Ezhuna
எழுநா
2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
கூட்டு ஒப்பந்தங்களும் வேதனத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி 01.07.2022 14:23
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமொன்றின் ஊடாக வேதனங்களை நிர்ணயிப்பது தோட்டத்தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய அபிவிருத்தியாகும். தோட்டத்தொழிலாளர் பொதுவாகவே வேலைவழங்கப்படும் நாட்களில் முழுமையாக வேலைக்குச் சமூகமளிப்பதில்லை. அவர்களது வேலைவருகையானது அவர்களது தேகநலன், குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் சுகயீனங்கள் உட்பட வேறு...
பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன், சட்டத்தரணி, சிரேஷ்ட ஊடகவியலாளர் 30.06.2022 8:21
உலக வரலாற்றின் ஒரு கட்டத்தில் உலகில் சாம்ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு ஜனநாயக அரசாங்கங்கள் உருவாகிய போதும் ஆண்டான்- அடிமைத் தன்மை முற்றிலும் ஒழிந்து போய் விடவில்லை . ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு சோரம் போனதேயன்றி அடிமட்ட விளிம்புநிலை மக்களை அது பாதுகாக்க எத்தனிக்கவில்லை. இலங்கைப் பெருந்தோட்டத் துறையை பொறுத்தவரை ஒவ்வொரு தோட்டமும் ஒரு அதிகார அலகாக உருவாக்கப்பட்டிருந்தது. எங்கேயோ தொலை தூரத்தில...
அடையாள மீட்பைத் தேடும் ஆதிக்குடிகளின் குரல் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 29.06.2022 8:57
இலங்கையின் கிழக்கிலங்கைக் கரையோரங்களில் வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகளின் நாட்டாரியலுள் ஆழ உட்புகாத ஆய்வாளர்களினாலும், ஏனைய சமூகங்களினாலும், நாம் கரையோர வேடர்கள் அல்லது கடல் வேடுவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறோம். ஆனால் இவ்வாறு தொழில் ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ அழைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கிழக்கிலங்கையில் வாழ்கின்ற எமக்கு பெரும்பாலான தொல்லை தருபவர்கள் தமிழர்களாகவே இ...
மருத்துவர் ஜோன் ஸ்கடர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 28.06.2022 8:54
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்று அனைத்து வசதிகளும் நிறைந்த நகரத்தை விட்டு, பெற்றோரை உடன்பிறந்தோரைப் பிரிந்து, எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு, ஆசியநாட்டுக்கு வருகை தந்து சேவையாற்றிய அமெரிக்க மருத்துவ மிசனரியினரது பணி போற்றுதற்குரியது. மருத்துவர் ஸ்கடர், திருமதி ஸ்கடர் மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சோதனைகளையும் துன்பங்களையும் இறையன்பின் நிமித்தம் எதிர்கொண்டனர். மருத்த...
வடமாகாணமும் மீனவர் குடித்தொகையும் | வடபுல கடலும் நெருக்கடிகளும் | கலாநிதி சூசை ஆனந்தன் 27.06.2022 5:05
2018 ஆண்டு கணிப்பீடுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் மொத்த மீனவர் குடித்தொகை 7,16 ,040 ஆகும். இது இலங்கையின் மொத்த மீனவர் தொகையில் (26.86%) சதவீதமாகும். மொத்த மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை 5,03,10 ஆகவும், நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தொகை 5,14,70 ஆகவும் காணப்படுகின்றது. பெரும்பாலும் பெண்கள் நேரடியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதில்லை, மீன்பிடிசார்ந்த உப-தொழில்களான பதனிடல், சில்லறை வர்த்தகம் ப...
சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன், சட்டத்தரணி, சிரேஷ்ட ஊடகவியலாளர் 23.06.2022 11:06
மத்திய மலைநாட்டில் மலையகத் தமிழர்களின் வருகையுடன் மலைகள், பள்ளத்தாக்குகள் மட்டம் தட்டப்பட்டு கோப்பிக் கன்றுகள் நாற்று நடப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்காக நடப்பட்ட கன்றுகள் பின்னர் ஆயிரமாக , லட்சமாக வளர்ந்து, பூத்துக்குலுங்கி, காய்த்து கோப்பிக் கொட்டைகளாகி பெரும் வர்த்தகப் பொருளாக உருவாகின. இந்த நாட்டின் ஏனைய குடிமக்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வீட்டில் அது ஒரு குடிசை என்றாலும்கூட சுதந்திரமாக வாழ்ந்த...
பேரறிவாளன் விடுதலை: மாநில சுயாட்சி பற்றிய நீதித்துறையின் பார்வை மாறுகிறதா? | சட்டம் அறி 2 | குருபரன் 21.06.2022 14:04
இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. ஆரம்பத்திலே அது ஒரு பலமான ஒற்றையாட்சி சார்புள்ள ஒரு கூட்டாட்சி என்றவாறாக தான் அந்தப் பார்வை இருந்தது. காரணம் இந்திய உபகண்டத்தின் பிரிவினையின் தாக்கம் கூடுதலாக அரசியலமைப்பு உருவாக்கத்தில் இருந்தது. 1990 களுக்குப் பின்னர் இந்திய அரசியல் மிக அடிப்படையில் ஒரு பிராந்திய...
இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர் 21.06.2022 16:43
1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தக் கட்டுரைத் தொடர் ஆராய்ந்து விளக்குகின்றது.
ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டதன் சட்டப் பின்னணி | சட்டம் அறி 1 | சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 20.06.2022 15:54
ஜூன் 2ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றி வந்த எரோப்ளொட் (Aeroflot Airbus A330-300) ரஷ்ய விமானம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் (Colombo Commercial High Court) கட்டாணை (enjoining order) பிறப்பிக்கப்பட்டதுக்கு அமைய நாட்டை விட்டுச் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை அயர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட செலஸ்ரியல் அவியேசன் (Celestial Aviation) என்ற நிறுவனம் ரஷ்ய அரச விமான சேவைய...
தேயிலையின் பசுமையும், சோர்வின் விளிம்பிலே நின்று உழைக்கும் தோட்டத்தொழிலாளரும் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி 19.06.2022 25:11
இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது. இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று எனப்பாராது வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் பக்கம் செலுத்துவோமாயின் ஏதோ ஒன்று எம்மை உலுக்குவதை உணரலாம். அங...
ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை – ஓர் அறிமுகம் | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 17.06.2022 10:07
“ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை” எனும் இத்தொடர், இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் ஆராயப்போகும் ஒரு தொடராகும். கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவ...
சட்டம் அறி - சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் 16.06.2022 2:46
சமகாலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்களின் சட்டத்தின் தொழிற்பாடு குறித்த அவதானங்கள் 'சட்டம் அறி' என்ற காணொலி தொடரின் ஊடாக வெளிவர உள்ளன. இத்தொடரை சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வழங்குகின்றார். மேலும் பார்வையாளர்களிடம் இருந்து எழக்கூடிய சட்டம் தொடர்பான தெரிந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கும் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக விளக்கமளிப்பார்.
பகுதி 2 – பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 15.06.2022 16:41
இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கைய...
பகுதி 1 – பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 14.06.2022 19:37
இயற்கையுடன் இணைந்து அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பழங்குடிகளின் பண்பாட்டு அசைவுகளில் உணவுமுறைகள் பிரதான இடத்தினை வகிக்கின்றன. இன்றும் இலங்கைத் தீவின் கிழக்குக்கரையில் வசிக்கின்ற பூர்வகுடிகளிடம் காணப்படுகின்ற உணவுமுறைகள், அவற்றில் காணப்படுகின்ற மருத்துவக் குணங்கள், வழிபாட்டுப் பயன்பாடுகள் போன்ற நடைமுறை விளக்கி விபரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யாவரும் இயற்கையின் பி...
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 12.06.2022 8:12
உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் மற்றும் அவரது மனைவி திருமதி ஹரியற் வோட்டர்பரி ஸ்கடர் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது மிசன் பணியை ஆரம்பித்தனர். உலகில் முதன்முதல் மேலைத்தேச மிசனரி மருத்துவமனையைப் பண்டத்தரிப்பிலே ஆரம...
வடபகுதி – கடல்வளம் | வடபுல கடலும் நெருக்கடிகளும் | சூசை ஆனந்தன் 12.06.2022 10:19
1980 களை அடுத்து வந்த காலப்பகுதியில் வடபகுதியில் நிலவிவந்த அசாதாரண அரசியல் நெருக்கடிகள் மீன்பிடித்துறையை மிகமோசமாக பாதித்திருந்தன. இத்துறையில் தங்கி வாழ்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து -மிகமுக்கியமாக இராணுவ நடவடிக்கையின் காரணமாக தமது உடைமைகளை இழந்து – தாம் வாழ்ந்த கிராமங்களையும் விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும், அயற்கிராமங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர வேண்டிய அவல...
தேயும் ஈழத் தமிழ்மொழி | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 09.06.2022 9:16
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்...
சாதிகளின் குடியிருப்புக்களின் நியமத் திட்டம் – பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 08.06.2022 6:26
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் -பகுதி 2 | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம் 06.06.2022 49:29
இலங்கையில் இந்திய சமூகமானது இன்று சுமார் பத்து இலட்சம் பேர்களைக் கொண்டதாக உள்ளது. 1946ல் மொத்த சனத்தொகையில் 11.7வீதமாகவிருந்த இவர்களின் பங்கு, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் பலர் தாயகம் திரும்பியதால், 1981ம் ஆண்டு 5 வீதமாகக் குறைந்தது. மேலும், இலங்கைக் குடியுரிமை பெற்ற பலர் தம்மை இலங்கைத் தமிழரென குடித்தொகைக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்வதாலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் மேற்படி வீழ்ச்சி க...
பகுதி 1 – பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம் 04.06.2022 24:01
1834 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்டது. அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஊழியத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கிந்திய பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெள்ளையர்களை வேலைக்காரர்களாகக் கொண்டு செல்லுதல், கடன் ஒப்பந்த முறையில் ஆபிரிக்கரையும் சீனரையும் தொழிலாளர்களாக வரவழைத்தல் போன்ற பல்வேறு மாற்று வழிகளை நாடினர். கடன் ஒப்பந்த முறையின...
சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகள் – பகுதி 2 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 03.06.2022 16:11
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
சடங்கும் குணமாக்கலும் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன் 02.06.2022 41:46
குணமாக்கல் செயற்பாடானது உளப்பாதிப்புற்ற மனிதனை மீண்டும் முழுமையாக பழைய நிலைக்குத் திருப்பி எடுத்தல் அல்லது அவரை சமூகத்திற்கு இயைபாக மாற்றுதல் போன்ற வேலைகளினைச் செய்வதாகும். சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த விக்டர் டெர்னர் இவ்வாறான சடங்கு செயற்பாட்டினை மீவியல் என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார். தமிழ் சமுதாயச் சூழலிலே இந்து சமய நடைமுற...
யாழ்ப்பாணத்தில் சாதி குடியிருப்புக்களின் இட ஒழுங்கமைவும் நியமத் திட்டமும் – பகுதி 1 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம் 01.06.2022 28:33
இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
ஈழத்துப் பறை: மீட்டெடுத்தலும் கொண்டாடலும் வேண்டி…! | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன் 31.05.2022 13:29
2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி...
உலகின் முதல் மிஷனரி வைத்தியசாலை | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன் 30.05.2022 6:14
நியூயோர்க்கில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஜோன் ஸ்கடர் என்னும் அமெரிக்கரே மேலைத்தேய(அலோபதி) மருத்துவத்தைப் பரப்புவதற்க்காக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதலாவது மிசனரி மருத்துவர். மருத்துவர் கிறீன் 1864 இல் தமிழ்மொழி மூலம் மருத்துவக் கற்கை நெறியை ஆரம்பித்தார். இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதன்முதலில் தமிழிலேயே மேலைத்தேச (அலோபதி) மருத்துவம் யாழ்ப்பாணத்தில் மானிப்பாயிற் கற்பிக்கப்பட்டது. யாழ்...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.