Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Zinnia: விண்வெளியில் அபூர்வ பூவை வளர்த்த NASA - எப்படி சாத்தியம்? 29.07.2023 2:16
இவை அனைத்துமே ஒரு வகையில், பூமியை தவிர்த்து இந்த பால் அண்டத்தில் மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ தகுதிகள் இருக்கிறதா, அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதற்கான முயற்சி தான் -Newssensetn
Kalavantin Durg: ஆபத்தான மலையில் டிரெக்கிங் செல்ல விரும்பும் ஆனந்த் மஹிந்திரா - ஏன்? 29.07.2023 2:34
வழிநெடுக அடர்ந்த தாவரங்கள், சீரற்ற வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை கடந்து மலையின் உச்சியை அடைவது சாதனை தான். -Newssensetn
இலங்கை : செயற்கை கடற்கரையை காண குவியும் மக்கள் - எப்படி உருவானது தெரியுமா? 28.07.2023 2:19
இந்த கடற்கரைக்குள் செல்லும் வழியில் உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பாரிய கற்களைக் கொண்டு, கடலுக்கு நடுபகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், செயற்கை கடலில் பெரிய அலைகள் காணப்படுவதில்லை. -Newssensetn
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா? 27.07.2023 2:54
அருணாச்சல பிரதேசத்தின் லாங்டிங் என்ற இடத்தில் வசிக்கும் வான்சோ பழங்குடியின மக்கள் கொண்டாடும் தாஹ் தாவான் விழாவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை -Newssensetn
அரிசி ஏற்றுமதியை தடை செய்த இந்தியா; ஏன்? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு? | Explained 27.07.2023 3:41
அனைத்து உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. எனவே இந்த முடிவு அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. -Newssensetn
நேபாளம்: மனித உயிரை காவு வாங்கும் அரிய வகை தேன்! இதனை Mad Honey என்று அழைக்க என்ன காரணம்? 26.07.2023 2:53
அளவு அதிகமாக ஆக தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, சித்த பிரமை ஏற்படும். அதையும் விட அதிக அளவில் இந்த தேனை சாப்பிட்டால் சில சமயங்களில் இதய பிரச்சினை, அல்லது மரணம் வரை இது நம்மை கொண்டு சென்றுவிடும். -Newssensetn
என்னது Spaceக்கு மீன் அனுப்பப்பட்டதா? மனிதனுக்கு முன் விண்வெளிக்கு சென்ற விலங்குகள்! 25.07.2023 3:10
மனிதனே தயங்கிய, பயந்த இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு இச்சோதனை முயற்சியில் சாதனை படைத்த விலங்குகள் என்னென்ன? இந்த பதிவில்... -Newssensetn
உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா? 25.07.2023 3:52
கேட்ஜெட் அணுகுண்டு வெடித்த போது சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் அளவுக்கு வெப்பம் வெளியானது. ஒளிரும் கண்ணாடி துகள் போன்ற பொருட்கள் மழையாகப் பொழிந்தன. இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன.
Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன? 24.07.2023 3:01
ரஷ்யாவில் வாக்னர் குழு கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சி ஐ ஏ அமைப்பு முன்பே அறிந்திருந்ததாகவும் வில்லியம் பர்ன்ஸ்ம் கூறியுள்ளார். இப்போது ரஷ்ய மேட்டுக்குடியினர் விளாதிமிர் புதினின் திறனை சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர். -Newssensetn
இந்தியாவின் சிக்கலான கிராமம்: மகாராஷ்டிராவில் இருக்கும் கர்நாடக மக்களின் கதை! 24.07.2023 1:46
இந்த கிராமத்துக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் மகாராஷ்டிரா அரசு வழங்குகிறது. இதற்கான தொகையை கர்நாடக அரசு வழங்கிவிடும். 2011ம் ஆண்டு திடீரென ஒருநாள் மகாராஷ்டிரா அரசு மின்சாரத்தை நிறுத்தியது... -Newssensetn
Sealand: நடுக்கடலில் இருக்கும் உலகின் மிக சிறிய நாடு பற்றி தெரியுமா? மக்கள் தொகை 3 தான்! 24.07.2023 2:40
தனியான கரன்சி, கொடி மற்றும் அரசு இருந்தாலும் சீலாண்ட் இறையாண்மை கொண்ட தனி நாடு எனக் கூறிவிட முடியாது. -Newssensetn
கர்நாடகா: கூர்க் முதல் பதாமி வரை - மழைக்காலத்தில் செல்வதற்கு சிறந்த இடங்கள்! 23.07.2023 2:01
இந்த மழைக்காலத்தில் செழிப்பான மலைகள், பரபரப்பான நகரங்கள் முதல் பழமையான கோவில்கள் வரை நாம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். -Newssensetn
இந்த ஊரே library தான்! இந்தியாவின் புத்தக கிராமம் பற்றி தெரியுமா? 23.07.2023 1:35
யார் வேண்டுமானாலும் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுக்கலாம், படிக்கலாம், மீண்டும் வைக்கலாம். கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தக கிராமத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். -Newssensetn
மணிப்பூர்: பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் மக்களும் என்ன பகை - விரிவான தகவல்! 23.07.2023 4:22
ஏற்கெனவே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் மேலேங்கியிருக்கும் மெய்தேய் மக்கள் மலைகளில் வாழ அனுமதிக்கப்பட்டால் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். எங்களது வாழ்விடங்கள் பறிக்கப்படும் என பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனர். -Newssensetn
பைக்காரா : ஊட்டியில் இருக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி குறித்து தெரியுமா? 22.07.2023 1:47
பார்வையாளர்கள் பைக்காரா ஏரியில் படகுப் பயணம் மேற்கொள்ளலாம், அருவியின் உச்சிக்கு மலையேற்றம் செய்யலாம். முகாம்கள் அமைத்து இங்கு தங்கலாம். உங்கள் குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும். -Newssensetn
சந்திராயன் 3: ஆதித்யா டு சுக்ரயான் - இஸ்ரோவின் 5 மிகப் பெரிய திட்டங்கள் பற்றி தெரியுமா? 22.07.2023 3:19
இஸ்ரோவின் மாபெரும் இலக்கு சந்திராயன் 3 அல்ல. இது முதல் அடிதான். இஸ்ரோவின் செக் லிஸ்டில் இன்னும் 5 மிகப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன. -Newssensetn
"ரோம் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்" - இந்த சம்பவம் நடந்தது உண்மையா? 22.07.2023 7:06
ரோமானிய மன்னனான நீரோ தானே ரோம் நகருக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவரது தாய், மனைவிகளை கொலை செய்ததாகவும், ரோமானிய பேரரசை பாதாளத்தில் தள்ளியதாகவும் வரலாற்றில் கொடூரமாக நினைவுக் கூறப்படும் நீரோ யார் தெரியுமா? -Newssensetn
இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்? 21.07.2023 3:27
Dark Tourism என்ற கான்செப்ட் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும், இதனை பார்க்க, அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆழமான நீண்ட வரலாற்றைக் கொண்ட டார்க் டூரிசம் இந்தியாவில் எங்கு இருக்கிறது. -Newssensetn
கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்! 21.07.2023 3:43
அவரவர் பட்ஜட்டுக்கு ஏற்றது போல உள்ளூரிலோ பக்கத்து மாநிலங்கள் வரைக் கூட சென்று வருவோம். வெளிநாட்டு பயணம் கோடீஸ்வரர்களுக்கானது என ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் 50000 ரூபாய் இருந்தாலே நம்மால் சென்றுவரக் கூடிய இடங்களும் இருக்கின்றன. -Newssensetn
மணிப்பூர்: பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் கும்பல் - என்ன நடக்கிறது அங்கே? 20.07.2023 3:06
குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. -Newssensetn
10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது? 20.07.2023 4:19
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் விழுந்தன. -Newssensetn
Zealandia : 375 ஆண்டுகளுக்கு பின் உலகின் 8வது கண்டம் கண்டுபிடிப்பு - எங்கே இருக்கிறது? 20.07.2023 1:53
உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சுமார் 375 ஆண்டுகள் எடுத்துள்ளது. -Newssensetn
உம்மன் சாண்டி: "மக்களுடன் மக்களாக வாழ்ந்தவர்" தலைமுறைகள் கடந்த தலைவரின் கதை! 19.07.2023 2:28
1970 முதல் 2021 வரை எல்லா தேர்தல்களிலும் புதுப்பள்ளி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். 18,728 நாட்கள் ஒரே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அரசியல்வாதி இந்தியாவிலேயே வேறு யாருமில்லை! -Newssensetn
பாம்பு தோட்டம் பார்க்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - ஒரே மரத்தில் இத்தனை பாம்புகளா? 19.07.2023 1:57
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா? -Newssensetn
Kasar Devi : சாகசப் பிரியர்களின் சொர்க்கமாக இருக்கும் இமயமலை கிராமம் பற்றி தெரியுமா? 18.07.2023 1:24
அழகான சிறிய குக்கிராமமாக இருந்தாலும் ஆன்மீக வசீகரம் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. இந்த விசித்திரமான கிராமம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. -Newssensetn
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.