Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: ezhunaonline.com

Autor

Ezhuna

Categorie

Society

Site-ul podcastului

ezhunaonline.com

Cel mai nou episod

29 mai 2025

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

உரிமைகள் மறுக்கப்படுதலும் வறுமையும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம்பி 23.01.2023

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக 'மலையகம் : சமூக - பொருளாதார அரசியல் பரிமாணங்க...

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - II | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 22.01.2023

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் 'மரபுரிமைகளைப் பறைதல்' என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய...

பூதாகாரம் எடுத்துள்ள மேய்ச்சல் தரை பிரச்சினை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. S. கிருபானந்தகுமாரன் 19.01.2023

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இல...

பிரஜா உரிமை பறிக்கப்பட்ட கரிய வரலாறு | கண்டி சீமை | இரா.சடகோபன் 18.01.2023

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பிபயிர்செய்கைக்கு பின்னரான இந்திய வம்சாவழித்தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. 'கண்டி சீமையிலே' என்ற வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத...

இலங்கை முஸ்லிம்கள்: உப மரபினங்கள் இலங்கை முஸ்லிம்கள் | இனத்துவ மரபும் சமூகவியலும் | ஜிஃப்ரி ஹாசன் 17.01.2023

இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக 'இலங்கை முஸ்லிம்கள் - இனத்துவ மரபும் சமூகவியலும்' என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது த...

யாழ்ப்பாண வருகையின் முதற் 10 ஆண்டு நிறைவும் கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்புதலும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பா. துவாரகன் 16.01.2023

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத...

கிழார்களின் வம்ப வேந்தர் | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன் 15.01.2023

கி. மு. 3ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு எழுச்சிகளுடனேயே தமிழர் வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டதான ஆய்வு முடிவுகள் நிலைபேறுடையனவாக நிலவிவந்தன. மூவேந்தர் எழுச்சியுடன் பேரரசுகள் தோன்றுவதில் வாய்மொழி இலக்கியத்தின் பங்குப் பாத்திரம் குறித்த பேராசிரியர் க. கைலாசபதியின் ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பெரும் தாக்கத்தை விளைவித்தது. மூவேந்...

தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம் 12.01.2023

இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. பொ. ஆ. 853 முதல்...

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 11.01.2023

ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, 'ஈழத் தமிழர்கள்' என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று  அது தன்  புவியியல் எல...

உருத்திரபுரத்தில் நாகரமைத்த புராதனமான கோயில்கள் | பேராசிரியர் சி.பத்மநாதன் 11.01.2023

வட, கிழக்கு மாகாணங்களிலே அம்பாறைத் தேர்தல் தொகுதி தவிர்ந்த இடங்கள் பலவற்றில் மிக அண்மைக் காலத்தில் நடைபெற்ற கள ஆய்வுகளின் விளைவாக, ஆதிவரலாற்றுக் காலத்திலே (கி.மு.300-கி.பி.400) தமிழ் மொழியின் செல்வாக்கு மேலோங்கிய நிலையில் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  வவுனியா அருங்காட்சியகத்திற் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் மூலமாகவும் இக்கருத்து உறுதியாகின்றது. வன்னியிலே காணப்படும் பௌத்த...

பழவகைகள் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம் 09.01.2023

பலாப்பழம் பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறைபிடிக்கப்பட்டு, பத்தொன்பது வருடங்கள் கண்டியிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர் ரொபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர். இவர் அக்காலப்பகுதியில் பொதுமக்களின் உணவில் பலாக்காயின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கியுள்ளார். பண்டைய நாட்களில் சிங்கள மக்களின் உணவில் அரிசிக்கு அடுத்த பெரும்பங்கு வகித்தவை பலாக்காய், பலாவித்து...

தந்திரோபாயமற்ற தமிழர் போராட்டங்கள் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 08.01.2023

அடையாள அரசியல்  என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இந்தத்தொடர் முனைகிறது.

விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன் 05.01.2023

இரண்டாம் உலகப் போருக்காக ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட இரும்பு, உருக்கு, மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் எந்த உழைப்புமில்லாமல் ஐரோப்பா முழுவதும் பூட்டப்பட்டிருந்து. இந்த நேரத்தில் தான் 1940களில் மெக்சிக்கோவில் விவசாய நடைமுறைகளின் மறுசீரமைப்பு தொடங்கியது. இந்த விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள் காரணமாக 1950கள் மற்றும் 1960களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய உயர் ரக கோதுமை...

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் எண்ணெய் வகைகள் | மாறுபாடில்லா உண்டி | Dr தியாகராஜா. சுதர்மன் 04.01.2023

எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும...

‘நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம்’ ஜொகான் சண்முகரத்தினம் எழுதிய நோர்வேஜிய மொழிப் புத்தகம் - ஒரு பார்வை | திக்குகள் எட்டும் | ரூபன் சிவராஜா 03.01.2023

அமெரிக்க கருப்பினத்தவரான George Floyd அமெரிக்க வெள்ளையினக் காவல்துறையினால் குரல்வளை நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட போது George Floyd இருபது தடவைகள் சொன்ன 'ஒரே வார்த்தை'.  அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளாவிய அதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் தோற்றுவித்திருந்தது. பல்வேறு நாடுகளில் இன-நிறவெறிக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரண்டனர். ‘Vi puster fortsatt - நாம் இன்னமும் சுவாசித்துக் கொண்டிர...

தமிழ் இராச்சியத்தின் தோற்றம்பற்றிய முன்னைய வரலாற்றுப் பார்வையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு | அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பரமு புஸ்பரட்ணம் 02.01.2023

திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில்  திருகோணமலை மாவட்டத்தில் தனிநிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் கல்வெட்டொன்று காணப்படுகின்றது. முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன...

நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது | கண்டி சீமை | இரா.சடகோபன் 02.01.2023

இலங்கைத் திருநாட்டை ஒரு சடுதியான வளர்ச்சிக்கு உட்படுத்தி ஒரு நவீன பொருளாதாரமாக மாற்றி அமைத்தவர்கள் பின்னர் வந்தேறு குடிகள் என்று கொச்சையாக அழைக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான். இந்த நாட்டின் முதல் நவீன பொருளாதாரமான கோப்பிக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தொழில் புரிவதற்காக முதன் முதலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் இலட்சக...

காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதா ? | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்சி கபிலன் 31.12.2022

தன்பாலீர்ப்பு(Homosexual) என்பது ஒருவர் தன்பாலினத்தை சேர்ந்த ஒருவர் மேல் காதல் கொள்ளுதல் எனலாம். இதில் பெண் தன்பாலீர்ப்பாளர்கள் (Lesbian) மற்றும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள்(Gay) அடங்குவர். இலங்கையில் குறிப்பாக வடபுலத்தை பொறுத்தமட்டில் தன்பாலீர்ப்பாளர்கள் தம்மை வெளிப்படுத்தத் தயாராக இல்லை. அதிலும் ஆண் தன்பாலீர்ப்பாளர்கள்(Gay தம்மை ஓரளவு அடையாளப்படுத்துகின்ற போதிலும், பெண் தன்பாலீர்ப்பாளர்கள்(Lesbian)...

மருத்துவர் கிறீனும் மருத்துவக் கலைச்சொற்களும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 29.12.2022

கிறீன் 1848 இல் மானிப்பாயில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். இதனால் யாழ்ப்பாணம் மேலைத்தேச மருத்துவத்தின் பயனை அனுபவித்தது. கிறீன் 1852இல் கல்வின் கற்றர் எழுதிய அங்காதிபாதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். தமிழ்மொழி மூலம் ஆங்கிலமருத்துவத்தைக் கற்பிப்பதற்கு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களும் தமிழ்மொழியில் இருக்கவேண்டும் என்று கிறீன் கருதினா...

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 27.12.2022

இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. இல...

பன்முகத்தன்மை (Diversity): குடும்பமும் தொழில்முனைவோருக்கான ஆரம்பப் பயிற்சிகளும் | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிப்பிள்ளை 27.12.2022

இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும்,  அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் முறையை எல்லா விதமான வணிகத்துறையிலும்  பிரயோகிக்கலாம். உதாரணமாக கடற்தொழில், விவசாயம், வர்த்தகம், மருத்துவம் என்று எந்த தொழில்களைப்பற்றி ஆராய்ந்தாலும் அவற்றை உருவாக்குவது தொடக்கம், பின்ப...

வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 21.12.2022

கிறிஸ்தவ மிசனரிகளின் மதம் பரப்பும் பணியும் சாதிப் பிரிவினைகளாலும், சாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டது. மிசனரிகள் தமது பணிகளை ஆரம்பித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் 1850களில் கூட சாதிப்பிரச்சினை பலமான ஒரு சக்தியாக இருப்பதை உணரமுடிந்தது. யாழ்ப்பாண நகரத்தில் வண்ணார்பண்ணை வெல்சியன் மெதடிஸ் பாடசாலையில் சலவைத்தொழில் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்ட போது உயர்சாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவி...

தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம் 19.12.2022

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற் சாலை யும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன்  குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தி...

காந்தியின் வருகையும், நேருவின் விஜயமும் | கண்டி சீமை | இரா.சடகோபன் 18.12.2022

1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில்  சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன.  இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு  விஜயமொன்றை மேற்கொண்டிருந்...

சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் வாக்குரிமையின் விஸ்தரிப்பும் அதனாலேற்பட்டுவரும் மாற்றங்களும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி 15.12.2022

தோட்டத்தமிழ் மக்களின் மறைந்த தலைவர் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1977ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதும், அமரத்துவம் அடையும்வரை அவர் மந்திரிசபையில் ஒரு உறுப்பினராக இருந்துவந்ததும், 1988ஆம் ஆண்டு பெருந்தோட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதும், மாகாணசபைமுறையுடன் பாராளுமன்றம், மாகாணசபைகள், பிரதேசசபைகள் என்பவற்றிற்கான தேர்தல்...

Ascultă podcastul எழுநா în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice