Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: ezhunaonline.com

Skapare

Ezhuna

Kategori

Society

Poddens webbplats

ezhunaonline.com

Senaste avsnittet

29 maj 2025

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

வீழ்ச்சியின் திசையில் பாரம்பரிய தமிழ் செதுக்குப் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 29.05.2022

மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படு...

மறைந்திருக்கும் சக்தி | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 27.05.2022

'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் த...

வேட்டுவச் சடங்காற்றுகையின் குணமாக்கல் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 26.05.2022

கரையோர வேடர்கள் எனப்படுவோர் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் இலங்கை வேடர்களினதும், இலங்கைத் தமிழர்களினதும் வழித்தோன்றல்களாகக் காணப்படுகின்றனர். களுவன்கேணிக் கிராமம் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கிராமமாகும். இக்கிராமத்தின் ஆதிக்குடிகள் வேடுவர்கள் தான் என்பதில் எதுவித ஐயமும் இல்லாத போதும், இவர்கள் எக்காலப்பகுதியில் இருந்து இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதைத் திட்...

அச்சுறுத்தலுக்குள் ஈழத் தமிழ் அச்சுடல் : அச்சு ஊடக மரபுரிமைகளும் ஆவணக் காப்பும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 25.05.2022

நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘ தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்ச...

சங்கடப் படலை – அருகிச் செல்லும் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 24.05.2022

யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத...

பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 24.05.2022

இன்றைய சமூக அசைவியக்கப் பின்புலத்தில் தோன்றியுள்ள படிப்பு – பாடசாலை முதலியன தொடர்பாகத் தோன்றியுள்ள புதிய நிலைப்பாடுகள் பல பாடசாலைகளை அளவுக்கதிகமான மாணவர் தொகையால் வீங்க வைத்திருக்கிறது – அவை திரட்டும் தனிப்பட்ட நிதிகள், அரச நிதிகள் உலக வங்கி உட்பட NGOக்களின் சிறப்பு நிதிகள் எனப் பல நிதி மூலங்களூடாகப் பாடசாலைகள் பலவற்றினதும் நிதி முதல்கள் அதிகரித்துள்ளன (ஆனால் அவை பங்கிடப்படும் முறை உட்பட்ட விடயங்க...

பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 21.05.2022

பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன. இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்கள...

காலம் என்பது கறங்கு போல! | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 20.05.2022

அன்று எங்கள் பொருளாதாரத்தில், அதுவும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் பண்டமாற்றம் பெரும் பங்கு வகித்தது. இந்தப் பண்டமாற்றின் அச்சாணியாகத் திகழ்ந்தவை பெரும்பாலும் மரங்களேயன்றி வேறல்ல. தொடர் இடப்பெயர்வுகள், கிராமங்களிலே தன்னிறைவோடு வாழ்ந்த எம்மில் பலரை நகரங்களை நோக்கி இடம்பெயர வைத்துவிட்டன. காணிகளில் இருந்த பயன் தரு மரங்கள் பல டெங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டன. விவசாய உற்பத்தி முறைமைகளின் ந...

தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 19.05.2022

தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்க...

கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா? | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 17.05.2022

கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்ட...

20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 16.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 15.05.2022

பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது  குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும்....

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 13.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

உள்ளூரை இரண்டும் கெட்டதாக்கல்: அபிவிருத்தித் திட்டங்களும் மரபுரிமையும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 12.05.2022

‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன்  கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்”  ...

வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 11.05.2022

வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – ப...

பொருளாதார மாற்றங்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் – பகுதி 4 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 10.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

தொலைய விடுதல் நியாயமா? | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 09.05.2022

தற்காலத்தில் உலகளாவிய ரீதியிலே பாரம்பரிய அறிவைப் பொறுத்தவரையில் சந்திகளுக்கிடையே சமத்துவமற்றதோர் நிலைமையே காணப்படுகிறது. அதற்கு இலங்கையும், வன்னிப்பிராந்தியமும் கூட விதிவிலக்காகி விடவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதோர் நிலைமையாகும்.  புதிய அபிவிருத்தி உருவாக உருவாக, மரங்கள் வழங்கும் சேவைகளை நவீன கண்டுபிடிப்புகள் பிரதியீடு செய்யத் தொடங்கும். இதனால் மரங்களிலிருந்து நாம் நேரடியாகப் பெறும் பயன...

சிவ வேடதாரி | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 07.05.2022

விபூதி, சந்தனம் , குங்குமம் என்பவற்றை மலிவான பொருட்கள் மூலம் உருவாக்குதனூடாக உள்ளூர் மரபுகள் அழிக்கப்படுவதோடு, சமயப் பயில்வுகளும் கேலிப் பொருளாக்கப்படுகின்றன. இந்தக் கேலியாக்குதலின் இன்றைய உச்சபட்ச நடவடிக்கைளில் ஒன்றை இதனோடு சேர்த்துக் கூறுதல் பொருத்தமானது என நினைக்கிறேன். இப்போதெல்லாம் கோவிலுக்காக எதனையாவது வாங்கப் போனால் ‘கோயிலுக்குத் தானே’ என்று கேட்டுவிட்டு தரங் குறைந்தவற்றைக் கோவிலுக்கானதாக ம...

யாழ்ப்பாணமும் சாதிப்பழமை வாதமும் – பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 06.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

தமிழ் பௌத்த மரபுரிமையை உரிமை கோரல் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 06.05.2022

இந்தத் தமிழ் பௌத்த கடந்த காலத்தை உரிமை கோரல் என்பது தமிழ் மரபுரிமைக் களத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், இலங்கைத் தீவில் பௌத்தத்தின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் ‘சிங்கள பௌத்த தேசம்’ என்ற பெருங்கதையாடலைக் குழப்பும் செயற்பாடாகவும்  அமையும்.

இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப்பிரவேச நெருக்கடி – பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 05.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

புதிதாகச் சிந்தித்தல்: தமிழர்களும் நினைவுச் சின்னங்களும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 05.05.2022

பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments)    என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை வாய்ந்ததுமான கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அகழ்வாய்வு எச்சங்கள், குகை வாழிடங்கள், சாசனங்கள் முதலியவற்றைக் குறிப்பதாகும்’ என யுனெஸ்கோவின் (UNESCO) 1972 இற்குரிய &nb...

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகளும் சாதி மோதல்களும் | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 05.05.2022

இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

இலங்கையில் அகழ்வாய்வு ஒரு அறிவியல் ஒழுக்கமா? | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 04.05.2022

இக்கட்டுரைத் தொடர் வரலாற்றுத் தடயமாகவும், இனத்துவ அடையாளமாகவும் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே – குறிப்பாக தமிழ் மக்களிடையே – மரபுரிமைகளைப் பாதுகாத்தலின் பல பரிமாணங்களை எடுத்துரைத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழரின் மரபுரிமை அம்சங்களை வெளிக்கொணர்வதாகவும், அதேநேரத்தில் அழிந்து  கொண்டிருக்கும் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அதன் சமகால தேவைகளை எடுத்துரைப்ப...

வடக்கின் விருட்சங்கள்: தொலையாது காப்போம்! – மரங்களின்றி மனிதனேது? | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 24.09.2021

சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழு...

Lyssna på podden எழுநா i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden