rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Society TA ↓ 200 Folgen

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Autor

rams

Kategorie

Society

Podcast-Website

podcasters.spotify.com

Neueste Folge

8. Jun 2026

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

197. கைலாசபுரம் - சாம்ராஜ் 08.06.2026

இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன்  அநி...

196. படுகை - ஜி. கார்ல் மார்க்ஸ் 29.05.2026

ஜி.கார்ல் மார்க்ஸ் பகடி, நுண்சித்தரிப்புகள் ஆகியவற்றுடன்கூடிய நடை கொண்டவர். ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய படுகை கதை ஒரு குற்றவாளியை தேடிச் செல்லும் போலீஸ்காரர்களைப் பற்றியது. இக்கதையில் வறண்ட ஆற்றுக்குள் அவனைப் பிடிக்க அவர்கள் வைக்கும் பொறி, பிடித்தேயாக வேண்டிய கட்டாயத்தின் காரணிகள், திடீரென வெளிப்படும் பெண் கதாபாத்திரத்தால் அவர்களது திட்டம் சீர்குலைவது என நீடிக்கும் கதை நம்மையும் அவர்களைப் போன்று ஒரு...

195. துண்டு - கந்தர்வன் 21.05.2026

வறியவர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் செலுத்தும் அரசியலைச் சொல்லும் கந்தர்வனின் சிறுகதை . முடிவு ஒரு அசத்தல். மார்க்ஸியக் கோட்பாட்டின் மேல் இருந்த உறுதியான நம்பிக்கையால் போராளியாகவே வாழ்ந்தும், உழைக்கும் மக்களின் துன்பங்களைப் பிரச்சார நோக்கில் எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல் கந்தர்வனின் கதைகள் அன்றாடத்தில் நிகழும் அசாதாரணங்களின் கதைகளாகத் திகழ்ந்தன.

194. கருட வித்தை - என்.ஸ்ரீராம்  15.05.2026

கொங்கு மண்ணின் மணம் வீசும் கதைகள் ஸ்ரீராமின் கதைகள். வட்டார மொழியும், சொலவடைகளும் தாராபுர வட்டாரத்தை கண் முன்னே நிறுத்துகின்றன. இந்த கதையின் ஆழம் கிணற்று வெட்டிகளையும் பிரமிப்பு அடைய வைக்கும்!

193. கொலைபாதகன் - க.நா.சு 23.04.2026

"கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த...

192. டை அணிந்தவன் கணேசன் இல்லை - அ. பாண்டியன்  12.04.2026

சிறுவயதில் நம்மை விட திறமை வாய்ந்தவர்களை, தனித்தன்மை கொண்டவர்களை பெரும்பாலும் நாம் வெறுக்கவே செய்திருக்கிறோம் - அவர்கள் எல்லோர் பாராட்டையும் பெறுவது நமக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கிறது. அப்படி இருந்த ஒரு நண்பன் இப்போது கொள்கைகளை துறந்து சாதாரணமாய் இருக்கிறான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவனது இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அற்புதமான கதை. அ. பாண்டியனின் அருமையான படைப்பு.

191. சத்ரு - பவா செல்லதுரை  05.04.2026

191. சத்ரு - பவா செல்லதுரை  வறண்ட நிலமும் மனங்களும் கொடுந்தன்மை கொண்டுவிடுகின்றன. ஒரு மழை. ஒரே ஒரு மழை. எல்லாம் மாறிவிடுகிறது. கருணை எங்கும் பரவுகிறது. இது தெய்வச் செயலா அல்லது தானாய் நிகழ்ந்ததா? இந்தக் கதையில் யார் சத்ரு? உங்களுக்கு தெரிந்தால் email அனுப்புங்கள். 

190. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன் 30.03.2026

எளிய நடை. பெரிய புதிர். தளர்வில்லாமல் நகர்கிறது இந்த கதை. விமலாதித்த மாமல்லனின் அருமையான கதைகளில் ஒன்று. நான் பதிந்திருக்கும் விமலாதித்த மாமல்லனின் மற்ற கதைகள்: 84.  வலி - விமலாதித்த மாமல்லன்

189. கல்வி - அசோகமித்திரன்  20.03.2026

47 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை. கல்வி என்பது எப்படி மனித நேயமற்று, குழந்தைத்தனத்தை கொடூரமாக சிதைக்கும் படியாக இருந்தது என்பதை தனக்கே உரிய சரள நடையில் அசோகமித்திரன் சொல்லும்போது மனது வலிக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது நமது ஆரம்ப கல்விச் சாலைகள்? நான் பதிந்திருக்கும் மற்ற அசோகமித்திரனின் கதைகள்: 174.  சுந்தர் - அசோகமித்திரன் 158.  தனியொருவனுக்கு - அசோகமித்திரன் 152.  முனீரின் ஸ்பானர்கள் - அச...

188. கோடித்துணி - பெருமாள் முருகன் 07.03.2026

"கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின் சிறப்பம்சம்."  https://tamil.wiki/wiki/பெருமாள்_முருகன் "எழுதுவது மனதிருப்தியை தருகிறது. மனதில...

187. சிலுவைப்பாதை - கமல தேவி 28.02.2026

உலகத்தில் எல்லோருக்கும் தேவைப்படுவது, எல்லோராலும் கொடுக்கக்கூடியது, கொடுத்தாலும் குறையாதது எது? அது இந்த கதை முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெறுப்பை வளர்க்கும் இந்த காலகட்டத்தில் இந்த கதை ஒரு மருந்து.   நான் பதிந்திருக்கும் கமலதேவியின் மற்ற கதைகள்: 165. கண்ணாடிப் பரப்பு - கமலதேவி

186. வாசனை - பிரபஞ்சன் 22.02.2026

186. வாசனை - பிரபஞ்சன் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சிற்சில விஷயங்களில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், தனியாக வாழும் பெண்களைப் பற்றிய எண்ணப்போக்கு பெரிதாய் மாறவில்லை என்று தான் தோன்றுகிறது. படிக்கும் வாசகர்க்கும் கூட ஒரு பரிட்சை வைத்திருக்கிறார் பிரபஞ்சன். எங்கே என்று சொல்லுங்கள்! அனுப்ப வேண்டிய இமெயில் rams.villageres@gmail.com    நான் பதிந்திருக்கும் பிரபஞ்சனின் மற்ற கதைகள்...

185. தபால்கார அப்துல்காதர் - எம்.எஸ்.கல்யாணசுந்தரம் 06.02.2026

எம்.எஸ். கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். மிகையில்லாத யதார்த்தவாதத்தை எழுதியவர். இந்த கதை படிப்பவர் அனைவரையும் புன்முறுவல் பூக்கச் செய்யும்.

184. புன்னகை - கு.அழகிரிசாமி. 22.01.2026

நடுத்தர வர்கத்தின் தேவையற்ற டாம்பீகத்தையும் பணம்படைத்தவர்களின் அற்பத்தனத்தையும் புன்னகை மூலமாக வெளிக்கொணர்கிறார் அழகிரிசாமி. உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.comக்கு அனுப்புங்கள். நன்றி . நான் பதிந்திருக்கும் கு.அழகிரிசாமியின் மற்ற கதைகள்: 171.  தியாகம் - கு.அழகிரிசாமி 120.  தரிசனம் - கு.அழகிரிசா மி 60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி 46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி ⁠32...

183. பாதைகள்- ஜெயமோகன் 18.01.2026

தேவதைக் கதைகளும் பேய்க்கதைகளும் என்ற தொகுப்பில் இருந்து. உங்கள் பின்னூட்டம் மற்றும் ஆதரவு தொகை அனுப்ப rams.villageres@gmail.comக்கு ஈமெயில் அனுப்புங்கள். நன்றி. நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள் 166. நூறு நாற்காலிகள் ⁠161. வணங்கான் - ஜெயமொகன்⁠ ⁠147. தாயார் பாதம்⁠ ⁠110. இங்கே , இங்கேயே⁠ ⁠101. அப்பாவும் மகனும்⁠ ⁠73. ஐந்தாவது மருந்து⁠ ⁠54. பாடலிபுத்திரம்⁠ ⁠27 - 2 . யானை டாக்டர் - இறுதி பக...

182. பூனைக் கண்ணன் கடத்திய அம்மன் - நாஞ்சில் நாடன் 11.01.2026

வருடத்தின் முதல் கதை. நாஞ்சில் நாடனின் ஒரு யதார்த்தமான கடத்தல் கதை ஆன்மீக கதையாக பரிணாம வளர்ச்சி கொள்கிறது. பொங்கிப் பிரகவிக்கும் காட்டாறாய் அவரது மொழி நம்மை அடித்து சென்று கரை சேர்க்கிறது. நான் பதிந்திருக்கும் நாஞ்சில் நாடனின் மற்ற கதைகள். 179.  அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன் 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன் 156.  பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன் 112.  வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் ந...

181. இணைப்பறவை - ஆர்.சூடாமணி 05.12.2025

ஆர். சூடாமணி  ( R. Chudamani , 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010)  தமிழக   எழுத்தாளர் . உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார்.  கலைமகள் ,  சுதேசமித்திரன் , தினமணிக் கதிர்,  கல்கி ,  ஆனந்த விகடன்  என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல்  சூடாமணி ராகவன்  என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்...

180. கிடாரி - சுந்தர ராமசாமி  29.11.2025

அறுபது வருடம் முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிலை தான் பெரும்பாலும். ஒரு வீட்டில் இரண்டு பிரசவங்கள். ஒரே எதிர்பார்ப்பு. ஒன்றில் பலிக்கிறது - தேவையில்லாத இடத்தில். மற்றொன்றில் - தேவையான இடத்தில் பொய்த்துப் போகிறது. சு.ரா தன் எழுத்துக்களால் நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போகிறார். உங்கள் பின்னூட்டத்தை rams.villageres@gmail.com க்கு அனுப்புங்கள்! நான் பதிந்திருக்கும் சு.ரா வின் பிற கதைகள்: 145.  பள்...

179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன் 13.11.2025

மேல்தட்டு கீழ்தட்டு மக்களின் பழகிப்போன பாழாகிப் போன மனநிலையை வேடிக்கையாக சொல்கிறார் நாஞ்சில் நாடன். நான் படிந்திருக்கும் மற்ற நாஞ்சில் நாடன் கதைகள் : 175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன் 156.  பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன் 112.  வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன் 61. ஒரு இந்நாட்டு மன்னர்  - நாஞ்சில் நாடன் 95.  சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் 85.  வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன...

178. காட்டில் ஒரு மான் - அம்பை 06.11.2025

அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கதை அதிகம் பேசப்படாத ஒரு குறைபாட்டை, பல பெண்...

177. அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை - அ முத்துலிங்கம் 23.03.2025

வாழ்க்கையே புதிராய் இருக்கும் அகதியின் வாழ்க்கையில் கணிதப் புதிர்களும். சொமாலியாவில் மக்கள் தவிப்பை கண் முன் நிறுத்துகிறார் முத்துலிங்கம்.

176. உபதேசம் - புதுமைப்பித்தன் 09.02.2025

இந்தக் கதை முழுக்க நிகழ்வுகளால் உள்ளது, நிகழ்வுகளின் அர்த்தத்தை வாசகனே அறிந்து கொள்ளட்டும் என்னும் முயற்சி. இந்த முறையின் பலம், பலவீனம் இரண்டுமே அர்த்தத்தை வாசகனே உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமே; ஒவ்வொரு வாசகனும் இதனை ஒவ்வொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவியலும். உங்கள் feedbackஐ rams.villageres@gmail.com க்கு அனுப்பவும். நன்றி!

175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன் 26.01.2025

நாஞ்சில் நாடன் படைப்புகள் அனைத்துமே அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. - க.நா.சு

174. சுந்தர் - அசோகமித்திரன் 19.01.2025

வரிக்கு வரி எள்ளலும் துள்ளலுமாக விளாடுகிறார் அசோகமித்திரன். மாடு வளர்ப்பவர்கள் கட்டாயம் கேளுங்கள் .

173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் 24.12.2023

வெகு நாட்களாக படிக்க திட்டமிட்டு நான் சமீபத்தில் படிக்க தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன். அவர் எழுத்தில் நான் படித்த முதல் கதை கழிமுகம். மிகவும் வேறுபட்ட நடையில் அதிர வைத்த படைப்பு. பிறகு அவரது சிறுகதைகளை தேட ஆரம்பித்தேன். இந்த முத்து கிடைத்தது. கிணறும் நீச்சலும் கிராமங்களிலும் மறையத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு ஆவணப்படம் போல இந்தக் கதை. . .

Höre den Podcast தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet