Kamaraj J
குறிஞ்சி மலர்
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...
Autor
Kamaraj J
Categoria
Site do podcast
Último episódio
21 de mai de 2026
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
நாயன்மார் வரலாறு-26- திருநாவுக்கரசர் -1 29.04.2024 32:47
சிவன் நேசமும் வெண்ணீற்று பாசமும் கொண்டவர் நெஞ்சம் நிமிர்ந்து கூவலாம் - நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் '... நாவுக்கரசர் கீர்த்தி நம்மை ஆட்கொள்ளட்டும்!
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -10 27.04.2024 23:02
கல்கத்தாவிற்கு கப்பல் பயணம் மேற்கொள்ளும் குருதேவர், கங்கா சாகர பயண நினைப்பையே தராமல் , பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து மீளும் வழி உரைக்கிறார்... கேசவரும், விஜயரும் உடனுள்ளனர்...
நாயன்மார் வரலாறு-25-திருக்குறிப்பு தொண்டர் &சண்டேசுவர நாயனார் 20.04.2024 23:29
அடியார் குறிப்பறிந்து ஆற்றும் தொண்டே அரனாருக்கான அர்ச்சனை என்றும், சிவ அபச்சாரத்திற்கு விதிவிலக்கே இருக்க முடியாது என்றும் அவனோடு ஆன்ம பந்தம் கொண்டாடும் அடியார் திருவடிகள் போற்றி!
அமுதமொழிகள்-9-இல்லறத்தார்க்கு அறிவுரை-3 15.04.2024 25:46
நாடுபவர் நலம் பேணி, வேண்டும் வடிவில் வேண்டியோர் இதயத்தில் இதமளிக்கும் ஈஸ்வரமூர்த்தியாய் இறைவன் இருப்பதை குருதேவர் இயம்புகிறார் இன்மொழிகளால்!
நாயன்மார் வரலாறு-24-முருகர்- ருத்ரர் - நந்தனார் 13.04.2024 18:27
அரனாரை அர்ச்சிப்பதில் பரவசம் - ருத்ர உச்சரிப்பில் உச்சம் - பக்தியே பரமனடிக்கு ஒரே தகுதி என மூன்று நாயன்மார்களை தம்முள் ஈர்க்கும் ஈசன் வழி போற்றி போற்றி!
அமுதமொழிகள்-8-இல்லறத்தார்க்கு அறிவுரை 03.04.2024 23:42
இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட இல்லறத்தார்க்கு எல்லாமே அனுகூலமாய் அமையும் என நம்பிக்கை விதைக்கும் அதே நேரம் பதினோரு வெளவால்கள் பிடியிலிருந்து விடுபடுவது எளிதல்ல என எச்சரிக்கவும் செய்கிறார் குருதேவர்...
நாயன்மார் வரலாறு-23-மூர்த்தி நாயனார் 31.03.2024 10:31
சடையனுக்கு சந்தனக்கட்டை கிடைக்க வில்லையே என்று சற்றும் தளராமல் மூர்த்தியார் செய்த காரியம் சாத்தியமா? செஞ்சடை வள்ளலின் வம்புகளுக்கு எல்லையுண்டோ!?
அமுதமொழிகள் -7 -இல்லறத்தார்க்கு அறிவுரை 27.03.2024 24:39
இறைக்காட்சி இல்லறத்தார்க்கு சாத்தியமா? பக்தியால் விளையும் பலன்களை தனக்கே உரித்தான ஜனரஞ்சக பாணியில் விளக்குகிறார் குருதேவர்
நாயன்மார் வரலாறு- 22அரிவாள் தாயனார் -ஆனாயர் 21.03.2024 12:01
நிமலனுக்கு நிவேதனம் படைக்க இயலவில்லையே என்று உயிர் மாய்க்க துணியும் தொண்டர் - இதயம் நிறைந்தவனை இசையால் தாலாட்டி, இயனுலகம் இரங்கி நிற்க வைக்கும் இன்னிசை வேந்தராய் ஒரு தொண்டர்... இறைஞ்சும் வகைகள் தான் கோடி!இறைவன் இரண்டில்லாதவனே!
6. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- வித்யாசாகரைச் சந்தித்தல் -1 17.03.2024 27:02
குருதேவரின் கல்கத்தா பயணம் - வித்யாசாகர் இல்லத்தில் வேத சாரத்தை உபதேசம் செய்கிறார்... புன்னகை ததும்ப... கீதாச்சார சாரதியாய் ! கலியுகத்திற்கு பக்தியின் பாதையே பரகதி என்கிறார் குருதேவர்...
நாயன்மார் வரலாறு- 21- மானக் கஞ்சாறர் 16.03.2024 8:18
அடியார் தொண்டிற்கு சகலமும் சரணமே! மண் வாழ்வு ஒரு பொருட்டா? பரமன் பரவசத்தில் மானக் காஞ்சாறர் செய்கை காணீர்!
5-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- குருவும் சீடரும் -3 15.03.2024 23:28
குருதேவரின் திரு மொழிகள் தீராத மயக்கம் தருவது ஏன் என உருகுகிறார் ம-. குரு மற்றும் நரேந்திர கானங்களில் தன்னை மறக்கிறார்.. நரேந்திரரை ஹோமா பறவையோடு ஒப்பிடுகிறார் குருதேவர்...
4. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-குருவும் சீடரும்- 2 10.03.2024 20:15
ம-வின் மூன்றாம் வரவு. குருதேவருடன் நரேந்திரரையும் காண்கிறார் -எங்கெங்கும் நிறைந்தவனாய் இருந்தாலும், இருமைத் தன்மையுடன் உலகம் விளங்குவது எப்படி என்றும் அதில் வாழும் வகை குறித்தும் குருதேவர் விவரிக்கிறார்...
3.அமுதமொழிகள் - குருவும் சீடரும் -1 08.03.2024 24:50
ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் வாழ்வையும் வாக்கையும் மானுடத்திற்கு தந்த மகத்தானவர் ம - எனப்படும் மஹேந்திர நாத் குப்தர். தக்ஷினேஸ்வர தவ பூமியை விளக்கிய ம -, தவ சீலரை தரிசிக்கும் முதல் சந்திப்பு... வியப்பும் பரிதவிப்பும் பக்தியாய் பரவசமாய் மிளிர்கின்ற தெய்வ சாந்நித்தியத்தை ம -வுடன் நாமும் அனுபவிப்போமாக!
நாயன்மார் வரலாறு - 20 குங்கிலியக் கலயனார் 06.03.2024 12:04
அரனார் திருவிடத்தில் அன்பு பொருந்தி அழகு செழிக்க குங்கிலிய சாம்பிராணி சேவையில் ஈடுபட்ட திருக்கடவூர் கலயனார் புகழ் ஓங்குக!
2-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - தக்ஷினேஸ்வர கோயில்கள் 06.03.2024 18:28
இறை நினைப்பில் தன்னை இழக்கும் மானுட அனுபவம் அன்னையின் அரவணைப்பிலேதான் சாத்தியம்... பவதாரிணியின் திருவிளையாடல் நிகழ்ந்த ஆனந்த நிக்கேதனமாய் தக்ஷினேஸ்வரம் விளங்குவதை அழகுற விளக்குகிறார் ம-.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -1 - முன்னுரை 03.03.2024 16:12
நம் கால ஞானாசிரியராக, மண்ணுலக உயிர்களை தன்னுயிராய் பேணி வாழ்ந்ததோடு நூறாண்டுகளை கடந்து மக்கள் சேவையே மகேசன் சேவையாய் கருதும் ஒரு மகத்தான ஆன்மீக நிலையம் - உலகெங்கும் அமைய ஆதர்சமாய் இருந்த மகான் - ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அந்த மகானுபாவரின் திவ்ய சரிதம் அறிவது ஆனந்தம் - அவர் தம் திருவாய் மொழி உணர்வது பேரானந்தம் - அந்த பேறு பெற்றோர் பாக்கியசாலிகளே - அந்த மகானின் திருமொழிகளை மானுடமும் நாமும் தழைக்க நல்கிய ந...
நாயன்மார் வரலாறு -19-கண்ணப்ப நாயனார் 28.02.2024 35:24
அரனார் அருள் நோக்கில் ஆண்டான், அடிமை என்ற பேதம் உண்டோ? அன்பிற்கே அடிமை அவர். மனம் கொண்டோரின் மார்க்கம் அவர்..அம்பலத்தரசு அருள் வழி ஆடுவது... பொருள் வழியோ... மறை வழியோ அன்று... திண்ணனாரின் திருவுள்ளப்பேறு தேடி அடைவதா... அண்ணலே நாடி அருள்வதா?
நாயன்மார் வரலாறு-18- ஏனாதிநாத நாயனார் 17.02.2024 10:09
ஈசன் பால் அன்பு கொண்டு திருநீறு அணிந்தோரும் திருவருட்செல்வரே, தன்னையே ஈந்தாலும், தளர்வல்ல, திருப்பணியே!
நாயன்மார் வரலாறு - 17- எறிபத்த நாயனார் 09.02.2024 23:08
சிவத்தொண்டு கெட்டால், மழு வீசும் மறவர் - மத யானை மடமைக்கும் தலை ஈயும் புகழ்ச் சோழர் - மன்னர் மாண்பு காக்க தன்னை மாய்க்கத் துணியும் சிவநேசர் - அண்ணலின் அருள் விளையாடலின் அழகு புலப்படும் ஞானம் வாய்க்குமா எளிதில்!?
நாயன்மார் வரலாறு-16- அமர்நீதி நாயனார் 02.02.2024 13:08
கோவணக் கள்வராய் சிவபெருமான்... களவு வேடம் அறியா கடையவனாய் அமர்நீதி... ஆலவாயன் ஆட்கொண்ட வகை உணர்வோம் நாம்!
நாயன்மார் வரலாறு-15 - விறல்மிண்ட நாயனார் 27.12.2023 12:39
அடியார்களை அவமதிக்கும் திருவாரூர் தலம் சேர்ந்தோரின் கால்களை வெட்டும் பக்தியை எங்கு காணக்கூடும்!?
நாயன்மார் வரலாறு -14-மெய்ப்பொருள் நாயனார் 25.12.2023 11:36
திரு நீறு அணிந்த அடியாரும் மெய்ப்பொருளே! சிவ வடிவே என்ற மனப்பக்குவம் ஏட்டளவே சாத்தியம் என்போம்... இந்த பெருமகனாருக்கோ!?
நாயன்மார் வரலாறு -13-இளையான்குடி மாற நாயனார் 28.10.2023 11:43
ஏழ்மையிலும் சிவத்தொண்டு சாத்தியமா? கேள்வி எழுப்புவதே எம்பெருமானாய் இருந்தால்...
நாயன்மார் வரலாறு - 12 - இயற்பகை நாயனார் 17.10.2023 16:44
சிவனடியார் சித்தம் எதுவாயினும் தந்திடும் பித்தராய்... இயற்பகை நாயனார்... சிவனாரின் சிறு விளையாடல்களுக்கு வரம்புண்டோ? வழக்குமுண்டோ?
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos