Ezhuna

எழுநா

Society TA ↓ 949 episodes

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Author

Ezhuna

Category

Society

Podcast website

ezhunaonline.com

Latest episode

May 29, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

அறிமுகம் | ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு முறைகளும் | இளஞ்செழியன் சண்முகம் 29.05.2025

பண்டைய தமிழர்கள் பனைஓலைகளை எழுத்து ஊடகமாகப் பயன்படுத்தினர். காலப்போக்கில் ஓலைச்சுவடிகள் பழுதடைந்த காரணத்தால், அவை படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அச்சு ஊடகங்கள் தோன்றியபிறகு, பழந்தமிழ் நூல்கள் அச்சாக வெளியிடப்பட்டன. இதற்காகப் பல பதிப்பாசிரியர்கள் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பாடவேறுபாடுகளைக் கவனித்து, மூலபாடங்களை நிலைநாட்டி, பதிப்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஈழத்துப் பதிப்பாசிரியர்கள், பத...

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன் 27.05.2025

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள்...

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : குமாரி ஜெயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் 23.05.2025

‘ இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு ‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்...

போரின் பின்னரான அறம் : பறைதலும் பாடுதலும் | சமகாலத்தைப் பொருள்கொள்ளல் : கவனம்பெறா அசைவியக்கங்கள் | மீநிலங்கோ தெய்வேந்திரன் 23.05.2025

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே...

இலங்கை மலையகத் தமிழரின் கலைகளும் சமூக உருவாக்கத்தில் அதன் பாத்திரமும் | பொன் பிரபாகரன் 22.05.2025

.

ஒற்றையாட்சி அரசின் தோற்றம் - பகுதி 2 | உடைவுண்ட சிறீலங்கா : தமிழ் - சிங்களப் பிளவு | தமிழில் : எஸ். கே. விக்னேஸ்வரன் 22.05.2025

பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் (1928 – 2000) உலகறிந்தத அரசியல், பொருளாதார, வரலாற்று அறிஞர்; எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மருகர். பட்டப்படிப்பின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த வில்சன் அவர்கள், அங்கு அரசியல் விஞ்ஞானத்துறையை ஆரம்பித்து, பேராசிரியராகக் கடமையாற்றினார்; பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் ஒன்றுதான்...

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : குமாரி ஜெயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் 21.05.2025

‘ இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு ‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்...

மறுவாசிப்பில் நாவலர் | சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர் | ந. இரவீந்திரன் 20.05.2025

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை ம...

ஒற்றையாட்சி அரசின் தோற்றம் - பகுதி 3 | உடைவுண்ட சிறீலங்கா : தமிழ் - சிங்களப் பிளவு | எஸ். கே. விக்னேஸ்வரன் 19.05.2025

பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் (1928 – 2000) உலகறிந்தத அரசியல், பொருளாதார, வரலாற்று அறிஞர்; எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மருகர். பட்டப்படிப்பின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த வில்சன் அவர்கள், அங்கு அரசியல் விஞ்ஞானத்துறையை ஆரம்பித்து, பேராசிரியராகக் கடமையாற்றினார்; பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் ஒன்றுதான்...

தமிழர்களும் தேசமும்: இந்திய - இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு - பகுதி 3 | திக்குகள் எட்டும் | சிவராஜா ரூபன் 16.05.2025

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள்...

இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்: சமூக மாற்றத்துக்கான முன்னோடி அரங்க முயற்சி | கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை | எம்.எம். ஜெயசீலன் 14.05.2025

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூ...

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் - பகுதி 3 | வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு - கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை | சுப்ரமணியம் சிவகுமார் 12.05.2025

இலங்கையின் வறண்ட மண்டலமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீர்வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் உருவாக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், நிலையான நீர்வள மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அமையும். இதன் மூலம், வறண்ட மண்டலங்களில் உள்ள நீர்வளங்கள் பாதுகாக்கப்படும்.  “வறண...

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள்: போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல் - இலங்கை - பகுதி 3 | பின் - போர்க்கால ஆய்வுகள் | தமிழில்: வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை 11.05.2025

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப...

இடும்பன் பூசை | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன் 10.05.2025

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’  எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகி...

பொன்னர் சங்கர் - மரபும் மாற்றமும்: மலையக மக்களின் பிரயோகம் குறித்த பார்வை | அருணாசலம் லெட்சுமணன் 09.05.2025

.

கூத்து இன்றுவரை கிராமங்களில் நிலைபெற்றிருப்பதற்கான காரணங்கள் - பகுதி 1 | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் | சின்னையா மௌனகுரு 08.05.2025

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமா...

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள் : போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல் - இலங்கை - பகுதி 2 | பின் - போர்க்கால ஆய்வுகள் | தமிழில்: வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை 07.05.2025

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப...

ஊக்கி (Uki): தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! | வளரும் வடக்கு | ஆங்கில மூலம்: ஜெகன் அருளையா | தமிழில்: த. சிவதாசன் 06.05.2025

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே...

தொல்பொருட்களின் தேதிக்கணிப்புகள் (The Dating Of Archaeological Artefacts) | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ தியாகராஜா 05.05.2025

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு ந...

ஒற்றையாட்சி அரசின் தோற்றம் - பகுதி 1 | உடைவுண்ட சிறீலங்கா: தமிழ் - சிங்களப் பிளவு | ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன் | தமிழில்: எஸ்.கே. விக்னேஸ்வரன் 04.05.2025

பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் (1928 - 2000) உலகறிந்தத அரசியல், பொருளாதார, வரலாற்று அறிஞர்; எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மருகர். பட்டப்படிப்பின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த வில்சன் அவர்கள், அங்கு அரசியல் விஞ்ஞானத்துறையை ஆரம்பித்து, பேராசிரியராகக் கடமையாற்றினார்; பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களில் ஒன்றுதான்...

1921 தொடக்கம் 1949 வரையான காலகட்டம்: ஒற்றையாட்சிக்குள் சமவாய்ப்பு | ஈழத்தமிழர் அரசியல் வரலாறு | சி. அ. யோதிலிங்கம் 03.05.2025

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கு...

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - மல்லாகம் | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் | இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் 02.05.2025

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த...

நூதன உலகின் நுழைவாசலில் | வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் | கார்த்திகேசு இந்திரபாலா 01.05.2025

” ‘ வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் ‘ எனும் இத்தொடர் ‘ ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள் ‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்ட, கேட்ட, கேள்விப்பட்ட, வாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்ற...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் மறுசீரமைப்புகளும்: சிறுபான்மை மக்களை மையப்படுத்தி ஒரு சில குறிப்புகள் | இரா. ரமேஷ் 29.04.2025

.

காலாவதியாகும் கல்வி: சாண் ஏறி முழஞ் சறுக்குதல் | சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள் | மீநிலங்கோ தெய்வேந்திரன் 28.04.2025

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே...

Listen to the எழுநா podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.