FOR ALL OUR KIDS

For All Our Kids Podcast

Kids EN ↓ 400 episodi

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

Visita il sito del podcast e sostieni chi lo crea: forallourkids.com

Autore

FOR ALL OUR KIDS

Categoria

Kids

Sito del podcast

forallourkids.com

Ultimo episodio

8 lug 2026

Dove ascoltare?

I podcast nell'app Replaio Radio In arrivo

I podcast stanno per arrivare nell'app. Installala ora e scopri per primo un modo tutto nuovo di vivere i podcast

Scaricala su Google Play Installala gratis Android quasi 10 mln di download · valutazione 4,8 iOS in arrivo

Episodi

Thirukkural - தெரிந்து தெளிதல் - 1 08.07.2026

திருக்குறளின் 51வது அதிகாரமான தெரிந்துதெளிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம். தெரிந்துதெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிவடைதல் ஆகும். எந்தச் செய்லையும் செய்வதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று ஒரு தெளிவுடன் செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது.

Thirukkural - இடனறிதல் - 2 24.06.2026

இதற்கு முந்தைய பகுதியில் இடனறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இடனறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்யும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - இடனறிதல் - 1 10.06.2026

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 50வது அதிகாரமான இடனறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்வதற்கும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - காலமறிதல் - 2 27.05.2026

இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து இருத்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கலாம். எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்லிறது.

Thirukkural - காலமறிதல் - 1 13.05.2026

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதல் . எந்த ஒரு செயலைச் செய்யும்போது அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - வலியறிதல் - 2 29.04.2026

திருக்குறளின் வலியறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். வலியறிதல் அதிகாரத்தின் ஆறிலருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டு...

Thirukkural - வலியறிதல் - 1 15.04.2026

இன்றைய பகுதுயில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 48வது அதிகாரமான வலியறிதல் . வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

Thirukkural - தெரிந்து செயல்வகை - 2 01.04.2026

போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம். தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிக...

Thirukkural - தெரிந்து செயல்வகை -1 18.03.2026

திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.  தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - சிற்றினஞ்சேராமை - 2 04.03.2026

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான் சிற்றினஞ்சேராமை .  இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். தீயவர்களுடைய  நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூ...

Thirukkural - சிற்றினஞ்சேராமை - 1 18.02.2026

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போகிறது திருக்குறளின் 46வது அதிகாரமான  சிற்றினஞ்சேராமை .  இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல், தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். அவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்  என்று கூறு...

Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 2 04.02.2026

திருக்குறளின் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதா...

How Parents Help Children Develop Healthy Boundaries - interview with Anu Verma 30.01.2026

In this episode, Anu Verma, a trauma‑informed coach, explores how parents can respect their child’s choices while setting steady and clear expectations, giving children the confidence they need to advocate for themselves.

Thirukkural - பெரியாரைத் துணைக்கோடல் - 1 21.01.2026

இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல் . வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.

Thirukkural - குற்றங்கடிதல் - 2 07.01.2026

திருக்குறளின் குற்றங்கடிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம் குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறரக்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை ந...

Building Emotional Intelligence through Teaching Perspectives - Interview with Ms. Anagha Nair . 31.12.2025

In today's episode, Anagha Nair from the Centre for Teaching Excellence discusses the Centre’s program on teaching perspectives to seventh graders. When students learn to see a situation through someone else’s eyes, they recognize that people can experience the same event differently based on their background, feelings, and needs. They also become more aware of their own emotions, develop emp...

Thirukkural - குற்றங்கடிதல் - 1 24.12.2025

திருக்குறளின் 44வது அதிகாரமான குற்றங்கடிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம். குற்றங்கடிதல் என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறர்க்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.

The Importance of Student Choice - Interview with Ashish John. 17.12.2025

Ashish John, Director, Centre for Teacher Excellence, discusses how designing instruction with student choice in mind empowers students to develop ownership, confidence, and lifelong learning habits.

Thirukkural - அறிவுடைமை - 2 10.12.2025

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் அறிவுடைமை அதிகாரத்தின் ஐந்திலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பாரத்தோம். நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும், அறிவுடையவர்களின...

Late Talkers: Interview with Anuja Katrak 03.12.2025

Anuja Katrak, speech-language pathologist and founder of SPARC , Mumbai, discusses language development in late talkers, the impact on the child's reading abilities, and the importance of seeking professional guidance. Anuja also addresses the quandary that parents in urban India face regarding the language of intervention: should they provide services in their mother tongue, the state langua...

Thirukkural - அறிவுடைமை -1 26.11.2025

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 43வநு அதிகாரமான அறிவுடைமை . இதற்கு முன் திருக்குறளின் 42வது அதிகாரங்களைப் பொருளோடு பாரத்தோம். நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும் அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.

Thirukkural - கேள்வி -2 12.11.2025

இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் கேள்வி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில். பார்க்கப்போகிறோம். கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து...

Thirukkural - கேள்வி -1 29.10.2025

திருக்குறளின் 42வது அதிகாரமான கேள்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.  கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

Thirukkural - கல்லாமை 2 15.10.2025

கல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.  இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது. ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது.

Thirukkural - கல்லாமை 1 01.10.2025

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 41வது அதிகாரமான கல்லாமை. இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பார்த்தோம்.  ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது. இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது.

Ascolta il podcast For All Our Kids Podcast su Replaio

Radio e podcast in un'unica app - gratis e senza registrazione. Installala oggi e non perderti il lancio

Scaricala su Google Play

Replaio non è un editore di podcast; i nomi dei programmi, le copertine e l'audio appartengono ai rispettivi autori e vengono distribuiti tramite feed RSS pubblici