Kamaraj J
குறிஞ்சி மலர்
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
குரலும் பதிலும்-கு ப ரா- பாரததேவி-1939 04.06.2022 11:57
குழந்தைத் திருமணம் இயல்பாக நடந்தேறிய காலகட்டத்தில் நிகழும் கதை. படிப்பு, பணி என்பவை ஆண்களுக்கு மட்டுமே என்ற சுழலில், தடம் மாறிப் போன 'மாப்பிள்ளை'- தன் வாழ்வின் கதியென்ன என மருகும் 'மணப்பெண்' என களம் அமைத்துள்ள்ளார் கு ப ரா.
என்ன அத்தாட்சி -கு ப ரா - பாரத தேவி -1939 02.05.2022 12:50
பிறர் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் போவதற்கும், அனுதாபப்பட்டு உருகுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் ஒருவரின் இன்னலுக்கு தீர்வு கிடைக்காது என்கிறார் கு ப ரா.
தாயாரின் திருப்தி - கு ப ரா 29.04.2022 4:42
ஜாதியாச்சாரம் என்று சொல்லப்படும் மூடப்பக்தியை ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது.
ஆமிரபாலி- கு ப ரா - பாரத தேவி -1939 06.04.2022 9:38
மனதளவில் மாசில்லாத தன்மையால் எவரும் மேன்மையுற முடியும் என்பதை உணர்த்தும் இலக்கணமாய் ஆமிரபாலியின் வரலாறு விளங்குகிறது. ஆமிரபாலி- கவுதம புத்தர் சந்திப்பு கு ப ரா வரிகளில்..
நினைவுமுகம் மறக்கலாமோ?- கு ப ரா - பாரத தேவி-1939 29.03.2022 9:52
இதம் தரும் உறவுகளே இருப்பின் இலக்கணத்தை வகுக்க முடியும் என்பதை உணர்த்துவதாய் கு ப ரா வின் இந்த கதை.
மன்னிப்பு - கு ப ரா சிறுகதைகள் - பாரததேவி -1939 12.03.2022 11:44
பல்வேறு அடிப்படைகளைக் கொண்ட கற்பிதங்களால், வெறுப்பையும் புறக்கணிப்பையும் கைக்கொள்ளும் மனித மனம், அக- புறச்சூழல்களின் கடுமையால் கட்டுறும்போது, நெகிழ்வும், இளகும் தன்மையும் பெறுகிறது.. இடைப்பட்ட காலம்- உறவுகளின் இழப்பு ஈடு செய்யக்கூடியதா?
என்ன நெருக்கடியோ?- கு ப ரா - பாரததேவி -1939 05.03.2022 5:57
"சோகக் காட்சிகளைக் கண்டு உருகும்படியும் வைத்து, துயரத்தை அகற்ற சக்தியும் அற்றவனாய் என்னை ஏன் படைத்தாய், இறைவா! " - கோல்ட்ஸ்மித்
இருளிலிருந்து-கு ப ரா சிறுகதைகள்-கலைமகள் -1939 20.02.2022 7:48
"உலகத்தில் தினசரி கண்ணில் படும் கொடுங்காட்சிகளை அடிக்கடி பார்த்து உள்ளத்தின் உணர்ச்சிகள் கூர்மை மங்கிப் போயிருந்தால்,சித்தார்த்தர் மனம் பிறகு அவ்வளவு பாடு பட்டிராது. அப்பொழுதுதான் மலர்ந்த மொக்கின் ஹ்ருதயம் போல, அவர் ஹ்ருதயம் சதா காற்றுப் படாது புத்தம் புதிதாகவே இருந்ததால் அதன் மூச்சே அதைப் புடைத்து தொட்டாற் சிணுங்கியைப் போலச் சுருங்கச் செய்தது."
ராஜபிஷுணி- கு ப ரா சிறுகதைகள்- ஹிந்துஸ்தான் -1939 16.02.2022 11:02
"ஏகாக்ரமான காதலுக்கும் இன்பத்திற்கும் வாழ்க்கையில் இடம் இல்லையா? ஏகாக்ரமாக துஷ்யந்தனைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்து உலகத்தையே மறந்ததால்தான் சகுந்தலைக்கு துர்வாசரின் சாபம் கிடைத்தது; பின் துக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. பின்னே ஏன் சேற்றிலிருந்து கிளம்புவதுபோல், வாழ்க்கையிலிருந்து காதல் கிளம்புகிறது? இல்லை. காதலை வாழ்க்கையின் லட்சியமாக வைத்ததால்தான் சிதைவு ஏற்படுகிறது. காதல் வெறும் தன்னலம்தான் என்பதாலா?"
கு ப ரா சிறுகதைகள்- ராஜேந்திரன் கனவு - ஹிந்துஸ்தான்- 1938 06.02.2022 10:59
"இந்த கோயிலை கட்டியிருக்கிறனே - இதை உண்மையாக அறிவிற்கு இடமாக்க வேண்டும். உரமேறிய நாட்டில் உயிர் ததும்ப வேண்டும். உயிரின் சிகரமாக இந்த கோபுரம் போல, உண்மை ஓங்க வேண்டும் " கங்கை கொண்ட சோழபுர கோயிலை படைத்த மன்னன் ராஜேந்திரன் வயோதிகத்தின் விளிம்பில் இவ்வாறு மனம் ததும்புகிறான் ... உடன் அவன் சகோதரி... குந்தவை...
குந்தவையின் கைதி- சிறுகதை-ஹிந்துஸ்தான் -1938 01.01.2022 12:10
சோழ- சாளுக்கிய நாடுகளுக்கிடையே உறவு நன்மைக்கே என்ற ராஜராஜனின் எண்ணம் நிறைவேற உதவிய முக்கிய நிகழ்வு உரையாடலாக... கு ப ரா எழுத்தில்...
கு ப ரா சிறுகதைகள்- காதல் நிலை -பாரதமணி -1939 26.12.2021 12:58
காதல் கரையற்றது. வார்த்தையிலோ செயலிலோ அதற்கு ஒரு கரை ஏற்படக் கூடாது. நிர்ணயம் கூடாது. காதல், மனதின் பெருக்கிலிருந்து செயலென்னும் மணல் தரைக்கு வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் வரண்டுவிடும். அது உடல் சம்பந்த மட்டில் தூரத்து பச்சையாகவே இருக்க வேண்டும். நெருங்கினால் அந்த மோகன கனவு கலைந்து விடும். ---- கு ப ரா
கு ப ரா சிறுகதைகள்-புரியும் கதை -மணிக்கொடி -1938 19.12.2021 12:37
தளைகளிலே தான் தனிமையின் சுயேச்சை நன்கு பரிமளிக்கும். மறைவிலேதான் மகிழ்ச்சி. நிர்ப்பந்தத்தில், கட்டுப்பாட்டில் -இன்பம்! விடுதலையில் வெறுப்பு! இந்த கூற்றை, நமக்கு மிகவும் பரிச்சயமான, அன்றாட வாழ்க்கை நிகழ்வு வழியாக விளக்குகிறார் ஆசிரியர்.
கு ப ரா சிறுகதைகள் - வாழ்க்கைக் காட்சி - கலைமகள் -1938 12.12.2021 10:20
எளியோரின் வாழ்வாதாரத்தை பாதிக்காத முடிவுகளை எடுப்பதால் இழப்பு இல்லாத போது, வல்லோர் அவற்றை தவிர்ப்பது எவ்வளவு கொடுமை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார் ஆசிரியர்.
கற்பூர சொற்கோ பாரதி -இளங்கவி காந்தி 11.12.2021 4:47
11, செப்டம்பர்,2021- மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி இளங்கவி காந்தி படைத்த கவியாஞ்சலி.
மூலக்கனல் - நாவல் - நா பார்த்தசாரதி - பாகம் -6 08.12.2021 19:59
புகழ் வெளிச்சம் தரும் குதூகலம் -எழுச்சியால் ஒருவன் தன் வாழ்க்கைப் பாதையை மேலும் சீராக்கிக் கொண்டால் , அவன் சார்ந்த சமூகம் அவன் வாழ்வால் மேன்மையுறும். அதுவே கண்மூடித்தனமான மமதையானால், அவனுக்கே கேடாகும்.
கு ப ரா சிறுகதைகள் - அனார்கலி -ஹிந்துஸ்தான் -1938 04.12.2021 15:26
உலக இலக்கியங்கள் கொண்டாடும் காதல் காவியம் - அனார்கலி... அனார்கலியின் சூளுரை வென்றது- தோல்வி காதலுக்கா? சலீம் -அனார்கலியிடம் அக்பர் மேற்கொண்ட இறுதி சமரச முயற்சி- உணர்வு குன்றாத உரையாடலாக-கு ப ரா வரிகளில்....
கு ப ரா சிறுகதைகள் - கனகாம்பரம்- கலைமகள்-1938 27.11.2021 14:36
மனித வாழ்வை சிக்கலற்ற நெடிய பயணமாக வடிவமைப்பதில் பண்பாடு முக்கிய காரணியாக விளங்குகிறது. நாகரீகப் போக்குகள் பண்பாட்டின் எல்லைகளை அவ்வப்போது தீர்மானிப்பவையாக இருந்து, தனிமனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஒரு 'கிராமந்தர' மனைவி - 'படித்த' கணவரிடையே 1938 சூழலில் நிகழும் ஒரு யதார்த்த உரையாடல்.
கு ப ரா சிறுகதைகள் - கதைக்காரன் கர்வம்-ஹிந்துஸ்தான்-1938 21.11.2021 8:18
சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளிகளால்தான் இலக்கிய வடிவங்கள் காலம் கடந்து நிற்கின்றன. வணிக நோக்கு மிகும் போது, வாசகனின் ரசனை தரம் குறையத்தான் செய்யும். யார் குற்றம் என்பதை ஆராய யாருடைய நிகழ்காலமும் இடம் கொடுப்பதில்லை
கு ப ரா சிறுகதைகள் - உயிரின் அழைப்பு-தினமணி வருஷ மலர்-1937 20.11.2021 9:46
சமூக மத பழக்க வழக்கங்கள் பல, கால மாற்றங்களின் போது அனர்த்தங்களாகி- அபத்தங்களாகி போவதை உணராமல் வெறும் சக்கையை பிடித்துக்கொண்டு மனங்களை வதம் செய்யும் போக்கை ஆசிரியர் சாடுகிறார். எந்த துக்கமும் கணப்பொழுதே எனும் அளவிற்கு வாழ்வு வகைமையும் வசந்தங்களும் நிறைந்தது என்கிறார் இக்கதையில்.
கு ப ரா சிறுகதைகள் -சிறுகதை -மணிக்கொடி-1935 14.11.2021 12:22
வாழ்க்கைச் சுழலில் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அத்தனை வகை தீர்வுகளை அன்றாடம் வழங்கி வரும் மகளிரின் பல்கலை வித்தகத் தன்மை இருட்டடிப்புக்கு ஆளாகாமல் இருந்திருந்தால் இவ்வுலகம் இன்னும் பண்பட்டிருக்கும் என்ற உண்மையை மிக எளிதாக இக்கதையில் நிறுவுகிறார் கு ப ரா.
கு ப ரா சிறுகதைகள் -பண்ணைச் செங்கான் 13.11.2021 10:46
வயிற்றுப்பிழைப்பிற்கான பொருள் பலருக்கும் அவரவர் நிலை பொறுத்து மாறுபடுகிறது. பொருள் ஈட்டும் வகையில் கண்ணியத்திற்கு என்ன வேலை என்ற உச்ச பச்ச நுகர்வு-போட்டி யுகம் பழகிவிட்ட நமக்கு 1934-ன் இந்த கதை தேறுதலாய் உள்ளது. கால மாற்றத்தை உரைப்பதாய் ஆசிரியர் குரல்.
கு ப ரா சிறுகதைகள் - காமுவின் கதை 06.11.2021 10:37
புலன்களுக்கு அப்பாற்பட்ட ஈர்ப்பே, சிற்றறிவு உயிர்களுக்கும் எதார்த்தமாய் இருக்கும் போது, புலன்களின் எல்லைகளை நன்றே அறிந்த மனிதன், அவைபொருட்டு பேதம் பாராட்டுவது எவ்வளவு மடமை என்பதை மிக நேர்த்தியாக கூறியிருக்கிறார் கு ப ரா... 🙏🙏🙏
கு ப ரா சிறுகதைகள் - புனர் ஜன்மம் 29.10.2021 18:12
நம்பிக்கைக்கும் துரோகத்திற்கும் இடையிலான நெடிய பாதையான வாழ்வில், வழியெங்கும் கிடைக்கும் பாடங்கள் படிப்பினைகள்.. இதுவே ஆண் -பெண் உறவின் நுட்பங்களை அந்தந்த பண்பாட்டு மரபுகளின் வரன்முறைகளுக்கு உட்பட்ட வகையில் இலக்கிய வடிவில் நுகரும் போது, கு ப ரா போன்ற பன்புல ஆளுமையின் பெருமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அடிமனித இயக்கங்களை 1935லியே மிகத்திறம்பட கையாண்டுள்ள கு ப ரா, மேற்கத்திய -கிழக்கத்திய தத்துவப...
கு ப ரா சிறுகதைகள் -நூர் உன்னிஸா 23.10.2021 16:48
தமிழ் சிறுகதைகளின் ஆசான் என்ற அளவிற்கு, அந்த வடிவம் குறித்து யாரும் அறியாத 1930களில் வானொலி உரைகளால் கு ப ரா விழிப்புணர்வு ஏற்படுத்தினராம். அவரின் கன்னி முயற்சியாக உள்ள 1934-ன் 'நூர் உன்னிஸா' உணர்வு அளவிலும் சரி, வடிவ அமைப்பிலும் சரி, ஒரு முன்னோடி படைப்பாய் ஒளிர்கிறது...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.