Panippookkal

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

News TA ↓ 10 episodes

மினசோட்டாவில் இருந்து வெளிவரும் பனிப்பூக்களின் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகம் எனப் பல்சுவை கொண்ட தமிழ் வலையொலி. Panippookkal’s Tamil Podcast in variety of topics including Arts, Literature, Science, Politics & Social broadcasted from Minnesota, US.

Author

Panippookkal

Category

News

Podcast website

www.panippookkal.com

Latest episode

Aug 25, 2025

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள் 25.08.2025

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி 15.07.2025

பல்வேறு தமிழர் கலைகளைக் கற்று நிபுணத்துவம் பெற்று, அதில் பல ஆய்வுகளைச் செய்து வரும் பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா அவர்கள், இந்தப் பேட்டியில் தனது குடும்பப் பின்னணி குறித்தும், இத்துறையின் மீதான ஆர்வம் குறித்தும் விரிவாக பேசியுள்ளார். நேர்காணல் & படத்தொகுப்பு – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்

நாடகக் கலைஞர்கள் எனும் சமூக செயற்பாட்டாளர்கள்!! 08.07.2025

மூத்த தமிழ் மேடை நாடக இயக்குனர், நடிகர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களுடனான விரிவான நேர்காணலின் நிறைவு பகுதியை இந்தக் காணொலியில் காணலாம். நவீன நாடகங்களின் பங்கு குறித்தும், திரைத்துறை அனுபவம் குறித்தும் இந்தப் பகுதியில் திரு. ராஜூ அவர்கள் பேசி உள்ளார். நேர்காணல் மற்றும் படத்தொகுப்பு – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்

தெருக்கூத்து பயின்றால் நல்ல நடிகராகலாம் 04.03.2025

நவீனத் தமிழ் மேடை நாடக மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்கள் இந்த நேர்காணலில் தனது நாடக உலக அனுபவங்களையும், தமிழ் நாடக உலகின் வளர்ச்சி குறித்தும் உரையாடி இருக்கிறார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்

பனிப்பூக்கள் அகவை 13 21.02.2025

உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

நவீனத் தமிழ் மேடை நாடக இயக்குனர் முனைவர் திரு. ராஜு நேர்காணல் 16.02.2025

சமீபத்தில் மினசோட்டா வந்திருந்த நவீனத் தமிழ் மேடை நாடக உலகின் மூத்த இயக்குனர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் அவரது நீண்ட நெடிய மேடை நாடக அனுபவம் மற்றும் திரைப்படங்களில் நடித்த அனுபவம் குறித்து கேட்டு தெரிந்து கொள்ள முடிந்தது. நேர்காணலின் முதல் பகுதி பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்படக்கலைஞர் – ராஜேஷ் கோவிந்தராஜ்

தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா 21.04.2024

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி 11.03.2024

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.

கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான் 19.02.2024

பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.

பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி 09.02.2024

சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.

Listen to the பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.