Raja Nagarajan

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Kids TA ↓ 241 episodes

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation togeneration through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”Email your comments to:ainkaran2020@gmail.com

Author

Raja Nagarajan

Category

Kids

Podcast website

podcasters.spotify.com

Latest episode

Apr 15, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

எண்பத்தி ஒன்பதாவது கதை: நாயும் பூனையும் எதிரிகளான கதை 20.01.2022

இது ஒரு கொரியா நாட்டுக் கதை. நாயும் பூனையும் எப்படி எதரிகளானர்கள்1 என்பதை விளக்கும் கதை .

எண்பத்தி எட்டாவது கதை:அரண்மனை விதூஷகன் (The Court Jester) 13.01.2022

இது ஒரு போலந்து நாட்டுக் கதை. ஒரு அரசர் தன்னிடம் ரொம்ப வருஷங்களாக வேலை பார்த்து வந்த விதூஷகனுக்கு ஓயவு கொடுத்து கொஞ்சம் பண உதவியும் செய்கிறார். அவர் கொடுத்த பணம் காலியாகி,விதூஷகன் தரித்திர நிலையை அடைகிறான். தன் புத்திசாலித்தனத்தால்,அரசரிடமிருந்து பல சலுகைகளை பெறுகிறான். எப்படி? கதையை கேளுங்கள்... .

எண்பத்தி ஏழாவது கதை:சிங்கத்தின் மீசை முடி(The Lion's Whiskers) 06.01.2022

இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை. ஒரு மாற்றந் தாய் ,(Step Mother) தன்னுடைய வளர்ப்பு மகன் (Step son) அன்புக்காக ஏங்கி, அவன் அன்பை பெற, ஒரு சிங்கத்தின் மீசையிலிருந்து மூன்று முடிகளை (whiskers) கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றி பெறுகிறாள். எப்படி? கதையை கேளுங்கள்....

எண்பத்தி ஆறாவது கதை: ஒரு கொடூரமான பண்ணையாரும்,இரணடு கூலியாள்களும் ( A Cruel Landlord and Two Hired Hands) 30.12.2021

இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை. ஒரு கொடூரமான பண்ணையாரிடம் 2சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக வேலைக்கு சேர்கிறார்கள். மூத்தவன் அவருடைய கொடுமை தாங்காமல் வீடு திரும்புகிறான்.இளைவன் அவரிடம் வேலைக்கு சென்று அவர் கொடுமைக்கு முடிவு கட்டி வெற்றிகரமாக வீடு  திரும்புகிறான். எப்படி? கதையை கேளுங்கள்......

எண்பத்தி ஐந்தாவது கதை:ஏழு புத்திசாலி சகோதரர்கள்(Seven Clever Brothers) 23.12.2021

இது ஒரு ஐரோப்பா நாட்டுக் கதை. ஒரு அரசருடையை 7 மகன்களும் ஒரு வருடம் தனித்தனியாக பிரயாணம் செய்கிறார்கள். ஒரு வருட முடிவில் ஒவ்வொருவரும் ஒரு  அதிசயத்தக்க திறனை(Skill) பெற்று சந்திக்கிறார்கள் தங்கள் திறன்களை பயன்படுத்தி கடத்தப்பட்ட ஒரு ராஜகுமாரியை மீட்கிறார்கள்.அந்த ராஜகுமாரி யாரை,ஏன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள் என்பது தான் கதை.

எண்பத்தி நாலாவது கதை:ராஜா இல்லாத நாடு:(A country without a King) 16.12.2021

இது ஒரு பர்மா நாட்டுக் கதை. பெற்றவர்களால் படிக்க அனுப்பபட்ட ஒரு வாலிபனுக்கு படிப்பில் நாட்டமில்லை. வாள் வீசுவதில் திறமையை காட்டினான். அவன் ஆசிரியர் சிப்பாய் வேலைக்க்கு போக சொல்கிறார். போகுமுன் அவனுக்கு 3 அறிவுறைகளை வழங்குகிறார். அவன் அதன்படி நடந்து ஒரு நாட்டின்  ராஜாவாக ஆகிறான். எப்படி? கதையை கேளுங்கள் ....

எண்பத்தி மூன்றாவது கதை:ஆற்றின் உதவியால் விடுபட்ட அடிமை வாலிபன் ( A Slave Youth who is freed with the help of a River) 09.12.2021

இது ஒரு அங்கோலா நட்டுக் கதை. மாமாவின் கடனுக்காக அடிமையான ஒரு வாலிபன் தன் குறைகளை ஒரு ஆற்றிடம் சொல்கிறான். அந்த ஆறு அவன் கனவில் ஒரு வழியை சொல்லுகிறது. அவன் அதன்படி நடந்து ஒரு சுதந்திர மனிதனாக ஆகிறான். எப்படி?... கதையை கேளுங்கள்..  

எண்பத்தி இரண்டாவது கதை:கம்பளி பூச்சியின் கதை:(The Caterpillar Story) 01.12.2021

இது ஒரு இந்தோனிஷியா நாட்டுக் கதை. ஒரு சிறுவனின் கம்பளி பூச்சி, அவனை அந்த ஊர் தலைவரின் மகளை,கல்யாணம் பண்ணிக் கொள்ள மறைமுகமாக உதவுகிறது. எப்படி? கதையை கேளுங்கள்....

எண்பத்தி ஒன்றாவது கதை:மகிழ்ச்சியுள்ள மனிதனின் சட்டை(The Happy Man's Shirt) 25.11.2021

இது ஒரு இதாலி நாட்டுக் கதை. ஒரு ராஜா எப்போதும் மனச்சோர்வோடு சந்தோஷமில்லாமல் இருந்தார். அவரை குணப்படுத்த ஒரே வழி- மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும்  ஒரு மனிதனின் சட்டையை ஒரு நாள் அணிந்து கொள்வது தான். அந்த மாதிரி மனிதர் கிடைத்தாரா? அரசர் குணமடைந்தாரா? கதையை கேளுங்கள்…..

எண்பதாவது கதை:ஶ்ரீ ராமகிருஷ்ணரின் 2 கதைகள்:1.கடவுள் வர மட்டார்:2.பண்டிதரும் பால்காரியும் 17.11.2021

ஶ்ரீ ராமகிருஷ்ணர் இந்த 2 கதைகளின் மூலம் நாம் கடவுள் மேல் காட்டும் பக்தி எப்படி  இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். கடவுளிடத்தில் வைக்கும் தீவிரமான நம்பிக்கையும் முழுமையான சரணாகதியும் தான் எல்லா அற்புத செயல்களுக்கும் காரணமாக இருக்கின்ற என்பது இந்த கதைகள் புரிய வைக்கின்றன கதையை கேளுங்கள்,,,,

எழுபத்தி ஒன்பதாவது கதை:சைகை மொழியில் போட்டி-2கதைகள்-1.ராஜா மற்றும் விவசாயி 2.ஜென் மாஸ்டர் மற்றும் ஒரு கண் சீடர் 11.11.2021

2 கதைகள்- இரண்டிலும் ஒரே கருத்து தான். ஆணவம்,திமிர் ஜயித்தது கிடையாது. கர்வம் பிடித்த படித்தவர்களை, அதிகம் படிக்காத ஆள்கள்  போட்டியில் தோற்கடிக்கிறார்கள். இரண்டு போட்டிகளும் சைகை மொழியில் நடக்கிறது(Sign Language) நடக்கிறது,  

எழுபத்தி எட்டாவது கதை:ரெய்செலின் புதிர் ( Raisel's Riddle) 04.11.2021

இது ஒரு போலந்து நாட்டுக் கதை. சிறு வயதில் பெற்றோர்களை  இழந்து தன் ,ஏழையான ஆனால் மிக்க படித்த தாத்தாவினால், வளர்க்கப்பட்ட  ஒரு யூத பெண்மணியின் கதை. யூதர்களின் வாழ்க்கை பின்ணணியை வைத்து சொல்லப்பட்ட வித்தியாசமன்  சிண்டெரெல்லா கதையை கேளுங்கள்

எழுபத்தி ஏழாவது கதை: 99- கிளப்பின் அங்கத்தினர் (Member of 99- Club) 28.10.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. 99 கிளப் என்பது ஒரு சிலரை அழைக்கும் சொல். சந்தோஷமாக வாழ எல்லாம் இருந்தும், அந்த எக்ஸ்ட் ரா ஒன்ருக்காக ஆசைபடுபவர்கள். அது கிடைத்தவுடன்,மேலும் மேலும் ஆசைபட்டு இருக்கிற சந்தோஷத்தையும் இழப்பார்கள் 99-கிளப்பில் அங்கத்தினர்களான  2 பேரை பற்றிய கதை தான் இது கதையை கேளுங்கள் 

எழுபத்தி ஆறாவது கதை:சாலமன் அரசரும் மந்திர மோதிரமும்(KIng Solomon & The Magic Ring) 21.10.2021

இது ஒரு யூத நாட்டுக் கதை.சாலமன் அரசர் ஒரு அபூர்வ மோதிரத்துக்கு ஆசைப் பட்டார்.அந்த மோதிரம், சோகமுள்ளவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.சந்தோஷமாக இருப்பவன் சோகம் அடைவான். அதை கொண்டு வர தன் சேனாதிபதியை அனுப்புகிறார். அரசருக்கு ஆசைப் பட்ட மோதிரம் கிடைத்ததா? கதையை கேளுங்கள்

எழுபத்தி ஐந்தாவது கதை:மரத்திலான வாள் (The Wooden Sword) 14.10.2021

இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை. எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள் நல்லதாகவே தீர்த்து வைப்பார் என்று கடவுள் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்த ஒரு ஏழை செருப்பு தைப்பவரின் கதை

எழுபத்தி நாலாவது கதை:ஒரு குருவின் 5 நல்ல அறிவுரைகள் 06.10.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. மாற்றான் தாய் கொடுமை தாங்காமல் ஒரு இளைஞன் ஊரை விட்டு வெளியேறுகிறான். போகும் முன் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த குருவை சந்திக்கிறான்.  அவர் அவனுக்கு 5 நல்ல அறிவுரைகளை வழங்குகிறார். அவைகள் அவனுக்கு வாழ்க்கையில் எப்படி உதவியது என்பது தான் கதை.

எழுபத்தி மூன்றாவது கதை: ஆர்தர் ராஜாவும் புதிரும்(King Arthur and The Riddle) 28.09.2021

இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை. King Arthur and The Knights of The Round Table என்ற கதை தொகுப்பில் உள்ள கதைகளில்  இது ஒரு கதை. ஒரு சமயம் ஆர்தர் ராஜாவிடம் ஒரு புதிர் போடப்பட்டது. புதிருக்கு விடை அளிக்காவிட்டால்,அவர் உயிர் பறிக்கப்படும். ராஜா வெற்றி பெற்றாரா? கதையை கேளுங்கள்....

எழுபத்தி இரண்டாவது கதை:எலி வியாபாரி (The Mouse Merchant) 15.09.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. ஒரு செத்த எலியை மூலதனமாக வைத்து பெரிய பணக்காரானாக ஆன ஒரு வாலிபனை பற்றிய  கதை. தன் நம்பிக்கை,உழைப்பு,புத்திசாலித்தனம் இருந்தால்,எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம் . 

எழுபத்தி ஒன்றாவது கதை:மேலும் நான்கு புதிர் கதைகள் 08.09.2021

இதில் நான்கு புதிர் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 1.வக்கீலும் சாத்தானும்  (The Lawyer and the Devil) 2.இதை பார்த்ததிலை-இதை பற்றி கேட்டதும் இலலை   (Never seen-Never Heard) 3.ரகஸ்ய ஈட்டீ  (The Secret Spear) 4.நாஸ்ருதீன் முல்லாவின் கடைசி வார்த்தைகள்  ( Nasruddin Mulla's Last Words) புதிருக்கான விடைகள் அடுத்த வாரம்....

எழுபதாவது கதை:சீன தேசத்தின் காலண்டர் உருவான கதை ( The legend of the Chinese Calendar) 18.08.2021

இது ஒரு சீன நாட்டுக் கதை. சீன தேசத்து காலண்டரில் , ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு மிருகத்தின் பெயர் இருக்கும். -எலி ஆண்டு,குதிரை ஆண்டு என்று.. யார் இந்த காலணடரை உருவாக்கினார்? மிருகங்கள் எப்படி வரிசை படுத்தப்பட்டன? விடைகளுக்கு கதையை கேளுங்கள்.....

அறுபத்தி ஒன்பதாவது கதை:மனித இனத்தின் ஆயுட்காலம் (Life Span of Human Race) 12.08.2021

இது ஒரு ருமேனிய நாட்டுக் கதை. கடவுள் ,இந்த உலகத்தை படைத்து முடித்தவுடன், ஒவ்வொரு ஜீவராசியும் இந்த உலகத்தில்  எவ்வளவு வருஷங்கள் வாழ போகிறார்கள், எப்படி வாழ்வார்கள் என்பதை அறிவிக்கிறார். அதன்படி மனிதனுக்கு எல்லோரையும் விட அதிக ஆயுள் கிடைக்கிறது. எப்படி? கதையை கேளுங்கள்...... 

அறுபத்தி எட்டாவது கதை:பால் பாயசமும் சதுரங்க பலகையும்(Milk Pudding and Chess Board) 04.08.2021

இது ஒரு இந்திய நாட்டுக் கதை. இந்த இந்திய கதை பல நாடுகளில் "One Grain of Rice" என்ற தலைப்பில்  சில மாறுதல்களுடன் சொல்லப்பட்டு  வருகிறது. இது ஒரு Mathematical Folktale  and its theme is centered around  the 64 squares of a chess Board. What is the connection between  Pudding and Chess Board? Listen to the story.......

அறுபத்தி ஏழாவது கதை: நேர்மைக்கு கிடைத்த பரிசு(Reward for Honesty) 28.07.2021

இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை. ஏழையாக  இருந்தாலும்  நேர்மையாக வாழ்ந்து வந்த ஒரு பெயிண்டரை(Painter) பற்றிய கதை.

அறுபத்தி ஆறாவது கதை:ஒரு நாள் கூத்து 21.07.2021

இது ஒரு ஸ்காண்டினேவியன் நாட்டுக் கதை. மனைவியை திட்டி குற்றம் காணும் ஒரு கணவனும் அவன் பொறுமைசாலி மனைவியும் தாங்கள் செய்யும் வேலைகளை மாற்றி கொள்ள தீர்மானிக்கிறார்கள். அதன்படி  மறுநாள்,மனைவி வயலுக்கு கிளம்புகிறாள். கணவன் வீட்டு வேலை செய்ய தயாரானான். அன்று என்ன நடந்தது? கதையை கேளுங்கள்.. ....

அறுபத்தி ஐந்தாவது கதை:என் கணவன் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் 14.07.2021

இது ஒரு நார்வே நாட்டுக் கதை. தன் கணவன் எது செய்தாலும் அது  சரியாகத்தான் இருக்கும் என்று கணவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் உள்ள ஒரு பெண்மணியின் கதை கதையை கேளுங்கள்

Listen to the ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.