rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Bezoek zeker de website van de podcast en steun de maker: podcasters.spotify.com

Auteur

rams

Categorie

Society

Website van de podcast

podcasters.spotify.com

Nieuwste aflevering

8 jun. 2026

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன் 04.10.2023

பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிடுகிறது.

171. தியாகம் - கு.அழகிரிசாமி 19.09.2023

சொல்லால் சுட்டுப் பொசுக்கும் மனிதனிடம் இத்தனை பெருங்கருணையா? மனதை இளக வைக்கிறார் கு.அழகிரிசாமி 120.  தரிசனம் - கு.அழகிரிசா மி 60. சிங்கப்பூர் சென்ற மகன் - கு. அழகிரிசாமி 46. இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி 32. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி⁠ ⁠22. அன்பளிப்பு - கு.அழகிரிசாமி⁠

170. காணிக்கை - ந.பிச்சமூர்த்தி 24.03.2023

மிக எளிமையான ஆனால் ஆழமான கதைக் களம். . .50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை இன்றளவும் பொருந்துகிறது. ஆண் பெண் உறவு அப்படியே தேங்கித் தான் இருக்கிறது. . . நான் பதிந்திருக்கும் ந.பிச்சமூர்த்தியின் மற்ற கதைகள்: 40. காவல் -ந.பிச்சமூர்த்தி 106. வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி 128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி 153. வேப்பமரம் - ந.பிச்சமூர்த்தி Spotify users can add their comments/feedback directly . Other...

169. மனைவியின் நண்பர் - வண்ணநிலவன் 10.02.2023

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமான நட்பு நமது கலாசாரத்தில் சாத்தியம் தானா என்பது பற்றிய கதை. கதை நெடுக வண்ணநிலவன் தடுமாறுகிறார் - எந்தப் பக்கம் சேர்வது என்று தெரியாமல். . .பாவம் சிவகாமி மூன்று ஆண்களிடமும் மாட்டிக் கொண்டு திணறுகிறாள்! நான் பதிந்திருக்கும் வண்ணநிலவனின் மற்ற கதைகள் 149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன் 44. பலாப்பழம் - வண்ண நிலவன்

168. குருபீடம் - ஜெயகாந்தன் 15.01.2023

50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இன்றும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன - ஆன்மீகத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும். . .ஜெயகாந்தனின் எள்ளல் கதை முழுக்க கொப்பளிக்கிறது. . . நான் பதிந்திருக்கும் ஜெயகாந்தனின் மற்ற கதைகள் 146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன் 137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன் 111. ஒரே நண்பன் - ஜெயகாந்தன் 20. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன் 18. அக்ரஹாரத்துப் பூனை...

167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை 08.01.2023

நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் - தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . . அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய...

166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன் 02.01.2023

சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் - எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை. இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . . நான் பதிந்திர...

165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி 18.12.2022

சில விஷயங்கள் நமக்கு பிடித்தவை சில பிடிக்காதவை. பிடிக்காதவற்றை பார்க்கும்போதும் எண்ணும்போதும் நிகழும் மனநிலை வெறும் ஒரு கண்ணாடி போலத் தான்.  இது புரியும்போது திரை விலகுகிறது புதிய பார்வைகள் வந்துசேர்கின்றன. பிடிக்காதவையும் மனதை தொடுகின்றன. . .

164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன் 11.12.2022

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை. அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது. அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால் சீண்டப்பட்டு படிக்கும் வாய்ப்பையே இழக்கும் மாணவி. . .பெண்ணுக்கு என்று ஒரு இலக்கணம் வகுத்து அடைத்து வைக்கும் சமுதாய...

163. கடன் - அ. முத்துலிங்கம் 04.12.2022

வயோதிகத்தோடு புலம்பெயர்ந்து செல்லவேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொண்ட கொடுமை. புதிய இடம், புதிய சூழல், வேறுபட்ட கலாசாரம் எல்லாம் ஒன்றாய் படுத்தும் பாடு. கணவன் மனைவியிடம் பட்ட கடன், மகன் தந்தையிடம் பட்ட கடன், முன்வினைக் கடன், தனிநபரிடம் அரசாங்கம் பட்ட கடன் ஒரு சிறுகதையில் இத்தனை பரிமாணங்களா? அ.முத்துலிங்கம் அசத்துகிறார்.

162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான் 27.11.2022

தோப்பில் முஹம்மது மீரான் ஒரு மிகச்சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதி. அவசர யுகத்தில் அக்கமபக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத இரக்கம் மனிதாபிமானம் என்ற மனிதத் தன்மையே மறந்துவிட்ட பட்டணத்து மேல்தட்டு மக்களை தலையில் குட்டும் கதை இது.

161. வணங்கான் - ஜெயமோகன் 12.09.2022

நமக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தால் இட ஒதுக்கீடு ஏன் சரியானது என்று புரியுமோ? நேசமணி என்ற பெருந்தலைவர் பற்றி தெரியாமலே போனதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் போல. ஜெயமொகனின் இந்தக் கதையில் அவர் கையாண்டிருக்கும் பரிமாணங்கள் படிமங்கள் எத்தனை எத்தனை? நடுநடுவே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவையும் உண்டு. . .

160. கறிவேப்பிலைகள் - கி.ரா 06.07.2022

படிக்க முடியாமல் தொண்டை அடைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. கிராமத்து சூழல் அழிந்து வரும் ( அழிந்து விட்டதோ?) சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கும் இந்தக்கதை நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்க்கை போராட்டத்தை கண் முன் நிறுத்துகிறது. . .

159. முள்முடி - தி.ஜா 16.04.2022

ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை. குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளின் கணமேனும் காத்தல் அரிது எனும் குறளும் ஏனோ ஞாபகம் வருகிறது. . .

158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன் 06.03.2022

மனிதனின் இந்த அடிப்படைத் தேவையைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?

157. சித்தி - மா. அரங்கநாதன் 15.10.2021

நெடுந்தொலைவு ஓட்டக்காரர்களுக்கு ஒரு கதை!. ஓடும்போது ஏற்படும் மனநிலையை சரியாக படம்பிடிக்கும் அரங்கநாதன் நிச்சயம் அரை மராத்தனாவது ஓடியிருப்பார் !! 

156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன் 03.08.2021

கிராமத்து திருவிழா கண்முன் விரிகிறது. கூடவே ஆழ் மனதின் வன்மங்களும் விடலைப்பருவத்தை ஏமாற்றுதலும். இசையும் ஓசையும். . .  நாஞ்சில் நாடனின் அருமையான சிறுகதை.

155. யோஷிகி - தி.ஜானகிராமன் 27.06.2021

ஒரு சின்ன கதையின் மூலம் ஜப்பான் நாட்டின் கலாசாரத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் தி.ஜா.

154. பூர்வீகம் - அ.முத்துலிங்கம் 07.06.2021

வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு பின்புலங்களுடன் சிலர் சந்திக்கிறார்கள். நட்பு காதல் என்று எல்லா சாத்தியங்களோடும். இழக்கப் போவதை அடைய சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி அடைய துடிக்கிறார் ஒருவர். . .அ.முத்துலிங்கம் மிளிர்கிறார் கதையின் முடிவில். . .

153. வேப்பமரம் - ந. பிச்சமூர்த்தி 29.05.2021

இந்த மரத்தின் கதை நாம் அனைவரும் கேட்டது தானோ? ந. பிச்சமூர்த்தியின் யதார்த்த நடையில் வேரூன்றி நிற்கிறது. . .

152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன் 26.05.2021

சிறு சிறு சம்பவங்களின் கோர்வை தானே வாழ்க்கை! இதை அழுத்தம் திரித்தமாக தன் யதார்த்தமான நடையில் சித்தரிப்பதில் வல்லவர் அசோகமித்திரன். இந்தக் கதையின் பல்வேறு பரிமாணங்கள் வியக்க வைக்கின்றன. .

151. கோமதி - கி.ரா 23.05.2021

கரிசல்காட்டு இலக்கியத்தின் தந்தை கி.ரா மே 17ம் தேதி திங்கள் கிழமை இரவு காலமானார். 1964ம் ஆண்டு எழுதப்பட்டது இந்தக் கதை. பேசப்படக்கூடாத அருவருக்கத்தக்க கேவலமான ஒரு விஷயமாக கருதப்பட்ட  இத்தகைய கதையை எழுத எத்தனை துணிச்சல் ! 

150. ஹார்மோனியம் - செழியன் 11.05.2021

 ‘ஹார்மோனியம்’ என்கிற இந்த சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். .  தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார்.  ஒரு இசைக்கருவியைப் பற்றி இத்தனை நுட்பமாக எழுத முடியுமா என்று ஆச்சர...

149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன் 10.03.2021

பாம்புகளைப் பேணி வாழ்ந்த ஒரு சமூகம் இப்போது காணாமலேயே போய்விட்டது. பாம்புகளை நேசிப்பவர்களுக்காகவே எழுதப்பட்டதாக உணர்கிறேன். . .நன்றி வண்ணநிலவன் .

148. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா 16.12.2020

எத்தனை எத்தனை கொடுமைகள் அன்றாட வாழ்வில் நமக்கு வெறும் செய்திகளாக வந்து சேருகின்றன? தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும்போது தான் அதன் தீவிரம் உறைக்கிறது.  பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த உண்மைக்கதையை தவிர்ப்பது நல்லது.

Luister naar de podcast தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds