Sadhguru Tamil
சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
யார் நினைப்பதுபோல வாழ்க்கை நடக்க வேண்டும்? 12.08.2023 5:32
யார் நினைப்பதுபோல வாழ்க்கை நடக்க வேண்டும்? நான் நினைப்பதுபோலவே வாழ்க்கையில் அனைத்தும் நிகழ வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைத்தது நடக்காதபோது வாழ்வில் விரக்திகொள்கிறார்கள். ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறதே’ என்று நொந்துகொள்கிறார்கள். நாம் நினைப்பதும், நமது உயிருக்கு மூலமானது நினைப்பதும் ஒன்றாகும் நிலை குறித்து சத்குரு இங்கே பேசுகிறார்! Conscious Planet: https://www....
எதிலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது? 10.08.2023 4:09
எதிலும் சீக்கிரமே சலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது? "எனக்கு சீக்கிரமே எதிலும் சலிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன செய்வது? ஏதாவது வழிசொல்லுங்கள்!" என்று யாராவது கேட்டால் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன பதில் சொல்லுவார்?! அந்த பதிலை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__...
புது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா? 08.08.2023 10:01
புது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா? “என்ன இருந்தாலும் சொந்த வீட்டுல வாழற மாதிரி வராது?” என்று சொல்லி கஷ்டப்பட்டு புது வீடு ஒன்று கட்டிவிடுகிறோம்! “காலா காலத்துல கல்யாணம் பண்ணுங்க தம்பி!” என்று சுற்றத்தார் தொந்தரவு கொடுக்க கல்யாணமும் செய்துகொள்கிறோம்! இதையெல்லாம் செய்துவிட்டால் வாழ்க்கை முழுமை அடைந்து விடுமா? சத்குருவின் இந்த உரை உண்மை உணர்த்துகிறது! Conscious Planet: https://www.consciousp...
மனைவிக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி இதுதான்! | The Best Thing You Can Do To Your Wife 05.08.2023 6:26
Sadhguru answers a question how to be a good husband to your wife. ஒரு நல்ல கணவனாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என டாக்டர். சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் கேட்டதும், மனைவி சொல்லும்படியெல்லாம் நீங்கள் நடக்க வேண்டும் எனச் சொல்லி வெடிச்சிரிப்பை வரவழைக்கும் சத்குரு, தொடர்ந்து அதற்கான தனது ஆழம் மிக்க பதிலினை வழங்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download...
தாய், மனைவி, மகள் - யாரிடம் உண்மையான அன்பு? | On Whom Do We Have Real Love? | 03.08.2023 6:52
We come across a lot of people in life. On whom do we have real love? Sadhguru answers. அம்மா, மனைவி, குழந்தைகள் என பல்வேறு உறவுகள் மீது நாம் பாசமும் அன்பும் செலுத்துகிறோம். இவ்வாறு ஒருசில உறவுகள் மீது மட்டும் அதீத அன்பு வைப்பதிலுள்ள உளவியல் குறித்து பேசும் சத்குரு, பிறரிடத்தில் அன்பு செலுத்துவதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.cons...
நம் குடும்பத்திடம் எதிர்பார்ப்பது தவறா? | Expectations In A Family - Right Or Wrong | 01.08.2023 4:52
Sadhguru talks about the expectations we have in our family. Is it ok or not ok? "வெளி உலகில் வேண்டுமானால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்துகொள்ள முடியும். ஆனால், நம் சொந்த குடும்ப உறவுகளிடையே எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது எப்படி சாத்தியமாகும்?" இந்தக் கேள்வி உங்கள் மனதில் எங்கே ஒரு மூலையில் இருந்தால், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் இந்த வீடியோவில் விடையுடன் காத்திருக்...
சத்குரு நமக்கு நண்பரா? | What Is Sadhguru To Us? | 29.07.2023 5:33
Is Sadhguru a friend, reformer, guru or god? Sadhguru himself answers. கசப்பான மருந்து கொடுக்கும் டாக்டராய், கார் ஓட்டும் போது நண்பராய், மேடை மீது உற்ற குருவாய்... இன்னும் எத்தனை ரூபம். நீங்கள் எங்களுக்காக உருமாறி கொள்கிறீர்களா அல்லது நாங்கள் மாறிக் கொள்வதை விரும்புகிறீர்களா என திரைப்பட இயக்குனர் திரு.S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் க...
தெரிந்தே தப்பு செய்தால் தண்டனை கிடைக்குமா? 27.07.2023 4:59
Will Nature Punish for our mistakes? தாங்கள் செய்வது தவறு எனத் தெரிந்தே சிலர் மீண்டும் மீண்டும் அவற்றை செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால் அவர்களின் ஆனந்தம் கெடுவது கண்கூடாகத் தெரிகிறது! இப்படி, தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு இயற்கை தண்டனை கொடுக்குமா? இதனால் என்ன விளைவுகள் உண்டாகும்? சத்குருவிடம் கேட்டபோது, அவரளித்த பதில் இந்த வீடியோவில்! Conscious Planet: https://www.co...
சத்குரு சொல்லும் ஜோசியம்! | Sadhguru on Astrology | 25.07.2023 9:30
Sadhguru talks about how to improve the business. தன் தொழிலில் முன்னேற்றம் அடைய என்ன வழி என்று ஒருவர் கேட்க, நகைச்சுவையான ஒரு கதையின் மூலம் பதில் அளிக்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusi...
தாழ்வுமனப்பான்மை ஏன் வருகிறது? Why inferiority complex? | 22.07.2023 5:25
"அவன் கொடுத்து வச்சவன்; அவனைமாதிரி நான் இல்லையே" என்றமனக்குமுறல்கள்உலகில் ஏராளம். தங்களைத் தாங்களே தாழ்வாகநினைத்துக்கொண்டு அடுத்தவரைஉயர்வாகக் கருதும் இந்தமனப்பான்மை ஏன் வருகிறது? இது நல்லதா? இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, அவர் கூறிய விளக்கத்தைக் காண இந்த வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru...
இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும்? 20.07.2023 6:53
இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும்? துடிப்பும் வேகமும் மிக்க இளைஞர்கள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அறியாமலேயே தங்கள் நேரத்தைப் போக்குகிறார்கள். இந்த வீடியோவில் இளைஞர்களுக்காக சத்குரு சொல்லும் ஆலோசனைகள் அவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை சிறப்பானதாக்கிட வழிகாட்டும்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadh...
மனிதனின் புத்தியே அவனுக்கு எதிரியா…? 18.07.2023 9:00
பெரும்பாலான மனிதர்களுக்கு தங்களது ஞாபக சக்தியும் கற்பனை சக்தியுமே பெரும் பிரச்சனையாகிவிடுகின்றன. பலகோடி வருடங்களுக்குப் பின், தற்போதுள்ள மனித மூளையானது, அற்புத திறன்மிக்கதாய் பரிணமித்துள்ளபோதிலும், மனிதன் அந்த புத்தியையே தனது துன்பத்திற்கான கருவியாக ஆக்கிக்கொள்கிறான். இது எதனால் நிகழ்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன? இதுகுறித்து, வீடியோவில் சத்குரு பேசுகிறார்! Conscious Planet: https://www.consciousp...
அன்புக்காக ஏங்குவது தவறா? 15.07.2023 5:57
Sadhguru talks about the difference between giving love and being desperate for love. "என்னதான் விழிப்புணர்வு எனக்கு மேம்பட்டாலும் 'அன்பு' எனும் உணர்வுதான் எனக்கு முதன்மையான ஒன்றாக உள்ளது" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் ஒருவர் இப்படிக் கூறி அன்பைப்பற்றி கேட்க, அன்பு செலுத்துவதற்கும், அன்பிற்காக ஏங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த வீடியோவில் உணர்த்துகிறார் சத்குரு. Cons...
அருள் பெறுவது எப்படி? | Who Gets Grace? | 13.07.2023 7:41
யாரிடத்தில் அருள் தேடி வரும்? கடவுள் அருள் பெறுவது எப்படி? ஈஸியாக எதையும் பெற்றுவிட வேண்டுமென்ற மனநிலை இன்று பரவலாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அருளைப் பெறுவதற்கும் சிலர் அதுபோலவே முயல்கிறார்கள். அருள்பெற வேண்டுமென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், யாரிடத்தில் அருள் தேடி வரும் என்பதையும் விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வைச் சுட்டிக்காட்டி பதிலளிக்கிறார் சத்குரு! Conscious Planet: https:/...
உண்மையில் அமைதி எங்கே இருக்கிறது? 11.07.2023 8:51
அமைதியைத் தேடுகிறேன் என்ற பெயரில், பலரும் பல செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம். உண்மையில், 'அமைதி' என்றால் ஏதும் செய்யாமல் இருப்பதா? உண்மையான அமைதியை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. அமைதியைத் தேடும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://o...
நீங்கள் புத்திசாலியா? | Am I Intelligent? | 08.07.2023 4:59
புத்திசாலிகள் கவனத்திற்கு... Attention intelligent people நாம் எவ்வளவு பெரிய புத்திசாலிகளாக இருந்தாலும், எல்லா நேரமும் நாம் நினைப்பது போலவே வாழ்க்கை சூழ்நிலைகள் இருப்பதில்லை. ஆனால் தங்களை புத்திசாலிகள் என நினைப்பவர்கள்தான், சூழ்நிலைகள் எப்படி உள்ளதோ அப்படிப் பார்க்காமல், எப்போதும் அதனோடு போராடுகிறார்கள். 'வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனைகள் என்பதேயில்லை சூழ்நிலைகள்தான் உள்ளன' இந்த உண்மையை, ஈஷா அறக்...
உண்மையான புரட்சி எப்படிப்பட்டது? 06.07.2023 8:07
உண்மையான புரட்சி எப்படிப்பட்டது? ‘புரட்சி’ என்ற பெயரில் வன்முறைகளும், முட்டாள்தனங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தேறுவதைப் பார்க்கிறோம். உண்மையான புரட்சி எப்படிப்பட்டது, கண்ணுக்குத் தெரியாத அத்தகைய புரட்சி நிகழவேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சத்குரு வீடியோவில் விளக்குகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Officia...
ஆன்மீகத்தில் ஊழல் பெருகிவிட்டதா? 04.07.2023 6:18
ஆன்மீகத்தில் ஊழல் பெருகிவிட்டதா? “போலி சாமியார்கள் குறித்த செய்திகள் சமீபமாக அதிகமாவதுபோல தெரிகிறதே?! இதனால் மக்கள் ஆன்மீகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை பாதிக்கப்படுமா?” சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, ஊழல் செய்யும் மனப்பான்மை குறித்தும் மிகைப்படுத்திப் பேசும் கலாச்சாரம் குறித்தும் எடுத்துக் கூறி உண்மையை விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru...
பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா? 01.07.2023 7:16
பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா? - Is it wrong to live for myself..? "குழந்தைகள் பிறந்துவிட்டால், இனி நம் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து விட வேண்டும். நமக்காக நாம் வாழக்கூடாது. அவர்களுக்காகத் தான் வாழ வேண்டும்." இப்படி ஒரு மனநிலை பொதுவாக சமூகத்தில் இருப்பதால், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத பல தாய்மார்கள் மனதளவில் அவஸ்தைப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு தாய் ஈஷா அறக்கட...
நெருங்கிய உறவுகளின் மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? 29.06.2023 7:16
நெருங்கிய உறவுகளின் மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? நம் பாரத கலாச்சாரத்தில் ‘மரணம்’ வரவே கூடாது என்ற மனநிலை இருப்பதில்லை! மரணத்தைக் கூட ஒரு வாய்ப்பாகவே நாம் பார்க்கிறோம். ஆனாலும் நெருங்கிய உறவினர்கள் எதிர்பாராத விதமாக இறக்கும்போது, அதனைத் தாங்கிக்கொள்ளும் மனதிடம் பலரிடமும் இருப்பதில்லை! இதுகுறித்து சத்குருவிடம் கேட்கும்போது, மரணம் குறித்த ஒரு தெளிவு கிடைக்கிறது! Conscious Planet: https://www.consci...
சிவனை திருமணம் செய்வதற்கு பார்வதி செய்ததென்ன? 27.06.2023 4:40
சிவனை திருமணம் செய்வதற்கு பார்வதி செய்ததென்ன? உலகை மறந்து தியானத்தில் திளைத்திருப்பவனை கவனிக்க வைப்பதென்பது அவ்வளவு எளிதா என்ன?! சிவனின் கரம்பிடித்து அவனின் சரிபாதியான பார்வதி, அதற்காக மேற்கொண்ட தீவிர சாதனா பற்றி சத்குரு விவரிக்கிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org ...
யோகாவிற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்? _ Difference Between Yoga And Gym Sadhguru Tamil 21.06.2023 3:55
யோகாவிற்கும் உடற்பயிற்சிக்கும் என்ன வித்தியாசம்? யோகா செய்வதற்குப் பதிலாக சிலர் ஜிம்மிற்கு செல்வதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் யோகாவும் உடற்பயிற்சியும் ஒன்றா? சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, யோகாவைப் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கி தெளிவு கிடைக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website...
Yoga Is Not a Mere Exercise Sadhguru Tamil 21.06.2023 11:58
நம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்! | சத்குரு யோகா என்றால் தலைகீழாக நிற்பது என்றும், படைத்தவனை அடைய எங்கெங்கோ தேடி அலைய வேண்டுமென்றும், பலவித தவறான புரிதல்களை மக்களிடத்தில் பார்க்கமுடிகிறது. ஆனால், சத்குரு ஒருவர் நான்கு தன்மைகளை சரியாக வைத்திருந்தால், படைத்தவனே அவரைத் தேடி வருவான் எனக் கூறுகிறார். படைத்தவன் நம்மில் வெளிப்பட நாம் செய்யவேண்டியது என்ன என்பதை வீடியோவைப் பார்த்து அறியுங்கள்! Con...
வயதான பெற்றோர்கள் Vs பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு? 31.05.2023 5:12
"குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், சத்குருவை கேட்டபோது சத்குருவின் பதில். Conscious Planet: https://www.con...
குழந்தைகளுக்கு யோகா எதற்கு? 31.05.2023 6:32
இன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார்! மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__a...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.