Ezhuna

எழுநா

Society TA ↓ 949 episodi

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது. ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.

Visita il sito del podcast e sostieni chi lo crea: ezhunaonline.com

Autore

Ezhuna

Categoria

Society

Sito del podcast

ezhunaonline.com

Ultimo episodio

29 mag 2025

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-வரலாறு சொல்லும் வானுயர்ந்த சோலைகள் | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 15.07.2021

இலங்கையிலேயே அதிகளவு இயற்கைக்காடுகளைக் கொண்ட  பிராந்தியங்களுள் வடமாகாணமும் ஒன்று. வடமாகாணத்திலே வன்னிப்பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பு இயற்கையான காடுகளைக் கொண்டிருக்கிறது.  பல தசாப்தங்கள் நிலைத்து ஓய்ந்து போன யுத்தத்தைக் கூட சளைக்காமல் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்ற வானுயர்ந்த சோலைகள் இன்று என்றுமில்லாதவாறு பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.  பெருகி வரும் சனத்தொகையும் க...

வடக்கின் விருட்சங்கள் : தொலையாது காப்போம்!-மானிட வாழ்வியலில் மரங்களின் முக்கியத்துவம் | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன் 14.06.2021

இலங்கைக்குள்ளே பிரதேசத்துக்குப் பிரதேசம் வளங்கள் வேறுபட்டாலும் கிடைத்த வளங்களின் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் எம் முன்னோர் மிக உறுதியாக இருந்தனர். அதன் மூலம் தம் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முயன்றனர் என்பது கண்கூடு. அன்று அவர்கள் வேறு எதனைப்பற்றியும் யோசிக்கவில்லை.  ஏனெனில் அன்றைய சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தேவையான வளங்கள் இலங்கையில் மிகையாகவே காணப்பட்டன. ஆதலால், நிறை...

யாழ்ப்பாணமும் முஸ்லிம்களும் – பிரித்தானியருக்கு முற்பட்ட காலம் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 21.03.2021

கி.பி. 8 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதியில் இந்துப் பெருங்கடற் பகுதியில் முஸ்லிம்களான அராபிய வணிகர்களின் செல்வாக்கு இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் தென்னிந்தியக் கரையோரங்களை அண்டி இவ்வணிகர்களின் குடியிருப்புக்களும், வணிக நிலைகளும் உருவாகின. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துத் துறைமுகங்களுடனும் அவர்களுக்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். காலப்போக்கில் யாழ்ப்பாணத்திலும் துறைமுகங்களை அண...

ஒல்லாந்தர் காலமும் கத்தோலிக்கத் தேவாலயங்களும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 10.03.2021

1619 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆண்ட 39 ஆண்டுகாலம், முன்னர் வழக்கிலிருந்த பிற மதங்களை ஒடுக்கிக் கத்தோலிக்க மதத்துக்குத் தனியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமானதும் இந்த நிலை முற்றாக மாறியது. கத்தோலிக்க மதம் தடைசெய்யப்பட்டது, கத்தோலிக்கக் குருமார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இராச்சியத்திலிருந்த எல்லாக் கத்தோலிக்கத் தேவாலயங்களையு...

ஒல்லாந்தர் காலமும் இந்துக் கோயில்களும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 08.03.2021

போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இ...

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் காலக் கல்வியும், பாடசாலைகளும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 07.03.2021

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு கோயிற்பற்றுப் பிரிவுகளில் காணப்பட்ட கிறித்தவ தேவாலயங்களுடன் இணைந்ததாகப் பாடசாலைகள் இருந்தன. வலிகாமப் பிரிவில் தெல்லிப்பழை, மல்லாகம், மயிலிட்டி, அச்சுவேலி, உடுவில், வட்டுக்கோட்டை, நல்லூர், பண்டத்தரிப்பு, சங்கானை, மானிப்பாய், வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, கோப்பாய், புத்தூர் ஆகிய 14 இடங்களிலும், தென்மராட்சியில் நாவற்குழி, சாவகச்சேரி, கைதடி, வரணி, எழ...

ஒல்லாந்தர் கால நல்லூர் - 2 | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 06.03.2021

இத்தொடரில் கடந்த கிழமை வெளியான கட்டுரையில் நல்லூரில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் தொடர்பான சில தகவல்களையும், அக்காலத்துக்குரிய சில கட்டிடங்களின் எச்சங்கள் பற்றிய விபரங்களையும் பார்த்தோம். இன்றைய கட்டுரை ஒல்லாந்தர் கால நல்லூர் குறித்த மேலும் சில விபரங்களைத் தருகின்றது.

ஒல்லாந்தர் கால நல்லூர் - 1 | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 03.03.2021

நல்லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில், இன்று முத்திரைச் சந்தை என்று அழைக்கப்படும் இடத்தை அண்மித்த பகுதியிலேயே அரச குடும்பத்தினரின் மாளிகைகளும், அவை சார்ந்த பெருமளவு நிலங்களும் இருந்தன. அரச குடும்பத்தினருக்கு நெருக்கமான அதிகாரிகளின் வாழ்விடங்களும்கூட இப்பகுதியிலேயே இருந்தன. போர்த்துக்கேயர் நல்லூரைக் கைப்பற்றிய பின்னர், இந்நிலங்களில் பெரும்பாலானவை போர்த்துக்கேய அரசாங்கத்துக்க...

ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகளும், அவர்களது வழிகாட்டற் குறிப்புக்களும்-2 | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 01.03.2021

இந்தத் தொடரில் இதற்கு முன்னர் வெளியான 15 ஆவது கட்டுரையில் யாழ்ப்பாணத்தை நிர்வாகம் செய்த ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகள் சிலரைப் பற்றியும் அவர்கள் விட்டுச் சென்ற வழிகாட்டற் குறிப்புக்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் இருவர் பற்றியும், அவர்களுடைய வழிகாட்டற் குறிப்புக்கள் பற்றியும் பார்க்கலாம்.

ஒல்லாந்தக் கட்டளை அதிகாரிகளும், அவர்களது வழிகாட்டற் குறிப்புக்களும்-1 | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 28.02.2021

1658 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்த ஒல்லாந்தரின் ஆட்சி ஆட்சிப் பிரதேசம், கொழும்பு, யாழ்ப்பாணம், காலி எனும் மூன்று பகுதிகளாக நிர்வாகம் செய்யப்பட்டன. மூன்றுக்கும் பொறுப்பான ஆளுனர் கொழும்பில் இருந்தார். யாழ்ப்பாணத்திலும், காலியிலும் கட்டளை அதிகாரிகளின் (commandeurs) கீழ் நிர்வாகம் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கட்டளை அதிகாரியின் கீழ் யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதிகள் என்பவற்றுடன், வன்னிப் பகு...

யாழ்ப்பாணத்து ஒல்லாந்தர் வீடுகள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 27.02.2021

1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய கோட்டைக்குக் கிழக்கே போர்த்துக்கேயர் உருவாக்கிய யாழ்ப்பாண நகரத்தை ஒல்லாந்தர் திருத்தி மேம்படுத்தினர். இந்த நகரம் பிரதான வீதி, சப்பல் வீதி, வங்கசாலை வீதி, ஒன்று தொடக்கம் நான்கு வரை எண்ணிடப்பட்ட குறுக்குத் தெருக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய நகரம் என்பதையும் இத்தொடரின் இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். பிரதான வீதியின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனையவை கு...

ஒல்லாந்தரின் கோட்டைத் தேவாலயம் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 26.02.2021

கோட்டைக்குள் ஒல்லாந்தர் கட்டிய கிறித்தவ தேவாலயம் குறித்து ஏற்கெனவே இந்தத் தொடரில் சில தகவல்களைப் பார்த்தோம். இதுபற்றிய சற்று விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம். இந்தத் தேவாலயம், ஒல்லாந்தர் அரசில் தலைமை நிலஅளவையாளராக இருந்த மார்ட்டினஸ் லியூஸ்காம் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. இது தற்போது அழிபாடுகளின் ஒரு குவியலாகவே காணப்படுகின்றது. இந்தத் தேவாலயம் உள்நாட்டுப் போர்க் காலத்தில...

ஒல்லாந்தரின் யாழ்ப்பாண நகரம் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 25.02.2021

ஒல்லாந்தர் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் தமது தலைமையிடத்தை யாழ்ப்பாண நகரத்திலிருந்து வேறிடத்துக்கு மாற்றுவது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்றதாகத் தெரிகின்றது. இதனால் முதற் சில ஆண்டுகள் போர்த்துக்கேயருடைய கோட்டையையே ஒல்லாந்தர் பயன்படுத்திவந்தனர். மிக அவசரமான திருந்த வேலைகளையும், பாதுகாப்புக்கு அவசியமான குறைந்தளவு மேம்பாடுகளையுமே செய்யலாம் என்ற உத்தரவும் மேலிடத்த...

பல்தேயஸ் பாதிரியாரும் யாழ்ப்பாணமும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 24.02.2021

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்க காலம் தொடர்பான யாழ்ப்பாணத்து வரலாறு பற்றியும், அக்காலத்துச் சமூக நிலை பற்றியும் பதிவு செய்த முக்கியமான ஒரு ஆளுமை ஒல்லாந்தப் பாதிரியார் பிலிப்பஸ் பல்தேயஸ் ஆவார். “கிழக்கிந்தியாவின் பெயர் பெற்ற மலபார், கோரமண்டல் கரையோரப் பகுதிகளினதும், இலங்கைத் தீவினதும் உண்மையானதும், துல்லியமானதுமான விபரங்கள்” என்பது ஒல்லாந்த மொழியில் அவர் எழுதிய நூலின் தலைப்பின் தமிழாக்கம். பல்த...

ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டை | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 23.02.2021

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது பண்ணைப் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டியிருந்தனர். இது நான்கு மூலைகளிலும் கொத்தளங்களைக் கொண்ட நாற்பக்க வடிவம் கொண்டது. இதன் சுவர்களும் பலம் வாய்ந்தவையாக இருந்தன. சுவருக்கு வெளியே கோட்டையைச் சுற்றி நீரில்லாத அகழி இருந்தது. இது, கிழக்கத்திய நாடுகளில் ஒல்லாந்தரின் தலைமையிடமாக விளங்கிய பத்தேவியாவில் (இன்றைய ஜக்கார்த்தா) இருந்த கோட்டையை விடப் பெரியது என பல்டேயஸ் பா...

ஒல்லாந்தருக்கு எதிரான சதியும் பூதத்தம்பி கதையும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 22.02.2021

ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை 1658 யூன் மாதத்தில் கைப்பற்றிச் சில வாரங்களில், இந்தப் படை நடவடிக்கையில் பங்குகொண்ட பெரும்பாலான ஒல்லாந்தப் படையினர் நாகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கோட்டையின் பாதுகாப்புக்குக் குறைந்த அளவு படையினரே இருந்தனர். முன்னைய அரசில் பணிபுரிந்த போர்த்துக்கேயர் சிலரும் ஒல்லாந்தருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில...

ஒல்லாந்தரின் யாழ்ப்பாண வெற்றி | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 20.02.2021

1940 களில் இருந்தே இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் இருந்த நகரங்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டன. 1956 ஆம் ஆண்டில் கொழும்பும் வீழ்ச்சியடைந்த பின்னர், ஒல்லாந்தரின் கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கொழும்பிலிருந்து வெளியேறிய போர்த்துக்கேயப் படை வீரர்களில் ஒரு பகுதியினர், போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவிய கடைசி நகரமான யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தனர்...

குவைரோசின் நூலும் யாழ்ப்பாணமும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 19.02.2021

இலங்கையின் வரலாறு தொடர்பில், போர்த்துக்கேயப் பாதிரியாரான பெர்ணாவோ டி குவைரோஸ், “இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி” (Temporal and Spiritual Conquest of Ceylon) என்னும் நூல் மிகவும் முக்கியமானது. இலங்கை வரலாற்றைப் பொறுத்த அளவில், மகாவம்சத்துக்கு அடுத்ததாகப் பெறுமதி வாய்ந்த நூலாக இதைக் கருதலாம் என இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். போர்த்துக்கேய மொழியில் எழு...

போர்த்துக்கேயர் காலத் தேவாலயங்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி போர்த்துக்கேயரின் கையில் இருந்த 38 ஆண்டுகாலத்தில் கத்தோலிக்க மதத்துக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதற்கு அரசாங்க ஆதரவும் இருந்தது.  அப்போதைய யாழ்ப்பாண நகரில் பல கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை 1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவானவை. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறித்தவ சபைகளைச் சேர்ந...

பிலிப் டி ஒலிவேராவும் யாழ்ப்பாண நகரமும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

1618 – 1622 காலப் பகுதியில் இலங்கையில் இருந்த போர்த்துக்கேயப் பகுதிகளுக்கான ஆளுனராகப் பதவி வகித்தவன் கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோஞ்ஞா (Constantino de Sá de Noronha) என்பவன். இலங்கையில் போர்த்துக்கேயரின் நலன்களை விரிவாக்குவதில் இவன் தீவிரமாக இருந்தான். இவனது திட்டங்களின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண இராச்சியத்துக்கு அனுப்பப்பட்டவனே பிலிப் டி ஒலிவேரா. யாழ்ப்பாண அரசனிடமிருந்து வரவேண்டியவற்றை அறவிடுவதற்காக எ...

போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புக்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்றும், அதன் பின்னரே யாழ்ப்பாண நகரம் உருவானது என்றும் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய கட்டுரையில் காணும் விடயங்கள் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுக்குள் அடங்கவில்லை. எனினும், யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த  போர்த்துக்கேயச் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித...

யாழ்ப்பாண நகருக்கு முந்திய தலைநகரங்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 1918 இலும் பின்னர் 1970 ஆம் ஆண்டிலும் கந்தரோடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் அப்பகுதியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததைக் காட்டின. இதன் அடிப்படையில் ஏறத்தாழ 13 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடியேற்றங்களுக்கான தலைமை இடமாகக் கதிரமலை என அழைக்கப்பட்ட கந்தரோடை விளங்கி...

அழிந்துவரும் மரபுரிமைச் சின்னங்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

நவீன யாழ்ப்பாண நகரம் 400 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய யாழ்ப்பாண நகருக்குள் இருக்கக்கூடிய பல இடங்களில் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித நடவடிக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சில வரலாற்றாளர்களின் கருத்துப்படி நல்லூர் இற்றைக்கு ஏறத்தாழ 750 ஆண்டுகள் முன்பிருந்தே யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக விளங்கியுள்ளது. அண்மையில் கிடைத்த அகழ்வாய்வுச் சான்றுகளின் அடிப்படையில், இன்றைய யாழ் கோ...

400 ஆவது ஆண்டு நிறைவு | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை 29.01.2021

இலங்கைத் தமிழரின், குறிப்பாக வடபகுதித் தமிழரின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு நகரம் யாழ்ப்பாணம். 1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1621 ஆம் ஆண்டு, அப்போது இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைக் கைவிட்டு இன்று கோட்டை இருக்கும் பகுதிக்குத் தமது தலையிடத்தை மாற்றினர். இந்த நிகழ்வே வட இலங்கையின் முதன்மை நகரமாக யாழ்ப்பாணம் உருவானதன் தோற்றுவாய் ஆகும். இதைத் த...

Ascolta il podcast எழுநா su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici