aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 340 avsnitt

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Skapare

aahanalvaanoli

Kategori

Kids

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

30 jan 2025

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

"கூடா நட்பு" - சிறுகதை நேரம் - தொடர்-26 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 08.01.2022

இக்கதையில் கூடா நட்பு கேடில் முடியும் என்பதை உணர்ந்துகொள்கிறது ஒரு குரங்கு.. அக்குரங்கின் மூலம் நாமும் அதனை உணர்ந்துகொள்ள முடிகிறது. 

ஆதிதிராவிடர்கள் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது-சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் -14 08.01.2022

ஆதிதிராவிடர்கள் மானியத்துடன் கூடிய கடனுதவிகள்  பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல். Music by Audionautix.com

சேலம் மாவட்டத்தில் 08.01.2022 அன்று 18-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் -13 07.01.2022

சேலம் மாவட்டத்தில் 08.01.2022 அன்று நடைபெறவுள்ள 18 வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

"குரங்குகளின் உண்ணாவிரதம்" - சிறுகதை நேரம் - தொடர்-25 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 07.01.2022

எந்த செயலை செய்வதற்கும் மனவுறுதி வேண்டும் என்பதை விளக்குகிறது இக்கதை 

"முட்டாள் குரங்கு" - சிறுகதை நேரம் - தொடர்-24 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 06.01.2022

முட்டாள்களுடனான  நட்பு ஆபத்தில் தான் முடியும் என்பதை இக்கதை விளக்குகிறது 

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் -12 06.01.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்

"முயலும் குரங்கும்" - சிறுகதை நேரம் - தொடர்-23 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 05.01.2022

நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வதில் அவசியத்தையும், தீய பழக்கங்களால் ஏற்படும் தீய விளைவுகளையும் இக்கதை விளக்குகிறது 

"அறிவே துணை" - சிறுகதை நேரம் - தொடர்-22 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 04.01.2022

அறிவு ஒன்றே நம்மை காக்கும் கருவி. சான்றோர்களும் அறிவுடையவர்களும் சொல்லும் பாதையில் செல்பவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நேராது என்பதை இக்கதை விளக்குகிறது 

கோவிட் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்-சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள்-தகவல் நேரம் -11 03.01.2022

கோவிட் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். "உருமாறிய கொரோனா ஒமைக்ரான்" தடுப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள்-தகவல்

புத்தாண்டு சிறப்புரை - செந்தில்குமார் துரைசாமி -2022 31.12.2021

நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... புத்தாண்டு சிறப்புரையினை நேயர்களுக்கு வழங்குகிறார் நமது செந்தில்குமார் துரைசாமி அவர்கள் 

கதம்பம் - அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் -தொடர் -2 31.12.2021

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் பங்குகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்..  Music by Audionautix.com...

"கபிலன் கண்ட கனவு " - சிறுகதை நேரம் - தொடர்-21 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 31.12.2021

வனவிலங்குகளை பாதுகாப்பதன் நோக்கத்தினையும் உயிரியல் காட்சிகளில் பின்பற்றவேண்டிய பழக்கங்களையும் குழந்தைகளுக்கு கற்று தருகிறது இக்கதை 

"நாட்டியமாடிய குரங்குகள்" - சிறுகதை நேரம் - தொடர்-20 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 28.12.2021

இக்கதையில் காட்டு விலங்குகளின் முக்கியத்துவத்தையும், விலங்குகளிடத்தில் நாம் காட்டவேண்டிய அன்பையும் விளக்கியுள்ளார் நன்மொழி பதிப்பகம் திரு.எ.சோதி அவர்கள். கதையினை தனது அழகிய குரலால் திறம்பட கூறியுள்ளார் நமது செந்தில்குமார் துரைசாமி அவர்கள் ...

கதம்பம் - அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் -தொடர் -1 24.12.2021

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் பங்குகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் 

விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனையை எளிதில் செய்ய இணையவழி பதிவுமுறையின் மூலம் பதிவுசெய்துகொள்ளலாம்-சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள்-தகவல் நேரம் -10 24.12.2021

விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனையை எளிதில் செய்ய இணையவழி பதிவுமுறையின் மூலம் பதிவுசெய்துகொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (Music by audionautix.com).

அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-7 24.12.2021

தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் ஏழாம் தொடரான  இத்தொடரில் சிறுவன் பூபாலன் ஐந்து அதிசயங்களை காணுகிறான். அவனும் அவனது அருமை நாய்குட்டியும் ஒன்றுசேர்கிறார்கள். மகிழ்ச்சி கரைபுரள இக்கதை நிறைவு பெறுகிறது  கதையினை கேட்டு இன்புறுங்கள் நேயர்களே…Music by audionautix.com...

"எறும்பின் இலக்கு" - சிறுகதை நேரம் - தொடர்-19 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 24.12.2021

நமது இலக்கின்மீது கவனம்கொண்டு அதைநோக்கியே நமது பயணம் இருக்குமானால் வெற்றியடைவது நிச்சயம் என்பதை இக்கதை விளக்குகிறது 

அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-6 23.12.2021

தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் ஆறாம்  தொடரான  இத்தொடரில் சிறுவன் பூபாலன் விடுதலை செய்யப்படுகிறான், தனது நாய்குட்டியையும் தவற விடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே…Music by audionautix.com...

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து தங்களது பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு- சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் - 9 22.12.2021

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து தங்களது பதிவினை புதுப்பிக்கத்  தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும்வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை அரசால் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (Music by audionautix.com).

"பனைமரமும் நாணல் புல்லும்" - சிறுகதை நேரம் - தொடர்-18 (2021-22) - செந்தில்குமார் துரைசாமி 22.12.2021

வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலின் அவசியத்தை விளக்குகிறது இக்கதை 

என்ன தீர்ப்பு? - புதிர்க்கதை -தொடர்-5 - நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 22.12.2021

"என்ன தீர்ப்பு?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்..முந்தைய புதிர்கதையான "எப்படி ஏறினான்?" புதிர்கதைக்கு இத்தொடரின் முதலில் விடை கூறப்பட்டுள்ளது.

அந்த நாய்க்குட்டி எங்கே? - பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் - பாலமுருகன் கணபதி - தொடர்-5 21.12.2021

தமிழறிஞர் பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய இக்கதையின் ஐந்தாம்  தொடரான  இத்தொடரில் சிறுவன் பூபாலன் தனது கையில் வைத்திருந்த நகைக்காக கைது செய்யப்படுகிறான் , தனது நாய்குட்டியையும் தவற விடுகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதையினை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் நேயர்களே…Music by audionautix.com...

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் பணிகள்,பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகள்- துணை இயக்குனர் திரு.S.மணி அவர்கள் - செந்தில்குமார் - நேர்காணல் நேரம் - தொடர்-5 21.12.2021

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் பணிகள், அங்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகள் குறித்து நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குனர் திரு.S.மணி அவர்கள்... 

வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிக்காலியிடங்களுக்கான மாதிரி நேர்முக தேர்வு - சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் - தகவல் நேரம் - 8 21.12.2021

வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்)  மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிக்காலியிடங்களுக்கான மாதிரி நேர்முக தேர்வு வருகிற 23.12.2021 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

எப்படி ஏறினான் ? - புதிர்க்கதை -தொடர்-4 - நன்மொழி பதிப்பகம் - எ.சோதி அவர்கள்- பாலமுருகன் கணபதி 21.12.2021

"எப்படி ஏறினான்?" என்ற இப்புதிர்கதை உங்கள் சிந்திக்கும் திறனுக்கு ஒரு சவாலாக அமையும்.. தங்களுக்கு பதில் தெரிந்தால் 93616 77338 என்ற நமது நிலைய எண்ணிற்கு பதிலை வாட்சப் பண்ணுங்க. இக்கதையை எழுதியவர் எ.சோதி ஐயா அவர்கள்..முந்தைய புதிர்கதையான "எப்படி சாத்தியம்?" புதிர்கதைக்கு இத்தொடரின் முதலில் விடை கூறப்பட்டுள்ளது.

Lyssna på podden ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden