Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episódios

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

24 de dez de 2025

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Stalin வாரிசு Vs EPS வாரிசு வார், டெல்லிக்கு ஷாக் தந்த சுப்ரீம் கோர்ட்? | Elangovan Explains 22.05.2025

துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தமாக இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதை வைத்து திமுகவுக்கு செக் என கொண்டாடத் தொடங்கியது பாஜக மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி டீம் ஆனால் அமலாக்கத்துறையின் டாஸ்மாக் சோதனைக்கு, இடைக்கால தடை உத்தரவு போட்டு, 5 குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் தந்த ஷாக் என திமுக கொண்டாடத் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் நிம்மதி பெருமூச்சு...

E.V Velu-வுக்கு, Ponmudi வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains 21.05.2025

'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி. ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார். இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின். முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட...

Vijay-யை டார்கெட் செய்யும் தமிழிசையின் 5 கணக்குகள் & Sasikala ஸ்கெட்ச்! | Elangovan Explains 20.05.2025

சமீபத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் சசிகலா. இன்னொரு பக்கம், கொடநாட்டில் 'ஜெயலலிதா மணிமண்டபம்' கட்ட வேண்டும் என்பதை கையில் எடுத்துள்ளார். இதற்கடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளார். தீவிர சுற்று பயணம் மேற்கொள்ளவும் பிளான்கள் வகுத்துள்ளார். இந்த நகர்வுகளுக்கு பின்னால், எடப்பாடியை வ...

Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangovan Explains 19.05.2025

அதிமுக,பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உட் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மிஷன் 200' என்கிற டார்கெட்டை நோக்கி ஒவ்வொரு மாவட்டங்களாக செல்ல, அங்கே ஆயிரமாயிரம் சிக்கல்கள். 'இப்படி ஒரு மாவட்டத்தை நான் பார்த்ததே இல்லை' என கொதிக்கும் கே.என் நேரு. நயினாருடன் நெருக்கமான...

Vijay-க்கு தூண்டிலிடும் OPS, உடையும் அபாயத்தில் PMK? | Elangovan Explains 17.05.2025

'ராமதாஸ் - அன்புமணி' இடையிலான மோதலில், சமரச முயற்சியில் இறங்கி இருக்கும் ஜி கே மணி. இதில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனக்கே ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை காட்டி, அன்புமணியை ஓரம் கட்ட திட்டமிட்டு இருந்தார் ராமதாஸ். இதை புரிந்து கொண்டு, ராமதாஸை ஓரங்கட்ட, தனக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதை அன்புமணி உணர்த்தும் விதமாக ஆப்சன்ட் ஆகியுள்ளார். இரண்டு பேரும் விடாப்பிடியாக இருக்க, 'இரட...

Ramadoss - Sowmiya Anbumani War, EPS-க்கு வலைவிரிக்கும் Vijay? | Elangovan Explains 16.05.2025

பாமகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை, தைலாபுரத்தில் கூட்டினார் ராமதாஸ் ஆனால் 108 பேரில் வெறும் பதினோரு பேர் மட்டுமே ப்ரெசென்ட். அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் ஆப்சென்ட். பின்னணியில் 'ராமதாஸ் - சௌமியா அன்புமணி' இடையிலான குடும்ப மோதலும், அன்புமணி க்கு மாநாட்டில் ராமதாஸ் பாடம் எடுத்ததும் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே ஜூலை 25ஆம் தேதி வரை கெடு வைத்துள்ளார் ராமதாஸ். இன்னொரு பக்கம், இதே போல மாவட்ட செயலா...

நயினாரை நம்பும் Edapadi, சவுத்தில் கோட்டைவிடும் ADMK! Statistics ஷாக்! | Elangovan Explains 15.05.2025

அதிமுகவுக்கு வீக்காக உள்ளது தென்தமிழ்நாடு. இதை சரிகட்ட, தென் மாவட்டங்களை பாஜகவுக்கு ஒதுக்கி, வெற்றி பெற்றுவிடலாம். மேற்கு மண்டலத்தை அதிமுக மூலம் வெல்லலாம் என்பது கணக்கு ஆனால் ஒட்டுமொத்தமாக தென்னகத்தை, பாஜக பக்கம் தள்ளிவிடுவது, அதிமுக எதிர்காலத்திற்கு ஆபத்து மேலும் அதிமுக கூட்டணியால் தங்களை வலுப்படுத்திக் கொள்கிறது பாஜக. அதே நேரம் பாஜக கூட்டணியால், அதிமுகவுக்கு நன்மைகள் குறைவு. பாஜக வளர நாம் மேடை அ...

Candidate list ரெடி பண்ணும் K.N Nehru, E.V Velu டீம்? DMK-வுக்கு, Ramadoss தூது? | Elangovan Explains 14.05.2025

பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேருக்கு, 'சாகும் வரை சிறை' என்ற தீர்ப்பை கொடுத்து உள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இதை வைத்து, 'இந்த வெற்றி எங்களால்தான் வந்தது' என மு.க ஸ்டாலின் Vs எடப்பாடி இடையே பெரும் போர். எடப்பாடிக்கு எதிராக அடுத்த கட்டமாக, கொடநாடு அஸ்திரத்தை ஏவும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், 234 தொகுதிகளுக்கும் 7 மண்டல பொறுப்பாளர்களை நியம...

Anbumani-யின் ரூட்மேப், Ramadoss வார்னிங், மாநாடு ஸ்கெட்ச்! EPS சபதம்! | Elangovan Explains 12.05.2025

பாமகவின் மாமல்லபுரம் மாநாட்டில் நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து பேசினார் ராமதாஸ் மற்றும் அன்புமணி. இந்த மாநாட்டிலும், வெளிப்பட்ட அப்பா மகனுக்கிடையிலான மெல்லிய வார். இதில் சிலருக்கு வார்னிங்கும் கொடுத்திருந்தார் ராமதாஸ். ஏன்? அவர் முன்பு இருக்கக்கூடிய ஐந்து நெருக்கடிகளை, சமாளிக்குமா மாநாட்டில் திசை காட்டப்பட்ட வியூகங்கள்? இன்னொரு பக்கம், எடப்பாடியின் 71- வது பிறந்தநாள். இதையொட்டி ஐந்து சவால்...

Udhayanidhi குறிவைத்த பதவி, சமாதானம் செய்ய தரப்பட்ட 72 தொகுதிகள்! | Elangovan Explains 07.05.2025

'ஆபரேஷன் சிந்தூர்' ஏன் நடந்தது? அந்த பெயர் எப்படி வந்தது? இன்னொரு பக்கம், நான்காண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது திமுக. '2026'-ல் வெற்றி பெற, ஐந்தாம் ஆண்டில் சில வியூகங்களை வகுத்துள்ளன. அதை விரைவாக அடையவிடாமல் தடை போடும் வகையில் சில உட்கட்சி பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக, ஒவ்வொரு மாவட்டங்களையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம், திமுக தலைமைக்கு உள்ளது. அந்த வகையில் விடுபட்ட மாவட்டங்களுக்கான பொறுப்பு அ...

J.P Nadda-வின் 'Operation TN’, முறியடிக்க Udhayanidhi-க்கு தந்த இரட்டை டாஸ்க்! | Elangovan Explains 05.05.2025

'ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது' என எடப்பாடியை டார்கெட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ். பின்னணியில் 'அதிமுக & திமுக' இரண்டு கட்சிகளிடமும், சில டிமாண்ட் பாலிடிக்ஸை முன் வைக்கிறார். '40 சீட்டுகள்' எதிர்பார்க்கிறார்கள் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஐந்து முக்கியமான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் ஜே.பி நட்டா. இதை முறியடிக்க, இரண்டு அஜெண்டாக்களை கையில் எ...

Vijay-க்கு வலை வீசும் EPS, Anbil-க்கு புது அசைன்மென்ட்! | Elangovan Explains 03.05.2025

அதிமுக செயற்குழு கூட்டத்தில், நான்கு முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளார் எடப்பாடி. குறிப்பாக 'மிஷன் 1200' என்ற அசைன்மென்டை ர.ர-க்களுக்கு கொடுத்துள்ளார். ஜெ பாணி அரசியலை தீவிரப்படுத்த உள்ளார் என்கிறார்கள். அதேநேரத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 'ஃபார்முலா 1244' என்பதை கொடுத்து, நான்கு கட்டளைகளையும் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். புது வொர்க் பிளானையும் வகுத்துக் கொடுத்துள்...

'TTV டேஞ்சர் இல்லை' EPS புது மூவ், மனதை மாற்றிய நயினார்! | Elangovan Explains 02.05.2025

எடப்பாடியோடு நெருங்கும் டிடிவி...எதிர்ப்பு காட்டாத அதிமுக என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் எடப்பாடிக்கு, மாஜிக்கள் கொடுத்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் உள்ளது. 5 விஷயங்கள் ஷாக் கொடுத்துள்ளன. இதை களைய , அமமுக-வுடன் நட்பு பாராட்டுவது தவறில்லை என கருதுகிறார்கள். இதில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த, நயினார் நாகேந்திரன் எடுத்த முயற்சிகளும் உள்ளன. இந்த அசைன்மென்ட் கொடுத்தது அமித் ஷா எ...

நயினார் கொடுத்த Files, டெல்லி சீக்ரெட்ஸ், Udhayanidhi-யின் வித்தியாசமான Plan! | Elangovan Explains 30.04.2025

தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த முக்கிய டாக்குமெண்ட்ஸ். இன்னொரு பக்கம் நயினாருக்கு ஆசி கொடுத்த ஆர்எஸ்எஸ். ஏன்? இங்கே திமுகவுக்குள் '2.0' நோக்கிய பயணம். அதை அடைவதற்கு முன்பாக நிறைய சிக்கல்களும் தலைகாட்ட தொடங்கியுள்ளன. முக்கியமாக ஐந்து பஞ்சாயத்துகள். அதில் முக...

நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains 29.04.2025

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி. இதை கொண்டாடும் எடப்பாடி & அமித்ஷா டீம். இதில், 'துரைமுருகன்,திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என அடுத்த ஹிட் லிஸ்டில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களை நெருக்குவதன் மூலம், மு.க ஸ்டாலின் அரசை சாய்த்து விடலாம் என்பது அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு. இந்த நெருக்கடிகளை சமாளிக்,க புது வியூகங்களை...

Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi, Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains 28.04.2025

'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எதனால் ராஜினாமா செய்தார்கள்? முக்கியமாக முரண்டு பிடித்த பொன்முடி... வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின். ஏன்? இன்னொரு பக்கம், நால்வரை ஸ்டாலின் டிக் அடித்ததற்கு பின்னணியில், சில அரசியல் கணக்கு...

Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains 26.04.2025

அடுத்த சட்டமன்றத் தேர்தல், உதயநிதி ஸ்டாலினுக்குமான ஒரு பரீட்சை என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சியை கரை சேர்ப்பது மட்டுமில்லாமல், 'டார்கெட் 200' - ஐ சக்சஸாக்க வேண்டும் ஆனால் கூட்டணி, அமைச்சர்கள், உட்கட்சி பிரச்சனைகள் என '13' - க்கும் மேற்பட்ட சிக்கல்கள், ஷாக் கொடுக்கின்றன. அதை முறியடிக்க புதிய திட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினிடம்...

அப்செட் RN Ravi...ஹேப்பி Stalin...'கூவத்தூரை' கையிலெடுத்த EPS! | Elangovan Explains 25.04.2025

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, திடீரென தடபுடல் விருந்து வைத்துள்ளார் எடப்பாடி. அவர்களுக்கு பெரியளவில் பரிசு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் பெரிய அளவிலான 'இனிப்பு மூட்டைகள்' இதற்குப் பின்னணியில் கூவத்தூர் சென்டிமென்ட் உள்ளது என்கிறார்கள். அடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கும் புதுப்புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அவர் முன்பு உள்ள சவால்களை சமாளித்து, சக்சஸ் கொடுக்குமா இந்த கூவத்தூர் ஃபார்முலா? இன்னொரு ப...

Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains 24.04.2025

'துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி' என நான்கு பேரை டார்கெட் செய்யும் 'எடப்பாடி - நயினார் நாகேந்திரன்' டீம். நால்வருக்கும் இருக்கின்ற வழக்கு சிக்கல், நீதிமன்றம் டபோட்டிருக்கும் செக் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதை கையில் எடுத்து அட்டாக் செய்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க. இதன் மூலம் மு.க ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது, அமித்ஷா போட்டுக் கொடுத்திருக்கிற வொர்க் பிளான். இதை சமாளிக்க,எங்க...

எதிராக அமைச்சர்கள், அசராத PTR, அட்வைஸ் செய்த Stalin! | Elangovan Explains 23.04.2025

காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தாக்குதல். உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த அமித் ஷா. அவர் கொடுத்த உத்தரவாதம். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியலில், நீதிமன்றம் தந்த உத்தரவு, அமலாக்கத்துறைக்கு பூஸ்டாக அமைந்துள்ளதால், சிக்கலில் செந்தில் பாலாஜி. அடுத்து, பி.டி.ஆர் ஓபனாக அட்வைஸ் செய்த ஸ்டாலின். பின்னணியில் , பி.டிஆர்-க்கு எதிராக காய்நகர்த்திய சில அமைச்சர்கள். முக்கியமாக, டி.ஆர்.பி ராஜா டீம் வருத்தத்தில் உள்ளதாகவும...

'50 தொகுதிகள்' EPS கையில் பட்டியல், வொர்க்அவுட் ஆகுமா புது Work Plan?! | Elangovan Explains 22.04.2025

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புதுப் புது திட்டங்களை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி. அந்த வகையில், '50 தொகுதிகளை' பட்டியலிட்டு, முதற்கட்டமாக அந்த தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு, புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் 'டாஸ்மாக் முறைகேடு புகார், 5000 கோடி ஊழல் முறைகேடு' என ஆளும் திமுக அட்டாக் அரசியலையும் தீவிரப்படுத்தியுள்ளார். வொர்க் அவுட் ஆகுமா எடப்பாட...

PTR வேதனை, பின்னணி இதுதான், R.N Ravi-க்கு, Stalin நியூ செக்! | Elangovan Explains 21.04.2025

'போதிய நிதி ஒதுக்கவில்லை' என வருத்தப்பட்ட பி.டி.ஆர். பின்னணியில் சில ஆதங்கங்கள் உள்ளன. இதை புரிந்து கொண்டு அவருக்கு எதிராக கொம்பு சீவும் சில சீனியர் அமைச்சர்கள். இன்னொரு பக்கம் கூட்டணி குறித்து தொல் திருமாவளவன் பேசியது ஒருவகையில் திமுக கூட்டணிக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது ஐந்து பின்னணிகளில் இருந்து இவ்வாறு பேசி உள்ளார் என்கிறார்கள் இதை வேறு வகையில் சமாளிக்கும் மு.க ஸ்டாலின். அடுத்து...

Vaiko-வுக்கு செக் வைக்கும் மகன் Durai vaiko? DMK கூட்டணியில் Seat Sharing Talk?! | Elangovan Explains 19.04.2025

'முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என ஷாக் கொடுத்துள்ளார் மதிமுக துரை வைகோ. பின்னணியில் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா-வுடனான மோதல் என்கிறார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி, நாளை நிர்வாக குழு கூட்டம் கூட இருக்கும் நிலையில், இது பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்கூட்டியே இன்று அவசர அவசர ஆலோசனைக் கூட்டமும் அரங்கேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே துரை வைகோ மீது...

ஹிட்லிஸ்டில் 3 அமைச்சர்கள்...மீண்டும் மாற்றம்? STALIN Warning! | Elangovan Explns 18.04.2025

'மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்' என 'டார்கெட் 200' என்கிற கனவோடு பயணிக்கிறார் மு.க ஸ்டாலின் ஆனால் அந்தக் கனவை சிதைக்கும் வகையில் 7 வேட்டுகள் ஷாக் கொடுக்கிறது. முக்கியமாக கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி என மூன்று அமைச்சர்களை டார்கெட் செய்யும் எடப்பாடி & பாஜக. இதில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தால் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து. இதையொட்டியும் அமைச்சரவை மீட்டிங் நடந...

'Vijay'-யை காட்டி கேம் ஆட துடித்த BJP, சுதாரித்த EPS?! | Elangovan Explains 17.04.2025

'எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி இல்லை. கூட்டணி மட்டுமே' என்று எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். நேற்று எடப்பாடி தெரிவித்திருக்கும் நிலையில் இன்று இவர் இவ்வாறு சொல்ல, இதன் பின்னணி என்ன? பாஜக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சிக்கான சில நகர்வுகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக முதன்முதலில் அதிமுக-விடம் டிமாண்ட் வைத்த விஜய். ஒரு புதிய கட்சியை சார்ந்தவரே துணை முதலமைச்சர் பதவி வரை கேட்க, மூன்று முற...

Ouça o podcast The Political Pulse | Hello vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos