Kathe Khajane Team, IT for Change
கதை கஜானா - தமிழ்
இந்த ஆடியோ கதைகள் 2023-24 ஆம் ஆண்டில் 'ஐடி ஃபார் சேஞ்ச்' (IT for Change) உடன் இணைந்து 'மொழிக் கல்வியில் டிஜிட்டல் கதை அடிப்படையிலான கற்பித்தலை ஒருங்கிணைத்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள தமிழ் பள்ளிக்கூட ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டன. டிஜிட்டல் ஊடகம் வழங்கும் புதிய சாத்தியக்கூறுகளுடன், ஒரு கற்பித்தல் கருவியாக கதை சொல்லும் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் மொழி கற்றலை வளப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து கதைகளும் திறந்த கல்வி வளங்கள் (OER) மற்றும் சுதந்திரமாகப் பயன்படுத்தப்படலாம் மற்றும் பகிரப்படலாம்.
Author
Kathe Khajane Team, IT for Change
Category
Podcast website
Latest episode
Jun 2, 2025
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சுறுசுறுப்பான எறும்புகள் 02.06.2025 2:06
Writer : Chanchal Sharma Narrator : Alli R Editor : IT for Change இந்த புக்கில் எறும்புகள் பின்னாடி போங்களேன். கண்டிப்பாக சுட்டி வாசகர்களை இந்த எறும்புகள் பிசியாக வாசிக்க வைக்கும். இது என்ன "நம்மை சுற்றியுள்ள விலங்குகள்" தொகுப்பின் நான்கு புத்தகங்களுள் ஒன்றாகும். வகைகள் : அன்பு,நகைச்சுவை,விலங்குகள்
அச்சமில்லை அச்சமில்லை! 02.06.2025 2:29
Writer : Mini Shrinivasan Narrator : Jothi G Editor : IT for Change ஒரு சின்ன பெண் தனியாகச் செல்லும் போது எப்படி தைரியமாக இருக்கிறாள் என்று பார்ப்போமா? வகைகள் : தைரியம்,வாழ்க்கைத் திறன்கள்
அக்குவின் ஆத்திரம் 02.06.2025 7:46
Writer : Vinayak Varma Narrator : Prema R Editor : IT for Change அக்கூவுக்கு அன்றைய தினம் மிக மோசமான தினமாக இருந்தது. அதனால் அவள் மிக மிகக் கோபமாக இருக்கிறாள். அக்கூவின் கோபம் குறைந்ததா, நீங்கள் மிகவும் கோபமாக இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். வகைகள் : உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள்,குடும்பம்
அண்ணனின் சக்கர நாற்காலி 02.06.2025 2:41
Writer : Salil Chaturvedi Narrator : Alli R Editor : IT for Change வாருங்கள், துர்வா, த்ருபோ மற்றும் த்ருபோவின் சக்கர நாற்காலியைச் சந்திக்கலாம். இந்த அண்ணனும் தங்கையும் பூங்கா, கடைத்தெரு என ஊர்சுற்றி மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள். அண்ணன் தங்கையென்றால் அப்படித்தானே! வகைகள் : அன்பு,குடும்பம்
சிக்கூவும்தான் 02.06.2025 1:46
Writer : Anupa Lal Narrator : Nagasundari. S Editor : IT for Change நாள் முழுக்க பரபரவென்று பலவும் செய்யும் சிக்கூவைப் பார்க்கலாம், வாருங்கள்! வகைகள் : சாகசம்
இடைவேளையில் ஒரு விருந்து 02.06.2025 4:32
Writer : Shweta Ganesh Kumar Narrator : Nagasundari. S Editor : IT for Change மீனுவுக்கு உணவு இடைவேளை என்றாலே பிடிக்காது. அம்மா அவளுக்கு தினமும் இட்லிதான் கொடுத்தனுப்புவார். அவள் வகுப்புத் தோழிகள் என்ன கொண்டு வந்திருக்கிறார்கள்? அவர்கள் டப்பாக்களை எட்டிப் பார்த்து கண்டுபிடிக்கலாம் என்று மீனு முடிவெடுத்தாள்! வகைகள் : நண்பர்கள் மற்றும் நட்பு
குளத்தில் இருந்த குறும்புக்கார மீன்கள் 02.06.2025 3:23
Writer : Suraj J Menon Narrator : Inbarasi P Editor : IT for Change மூன்று நண்பர்கள் மற்றும் மூன்று புத்திசாலி மீன்களைப் பற்றிய ஒரு வேடிக்கையான குட்டிக் கதை வகைகள் : சாகசம்,வாழ்க்கைத் திறன்கள்
குப்பை மேகம் 02.06.2025 6:25
Writer : Karanjeet Kaur Narrator : Inbarasi P Editor : IT for Change சீக்கூவை ஒரு குப்பை மேகம் சூழ்ந்து கொண்டு அவளை உலகிலேயே மிகவும் சோகமான பெண்ணாக ஆக்கிவிட்டது. சீக்கூ அந்த மோசமான குப்பை மேகத்தை எப்படி விரட்டி அடித்தாள் என்று இந்த அற்புதமான கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்! வகைகள் : உடல்நலம் மற்றும் சுகாதாரம்,சொற்கள்
நீமா இன்று என்ன சாப்புடுகிராள்? 02.06.2025 3:39
Writer : Bijal Vachharajani Narrator : Manjula G Editor : IT for Change சாப்பிடுவதை நேசிக்கும் நீமாவைச் சந்தியுங்கள். வழுக்கும் லிச்சிபழம், அமுக்கினால் பிதுங்கும் பழுத்த நாவற்பழம், புளிப்பான புளியங்காய், பச்சைப் பசேல் கீரை எல்லாமே நீமாவுக்குப் பிடித்தமானவை. ஆண்டு முழுவதும் நீமா என்னவெல்லாம் மென்று கடித்து தின்கிறாள் என்று பாருங்கள்! வகைகள் : அறிவியல்,உடல்நலம் மற்றும் சுகாதாரம்
ஒன்று ஒன்றாய் (ஒன்றொன்றாய்) 02.06.2025 5:08
Writer : Payoshni Saraf Narrator : Merline. V Editor : IT for Change ஆறாம் வகுப்பு மாணவர்கள் கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அதற்குத் தேவையான பணத்தை அவர்களால் திரட்ட முடியுமா? வகைகள் : தைரியம்,நண்பர்கள் மற்றும் நட்பு
ஒருவேளை… 02.06.2025 2:39
Writer : Hari Kumar Nair Narrator : Kalaivani G Editor : IT for Change ஷ்யாமுக்குக் காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்வதே பிடிக்காது. ஒருநாள், அவன் ஒரு கற்பனை உலகில் மூழ்குகிறான், அதன்மூலம் பள்ளியையும் வீட்டையும் ரொம்ப ஜாலியாக மாற்றிவிடுகிறான்! வகைகள் : சாகசம்
அனுவும் நானும் 02.06.2025 1:52
Writer : Kanchan Bannerjee Narrator : Manjula G Editor : IT for Change இரு சகோதரிகள் ஒன்றாக சேர்ந்து செய்யும் பொழுதுபோக்கும் செயல்களின் தொகுப்பு வகைகள் : அன்பு,குடும்பம்
தண்ணீரின் ஓசை 02.06.2025 7:37
Writer : Shalini Srinivasan Narrator : Jothi G Editor : IT for Change வர்ஷாவும் அவள் அப்பாவும் காட்டின் அருகே வசித்தனர். கடுமையான ஒரு கோடையில் வர்ஷா வெப்பத்தால் வாடிக்கொண்டிருந்தாள். ஒருநாள் வர்ஷாவுக்கு வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது. அது என்னவென்று துப்பறியக் கிளம்பினாள். அவளுக்கு மட்டுமே கேட்கும் அந்தச் சத்தம் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். வர்ஷா, என்ன கண்டுபிடிக்கப் போகிறாள்? அப்பா அவளை...
திருவிழாவும் கணக்கும் 02.06.2025 5:00
Writer : Kavitha Mandana Narrator : Merline. V Editor : IT for Change 36 மாணவர்கள் கொண்ட தனது வகுப்பினரோடு லீலு ஒரு திருவிழாவுக்குப் போகிறாள். யாரும் தொலைந்து போகாமல் இருக்கவும், எத்தனை நுழைவுச்சீட்டுகள் வாங்க வேண்டும் என்று கணக்கிடவும் ஆசிரியர் தொடர்ந்து எண்ண வேண்டி இருக்கிறது. 36 வரை வேகமாக எண்ண 1, 2, 3 என்று எண்ணுவது தவிர வேறு வழி இருக்கிறதா? ஜோடி ஜோடியாக எண்ணுவதன் மூலம் வாய்ப்பாடுகளின் அடிப்பட...
டிம்மியும் பிப்பியும் 02.06.2025 2:29
Writer : Madhav Chavan Narrator : Prema R Editor : IT for Change டிம்மியும் பிப்பியும் பேசுவதை கேட்க வா. நீயும் உன் செல்லப்பிராணிகளுடன் பேசுவாயா? வகைகள் : சொற்கள்,நண்பர்கள் மற்றும் நட்பு
உன்னியின் விருப்பம் 02.06.2025 7:41
Writer : Meryl Garcia Narrator : Inbarasi P Editor : IT for Change மின்விசிறியின் கீழே படுத்துக்கொண்டு, குளிர்ந்த எலுமிச்சைச் சாறைப் பருகிக்கொண்டே, தொலைக்காட்சியில் கேலிச்சித்திரம் பார்க்க உன்னிக்கு விருப்பம். ஆனால், இவற்றைச் செய்யவிடாமல் அவனை எது தடுக்கின்றது? அதைக் கண்டுபிடிக்க, இந்தக் கதையைப் படியுங்கள். வகைகள் : அறிவியல்,குடும்பம்
பார்த்து! இங்கே புலி இருக்கிறது! 02.06.2025 2:52
Writer : Sejal Mehta Narrator : Mary Magdaline .P Editor : IT for Change காட்டில் எல்லா விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் புலி வருவது தெரிந்து விடும்! புலி பக்கத்தில் உள்ளதைத் தெரிவிக்க அவை எழுப்பும் விதவிதமான எச்சரிக்கை ஒலிகளைக் கேளுங்கள்! வகைகள் : இயற்கை மற்றும் சுற்றுச்சூழல்
துணிச்சலான போரா 02.06.2025 2:24
Writer : Edna Gicovi Narrator : Jothi G Editor : IT for Change மருத்துவரிடம் செல்வது பயமாக இருக்கும்! அப்பா மற்றும் ஜோஜோவின் சிறிய உதவியால் போராவால் அவனது பயத்தை போக்க முடியுமா? வகைகள் : குடும்பம்,வாழ்க்கைத் திறன்கள்
சிவப்பு மழை மேலாடை 02.06.2025 2:39
Writer : Kiran Kasturia Narrator : Jothi G Editor : IT for Change மனு ஓர் புதிய ரெயின்கோட் வைத்திருந்தான். அவன் அதை அணிய காத்திருக்க முடியவில்லை, ஆனால் மழை பெய்யும்போதுதான் அதை அணிய வேண்டும் என்று அவனது அம்மா சொன்னார். அவன் காத்திருந்தான்... காத்திருந்தான்... வகைகள் : நண்பர்கள் மற்றும் நட்பு,வாழ்க்கைத் திறன்கள்
எறும்பும் பச்சைப் பயறும் 02.06.2025 3:18
Writer : Sarvendra Vikram Narrator : Merline. V Editor : IT for Change ஒரு சிறு எறும்பு, ஒரு பெரிய பச்சைப்பயற்றை காண்கிறது. அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறது. செல்லும் வழியில் பல பிரச்சினைகள். வீட்டிற்கு எடுத்துச் சென்றதா? எறும்பின் பின்னால் சென்று இதனை தெரிந்து கொள்ளுங்கள். வகைகள் : வாழ்க்கைத் திறன்கள்
மழையே, மழையே 02.06.2025 4:21
Writer : Sanjiv Jaiswal 'Sanjay' Narrator : Mary Magdaline .P Editor : IT for Change மகிழ்ச்சியையும் மழையையும் கொண்டு வரும் மேகத்தோடு சேர்ந்து சுற்றுங்கள் வகைகள் : அறிவியல்
நானும் பறக்கிறேன் ! 02.06.2025 2:54
Writer : Vidya Tiware Narrator : Manjula G Editor : IT for Change சீனு தன் கனவில் பறக்கிறான் ! யாருடன் பறக்கிறான் ? வகைகள் : கற்பனை
சிங்கம் மற்றும் எலி 02.06.2025 3:54
Writer : Naman Singh Narrator : Nagasundari. S Editor : IT for Change சிங்கம் காட்டின் நடுவில் உறங்கிக் கொண்டிருக்க, எலி ஒன்று தற்செயலாக அவனது பாதத்தின் மேல் ஓடுகிறது. வகைகள் : இயற்கை மற்றும் சுற்றுச்சூழல்,விலங்குகள்
சத்யா, கவனம்! 02.06.2025 3:37
Writer : Yamini Vijayan Narrator : Inbarasi P Editor : IT for Change சத்யா தன் அம்மா வேலை செய்யும் பண்ணைக்கு உடன் செல்லும்போது அவனோடு நீங்களும் குதித்தும் ஓடியும் தாவியும் ஏறியும் செல்லுங்கள். கூடவே, நாம் நகர்வதற்குப் பயன்படுத்தும் வித்யாசமான அற்புதமான வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். வகைகள் : அறிவியல்,விலங்குகள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.