxi மற்றும் rideshare சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அறிமுகமாகின்றன. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் றைசெல்.

அகதிகள் தொடர்பிலான ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. கடும் விமர்சனம் 25.06.2026

சர்வதேச சட்டத்தின் கீழ், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரைக் கடல்கடந்த பரிசீலனை மையங்களுக்கு அனுப்புவதன் மூலம் தனது சட்டப் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியா விலக முடியாது என்று புதிய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நாட்டியமாடும் ஆஸ்திரேலியக் கொக்கு: ப்ரோல்கா 25.06.2026

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அபரிமிதமாய்க் காணப்படும் ப்ரோல்கா, அம்மாநிலத்தின் அடையாளப் பறவை என்ற சிறப்போடு அம்மாநிலத்தின் அரசுமுத்திரையிலும் இடம்பெற்றுள்ளது. ப்ரோல்கா பற்றிய பல அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். The Brolga, found abundantly in Australia’s Queensland state, is recognised as the state’s official bird and also appears...

உலகக் கோப்பை தினசரி: பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது 25.06.2026

2026 FIFA உலகக் கோப்பையின் பதின்நான்காவது நாள் ஆட்டங்களில், பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது, தென்னாபிரிக்க அணி சரித்திரம் படைத்தது, அதே நேரத்தில் பராகுவே அணியுடனான முக்கியமான மோதலுக்கு முன்னதாக, மற்றொரு காயம் தொடர்பான பின்னடைவு ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதின்நான்காம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

பல்லின கலாச்சாரத்துக்கு மக்கள் ஆதரவு குறைகிறது! காரணம் என்ன? 25.06.2026

ஆஸ்திரேலியா நீண்ட காலமாக பல்லின கலாச்சாரத்தை தனது முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த ஆதரவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை ஆராயும் விவரணம். செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: Camille Bianchi for SBS News. A new report by the Lowy Institute reveals suppor...

மின்சாரம் சேமிக்கும் ஆடை தயார் : அணிய நீங்கள் தயாரா? 25.06.2026

சூரிய கதிரிலிருந்து ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட 3D Laser Printing முறையில் மிக இலகுவாகவும் விரைவாகவும் துணிகளில் அச்சு செய்யக்கூடிய தொழிநுட்பத்தை ஆராய்ந்து Melbourne RMIT பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. RMIT பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் லிட்டி தெக்கேகரா E-Textile தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நி...

குளிர்காலத்தில் நமது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? 25.06.2026

Winter-குளிர்காலத்தில் எம்மை அதிகம் தாக்கக்கூடிய சில நோய்கள் தொடர்பிலும் அவற்றிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

இன்றைய செய்திகள்: 25 ஜூன் 2026 வியாழக்கிழமை 25.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

ஆஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சலின் மூன்றாவது தொற்று உறுதி! 24.06.2026

ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையில் கொடிய H5N1 பறவைக் காய்ச்சலின் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகக் கோப்பை தினசரி: ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் வீரரானார் ரொனால்டோ 24.06.2026

ஃபிஃபா உலகக் கோப்பையின் 13-வது நாளில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூகா மோட்ரிச் ஆகியோர் தங்களது விளையாட்டின் முக்கிய மைல்கற்களை எட்டினர். அதே நேரத்தில், Paraguay அணியுடன் தங்களது முக்கியமான மோதலுக்கு முன்னதாக, காயம் காரணமாக Mathew Leckie விலகியதால், Socceroos அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதின்மூன்றாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் ச...

தத்வார்த்தம் - மூத்த கலைஞர்கள் இளம் கலைஞர்களுடன் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சி 24.06.2026

தத்வார்த்தம் – மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கருப்பொருளில் சிட்னியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் இளம் கலைஞர்களுடன் குழுவாக இணைந்து பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார் மிருதங்க கலைஞர் கலைமாமணி T.R சுந்தரேசன் அவர்கள். தத்வார்த்தம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை கலைமாமணி T.R சுந்தரேசன் மற்றும் இளம் வீணை கலைஞர் அமிர்தன் திருஅரங்கன் ஆகியோர் சிட்னி கலையகம் வரை...

யோகாவின் மகத்துவம் - சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி 24.06.2026

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் குறித்து அனுபவமிக்க யோகா பயிற்சியாளரும் யோகா ஆசிரியருமான வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடினோம். அன்றாட வாழ்வில் யோகா ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்கள் பற்றிய அவரது பார்வைகளை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

வரி, super மற்றும் சம்பளம்: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை 24.06.2026

ஜூலை 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதுடன், ஆஸ்திரேலியாவில் சம்பளம், வரி, superannuation, பெற்றோர் விடுப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 24 ஜுன் 2026, புதன்கிழமை 24.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 124/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை: வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆண்டுகள் நிறைவு 23.06.2026

இலங்கை வாழ் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற தனியரசை அமைப்பதே ஒரே தீர்வு என்று பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆண்டுகள் நிறைவு நினைவு நிகழ்வு தொடர்பான “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

மெல்பன் விமான நிலையத்தில் pick up மற்றும் drop off நடைமுறையில் பெரிய மாற்றம் 23.06.2026

மெல்பன் விமான நிலையத்தில் பயணிகள் pick up மற்றும் drop off முறையில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நேரடி முகஅடையாள தொழில்நுட்பம்: ஆஸ்திரேலிய காவல்துறையின் புதிய முயற்சி 23.06.2026

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக நேரடி முகஅடையாளம் காணும் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இன்றைய செய்திகள்: 23 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை 23.06.2026

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 22.06.2026

குழந்தைப்பேறு சிக்கல்கள் குறித்து தம்பதிகள் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும், IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த தவறான நம்பிக்கைகள் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

உலகக் கோப்பை தினசரி: ஸ்பெயின் மீண்டெழுந்தது; கேப் வெர்டே உலகக் கோப்பை வரலாற்றைப் படைத்தது 22.06.2026

ஸ்பெயின் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பி, 'Group H' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில், கேப் வெர்டே அணி, மறக்க முடியாத ஒரு goal அடித்து உருகுவே அணியுடன் சமன் செய்து தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் வரலாறு படைத்தது. 'Group G' பிரிவில் பெல்ஜியமும் ஈரானும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. மேலும், பின்தங்கிய நிலையில் இருந்த எகிப்து அணி, இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலு...

NDIS-இல் அரசு அறிமுகப்படுத்தும் மாற்றங்கள் யாவை? 22.06.2026

NDIS - தேசிய மாற்றுதிறனாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் பெடரல் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் குறித்த செனட்சபை விசாரணை முடிவடைந்துள்ளது. NDIS-இல் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இதில் பயனர்கள், NDIS வழங்குநர்களுக்கு உள்ள பயன்கள் மற்றும் சவால்களை விரிவாக விளக்குகிறார் சிட்னியில் உள்ள Disability Australia Group-இன் இயக்குனர் ராதிகா டே அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

ஏன் சிட்னியைவிட மெல்பன் சிறந்த நகரமாக பார்க்கப்படுகிறது? 22.06.2026

சமீப ஆண்டுகளில் சிட்னியை விட மெல்பன் நாட்டின் பொருளாதார, கலாச்சார மையமாக மாறி வருகிறது. வாழ்க்கைச் செலவு, வீட்டு விலை, இளைஞர்களின் விருப்பம் என பல காரணங்களால் மெல்பன் இன்று அதிக கவனம் பெறும் விருப்பத்திற்குரிய நகரமாக மாறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

Poslouchej podcast SBS Tamil - SBS தமிழ் v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály