Kamaraj J

குறிஞ்சி மலர்

Arts TA ↓ 203 episodi

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Autore

Kamaraj J

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

21 mag 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

கு ப ராஜகோபாலன் சிறுகதைகள்- முன்னுரை -பகுதி -2 16.10.2021

1930களிலேயே பாரதியின் புலமை குறித்து அக்கால அறிஞர்கள் பத்திரிகைகள் வழியே நடத்திய இலக்கிய போர், பாரதி சங்கம் நிறுவி பாரதி படத்தை enlarge செய்து விழா எடுக்கப்பட்டது, ,முழு நேரமும் எழுத்து என்பதில் சமரசம் செய்யாத தமிழார்வம், திருவல்லிக்கேணி கடற்கரை அலையையும் விஞ்சிய வ ரா தலைமையிலான தமிழறிஞர் வாதங்கள் என பாரதி மறைந்த பிறகும் ஓயாத தாய் மொழியின் மறுமலர்ச்சி நடவடிக்கைகளை, கு ப ராவின் வாழ்க்கை குறிப்பினூட...

கு ப ராஜகோபாலன் சிறுகதைகள் - முன்னுரை -பகுதி -1 10.10.2021

தமிழ் சிறுகதை வடிவத்தை பிரபலப்படுத்திய முன்னோடி எழுத்தாளர் கு ப ரா. 42 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தமிழ் இலக்கிய சான்றோர் பாடி பரவும் எழுத்துவன்மைக்கு சொந்தக்காரர். கு ப ரா ஊக்கப்படுத்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான சிட்டி, ஒரு பதிப்பில் வழங்கிய முன்னுரை, கு ப ராவின் வாழ்க்கை குறிப்பாகவே நம் அகத்தில் விரிகிறது.

மூலக்கனல்- நாவல்-நா.பார்த்தசாரதி-பகுதி-5 16.06.2021

பண்பாடும், மனப்பக்குவமும் இல்லாதவனுக்கு வரும் பதவிகளும் புகழ், பொருளாதார வளர்ச்சிகளும் அவனைத் தாறுமாறாகச் சீரழிக்கும். குரங்கு கைப் பூமாலையில் உள்ள பூக்கள் போல இங்கிதம், மென்மை, சகிப்புத்தன்மை என்ற அம்சங்கள் எல்லாம் அவனிடம் உருக்குலையும். - நா.பார்த்தசாரதி

மூலக்கனல்-நாவல்- நா.பார்த்தசாரதி-பகுதி-4 09.05.2021

மாற்றுக்கருத்தை கண்ணியமாக முன்வைப்பது, ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஏற்புடையது, அத்துமீறல் சரியல்ல என்பதாக ஒரு விவாதம் இப்பகுதியில். திருமலை பலரையும் கவரக்கூடிய பேச்சாற்றல் படைத்தவனாக ஏற்றம் பெறுகிறான். புகழ்மரத்தின் உச்சியில் கிறங்குகிறான். பேர் எடுக்கும் ஆர்வம் கரைபுரள்கிறது....

மூலக்கனல்-நாவல்-நா.பார்த்தசாரதி-பகுதி-3 06.05.2021

உள்பட்டணத்துக்காரர்களின் வன்முறையால் நிலைகுலைந்து, பின்னர் உடல்நலம் தேறி, அதே ஊரில் அவமானப்படுத்தியவர்கள் முன் எழுச்சியோடு வாழ்ந்து காட்ட முனைகிறான் திருமலைராஜன். சுயமரியாதை இயக்க பொன்னுசாமி அண்ணனின் அரவணைப்பில் வெட்டரிவாள் மீசையோடு காண்பவர் அஞ்சும் தோற்றத்தோடு உயர்கிறான். சண்பகத்தின் தர்ம சங்கடத்தையும் தீர்க்கிறான். பூரணசுதந்திர கோரிக்கை எழுந்த வேளையில், தென்னாட்டை திராவிடநாடாக ஆங்கிலேயருக்கு கீழ...

