Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: ezhunaonline.com

Autor

Ezhuna

Categoria

Society

Site do podcast

ezhunaonline.com

Último episódio

29 de mai de 2025

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

இலங்கையின் பாரம்பரிய விவசாய வரலாறு | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன் 30.08.2022

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரம...

இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி 29.08.2022

பெருந்தோட்டத்துறையினது அறிமுகத்தால் அதுவரை காலமும் நிலவிவந்த மானியமுறைப் பொருளாதார அமைப்பு முதலாளித்துவப் பொருளாதாரமுறைக்கு நெகிழ்ந்து கொடுத்ததுடன், பெருந்தோட்டத்துறையினது நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட புதிய பல தாபனங்களும் உருவாகின.  ஆரம்பத்தில் இத்துறைக்குத் தேவையான வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக சில வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் இங்கு திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பெருந்தோட்ட உற்பத்திக்குத் தே...

காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர் 28.08.2022

இலங்கையின் இயல்பான வளர்ச்சி ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆக்க்கிரமிப்பால் தடைப்பட்டு ஒருவிதமான சார்பு முதலாளித்துவம் உருவானது. இலங்கை 1505 முதல் 1948 வரை 443 நீண்ட வருடங்கள் மூன்று மேற்கத்தைய நாடுகளின் காலனியாக கிடந்தது. முதலில் போர்த்துக்கேயர்  1505 முதல்  1658 வரை இலங்கையை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1658 முதல் 1796...

மருத்துவர் கிறீனின் யாழ்ப்பாண வருகை | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 26.08.2022

அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 3 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன். கிறீன் 1841 இல் நியூயோர்க்கிலுள்ள மருத்துவர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தார்.  எப்போதும் ஆன்மிகத்திலும் மிசனரி சேவையிலும் நாட்டமுள்ளவராக விளங்கிய மருத்துவர் கிறீன், பிரதேசங்களுக்கு மிசன் தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் பணியகத்துடன் 1846 இல் தொட...

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் 1 | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 24.08.2022

இன்றைய நிர்வாகப் பிரிவுகளின் படி, திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், சேறுவில், வெருகல் பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டி, தவிர்ந்த ஏனைய நிர்வாகப் பிரதேசங்களும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் கீழைக்கரையில் அடங்கும். இந்த எல்லைகளின் அடிப்படையில், சுமார் 9000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கீழைக்கரையானது, முழு இலங்கையின் பரப்பில் சுமார் 15%ஐ அடக்குகிறது. தமிழர், சோனகர், சிங்களவர் ஆகிய மூவினத...

இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’ | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன் 23.08.2022

இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867- 2017), தேயிலைத் தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார்.  ஜேம்ஸ் டெய்லரும் ஏனைய தோட்டத்துரைகளை போலவே ஒரு தோட்டத் துரையாக இருந்தவர் தான். ஆனால் ஒரு சராசரி தோட்டத் துரையாக இருந்து விட்டு போய் விடாமல் தனது மிகக் கடின உழைப்பால் தேயிலைப் பொருளாதாரம் உருவ...

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : நிலமும் உழைப்பும் சமூக உறவுகளும் – பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 22.08.2022

'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் த...

கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 20.08.2022

ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு  வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும்  குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர். வேடர்கள் என்போர் இன்று நாம் காணுகின்ற ஈழத்து சமூகங...

இரசவர்க்கம் – திரிபலை | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம் 19.08.2022

கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும். திரிபலை சூரணம் இருதயம் ஈரல் சமிபாட்டுத்தொகுதி கண்கள் போன்ற உடல்...

சிங்கோனா: திடீர் எழுகையும் வீழ்கையும் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன் 18.08.2022

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.  இதன் ஒரு விளைவாக 1860 ஆம் ஆண்டளவில் ஒருதொகை சிங்கோனா விதைகள் இந்தியாவு...

பசியும், பிணியும் போக்கும் அரிசி | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன் 17.08.2022

தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன.  பொதுவாக நெற்பொரியானது உணவாகப் பயன்படுத்தப்படாவிடினும் நோய்நிலைகளில் முக்கியமாக குழந்தைகள், சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. காய்ச்சல், வாந்தி, கழிச்சல் போன்ற நிலைக...

தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 16.08.2022

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. சிங்களத் தேசிய வாதம் தமிழர்களையும் காலனித்துவ ஆட்சியாளர்களையும் மிகவும் தந்திரோபாய ரீதியில் கையாண்டு தமிழ் தேசிய வாதத்தினை முறியடிப்பதிலும் தமது தேசிய வாதத்தினை வளர்த்தெடுப்பதிலும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு...

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை அழித்தல் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 14.08.2022

ஓகஸ்ட் 2021 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலப் பகுதியில் வெளியான மாநகர முதல்வரின் நாவலர் மண்டபம், ஆஸ்பத்திரி வீதி தொடர்பான கருத்துக்கள் மீதான உரையாடல் ஆகும்.

பெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி 13.08.2022

இலங்கையின் பெருந்தோட்டச் சமூகமானது நிறைவேற்றப்படாத பல மனிதத்தேவைகளையும், தரங்குன்றிய ஒரு வாழ்க்கைமுறையையும் கொண்டதாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளது. நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து இச்சமூகத்தை தனிமைப்படுத்திவைத்த பல்வேறு வரலாற்று ரீதியான காரணங்களினாலேயே அது இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. தோட்டமக்களின் சமூகஅபிவிருத்திக்கும் சமூகஅணிதிரட்டலுக்கும் பங்களிக்கும் இன்னொரு முக்கி...

தமிழ் மக்களின் அரசியல் இலக்கும் வழிவரைபடமும் | தமிழ் அரசியல் இலக்கும் வழி வரைபடமும் | சி. அ. யோதிலிங்கம் 13.08.2022

இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதே! அதாவது தேசம் அல்லது தேசிய இனத்தின் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதே!  இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்ற சிங்கள மக்களின் ஏகோபித்த கருத்து நிலையை நடைமுறைப்படுத்துவதற்காகவே அவை அழிக்கப்படுகின்றன. ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதன...

வடக்கு – கிழக்கு மாகாணத்தினுடைய வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன் 11.08.2022

பிரதேச மட்ட வளங்களின் பயன்பாடு குறித்து உச்ச மட்ட கவனத்தில் கொள்ளாது தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்மொழிவுகளினாலேயே சமமற்ற பிராந்திய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கையின் மாகாணமட்ட அபிவிருத்தியில், மேல் மாகாணம் அதீத முன்னிலை பெறுவதற்கு இதுவே காரணமாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதமான பங்களிப்பை தனி ஒரு மாகாணமாக இம் மாகாணம்...

மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | க. தர்மேஸ்வரன் 10.08.2022

நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம்.  எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம்.  மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய...

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன் 10.08.2022

கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது.  மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இல...

மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன் 09.08.2022

17 ஆம் ,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு வந்தான்.  பிரிட்டிஷார் தாம் அடிமைப்படுத்திய மக்களிடையே அறிமுகப்படுத்திய மதுப் பழக்க...

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 2 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம 07.08.2022

கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு  என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதா...

பேண்தகு விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் | உணவு நெருக்கடி | கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி 06.08.2022

உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை.  உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளமை தான். அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி குறைகிறது. எங்களது பகுதிக்கு பொருத்தமில்லாதவற்றை நாங்கள் முயற்சி ச...

திரிகடுகம் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம் 06.08.2022

கி.பி.15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் ஒருவனே செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் தோன்றக் காரணமாயிருந்தான் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலின் ஒரு சில பாகங்களே அச்சில் வெளிவந்துள்ளன. செகராசசேகரத்தின் சிலபகுதிகள் நூல் உருப்பெற...

ஆபிரகாம் லிங்கனது மறைவும் நேத்தன் உவோட்டின் நினைவுகளும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 05.08.2022

1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்,வோசிங்டன் டி.சி. யிலுள்ள போட்சினது நாடக அரங்கிலே ஜோன் உவில்க்ஸ் பூத் என்ற நடிகரால் சுடப்பட்டார். மறுநாள் லிங்கனது உயிர் பிரிந்தது. ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் மருத்துவர் நேத்தன் உவோட்டின் இளையமகனுமாகிய மருத்துவர் சாமுவேல் ரெட் உவோட்டும் இந்த நாடகத்தைப் பார்வையிட, போட்சினது நாடக அரங...

டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் 03.08.2022

“பிரதானமாக, வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் ஏற்படுத்துதல் வேண்டும் என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக்காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுதலும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள்...

சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள் | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன் 02.08.2022

இலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தொழில்புரிய வந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை இந்த நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் வேலை இல்லாத காலப்பகுதிகளில் தமிழ்நாட்டின் தமது சொந்த கிராமங்களுக்கு சென்று சிறிது காலம் தம் உறவினருடன் இருந்துவிட்டு மீண்டும் இங்கே வந்தனர்.  இவ்விதம் மீண்டும் வருபவர்கள் “பழையல்கள்” (பழையவர்கள்) என...

Ouça o podcast எழுநா no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos