Mansur

Quran Circle Tamil

Religion TA ↓ 101 episodes

தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்

Author

Mansur

Category

Religion

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Mar 20, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 1 06.05.2021

 எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,  சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.  அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.  கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).  இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள். (அல்குர்ஆன்: 80:38-42)

அல்கவ்ஸர் எனும் நீர் தடாகம் 05.05.2021

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

இரண்டாம் ஸூர் ஊதப்படும் போது 04.05.2021

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள். [அல்குர்ஆன் 78:18] எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?" என்று கேட்பார்கள். [அல்குர்ஆன் 36:52] ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர்விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். [அல்குர்ஆன் 23:101]

முதல் ஸூர் ஊதப்படும் போது 03.05.2021

ஸூர் ஊதப்படும் அந்நாள் மிகவும் சிரமமான நாள்.  [அல்குர்ஆன் 74:8-9] அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும் அதுவே வெளிப்படும் நாள். [அல்குர்ஆன் 50:42]

தஸ்பீஹ் தொழுகை ஒரு விளக்கம் 03.05.2021

‎(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி ‎உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் ‎‎(பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் ‎வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎ அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎ நூல்: நஸாயீ

பித்அத் மற்றும் நபில் - என்ன வேறுபாடு? 02.05.2021

லைலத்துல் கத்ர் அமல்கள் என்ற பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கான விளக்கம். 1. பித்அத் என்றல் என்ன? 2. சுன்னத்தான வணக்கங்கள் என்றல் என்ன? 3. நபிலான வணக்கங்கள் என்றல் என்ன? 4. நபிலுக்கும் பித்அத்திற்கும் என்ன வேறுபாடு? 5. ஒரே தொழுகையில் ஒரே சூராவை இரண்டுமுறை ஓதலாமா? 6. ஒரே ரக்அத்தில் ஒரே சூராவை பலமுறை ஓதலாமா?  

மறுமை நாள் 01.05.2021

அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம். (திருக்குர்ஆன் 70:6,7)

லைலத்துல் கத்ர் அமல்கள் 30.04.2021

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்:  எவர்நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) [நூல்: புகாரி 35]

லைலத்துல் கத்ர் 29.04.2021

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏ கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். (அல்குர்ஆன் : 97:3)

கப்ருடைய காட்சிகள் - பகுதி 2 28.04.2021

ஈமான் கொண்டவருக்கு கபுரில் கிடைக்கும் பரிசுகள்! நிராகரிப்பாளருக்கு கபுரில் கிடைக்கும் தண்டனைகள்! எந்த செயல்களுக்காக கபுரில் வேதனை செய்யப்படும்?  கபுருடைய வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?

கப்ருடைய காட்சிகள் - பகுதி 1 27.04.2021

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5503

தீயவர்களின் மரணம் 26.04.2021

அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்? அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்துவதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான். [அல்குர்ஆன் 47:27-28]

நல்லோர்களின் மரணம் 25.04.2021

உயிரை கைப்பற்றும் வானவர் அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார்.

ஜகாத்தை உறவினர்களுக்கு கொடுக்கலாமா? 24.04.2021

தர்மங்களை உறவினர்களுக்கு வழங்குவதில் இரண்டு கூலி உள்ளது  நூல் : புகாரி 1466

ஜகாத் யாருக்கு கொடுக்க வேண்டும்? 24.04.2021

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். [அல்குர்ஆன் 9:60]

திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 2 21.04.2021

நிறுத்தல் குறிகள் மக்கீ மதனீ வசனங்களின் எண்கள் இவையெல்லாம் பிற்காலத்தில் குர்ஆனில் சேர்க்கப்பட்டவை.

திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 1 20.04.2021

திருக்குர்ஆனை 30 ஜுஸ்வுகளாக, 7 மன்ஜில்களாக, 558 ருகூவுகளாக பிரித்ததற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.  ஸஜ்தா செய்யவேண்டிய ஆயத்துகள் உண்மையில் எத்தனை?

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 2 19.04.2021

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள Topkapi Palace அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 1 18.04.2021

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். [அல்குர்ஆன் 29:49]

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு 17.04.2021

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்-குர்ஆன் 2:185)

அல்லாஹ்விற்குரிய நோன்பில் மனத்தூய்மை 16.04.2021

அல்லாஹ் கூறுகிறான், நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! “அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களான – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அல்குர்ஆன் 6:162, 163)

பாவமன்னிப்பிற்கான மாதம் 15.04.2021

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேர...

அல்லாஹ்வின் சிம்மாசனம் 14.04.2021

அல்லாஹ்வின் இருக்கை வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும் (அல்-குர்ஆன் 2:255)

அர்ஷின் நிழல் பெரும் ஏழு நபர்கள் 13.04.2021

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதிமிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 6. அ...

ரமலான் இரவுத் தொழுகை சட்டங்கள் 12.04.2021

யார் இறை நம்பிக்கையுடனும், நன்மை நாடியும் ரமலானில் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).

Listen to the Quran Circle Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.