மூலக்கனல்- நாவல்-நா. பார்த்தசாரதி-பகுதி-2 03.05.2021

1970களில் வெளியான ஆன்மாவின் ராகங்களில் சுதந்திர இந்தியாவின் முதல் இருபது வருடங்களில் வாழ்ந்த காந்தியவாதியின் சமூக பங்களிப்பை சிறப்பாக பதிவுசெய்த ஆசிரியர், அதற்கு பிந்தைய கால அரசியலை 1985ல் வெளியான மூலக்கனலில் பதிவு செய்திருக்கிறார் என நம்பும்படியான ஒரு முன்னுரையை இந்நாவலுக்கு எழுதியுள்ளார்..உண்மையில் , 1940களில் சுயமரியாதைக்காரனாக வாழ்வைத் துவங்கி படிப்படியாக , அரசியல் பாதையில் பயணப்படும் ஒருவனின்...

மூலக்கனல்- நாவல்- நா.பார்த்தசாரதி-பகுதி-1 28.04.2021

உப்பு சத்தியாகிரகம் துவங்கி 1970 வரையிலான காலக்கட்டத்தையும், காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட இரண்டு சகாப்தங்களையும் தமது ஆன்மாவின் ராகங்கள் நாவல் மூலம் நா பார்த்தசாரதி படைத்திருந்ததை பதினைந்து பகுதிகளாக நாம் கேட்டோம்..விட்ட இடத்தில் துவங்கலாம் என எண்ணி ஒரு நாவலைப் படைப்போம் என்று ஆசிரியர் முயன்றிருப்பார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 1970களுக்கு பிந்தைய தமிழக அரசியல்களத்தை பிரதிபலித்து கற்பனையாக படைத...

நிர்விகற்ப சமாதி- சிறுகதை -புதுமைப்பித்தன் 19.04.2021

இருபத்தைந்து - ஐம்பது காசுக்கு தபால் அட்டை விற்ற காலத்தை சேர்ந்தது நம் பால்யம். அதே அட்டை முக்காலணாவுக்கு விற்ற காலத்து கதை. ஊர்க்காரர்களுக்கு தபால் எழுதி உதவி செய்யும் போஸ்ட் மாஸ்டர். முக்கியஸ்தர்களுக்காக கடிதம் எழுத ஆங்கில மொழி பழக்கம் உடைய ஒரே படிப்பாளி. ஊரார் கடிதங்களை படிப்பதையும் பிழைப்பாகக் கொண்டுள்ள ஒருவர். சிறப்பான படங்கள் போட்ட காலண்டர்கள் வீடுதேடி வருவதால் அந்தஸ்தில் உயர்ந்து நிற்கும் ம...

நிகும்பலை - சிறுகதை - புதுமைப்பித்தன் 17.04.2021

சர்வ வல்லமைகளை பெறுவதற்கு இந்திரசித் செய்த நிகும்பலை யாகத்துடன் பரீட்சைகளை ஒப்பிடும் ஆசிரியர், 1940களிலேயே பிஏ பரீட்சைக்கு இறுதிராத்திரியில் படிக்கும் பழக்கத்தையும், புகைப்போட்டுக்கொண்டே பரபரப்புடன், குழு ஸ்டடியாக, நோட்ஸ்களை இரவல் வாங்கிப் படிக்கும் நுணுக்கமான சுவராஸ்யங்களையும் பட்டியலிடுகிறார்.. கல்லூரியை கலாசாலை என்றே குறிப்பிட்டாலும், அதற்கே உரித்தான ஆங்கில வார்த்தைகளை தூவிப்பேசும் உரையாடலை, உள...

நன்மை பயக்குமெனின்- சிறுகதை - புதுமைப்பித்தன் 28.03.2021

குற்றமற்ற நன்மையை தருமானால் பொய்யும் வாய்மையே என பொய்க்கும் அங்கீகாரம் கிடைத்தாலும், காலப்போக்கில் அதன் பரிமாணங்கள் வேறுபட்டு, வாய்மையை நகைப்புக்குள்ளாக்குவதை, சிறப்பான பாத்திரப்படைப்புகளால் இக்கதையில் நிறுவுகிறார் ஆசிரியர். பக்திக்கும் படிப்புக்குமே சம்பந்தமில்லாத பொய்மைகளினூடே, கட்டுக்கோப்போடு ஓடும் தன்மையுடையதாய் சமூகம் பரிணாம வளர்ச்சி பெற்று தம்மை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் 😂 என்பதை எண்பத...

நம்பிக்கை -சிறுகதை- புதுமைப்பித்தன் 25.03.2021

நம்பிக்கையெனும் பிரமை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ள வேறு என்ன இருக்கிறது..என அன்றாட வாழ்வில் காணும் விளிம்புநிலை மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் ஆசிரியர்...பட்டணத்து பரபரப்பில், மனிதர் இழக்கும் சிறு சிறு சந்தோஷங்களை காட்சிப்படுத்தும் வகையில், எளியோரின் வாழ்நிலையையும் சுட்டுக்காட்டி நம் மனத்தை லேசாக்குகிறார் புதுமைப்பித்தன். நாஸுக், ஹம்பக், ஜோர், அகஸ்மாத்தாக உள்ளிட்ட வார்த்தைகள் 1...

மனநிழல்-சிறுகதை-அவளும் அவனும் தொகுப்பு- புதுமைப்பித்தன் 22.03.2021

தலைவன்-தலைவி இடையேயான பரஸ்பர எதிர்பார்ப்புகள், அன்பு பாராட்டல்கள் சங்கப்பாடல்கள் மூலம் நமக்கு பரிச்சயமே...இக்கதையிலும் நிகழ்கால தலைவன் வரவு நோக்கிய தலைவியின் மனஓட்டங்கள்... அவள் உள்ளக்குமுறலை உணர்ந்தவனாயினும், ஏற்க இயலாத தலைவனின் வாதங்கள் என இருவரின் , தன்னிலைவிளக்கங்களாக இக்கதை விரிகிறது...

மகாமசானம்- சிறுகதை- புதுமைப்பித்தன் 12.03.2021

நகரத்தவர்கள் மிகவும் அலட்சியமாக கடந்து செல்லும் நிகழ்வை, ஒரு குழந்தையின் அன்பு பாராட்டல் மூலம் அர்த்தமுள்ளதாக்குகிறார் ஆசிரியர் . குழந்தையின் மாசற்ற வாஞ்சையில் நம்மை நனைக்கும் ஆசிரியர், சக மனிதரின் மீது சற்றும் ஈரமும் இரக்கமும் இல்லாத பட்டணத்தவரின் அவசர போக்கை பரிகாசம் செய்கிறார். கதைக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு, பட்டணத்து வாழ்வு குறித்த நம் அபிப்ராயத்தை தகர்க்கிறது.

கயிற்றரவு-சிறுகதை- புதுமைப்பித்தன் 13.02.2021

படைப்பு- உலக இயக்கம்- இருப்பு குறித்த ஆராய்ச்சிகள்-விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன. இருப்பை சமவாப்போடு சிறப்பாக்கிக் கொள்ள பூமியில் மனிதர்களின் போராட்டங்களும் முடிந்தபாடில்லை....கடந்த நூற்றாண்டின் முதல்பாதியில் எழுதப்பட்ட இந்த கதை படைப்பு உள்ளிட்டவை குறித்த புதுமைப்பித்தனின் புரிதல்களாக விரிகிறது... 🙏

அகல்யை -சிறுகதை -புதுமைப்பித்தன் 02.02.2021

1934-ல் எழுதப்பட்ட இந்த சிறுகதையில் கற்புநெறி குறித்த தம் கருத்தை ஆழமாக பதிந்துள்ளார் ஆசிரியர்.

கடிதம் -சிறுகதை -புதுமைப்பித்தன் 09.01.2021

படைப்பாளிகளை அவர்களின் காலத்திலேயே சமூகம் அங்கீகரிக்க சிரமப்பட்டாலும், தவறியிருந்தாலும், அவர்களின் எழுத்தின் வீர்யமும், வீச்சும், விஸ்வரூபமும் சற்றும் குறையவில்லை. அந்த படைப்புகள் தொய்வோ, சோர்வையோ பதியாமல், நம்பிக்கையையும், எழுச்சியையுமே விதைத்து செல்கின்றன... எதிர் வரும் சந்ததியினருக்காக... படைப்பாளிகளை அவர்கள் காலத்திலேயே சரிவர அடையாளம் கண்டு அரவணைத்திருந்தால்.? கோழைத்தனத்தை பிறப்புரிமையாக கொண்ட...

பயம்- சிறுகதை- புதுமைப்பித்தன் 05.01.2021

பயம்... இந்த உணர்விற்கு எதிர்வினை நடவடிக்கைகள் , இன்று வரை மனிதர்களை பாடாய்ப் படுத்தும் எல்லையில்லாத நீட்சியாய் தொடர்கின்றன......மிருகங்கள் நம்மைவிட மிகக்குறைவாகவே பயப்படுவதாக தோன்றுகிறது ...😄 பயம் - 'உணர்வு' என்ற அங்கீகாரத்திற்கே அடிப்படை இல்லாத ஒன்று...என்ற எண்ணம் எழுகிறது... இந்தக் கதை முடிவில்... யாரும் எதிர்பார்த்திராத இரு கதாபாத்திரங்களும், விவரிப்புகளும், ஆசிரியரின் உண்மை வாழ்க்கைச் சம்பவம...

மனித யந்திரம் - சிறுகதை - புதுமைப்பித்தன் 02.01.2021

சாட்சி இல்லாத இடத்திலும் நேர்மையை கடைபிடிப்பதுதான் ஒழுக்கம் என்ற கவிஞர் வைரமுத்துவின் விளக்கம் சிறப்பு. சாமான்யரின் வாழ்வில்தான் இந்த ஒழுக்க நோக்கு ஒரு இயல்பான நடைமுறையாக - அற வாழ்வாகவே அமைந்துவிடுகிறது. தவறுவதற்கான வாய்ப்புகள் அமைந்தாலும், யதார்த்த வாழ்வின் கட்டுப்பாடுகள் , சாமான்யர்கள் அத்துமீற இடம்கொடுப்பதில்லை. தவறுபவர்களும், அத்துமீறுபவர்களும் எத்தகையவரோ...!? ஒரு பின்னிரவில் மீனாட்சிசுந்தரம்...

இரண்டு உலகங்கள்-சிறுகதை-புதுமைப்பித்தன் 06.12.2020

தர்க்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு அறிவியல்வாதியை மணந்த ஏகதேசக்கல்வி(ஆசிரியர் வாக்கில்) பெற்ற ஒரு மனைவி..அவர்களின் நீ.....ண்ட குடும்பவாழ்வின் ஒரு நாள் நிகழ்வு...😌😌🙏

'இந்தப் பாவி' - சிறுகதை - புதுமைப்பித்தன் 05.12.2020

ஒரு திரைப்படத்திற்கான முழு களத்தையும் , சிறுகதையில் கொண்டு வர முடியும் எனில் இந்தக்கதையை தாராளமாக உதாரணமாக சொல்லலாம். அதிலும் 1955ல் , flashback உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டதோடு, climaxஐயும் எதிர்பாராத வகையில் முடித்திருக்கிறார் ஆசிரியர். முக்கியமாக,ஆசிரியர் விவரிக்கும் கல்லூரி வாழ்வும், காதலர் நிலையும் பெரிதாக இன்றும் மாற வில்லை என்பது இருவேறு ஆச்சர்யங்கள்- முந்தையது சிறப்பு ... இரண்டாவது வருத்...

ஆற்றங்கரைப் பிள்ளையார் -சிறுகதை- புதுமைப்பித்தன் 30.11.2020

நாகரீகக் காட்டாற்று வெள்ளத்தால் , காலந்தோறும் இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்களை உருவகங்களாலும், குறியீடுகளாலும் விளக்கிக்கொண்டே போகிறார் ஆசிரியர். வாசிப்பவருக்கு பல்வேறு புரிதல்கள். புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை எனக் கூறப்படுகிறது. மணிக்கொடி- 1934

ஆண்மை - சிறுகதை - புதுமைப்பித்தன் 27.11.2020

குழந்தைத் திருமணத்தை பொம்மைக் கல்யாணம் என சாடி, பெரியோர்களின் வறட்டு கெளரவமும், வீம்பும் எப்படி ஒத்த மனதுடையவரை சிதைக்கிறது என்பதையும், நம்பிக்கைத் துரோகத்தையும் கடுமையாக தூற்றுகிறார் ஆசிரியர். ஆசிரியரின் திருமணம் குறித்த விளக்கம், 1930 நாவல்களின் பிரம்மசமாஜ திருமணம், சென்னை சிறுவர்களின் 'காலித்தனம்' முதலியவையும், நோணாவட்டம், க்ஷாத்திரம், சென்னை அவசரம் உள்ளிட்ட பிரயோகங்கள் கவனிக்க வைப்பவை...மணிக்க...

காலனும் கிழவியும்-சிறுகதை-புதுமைப்பித்தன் 22.11.2020

காலனைப் பற்றிய கவலையே இல்லாமல் வாழும் ஒரு கிழவியை , ஊருக்கு மூத்தவள் என்பதால் அழைத்து செல்ல எமதர்மனே வருகிறான்... கிழவியிடம் பலிக்குமா அவன் வித்தை? கேட்போமே...🙏😀😀😀

ஒரு நாள் கழிந்தது- சிறுகதை- புதுமைப்பித்தன் 20.11.2020

தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்,எனக்கு காகிதம் வாங்க காசு கிடைக்கும் என்ற அளவிற்கு, ஏழ்மைப்பட்டு பத்தாத குடித்தனம் பண்ணும் சென்னை எழுத்தாளர், தேயிலைக்கும் , லேகியத்திற்கும் விளம்பர வாசகங்களை எழுதி பிழைத்து வருகிறார்... நாள் ஒன்று யுகமாக கழியும் ஒட்டுக்குடித்தனம். சீலைப்பேன் குத்தற பிசினஸ் வந்தாலும், வயிற்றுக்காக செய்வேன், அவன் சங்காத்தமே வேண்டாம், கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் போல, பயலுக்கு நூ...

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்- சிறுகதை- புதுமைப்பித்தன் 19.11.2020

ஒரு நாள் மனுசனா வாழ்ந்து பாரும்யானு சொடக்குக் கூட போடாத அளவுக்கு பக்குவமா வாழப் பழகிவிட்ட ....அதுவும் சென்னையில் வாழப்பழகிவிட்ட... மாமனிதராய் கந்தசாமிப்பிள்ளை... அவரிடம் தெரியாமல் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் கடவுள்... One trip பூலோக விஜயத்தில்... 1943ல் எழுதப்பட்ட கதையா இது என புதுமைப்பித்தனின் சனரஞ்சக நடைக்கு தலைவணங்கத் தோன்றும்... அவ்வளவு யதார்த்த நடை... நய்யாண்டி... நக்கல்... முக்கியமாய்... நடுத...

Ascolta il podcast குறிஞ்சி மலர் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici