Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Skapare

Ezhuna

Kategori

Society

Poddens webbplats

ezhunaonline.com

Senaste avsnittet

29 maj 2025

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

BBK: உலகிற்குக் கணக்கெழுதும் யாழ்ப்பாணத்துக் கணக்காளர்கள் | வளரும் வடக்கு | ஆங்கில மூலம்: ஜெகன் அருளையா | தமிழில்: த. சிவதாசன் 27.04.2025

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே...

‘வன்னி’ (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict): கிராபிக் நாவலை முன்வைத்து | இருத்தலின் மீது கவியும் இன்மைகள் | இளங்கோ 26.04.2025

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக...

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் | எழில் 24.04.2025

.

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பொதுவசதிச் சேவைகளில் குடிநீர் வழங்கற் சேவை | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன் 22.04.2025

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள்...

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் - பகுதி 2 | வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு - கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை | சுப்ரமணியம் சிவகுமார் 21.04.2025

இலங்கையின் வறண்ட மண்டலமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீர்வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் உருவாக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், நிலையான நீர்வள மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அமையும். இதன் மூலம், வறண்ட மண்டலங்களில் உள்ள நீர்வளங்கள் பாதுகாக்கப்படும்.  “வறண...

சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும் | சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர் | ந. இரவீந்திரன் 19.04.2025

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை ம...

1833 - 1921 வரையான காலகட்டம் : தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் | ஈழத்தமிழர் அரசியல் வரலாறு | சி.அ.யோதிலிங்கம் 18.04.2025

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் 'இலங்கையர்' என்றும், பண்பாட்டுரீதியில் 'தமிழர்' என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் க...

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் : தோல்வியடைந்த ஒப்பந்தமும் கற்றுக்கொள்ளாத பாடமும் | கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை | எம்.எம். ஜெயசீலன் 17.04.2025

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூ...

பிள்ளைப்பேறும் குழந்தைகள் சார்ந்த வழக்காறுகளும் | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம். ஐ. எம். சாக்கீர் 16.04.2025

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப...

காமன்கூத்து : பன்முக நோக்கில் ஓர் ஆய்வு | அருணாசலம் லெட்சுமணன் 15.04.2025

.

அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகள்: போருக்குப் பிந்தையகாலத்தில் பொறுப்புக்கூறலைத் தவிர்த்தல், இலங்கை - பகுதி 1 | பின் - போர்க்கால ஆய்வுகள் | தமிழில்: வின்சென்ட் போல் சந்தியாப்பிள்ளை 14.04.2025

ஈழத்தில் ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்த போர், அதன் இறுதி இனப்படுகொலையுடன் மட்டுமே முடிந்துவிடவில்லை; மாறாக, போரின் பின்னரான ஈழச் சூழலில், அதன் பின்னடைவுகளும் அடிப்படைச் சிக்கல்களும் இன்னும் பல கோணங்களில் மேற்கிளம்பவே செய்கின்றன. இந்தப் பின்னணியில், போரின் பின்னரான ஈழத்து நிலவரம் குறித்து அலசுவதற்கு புதிய வெளிகள் தேவைப...

தமிழர்களும் தேசமும்: இந்திய - இலங்கைத் தமிழர்களின் தேசிய அடையாள அரசியல் மீதான ஒப்பீட்டு ஆய்வு - பகுதி 2 | திக்குகள் எட்டும் | சிவராஜா ரூபன் 13.04.2025

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘ திக்குகள் எட்டும் ’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள...

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் | வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு - கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை | சுப்ரமணியம் சிவகுமார் 12.04.2025

இலங்கையின் வறண்ட மண்டலமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீர்வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் உருவாக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், நிலையான நீர்வள மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அமையும். இதன் மூலம், வறண்ட மண்டலங்களில் உள்ள நீர்வளங்கள் பாதுகாக்கப்படும். “வறண்...

சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் இலங்கையின் சட்ட சபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் - பகுதி 2| இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | தமிழில்: கந்தையா சண்முகலிங்கம் 11.04.2025

‘ இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு ‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்...

வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் - பகுதி 2 | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ தியாகராஜா 10.04.2025

தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன...

கரும்புக்காரன் எனும் தெய்வமும் வழிபாட்டுமுறைகளும் | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன் 09.04.2025

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’  எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகி...

தமிழ்ச் சமூகத்தின் அடிக்கட்டுமானங்களும் கருத்தியலும் | ஈழத்து தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும் | சின்னையா மௌனகுரு 08.04.2025

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமா...

பௌத்த மத மறுமலர்ச்சியின் இரண்டாம் காலகட்டம் : 1883 – 1897 | இலங்கையின் இனவாத அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர் 07.04.2025

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விள...

இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தால் எதிர்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன் 06.04.2025

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாச...

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் | இலங்கையில் பௌத்தம் | கந்தையா சண்முகலிங்கம் 05.04.2025

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத்...

வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் - பகுதி 1 | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ. தியாகராஜா 04.04.2025

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு ந...

பேரரசும் பெண் விடுதலையும் | வேந்தர் இல்லா வையகம் : இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் | கார்த்திகேசு இந்திரபாலா 03.04.2025

”  ‘ வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம் ‘ எனும் இத்தொடர் ‘ ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள் ‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்ட, கேட்ட, கேள்விப்பட்ட, வாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்...

சுதந்திரத்திற்கு முந்திய அரை நூற்றாண்டு வரலாற்றில் இலங்கையின் சட்ட சபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1981 - 1900: பன்முகநோக்கு | தமிழில்: கந்தையா சண்முகலிங்கம் 02.04.2025

‘ இலங்கையின் அரசியல் 1981 – 1900: பன்முகநோக்கு ‘  என்னும் இத்தொடர் 1981 முதல் 1900 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்...

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் | இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் 01.04.2025

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த...

இலங்கையில் ஜனாதிபதிமுறையை ஆதரித்து முன்வைக்கப்படும் போலியானதும் நகைப்புக்கிடமானதுமான வாதங்கள் - பகுதி 2 | அரசியல் யாப்பு சிந்தனைகள் | தழுவலாக்கம் : கந்தையா சண்முகலிங்கம் 31.03.2025

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ்...

Lyssna på podden எழுநா i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden