Ezhuna

எழுநா

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Bezoek zeker de website van de podcast en steun de maker: ezhunaonline.com

Auteur

Ezhuna

Categorie

Society

Website van de podcast

ezhunaonline.com

Nieuwste aflevering

29 mei 2025

Waar luisteren?

Podcasts in de app Replaio Radio Binnenkort beschikbaar

Podcasts komen binnenkort naar de app. Installeer nu en zie als eerste een compleet nieuwe kijk op podcasts

Download het op Google Play Gratis installeren Android bijna 10 mln downloads · beoordeling 4,8 iOS binnenkort

Afleveringen

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் - பகுதி 2 | பேராசிரியர் சி. பத்மநாதன் 08.12.2023

மணிபல்லவம் என்பது கடல் சூழ்ந்த ஒரு தீவு; அது புகாரின் தென்திசையில் முப்பது யோசனை தூரத்தில் இருந்தது. அதனை சென்ற நூற்றாண்டில் நயினாதீவு என்று அடையாளங் கண்டுள்ளனர். ஆயினும் அங்கு புராதனமான பௌத்த சமய சின்னங்கள் எவையும் கிடைக்கவில்லை. மணிபல்லவத்தில் அமைந்த தர்மாசனம் கடலோரமாகவும் நாவாய்களின் தரிப்பிடமொன்றின் அண்மையிலும் இருந்தது என்பதும் கம்பளச் செட்டியின் கதைமூலம் உணரப்படும். அத்தீவிலே தரித்துநின்று ச...

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 7 | யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் | நடராஜா செல்வராஜா 07.12.2023

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என...

சர்க்கரை வள்ளி எனப்படும் வத்தாளங்கிழங்கு |பதார்த்த சூடாமணி | முனைவர் பால.சிவகடாட்சம் 05.12.2023

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால்...

மன்னார், நானாட்டானில் கிடைத்த பண்டைய நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா ? | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் 05.12.2023

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிக...

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் - பகுதி 1 | பேராசிரியர் சி. பத்மநாதன் 04.12.2023

எழுத்தின்  பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர்.  அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் பிராமி வடிவங்களில் எழுதப்பட்டவை.   பதவிகம்பொலவிற் காணப்படும் பிரமாண்டமான பள்ளிப்படை (Dolmen), இவ்வன்கட்டுவவிலுள்ள கல்லறைகள், அங்குள்ள ஈமத்தாழிகள், அவற்றிலே படையல்களை வைப்பதற்குப் பயன்படுத்திய பல்வேறு வகையான மட்...

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் பேரம் | கண்டிசீமை | இரா. சடகோபன் 02.12.2023

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்ப...

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை - பகுதி 1 | சமஷ்டி அரசியல் முறைமைகள் | ஆங்கில மூலம் : யொகான் பொய்றியர் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் 30.11.2023

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல்...

பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை - அறிமுகம் | நாகமுத்து பிரதீபராஜா 30.11.2023

ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை...

இலங்கையில் தமிழ் பௌத்தர் - பகுதி 3 | சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன | தமிழில் : இரா. சடகோபன் 29.11.2023

தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில்  திருகோணமலையில்  அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம். தமிழ் பௌத்தத்...

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் - பகுதி 2 | சி. பத்மநாதன் 28.11.2023

பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர்.வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்த...

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜபக்சாக்களும் | வீரகத்தி தனபாலசிங்கம் 27.11.2023

ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா குமாரதுங்க பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கான அரச நிலத்தை தனியார் கோல்ஃப் மைதானத்துக்கு வழங்குவதற்கு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக ஓய்வுபெற்ற இரு அரசாங்க அலுவலர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டது. பாதுகாப்பு விவகாரங்களை சரியாகக் கையாளாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொட...

இலங்கை தமிழ் பௌத்தர்கள் - பகுதி 2 | ஆங்கில மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன | தமிழில் : இரா. சடகோபன் 24.11.2023

தமிழர்களின் கிராம நிலங்களை அபகரிப்பதை நியாயப்படுத்தும் சிங்களவர்கள், அவர்களின் பூமியில் பௌத்த இடிபாடுகள் இருப்பதனை காரணமாக முன்வைக்கிறார்கள். அத்தகைய இடிபாடுகள் முதலானவற்றை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் புத்த பிக்குகள் குடியேற்றப்பட்டனர். விகாரையை மையப்படுத்தி சிங்கள பௌத்த குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. புதிதாகக் குடியேற்றப்பட்ட இந்தச் சிங்களவர்களுக்கே அப்பகுதியின் நிர்வாகமும் வழங்கப்பட்டது. பயங்க...

சைவ சித்தாந்தம் | தமிழ்ப் பண்பாடு : ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன் 24.11.2023

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அ...

பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன் 22.11.2023

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை...

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன் 21.11.2023

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின்...

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் - பகுதி 1 | சி. பத்மநாதன் 21.11.2023

மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த  சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள். அதன்படி மகிந்த தேரரின் தலைமையிலான குழு இலங்கைக்குச் சென்றது. அங்குள்ள அரசனாகிய தேவநம்பிய திஸனின் ஆதரவோடு அரண்மனையின் அருகிலுள்ள வனத்தில் மகாவிகாரை அமைக்கப்பட்டது. காவல் தெய்வங்கள் ந...

ஓயாத வன்முறை அலைகள் | கண்டிசீமை | இரா. சடகோபன் 20.11.2023

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்ப...

18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும் | யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் | இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் 17.11.2023

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த...

காடும் காடுசார் பல்வகைமையும் - பகுதி 2 | வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் | கலாநிதி. சி. ஜேம்சன் அரசகேசரி 16.11.2023

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உ...

இலங்கை தமிழ் பௌத்தர்கள் - பகுதி 1 | ஆங்கில மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன | தமிழில் : இரா. சடகோபன் 16.11.2023

எங்களது பௌத்தநூல் ‘தமிழ் பௌத்த’ நூலேயாகும். அதன்படி தென்னிந்தியாவில் வசித்த, வசிக்கிற தமிழ் பௌத்தர்களை நாம் இதுவரை சந்தித்துள்ளோம். மேலே குறிப்பிட்டுள்ளபடி தென்னிந்தியா அல்லது தமிழ்நாடு மாநிலம் தவிர இலங்கையிலேயே தமிழ் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அவர்கள் மத்தியில் தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றனரா? இதற்கு பதில் சொல்வது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஸ்ரீ லங்காவில் தமிழ் பௌத்தம் பற்றிய பரிசோதனைகளும், ஆய்...

சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி -பகுதி 2 | வி. நவரத்தினம் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் 13.11.2023

1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் - சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது.

தேசியமயமாக்கமும் அரசியல், சமூக, பொருளாதார விளைவுகளும் | கண்டி சீமை | இரா. சடகோபன் 13.11.2023

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்ப...

காடும் காடுசார் பல்வகைமையும் – பகுதி 1 | வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும் | கலாநிதி. சி. ஜேம்சன் அரசகேசரி 11.11.2023

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உ...

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் - பகுதி 01 / டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு / தமிழில் : ஜிஃப்ரி ஹாசன் 10.11.2023

இலங்கை முஸ்லிம்கள் குறித்து பண்பாட்டு மானிடவியல் ரீதியான ஆய்வுகளை மானிடவியல் ஆய்வு மரபுகளைப் பின்பற்றி முறையான பரந்துபட்ட வகையில் மேற்கொண்டவர் பேராசிரியர் டெனிஸ் மெக்கில்ரே. அமெரிக்கரான டெனிஸ் மெக்கில்ரே கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பரந்துபட்ட மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கத்தேயப் பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர் மெக...

பறங்கிப்பூசணியும் நீற்றுப்பூசணியும் | பதார்த்த சூடாமணி | முனைவர் பால.சிவகடாட்சம் 09.11.2023

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால்...

Luister naar de podcast எழுநா in Replaio

Radio en podcasts in één app - gratis en zonder account. Installeer vandaag nog en mis de lancering niet

Download het op Google Play

Replaio is geen uitgever van podcasts; namen van shows, covers en audio zijn eigendom van hun makers en worden verspreid via openbare RSS-feeds