Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episodes

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Dec 24, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Vijay-ஐ வைத்து Amit shah கணக்கு, க்ளிக்காகுமா Bihar Formula? | Elangovan Explains 18.11.2025

பீகாரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற NDA. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த வியூகம் வகுத்துள்ளார் அமித் ஷா. விஜய் பிரிக்கும் வாக்குகளை வைத்து சாதக கணக்கு. இதற்கு பதிலடியாக கமலை வைத்து கணக்குகளை போடும் மு.க ஸ்டாலின். இதில் முக்கியமாக காங்கிரஸ் தோல்வியை வைத்து பாசிட்டிவ் கணக்கும் போடுகிறார்.

ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explains 13.11.2025

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். மத்ததை நீங்கள் பாருங்கள் என மாஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. ஒரு தொகுதிக்கு '15' என, சுமார் '4000 வைட்டமின் ப' பர்சேஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மறுபக்கம், ராமதாசுடன் எடப்பாடியும், அன்புமணியுடன் பாஜகவும் கூட்டணி பேசி வருகின்றனர். அப்பா-மகன் பிரிந்திருந்தாலும் இந்த கோட்டாவில் சீட்டு ஒதுக்கி, இதே கூட்டணியில் தொடர வைக்க திட்டம் ....

Vijay-யிடம், Rahul டீம் டீல்? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains 12.11.2025

விஜய்யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தென்னிந்தியா முழுக்க மீண்டும் ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்குள்ள சீனியர்கள் டீம், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விஜய்க்கும் ஒரு தேசிய கட்சி ஆதரவு என்பது, அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றும், தேர்தல் நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் சப்போர்ட்டாக இருக்கும் என்றும், டீல் பேசி வருகின்றனர். எந்த முடிவும் சொல்ல...

'SIR'-க்கு எதிராக Fire Mode-ல் PTR, Amit shah-வின் நியூ டாஸ்க்! | Elangovan Explains 11.11.2025

'SIR' இதற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இந்தியா கூட்டணி. இதில் SIR ஆபத்து என புள்ளிவிவரங்களை அடுக்கிய PTR. இவையெல்லாவற்றிலும், ஸ்டாலினுக்கு எட்டு லாபக் கணக்கு உள்ளது. அதே நேரம், விருந்தும், வகுப்பும் எடுத்துள்ளார் எ.வ வேலு. இதை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல திமுக திட்டம். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், நிர்மலா சீதாராமனுக்கு சில அசைன்மென்ட்களை கொடுத்துள்ளார் அமித...

Duraimurugan-க்கு ஜாக்பாட்...Vijay-க்கு எதிராக Udhayanidhi மூவ்! | Elangovan Explains 10.11.2025

'STALIN 7' முன்பு எடப்பாடி, விஜய், SIR, சீனியர்கள் என நிறைய சவால்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் முறியடிக்க கூட்டணியை அனுசரிப்பது, சீனியர்களுக்கு முக்கியத்துவம் என புது ரூட் எடுத்திருக்கும் மு.க ஸ்டாலின். இதில் துரைமுருகனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதே நேரம், மிசா வரலாற்றை வைத்து எம்ஜிஆரை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் உதயநிதி. இதற்கு அதிமுக இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார். அதேநேரம் எடப்பாடி...

'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி & சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elangovan Explains 08.11.2025

'ஏன் எடப்பாடி வேண்டாம்' என விஜய் முடிவெடுத்ததற்கு பின்னால் 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அதேநேரம், 'டெல்லி பேச்சை நம்பி ரொம்ப வெயிட் பண்ணிட்டோமே' என எடப்பாடி சைடில் இருந்து புலம்பல் சத்தம் ஆனாலும் புது ரூட், மாற்றத்தை கொடுக்கும் என நம்புகிறார்கள் அதிமுகவினர். அடுத்து, மிசா வரலாற்றின் மூலம் ஆதவ் அர்ஜூனாவுக்கு, அரசியல் அடி கொடுத்த மு.க ஸ்டாலின். தன் ரூட்டில் சீமான். 'தெலுங்கர்களுக்க...

எடப்பாடிக்கு, 'கொடநாடு திகில்' காட்டும் செங்கோட்டையன் & டிடிவி! | Elangovan Explains 07.11.2025

மீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில் இல்லை கோப்புகள், போயஸ் கார்டனில் இருந்தது. படித்துவிட்டு கிழித்து விட்டோம்' என்க...

Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains 06.11.2025

ராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொடங்கிய S.I.R பணிகள். அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் ஆறரை கோடி வாக்காளர்களை சந்திக்க இயலுமா? என அச்சம். தொடர்ச்சியாக விஜய்-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து மாஜிக்கள் சிலர், எடப்பாடியிடம் கம்பளைன்ட். மாற்று ரூட் எடுக்கும...

EPS கனவை நொறுக்கிய Vijay, Stalin-க்கு ஷாக்! | Elangovan Explains 05.11.2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை ஒட்டி , மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, 38 நாட்களுக்குப் பிறகு, பதில் கொடுத்துள்ளார் விஜய். TVK-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மூலம் TVK Vs DMK என களத்தை கட்டமைக்க, ரூட் போட்டுள்ளனர். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதன் மூலம், எடப்பாடியின் கூட்டணி கனவுக்கு, பெரிய லாக் போட்டுள்ளனர். அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் என எடப்பாடிக்கு எதிரானவர்களின் நகர்வு...

'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan Explains 04.11.2025

திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளது. இன்னொரு பக்கம், மீண்டும் துணை பொது செயலாளர் ஆகியிருக்கும்...

மச்சானால் EPS-க்கு நெருக்கடி? & Stalin-க்கு உதவும் TTV! | Elangovan Explains 03.11.2025

ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. கோவை பகீர் சம்பவம். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் எடப்பாடி சுற்றி ஒரு ஆறு நெருக்கடிகள் உள்ளன. டிடிவி தினகரன் தரும் நெருக்கடி, தனியாக களமாடும் விஜய் என இவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கும் மு.க ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகவே சென்ட்ரலுக்கு எதிராக எஸ் ஐ ஆர் விவகாரத்தை கையில் எடுத்து...

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains 01.11.2025

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் அடுத்த நான்கு அடிகள், எடப்பாடிக்கு பலமான லாக்காக இருக்கும் என்கிறார்கள். சுதாரித்தவர...

செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains 31.10.2025

கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு முக்கியமாக தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும்' என சில புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர்....

நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains 30.10.2025

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள மூவர். ஓபிஎஸ், டிடிவி-யுடன் ஓபனாகவே கைகோர்த்த செங்கோட்டையன். திடீரென எதிர் முகாமில் இணைந்து, சபதம் போட்டத...

Karur மக்களிடம் Vijay கொடுத்த வாக்குறுதி! Mamallapuram மினிட்ஸ்! | Elangovan Explains 27.10.2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, 30 நாட்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்தார் விஜய்.பாதிக்கப்பட்டவர்களை, அவர்களிடத்துக்கே நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்தில் அழைத்து வந்து ஆறுதல் கொடுப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில், கரூர் மக்களிடம் சில வாக்குறுதிகளை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கபடி போட்டியில் தங்கம் வ...

BJP-க்காக, RSS கொடுத்த பட்டியல், மிரண்ட EPS? | Elangovan Explains 25.10.2025

NDA கூட்டணியை வலுவாக்க பாஜக தீவிரம். அந்த வகையில் சமீபத்தில் அன்புமணியை சந்தித்து டீல் பேசியுள்ளனர். 'அவர் 50 தொகுதிகள் வரை கேட்க, இவர்களோ 27 தொகுதிகள் வரை ஓகே' என பேச, இப்படியாக முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதில் அன்புமணி கேட்ட ஒன்று, பாஜகவை யோசிக்க வைத்துள்ளது. பாஜக வைத்த ஒரு டிமாண்ட், அன்புமணியை யோசிக்க வைத்துள்ளது. இன்னொரு பக்கம், பாஜக வெல்லும் தொகுதிகளாக, ஆர்.எஸ்.எஸ் ஒ...

மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin? | Elangovan Explains 24.10.2025

நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக...

Silent Mode-ல் Vijay, EPS-ன் 3 வெடி, Stalin ஷாக்? | Elangovan Explains 23.10.2025

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது' என விமர்சிக்கிறார் எடப்பாடி. முக்கியமாக, டெல்டா மாவட்டங்களுக்கு பயணித்து திமுக அரசை அட்டாக் செய்துள்ளார். பின்னணியில், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' எனும் அரசியல் கணக்கும் உள்ளது....

Bihar Election: Amit shah-க்கு PK சர்ப்ரைஸ், Stalin Alert! | Elangovan Explains 22.10.2025

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் தொடர் மழை. இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், பீகார் அரசியல் புயல் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அங்கு NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. ராகுல், தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு, செக் வைக்கக் கூடிய வகையில் யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களிலிருந்து வேட்பாளர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு...

Vijay-ஐ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explainns 18.10.2025

தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் அமித்ஷா. விஜய் குறித்த ரிப்போர்ட்ஸ்கள் டெல்லிக்கு பறந்துள்ளது. அதை வைத்து விஜய்க்கு உதவுங்கள் என அமித்ஷா அசைன்மென்ட். இதில் NDA கூட்டணியில் TVK சேர்ந்தால் ஸ்டாலின் சந்திக்கும் 10 பாதகங்கள். தீபாவளி அர...

Sasikala-வின் சபதம் , EPS ஆக்‌ஷன் , 'ADMK 54' வெடி! | Elangovan Explains 18.10.2025

அதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54 வது ஆண்டில் அதிமுக எப்படி உள்ளது? திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் தர்மயுத்தம் தொடங்கினார் என்றால் இன...

Stalin கையில் Candidates list, 50 பெண் வேட்பாளர்கள்? Diwali பரிசு! | Elangovan Explains 16.10.2025

'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார். முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள், ஈர்க்க்கூடிய வகையிலான பரப்புரை, மிக முக்கியமாக வருகின்ற தேர்தலில் 50 பெண் வேட்பாளர்கள் என லிஸ்ட் தயாரிக்க கட்டளையிட்டுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.

Karur Stampede: 'V'ijay-க்கு பதில் EPS' Stalin விரும்பும் கேம்! | Elangovan Explains 15.10.2025

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் Vs எதிர்கட்சி தலைவர் எடப்பாடி க. பழனிசாமி இடையே காரசாரமான விவாதம். 'கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் துயரத்துக்கு காரணம்' என்கிற வகையில் விளக்கம் கொடுப்பதாக இருந்தது மு.க ஸ்டாலின் பேச்சு. 'போதிய பாதுகாப்பு தரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என விமர...

Vijay-யை வைத்து, EPS-க்கு பயம் காட்டும் BJP? Bihar அனல்! | Elangovan Explains 14.10.2025

பீகார் தேர்தலில் வெற்றிபெற அமித் ஷா-நிதிஷ் டீம் Vs ராகுல்- தேஜஸ்வி டீம்க்கிடையே போட்டா போட்டி. மாறி மாறி 8 வியூகங்களை வகுத்துள்ளனர். இன்னொரு பக்கம் தலா 101 தொகுதிகளை, BJP & JD(U) பிரித்துக் கொண்டுள்ளனர். பாஜக-வின் இந்த 'Bihar Formula', எடப்பாடிக்கு பயம் காட்டுகிறதா? Vijay கூட்டணிக்கு வந்தால் வெற்றி நிச்சயம் என நம்பினாலும், இன்னொருபக்கம் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துவிடுமோ...அதனால் பெர...

BJP பொறியில் Vijay? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains 13.10.2025

'கரூர் கூட்ட நெரிசல்' சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர்களை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி டீம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதை கொண்டாடி வருகிறது தவெக. அதே நேரத்தில் சட்டரீதியாக இதை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்கக் தொடங்கியிருக்கும் திமுக. இன்னொரு பக்கம், தவெகவை, என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக. அதீத ஆர்வம் கா...

Listen to the The Political Pulse | Hello vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.