rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: podcasters.spotify.com

Autor

rams

Categoria

Society

Site do podcast

podcasters.spotify.com

Último episódio

8 de jun de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

147. தாயார் பாதம் - ஜெயமோகன் 01.11.2020

அறம் தொகுப்பில் இருந்து மற்றுமொரு ஆழ்மனதை பிசைந்தெடுக்கும் கதை. பாட்டியை இழித்தவரை பேரன் பழிவாங்குகிறான். அந்தக் கால பெண்களின் நிலை இன்று நினைத்தாலே குலை நடுங்குகிறது. . .

146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன் 01.10.2020

சாதாரணமான கதை என்றாலும் ஜெயகாந்தனின் எழுத்தில் மிளிர்கிறது. ஊமைக் கிழவியின் பக்தி வெளிப்பாடு உருக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறது.

145. பள்ளம் - சுந்தர ராமசாமி 13.09.2020

1979ல் வெளியான கதை. தந்தை மகனின் வேறுவேறான பாதைகள் பார்வைகள். சினிமா பைத்தியத்தால் நேர்ந்த விபத்து. . .

144. கனவுக்கதை - சார்வாகன் 09.08.2020

போன வாரம் அயோத்தியில் நடந்த கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கும் இந்த கதையின் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை, தற்செயலாக நிகழ்ந்தது என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை :)

143. நுகம் - அ.எக்பர்ட் சச்சிதானந்தம் 29.07.2020

ஏசுவின் பேரால் அமைந்த மதம் எப்படி ஏழைகளை ஒதுக்குகிறது என்று காட்டும் கதை. அமைப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டாலே லட்சியங்கள் மதிப்பிழந்துவிடுகின்றன என்பதையும் அரசியல் இல்லாத அமைப்பே இல்லை என்பதையும் பிரமாதமாகக் காட்டி இருக்கிறார். 

142. கோளறு பதிகம் - ரஞ்சகுமார் 14.07.2020

போர்க்கால சூழலை தமிழ் இனம் பட்ட பாட்டை கண் முன் கொண்டு நிறுத்துகிறார் இலங்கை எழுத்தாளர் ரஞ்சகுமார். பல பரிமாணங்களை காட்டும் இந்தக் கதை உள்ளத்தை பிசையக்கூடும் ஜாக்கிரதை!

141. பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா 30.06.2020

மரண பயம் வரும்போது தான் நாம் செய்யாமல் விட்டது செய்திருக்க வேண்டியது பற்றி எல்லாம் நினைப்பு வருமோ? இருக்கப்போவது இன்னும் சில மணித்துளிகளே என்று ஆனால் எதைச் செய்வது எதை விடுவது? மனித மனத்தின் ஆழங்களை அதன் ஆசைகளை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கே உரிய நடையில் காட்டுகிறார் பி.எஸ். இராமையா.

140. நிலைநிறுத்தல் - கி.ரா 24.06.2020

அடிமை நிலையிலிருந்து சம நிலை அடைந்தததோடு நில்லாமல் அனைவரிலும் உயர்ந்து நிற்க வேட்கை கொண்டு அதையும் நிலைநிறுத்துகிறான் மாசாணம். . .வட்டார மொழிவழக்கில் மணக்கிறது தமிழ். . . 

139. அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார் 11.06.2020

தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் குஜராத்திகளின் வாழ்க்கைமுறை, நம்பிக்கைகள், கலாசாரம் இவற்றைப் பற்றி பல சிறுகதைகள் எழுதிவருகிறார் திலீப்குமார். எளிய கதைக் களன்களில் சாதாரண மக்களை  நன்கு சித்தரிக்கிறார்.

138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன் 08.06.2020

முதல் முறை படிக்கும்போதே ஏதோ நெருடியது. மறுமுறை படித்தபோது தெளிவானது போல் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை படித்தால் வேறு ஒரு கோணம் வெளிப்படுமோ? நிச்சயம் இது உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறும். அசர வைக்கும் அசோகமித்திரன்.

137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன் 06.06.2020

களங்கம் என்றால் பெண்ணுக்கு மட்டுமே என்றிருந்த நமது ஆணாதிக்க சமுதாயத்தில் இந்தக் கதை ஒரு இடி போல் இறங்கி உலுக்கி எடுத்தது.

136. பேயாண்டித் தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் - கனிவண்ணன் 30.05.2020

அன்பான கிராம மனிதர்களின் உறவுப் பிணைப்புகளை பேசும் கதை. 

135. மாஞ்சு - சுஜாதா 13.05.2020

யாரை நொந்து என்ன பயன் என்ற கூற்று நினைவு வருகிறது. எல்லாத் தாயார்களுக்குமே தனது அறிவாளிப் பிள்ளையை விட அசட்டுப் பிள்ளையைத் தான் பிடிக்கும் போல. அழகான விதவை படும்பாடு, வசதிகளுக்காக குணங்களை மாற்றிக் கொள்பவர்கள், சோம்பலாலும் திமிராலும் சரிந்து போன பிராமண செல்வாக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்தன்மையான திறமையை புறக்கணிக்கும் பொதுக்கல்வி முறை என்று பலவற்றை சிந்திக்க வைக்கிறது.

134. மைதானத்து மரங்கள் - கந்தர்வன் 10.05.2020

மரங்கள் மழை மட்டும் தருவதில்லை. எண்ணற்ற மக்களுக்கு அடைக்கலமும் ஆறுதலும் தருகின்றன. . .

133. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன் 08.05.2020

இரு இளைஞர்கள் - ஆணும் பெண்ணும். இருவருக்கும் தனக்கு வரப் போகும் வாழக்கைத் துணை பற்றிய ஒரு கற்பனை பிம்பம் அழுத்தமாக பதிந்துள்ளது. அந்த பிம்பத்துடன் ஒத்துப் பார்த்துக் கொண்டு ஒருவர் மற்றவரை சீண்டுகிறார்கள். இதில் மாயவலை அறுந்து காதலில் வீழ்கிறார்கள். . ஆதவன் கதைகளில் இருக்கும் ஆழமான உளவியல் ஆராய்ச்சி இந்தக் கதையிலும் பளிச்சிடுகிறது.

132. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 06.05.2020

படிக்கும் காலத்தில் ஒழுங்காய் படிக்காமல் ஊரைச் சுற்றியதும் பிராமணனாய் பிறந்ததிற்கு பலனாகவாவது வேதங்களையும் படிக்காமல் உதவாக்கரையாய் சுற்றியவன் ராஜப்பா.ஐம்பது வயது வரை தாயார் உயிரோடு இருந்தவரை அண்ணனையும் அவன் குடும்பத்தையும் ஆதரித்த தம்பி இனிமேல் நீயே பார்த்துக்கொள் என்கிறான். கையால் உழைத்தறியாத ராஜப்பாவிற்கு வயிற்றால் உழைக்கும் வேலை கிடைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஒரு நாள், காலை காப்பிக்கே வழியில்லாமல்...

131. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதிமணியன் 04.05.2020

அசைவ உணவு தயாரிப்பு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கும் இக் கதை சைவர்களுக்கு குமட்டலை ஏறுபடுத்தக் கூடும். ஆசையை அடக்கமுடியாமல் மருகுவது மகன் மட்டும் தானா?

130. பாற்கடல் - லா.ச.ரா 02.05.2020

இந்தக் கதை பற்றி லா.ச.ரா எழுதியது கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் போய்க்கொண்டு, வீட்டில் விட்டுச் சென்ற குழந்தை, பக்கத்து வீட்டுப் பாஞ்சாலை, எதிர் வீட்டு எல்லம்மாளின் பொறுப்பிலும் இரக்கத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கும் இந் தலைமுறைக்கு, இந்தக் கதையில் சொல்லப்படும் வாழ்க்கை, வாழ்க்கைமுறை, வெறும் தகவல் ரீதியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும்....

129. குடும்பத்தேர் - மெளனி 30.04.2020

முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மெளனியின் படைப்பு. தாயின் மரணம் உண்டாக்கும் வெற்றிடம், கலக்கம் வாட்டுகிறது. கிழவியானாலும் குடும்ப நிர்வாகத்தை திறனுடன் வழிநடத்திச் செல்லும் அந்தத் தாய் விட்டப் போனதும் தான் அவள் ஆற்றி வந்த பணிகளின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது. தலைமுறைகளை இணைத்தாள்; குடும்ப வரலாற்றை பதிவு செய்தாள்; தவறுகளை இடித்துரைத்தாள்; துவளும்போதெல்லாம் ஆறுதல் சொன்னாள். . .இந்தப் பொற...

128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி 28.04.2020

இங்கும் அங்கும் அலைபாயும் மனதின் ஓட்டத்தை எண்ணச் சிதறல்களை உடனிருந்து பார்க்கும்போது மலைப்பாகிறது. இப்படித் தான் நம்மில் பலரும் உழன்று கொண்டிருக்கிறோம். தத்துவ விசாரணைப் பிரியர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

127. வெயிலோடு போய் - ச.தமிழ்செல்வன் 26.04.2020

கிராமத்துப் பெண்ணின் உன்னதமான ஒருதலை காதலைப் பற்றிய கதை. கண்டுகொள்ளாத காதலன் வாழ்வு நன்றாக அமையவில்லையே என்று குமுறி அழும்போது நமக்கு ஏன் ஆத்திரம் வருகிறது?

126. ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பா 24.04.2020

குழந்தைகள் பெரியவர்கள் உறவுகளின் அடிப்படை உளவியலை கொண்டு எழுதப்பட்ட கதை. வெகு சாதாரணமான கதைபோல தோன்றினாலும் எழுதப்பட்ட காலகட்டத்தில் சிறுகதைகளுக்கான கட்டுப்பாடுகளை விதிகளை உடைத்து மீறி எழுதப்பட்டுள்ளது. நவீன சிறுகதைகளின் முன்னோடிகளில் நிச்சயமான இடம் இக்கதைக்கு உண்டு.

125. ஜீவரசம் - கல்கி 22.04.2020

எளிய மொழியில் இனிய நகைச்சுவையுடன் எழுதிப் புகழ் பெற்ற கல்கியின் சிறுகதை இது. சிறுவர்களும் கேட்டு மகிழலாம்.

124. இரணிய வதம் - சா.கந்தசாமி 20.04.2020

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வேடம் போடும்போது அந்த பாத்திரத்தின் தீய குணங்கள் தொற்றிக்கொள்கின்றனவோ? இரணியன் வேடம் போடும் பெரும் கலைஞன் செய்யும் அநியாயங்கள் ஒரு முடிவிற்கு வருகிறது. புயல் கதையில் ஏதும் செய்ய இயலாத கணவனைப் போல இன்றி இந்தக கதையின் நாயகன் பெண்மையை அவமதிப்பவனுக்கு பயங்கரமான தண்டனை கொடுக்கிறான்.  எளிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை தன் கதைகளில் காட்டும் மிக...

123. புயல் - கோபி கிருஷ்ணன் 18.04.2020

மதுரையில் பிறந்த மற்றுமொரு நவீன சிறுகதை எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர்.( எஸ். ரா கட்டுரையிலிருந்து) இந்தக் கதை நமது சமூகத்தின் பெண்கள் பற்றிய பார்வையை சுட்டு தகிக்கிறது. வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகளை அதுபற்றி ஒன்றும் செய்ய முடியாத நமது இயலாமையை குத்திக் காட்டுகிறது...

Ouça o podcast தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos