Mansur
Quran Circle Tamil
தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்] 14.11.2021 8:16
குர்ஆனின் பார்வையில் ஆயத் எதுவெல்லாம் ஆயத்? எதுவெல்லாம் ஆயத் இல்லை?
வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்] 14.11.2021 6:38
ஆயா என்றால் என்ன? ஆயாவை ‘வசனம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது? ஆயாவை வாக்கியம் என்றோ அல்லது வரி என்றோ ஏன் மொழிபெயர்க்க முடியாது? ஒவ்வொரு ஆயாவும் ஒரு வர்த்தயை விடவோ அல்லது ஒரு வாக்கியத்தை விடவோ சிறியதாக இருக்கலாம் அல்லது பல ஆயத்துக்கள் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம் அல்லது பல வாக்கியங்கள் சேர்ந்தது கூட ஒரு ஆயத்தாக இருக்கலாம்.
வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா] 07.11.2021 9:58
சூரா என்றால் என்ன? · குர்ஆன் 114 சூராக்களால் ஆனது · சூராவை ‘அத்தியாயம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது? · ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் மீண்டும் மீண்டும் வராது. · ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் முந்தைய அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். · சூராக்களைப் போல் அல்லாமல் அத்தியாயங்கள் ஒரு காலவரிசை வரிசையில் அமைந்திருக்கும். · அத்தியாயங்களின் வரிச...
வியத்தகு குர்ஆன் - பகுதி 1 [இலக்கியம்] 07.11.2021 10:01
அல்குர்ஆன் ஒரு அழகிய இலக்கியம்
வியத்தகு குர்ஆன் - தொடர் அறிமுகம் 01.11.2021 5:01
குர்ஆனுடைய மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது உங்களுக்குள் பல கேள்விகள் எழும் • ஏன் குர்ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட செய்திகள் திரும்பத் திரும்ப மற்ற இடங்களில் வருகிறது? • ஏன் குர்ஆன் ஒரு காலவரிசைப்படி இல்லை? • ஏன் சில அத்தியாயங்கள் சிறியதாகவும், சில நீளமாகவும் உள்ளன? • அத்தியாயங்களும் ஏன் ஒரு பொருள் வரிசைப்படி இல்லை? • குர்ஆனில் சொல்லப்படும் கதைகளும் கூட அங்கொன்றும் இங்கொன்றும...
அல்லாஹ்விற்காக அன்பு காட்டுதல் 31.10.2021 16:00
அல்லாஹ்வின் அடியார்களில் சில மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ...
இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள் 28.08.2021 17:32
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள...
முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு 16.08.2021 14:56
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம்
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 2 10.08.2021 18:01
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். நூல்: ஹாகிம் (4287)
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 1 10.08.2021 11:25
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 9:36)
குர்பானியின் சட்டங்கள் - 5 19.07.2021 11:20
-கூட்டுக் குர்பானி -எப்போது அறுக்க வேண்டும்? -குர்பானி கொடுப்பதை குடும்பத்தினர் பார்க்கவேண்டுமா? -பிராணியை அறுப்பதற்கு முன்பு என்ன கூற வேண்டும்? -பெருநாள் தினம் மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள் -எப்படி பங்கிட வேண்டும்?
பெருநாள் தொழுகை சட்டங்கள் - 2 18.07.2021 13:27
-ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல் -தொழுகைக்கு முன் சாப்பிடுதல் -முன் பின் சுன்னத்துகள் இல்லை -பாங்கு இகாமத் இல்லை -மிம்பர் இல்லை -பெருநாள் தொழுகை முறை -சொற்பொழிவு -தக்பீரும் துஆவும்
பெருநாள் தொழுகை சட்டங்கள் - 1 18.07.2021 7:27
-பெருநாள் தொழுகையின் நேரம் எது? -பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? -பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டுமா?
அரஃபா தின நோன்பு 18.07.2021 5:38
அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’ அறிவிப்பாளர்: அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் 2151
அரஃபா தினம் 17.07.2021 8:01
...இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். [அல்குர்ஆன் 5:3]
துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகள் 11.07.2021 8:40
“ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும...
குர்பானியின் சட்டங்கள் - 4 10.07.2021 5:59
நோயுள்ள பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா? குர்பானி பிராணியின் வயது வரம்பு என்ன?
குர்பானியின் சட்டங்கள் - 3 07.07.2021 6:02
குர்பானிப் பிராணிகள் என்னென்ன? கோழியை குர்பானி கொடுக்கலாமா? அகீகா என்றால் என்ன? அகீகா எப்போது கொடுக்க வேண்டும்?
குர்பானியின் சட்டங்கள் - 2 04.07.2021 5:35
குர்பானி கொடுப்பது யார் மீது கடமை? கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா? குர்பானி கொடுக்க நினைப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
குர்பானியின் சட்டங்கள் - 1 04.07.2021 10:33
குர்பானி ஏன் கொடுக்க வேண்டும்? என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்ப...
விடைபெறும் ரமலானே! 11.05.2021 15:39
உன் வரவால் மனம் மகிழ்ந்தோம்! உன் பிரிவால் உளம் நெகிழ்ந்தோம்!
மூன்று வகையினர் - பகுதி 2 10.05.2021 17:23
பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். [அல்குர்ஆன் 56:46] நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள். [அல்குர்ஆன் 56:52] அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள். [அல்குர்ஆன் 56:54] தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து. [அல்குர்ஆன் 56:56]
மூன்று வகையினர் - பகுதி 1 09.05.2021 15:31
(மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே. [அல்குர்ஆன் 56:10] அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர். [அல்குர்ஆன் 56:11] இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். [அல்குர்ஆன் 56:12]
அல்லாஹ்வின் வருகை 08.05.2021 17:09
வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, [அல்குர்ஆன் 89:22] வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தமக்கு மேலே எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். [அல்குர்ஆன் 69:17]
மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 2 07.05.2021 19:23
மஹ்ஷரில் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்தவர்களின் நிலை? கொலையாளிகளின் நிலை? நீதம் செலுத்தாதவர்களின் நிலை? வட்டிக்காரர்களின் நிலை? யாசகம் கேட்பவர்களின் நிலை? மேசாடி செய்பவர்களின் நிலை?
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.