FOR ALL OUR KIDS
For All Our Kids Podcast
We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Thirukkural - கல்வி -2 17.09.2025 7:53
இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறு...
Thirukkural - கல்வி -1 03.09.2025 8:14
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள். சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
Thirukkural - இறைமாட்சி - 2 20.08.2025 9:10
இந்த பகுதியில் இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம். இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவற்றைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடைமை, திறமைகள் பற்றிச் சொல்கிறது.
Thirukkural - இறைமாட்சி - 1 06.08.2025 9:29
இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியிலிருந்து பொருட்பால் ஆரம்பமாகிறது. திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி. இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்ற...
Thirukkural - ஊழியல் - 2 23.07.2025 8:34
திருக்குறளின் ஊழியல் அதிகாரத்திருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து அவரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்...
Career Counseling - Interview with Ramalakshmi Das 17.07.2025 33:48
In today's episode, Ramalakshmi Das discusses the clash between parents and students' choices during career counseling and the i mportance of recognizing the child's aspirations.
Thirukkural - ஊழியல் 1 09.07.2025 8:20
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 38வது அதிகாரமான ஊழியலில் இருந்து முதல் ஐந்து குறள்கள். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.
School Readiness - Interview with TR Shoba. 02.07.2025 29:20
In today's episode, TR Shoba , a Montessori teacher, discusses the importance of preparing children for back-to-school routines, including developing independence and emotional regulation skills.
Thirukkural - அவா அறுத்தல் - 2 18.06.2025 8:23
திருக்குறளின் அவா அறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். அவா அறுத்தல் என்றால் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க, ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.
Thirukkural - அவா அறுத்தல்-1 04.06.2025 8:10
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது அவா அறுத்தல் அதிகாரம். இது திருக்குறளின் 37வது அதிகாரம். அவா அறுத்தல் - இதன் விளக்கம் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.
When a Sibling Dies - Interview with Aboli Prafulla 28.05.2025 36:52
Aboli Prafulla, mental health counselor and grief support group facilitator, shares how grief is an expression of love and that there is no set timeline. She stresses the importance of acknowledging the loss of a sibling and keeping their memories alive to enable the surviving child to grieve and heal. If you'd like to learn more about the grief support group, Aboli can be reached on Instagr...
Thirukkural - மெய்யுணர்தல் - 2 21.05.2025 8:12
மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பொருளோடு பார்க்கப்போகிறோம். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம். இந்த உலகில் நம் பிறப்பிற்கும் முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.
Trauma and learning - Interview with Mahima Garg 14.05.2025 27:49
In this episode of our podcast, Mahima Garg , a psychotherapist from Delhi, talks about the impact of trauma on learning and the importance of the teacher–student relationship in building trust in children who’ve experienced trauma. To learn more about Mahima and her work, visit mannmahima.co.in . She can be reached at mahima.psychotherapist@gmail.com .
Thirukkural - மெய்யுணர்தல் - 1 07.05.2025 8:22
இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 36வது அதிகாரமான மெய்யுணர்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம்.இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.
ADHD and Medication - Interview with Dr. Juhi Malviya 30.04.2025 42:19
In this episode of our Teacher to Parent Podcast, Dr. Juhi Malviya, (MD, Psychiatry) discusses the role of medication in the treatment of ADHD and addresses parents' concerns about the side effects. She emphasizes an integrative approach to the treatment, including therapy, exercise, and nutrition.
Thirukkural - துறவு 2 23.04.2025 7:18
திருக்குறளின் துறவு அதிகாரத்திலிருந்து ஆறு முதல் 10 வரை உள்ள குறள்களைப் பொருளோடு இந்த பகுதியில் பார்ப்போம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும், சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Grief in children - Interview with Sangeeta Prasad 16.04.2025 24:54
Sangeeta Prasad returns to the For All Our Kids Podcast to talk about grief in children and ways to support them during this difficult time.
Thirukkural - துறவு 1 02.04.2025 8:15
திருக்குறளின் 35வது அதிகாரம் துறவு . இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும் சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Coconut Birthday - Story 19.03.2025 9:37
As the holy month of Ramadan is approaching, many families are starting to prepare for Eid. As we approached our friends to share highlights from their childhood celebrations, we heard of a lovely custom that will delight all children. Our friend, Sarah, shared how children from the Bohri community celebrate two birthdays. The 'Cake Birthday' is celebrated according to the Gregorian cale...
Thirukkural - திருக்குறள் - நிலையாமை 2 05.03.2025 7:41
இதற்கு முந்திய பகுதியில் நிலையாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிலையாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள். நிலையாமை என்றால் எதுவும் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்பது...
Thirukkural - திருக்குறள் - நிலையாமை 1 26.02.2025 8:23
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 34வது அதிகாரமான நிலையாமை . நிலையாமை என்றால் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்று உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
Thirukkural - திருக்குறள் - கொல்லாமை 2 19.02.2025 8:18
திருக்குறளின் கொல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகா...
THirukkural - திருக்குறள் - கொல்லாமை 1 12.02.2025 8:17
திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை . இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம். கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம்...
Thirukkural - திருக்குறள் - இன்னா செய்யாமை 2 05.02.2025 7:44
திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இன்றைய பகுதியில் பார்ப்போம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும...
Thirukkural - இன்னா செய்யாமை 1 29.01.2025 7:43
திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.