Kamaraj J

குறிஞ்சி மலர்

Arts TA ↓ 203 episodi

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Autore

Kamaraj J

Categoria

Arts

Sito del podcast

podcasters.spotify.com

Ultimo episodio

21 mag 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

நாயன்மார் வரலாறு -தில்லைவாழ் அந்தணர் - திருநீலகண்டர் 01.10.2023

சுந்தரமூர்த்தி நாயனார் படைத்த திருத்தொண்ட தொகை வரிசை கிரமப் படி தில்லைவாழ் அந்தணர் பெருவாழ்வை தொடர்ந்து, திருநீலகண்டத்தின் மீதான சத்தியத்தினால், தொட்டுக் கொள்ளாமலேயே இளமை கடந்து முதுமை அடைந்த திருநீலகண்ட நாயனார் மற்றும் அவர் மனைவியின் பக்திநெறியைக் காண்போம்.

நாயன்மார் வரலாறு-10-சுந்தரர்-6 19.09.2023

நாவலூர் நண்பனுக்காக பரவையாரின் சினம் தணிக்க, தூது செல்கிறார் பரமன்... ஆரூர் செல்வியின் ஆற்றாமையை போக்க வல்லவர் யார்?

நாயன்மார் வரலாறு -9-சுந்தரர் -பகுதி -5 13.09.2023

சிவாலயங்களை தரிசித்தவாறே திருவொற்றியூர் வந்தடையும் சுந்தரர் இறைவன் விருப்பப்படி சங்கிலியாரை மணம் முடிக்கிறார். சங்கிலியாரை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த சுந்தரர் திருவாரூர் செல்ல எத்தனிக்கிறார். சத்தியத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்.

நாயன்மார் வரலாறு -8-சுந்தரர்- பகுதி -4 06.08.2023

திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் பொன்னெடுப்பதை தடுத்து பரவையாரின் நகைப்புக்கு சுந்தரரை ஆளாக்குகிறார் ஆரூரார். ஊரெங்கும் ஈசனை வணங்கி பதிகங்கள் படைக்கும் சுந்தரர், சங்கிலியார் பொருட்டு இறைவனார் திட்டப்படி தொண்டை வள நாட்டு திருக்கோயில்களை தரிசித்து திருவொற்றியூர் நோக்கி செல்கிறார்

நாயன்மார் வரலாறு -7 -சுந்தரர் -பகுதி -3 22.07.2023

ஆரூரில் சுந்தரருக்கும், பரவையாருக்கும் மணக்கோலம் கூட்டுவித்து ஆட்டுவிக்கும் எம்பெருமான், அடியவர் பெருவாழ்வை திருதொண்டந்தொகையாக படைக்க ஆணையிடுகிறார். ஊர்தோறும் அரன் புகழ் பாடி தொழும் சுந்தரர்,முதுகுன்றூர் - விருத்தாசல மணிமுத்தாற்றில் ஐயன் தந்த பொற்காசுகளை வீசி, திருவாரூர் திருக்குளத்தில் பெற்றுக்கொள்ள்ளுமாறு அசரீரி ஒலிக்கிறது...

நாயன்மார் வரலாறு-6-சுந்தரர் -பகுதி -2 23.06.2023

தடுத்தாட்கொண்ட தயாளன் கட்டளையால், கெடிலம், பெண்ணை, கொள்ளிடம் கடந்து காவிரி பாயும் ஆரூர் செல்கிறார் நம்பி ஆரூரர். சுந்தரர், சம்பந்தர் பூமியிலே கால் வைக்க தயங்கி, எல்லையில் தங்கி, தில்லை அம்பல தரிசனதோடு , சீகாழி, மாயூரம் வழி ஆரூர் அடைகிறார். சிவனடியார் சூழ, தம்பிரான் தோழனாகி பிறவிப் பயன் பெறுகிறார் அண்ணல்- விடங்கன் கட்டளையால் மணக்கோலமும் தரிக்கிறார்.

நாயன்மார்கள் வரலாறு -5- சுந்தரமூர்த்தி- 1 25.04.2023

ஆலால சுந்தரமூர்த்தி மண் வாழ்வில் மணமுடிக்கும் பொழுதிலே, தன் மயமாக்கிக் கொள்ளும் தகைமையனாய் தாண்டவமூர்த்தி திருவிளையாடல் புரிகிறார்...

வாழ்க்கைக்கே ஒரு நாள் - சிறுகதை- கு ப ரா -ஆனந்த விகடன் -1943 21.04.2023

சிறு சிறு ஆசைகளையும், அவைகளை உரியவர்கள் அங்கீகரிப்பதிலுமே இல்லறம் நல்லறமாய் மேன்மையுறும். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை ஆசிரியர் தலை தீபாவளி நிகழ்வால் உணர்த்துகிறார்.

இன்பத்தொல்லை - சிறுகதை - கு ப ரா -1943 19.04.2023

'என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ' என்ற எள்ளலான சம கால நகைச்சுவை, கால எல்லைக்கு அப்பாற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? கு ப ரா- வின் 1943 ஆம் ஆண்டு சிறுகதையை கேளுங்கள்...

நாயன்மார்கள் வரலாறு -4 - மனுநீதி சோழனின் மாண்பு 08.04.2023

சோழ வளநாட்டின் கீர்த்திகளுள் முதன்மையானது அற வழியில் குடி காத்தல். அவ்வகையில் ஆரூர் ஆண்ட மனுநீதி சோழனின் அற வாழ்வை கூறும் பகுதி...

நாயன்மார்கள் வரலாறு- 3 நம்பியும் திருமுறையும் 03.04.2023

திருநாரையூர் நம்பிகள் தொகுத்தளித்த சைவத் திருமுறைகள் காலங்கடந்து விளங்குகின்றன. அருள் பெற்ற நம்பியிடம் இந்த திருப்பணி சேர்ந்த சுவையான பின்புலம்.... தில்லையம்பலத்தில்... திருவிளையாடலாக...

எவன் பிறந்திருக்கின்றானோ? கு ப ரா -சிறுகதை 30.03.2023

பெண் வாழ்வின் வெற்றி , உரிய வயதில், ஒரு ஆண்மகனை கல்யாணம் முடிப்பதில் உள்ளது என்பது முக்கிய சமூக நியமமாக இருந்த காலத்திய கதை. எண்பது ஆண்டுகளில் இந்நிலையில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், அத்தகைய மனப்பாங்கை மிகச் சரியாக படம்பிடித்து காட்டியுள்ள ஆசிரியருக்கு ஒரு சலாம்!

நாயன்மார் வரலாறு - 2 ஆலால சுந்தர மூர்த்தி 24.03.2023

பேரொளிப் பிழம்பான சிவபெருமானின் அம்சமாகவே திகழும் சுந்தரர், திருக்கயிலைக்கு திரும்பி வரும் அழகு அற்புதமாய் மலர்கிறது . சுந்தரரின் பூலோக விஜயதின் பின்புலமும் சுருக்கமாக. அருள் பெற்ற ஆன்ம எழுத்தால் தமிழ் ஆன்மிக இலக்கியங்களை அமரத்துவம் பெறச் செய்த நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள் மற்றும் நர்மதா நிறுவனத்தாரின் சிவத்தொண்டை போற்றுவோம். ஓம் நமசிவாய!

நாயன்மார்கள் வரலாறு -1 - சேக்கிழார் கீர்த்தி 09.03.2023

பக்தி இலக்கியங்களில் மிக முக்கிய இடம் நாயன்மார்கள் வரலாற்றுக்கு உண்டு. அநபாய குலோத்துங்க சோழனின் வேண்டுகோளுகிறங்கி, மிகுந்த முயற்சிக்கு பிறகு சேக்கிழார் திருத்தொண்டர்களின் பெருவாழ்வை தொகுத்து, தில்லையில் ஒரு வருட காலம் அவற்றை நாள்தோறும் விரித்து பொருள் நயம் உரைத்து, பொது மக்களையும் சான்றோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த நிகழ்வுகளின் சுருக்கமாக இப்பகுதி அமைந்துள்ளது. அறுபத்து மூவர் கதை...

பிராப்தம் - சிறுகதை -கு ப ரா - நவசக்தி-1943 22.02.2023

சிறுவயது முதலே முறைப்பெண், மாமன் எனக் கூவி, இளம் நெஞ்சில் ஆசை வளர்த்து, பின் ஜாதகக் காரணம் காட்டி பிரிப்பது பெரியவர்களின் மிகப்பெரும் குற்றம் என்று நிறுத்தாமல், பிராப்தம் என்று அந்த வஞ்சகத்திற்கு நியாயம் கற்பிப்பதா என்று சாடுகிறார் ஆசிரியர். இள மன ஓட்டங்களை மிக நுட்பமாக 1940களிலேயே சிறுகதை வடிவில் விவரித்த ஆசிரியரின் எழுத்து வன்மை மிகச் சிறப்பு...

என்ன வேண்டும்? - கு ப ரா = கலைமகள் -1943 14.02.2023

குடும்பச் சூழலில், யாருக்காக யார் விட்டுக்கொடுப்பது, எதற்காக என்பதில் நீடிக்கும் குழப்பத்திற்கும், தெளிவிற்கும் இடையே நடப்பவை ஒவ்வொருக்கும் ஒருவகை தனி அனுபவம் எனலாம். குறிப்பாக பெண் என்பதற்காக முதலில் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று அன்றைய சூழலிலேயே கேள்வி எழுப்பியுள்ளார் ஆசிரியர்.

யார் மேல் பிசகு? - கு ப ரா - கலைமகள் -1943 03.01.2023

இல்லற உன்னதத்தையும், நட்பின் அருமையையும் ஒரே கதையில் மிக எதார்த்த சம்பவத்தால் உணர்த்துகிறார் கு ப ரா.

உண்மைக்கதை- சிறுகதை - கு ப ரா- கலாமோகினி -1942 23.12.2022

உண்மைக்கதை என்ற தலைப்பில் உண்மைக்காதல் எது என புதிர் போட்டு பின் விளக்குகிறார் கு ப ரா. காதல் என்ற பெயரில் கண்டதை எழுதும் போக்கை அன்றே சாடியுள்ளார்.

சந்திப்பு - சிறுகதை -கு ப ரா - கலைமகள் -1942 04.12.2022

வாழ்வின் போக்கு பல சமயங்களில், மனிதர்களின் அபத்தங்களால் விளைந்த கூட்டு வினையாய் இருக்கிறது. சில சமயங்களில் காலத்தின் பிடியில்... எதிர்பாரா திருப்பங்களும் நிகழவே செய்கின்றன.

விபரீதக் காதல் -சிறுகதை -கு ப ரா -ஹிந்துஸ்தான் -1940 24.11.2022

நிலையாமை தத்துவத்தை ஒரு பொருந்தாக் காதலால் விவரிக்க முற்படுகிறார் ஆசிரியர். ஒரு மட மாதும்... என்ற பட்டினத்தார் பாடல் உணர்த்தும் உண்மையை போல்...

வேறு நினைப்பு - கு ப ரா -கல்கி -1943 12.09.2022

குடும்ப விவகாரங்களில் ஒட்டுதலின்றி உப்பு சப்பில்லாதவராய் இருப்பவரையும் அவர்களை பொறுத்துக் கொள்ளும் அன்புடையவரையும் காணலாம் இக்கதையில்...

மகாபோதம் - கு ப ரா சிறுகதைகள் -ஹனுமான் ஆண்டு மலர் -1939 29.08.2022

அரவணைப்பின் - அன்பின் இதத்தில் தான் பூமிப்பந்து ஈரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே புத்தன் கண்ட மார்க்கம் என்றாலும், எதிர்பார்ப்பே இல்லாத அன்பு அவ்வளவு சுலபமா என்ன?

அடி மறந்தால் ஆழம் -கு ப ரா சிறுகதைகள்-பாரத தேவி -1939 26.08.2022

கையூட்டு சுதந்திர இந்தியாவின் சாபமே என்ற எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கதையில், வறுமையிலும் செம்மை பாராட்டும் தன்மையாளரும் இருக்கவே செய்கிறார்கள் என நம்பிக்கையூட்டுகிறார் ஆசிரியர்.

துரோகமா? -கு ப ரா - பாரத தேவி -1939 21.07.2022

தஞ்சை நாயக்கரின் வசமிருந்து, மராட்டிய ஆட்சியின் கீழ் வந்ததை எடுத்துரைக்கும் முக்கிய பின்புலத்தை காட்சிப்படுத்தியுள்ளார் கு ப ரா.

சோகத்தின் முன்னிலையில்-கு ப ரா - பாரத தேவி-1939 04.07.2022

துயர் பொறுக்கும் தியாக வடிவமாக தந்தையார் இருப்பதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். தந்தை - மகளுக்கு இடையேயான இந்த உரையாடல் தந்தைமையின் நாம் காணாத பரிமாணம்...

Ascolta il podcast குறிஞ்சி மலர் su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici