rams

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.comபடிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

Szerző

rams

Kategória

Society

A podcast weboldala

podcasters.spotify.com

Legutóbbi epizód

2026. jún. 8.

Hol hallgathatod?

Podcastok az alkalmazásban Replaio Radio Hamarosan

A podcastok hamarosan megérkeznek az alkalmazásba. Telepítsd most, és láss elsőként egy teljesen új megközelítést a podcastokhoz

Letöltés a Google Play-ről Telepítsd ingyen Android közel 10 M letöltés · 4,8-as értékelés iOS hamarosan

Epizódok

98. பேரிழப்பு – வல்லிக்கண்ணன் 27.11.2019

இடம் பெயர்ந்த மக்களின் பொதுக்குரலாக சொந்த ஊரைப் பற்றிய கற்பனைச் சித்திரங்களை மீண்டும் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தை பின்னர் நிகழும் ஏமாற்றத்தை சொல்லும் கதை.

97. கோயம்புத்தூர்ப் பவபூதி- தி.ஜானகிராமன் 20.11.2019

தி. ஜானகிராமனின் இந்தக் கதை அழிந்துகொண்டிருக்கும் ஒரு கலையை நம்பி பிழைக்கும் ஒரு கிழவரைப் பற்றியது. இதிகாசங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் கிழவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு அல்லாடுகிறார். குறுக்கெழுத்துப்போட்டியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆயிரக்கணக்கில் பரிசுப்பணம் பெறுகிறான். . .காலத்தின் கட்டாயத்தால் அவனை முகத்துதி செய்யவும் அவர் தயங்கவில்லை.

96. வணங்கான் - ஜெயமோகன் 14.11.2019

நமது நாட்டில் நடந்த நடந்துகொண்டிருக்கும் சாதிக்கொடுமைகள் பற்றி அதிகம் அறியாமலேயே ஒரு தலைமுறை உருவாகி விட்டது இங்கு. அமெரிக்காவில் ஆப்பிரிக்க இன மக்களை அடிமைகளாக எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார்களோ அதற்கு சற்றும் சளைத்தவர்களல்ல நமது உயர்சாதி முன்னோர்கள். சினிமாத்தனமான சில நிகழ்வுகளை தவிர்த்து, மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கும் கதை. யானைக்கு அடியில் கட்டப்பட்டு நாறடிக்கப்பட்ட ஒருவன் கதை முடிவில் ய...

95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் 11.11.2019

அரசு அலுவலகங்கள் செயல்படும் விதத்தையும் சில கொண்டாட்டங்களின் அபத்தங்களையும் நையாண்டி செய்யும் இந்த கதை 2007ம் ஆண்டு எழுதப்பட்டது.

94. வீடியோ மாரியம்மன் - இமையம் 01.11.2019

கோவில் திருவிழாவில் கூத்தின் இடத்தை வீடியோ படங்கள் பிடித்திருப்பது .  சாமியை விட வீடியோ படமே இளைய தலைமுறையின் தேவையாக இருப்பது. நடுவில் கொஞ்சம் காதல் . சின்னச் சின்ன தகராறுகள் சண்டைகள். ஒரு செய்திப்படம் போல பலப்பல காட்சிகளை தொட்டுச் செல்கிறது. வித்தியாசமான நடை என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை இந்தக்கதையில். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

93. தம்பி - கௌதம சித்தார்த்தன் 29.10.2019

இந்தக் கதை உளவியலை ஆராயும் கதையாய் தொடங்கி திசை மாறி ( கெட்டு) திரும்ப எப்படியோ வந்து சேர்கிறது. ஆசிரியர் தன்னுடைய கல்வித்தளம் மீதான கருத்துகளை ( கருத்துகளோடு நமக்கு உடன்பாடு தான்) நாலு வயது குழந்தை வாய் மூலமாக வெளிப்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியுமானால் கதையை ரசிக்கலாம்!

92. சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர் 24.10.2019

அன்பும் பரிவும் கூட தண்டனையாய் தெரியக்கூடும். பேயாய் ஒளிந்திருக்கும் பல இச்சைகள் ஆசைகள். . . மகளிர் பத்திரிக்கை மீதான நக்கல் என்று விரிகிறது யுவனின் கதை. . .

91. அபூர்வ ராகம் - லா.ச.ரா 21.10.2019

அற்புதமான மொழியில் உணர்ச்சிப்பிரவாகமாய் கொந்தளிக்கிறது இந்தக் கதை.

90. தண்ணீர் - கந்தர்வன் 15.10.2019

"தண்ணீர்" - கிராமத்து பெண்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டிய கொடுமை.கந்தர்வனின் இச்சிறுகதை அப்பெண்களின் அன்றாடத் துயரங்களை நகைச்சுவைக் கொண்டு பகிர்கிறது.

89. பாதுகை - பிரபஞ்சன் 10.10.2019

நிற பேதத்தை எதிர்த்து போராடி வெற்றியும் பெறும் ஒரு தமிழ் வழக்கறிஞரின் கதை.

88. பாச்சி - ஆ.மாதவன் 08.10.2019

தெருநாய் மீது கடைத்தெரு மனிதனான நாணு கொள்ளும் வாஞ்சையே பாச்சிக் கதை. போக்கற்ற இரு உயிர்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாய் இருக்க ஒன்று இறந்துவிட ஒன்று வாடுகிறது. . .

87. கருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன் 03.10.2019

நல்லா உழைச்சும் சம்பாதிக்க தெரியாத அப்பா, அதுனாலயே திட்டுற அம்மா, அப்பா  வாங்கித் தர்ற திண்பண்டம், விளையாட்டுச்சாமான் மற்றும் அவரைப் பற்றி  பெரியவங்க சொன்ன கதைகளை கேட்டு அப்பாவை பெரிய ஆளாக நினைக்கும் கருப்பசாமி.

86. காடன் மலை - மா. அரங்கநாதன் 01.10.2019

பல அடுக்குகளைக் கொண்ட கதை இது. அதிகம் அறியப்படாத எழுத்தாளர் மா. அரங்கநாதன்.

85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன் 27.09.2019

தினமும் எதிர்கொள்ளும் காட்சிக் களன்களை வைத்து கதைகளைப் படைக்கும் நாஞ்சில் நாடன் வாழ்க்கையின் யதார்த்தங்களை வேடிக்கையோடு பார்க்கிறார் இந்தக் கதையில். 

84. வலி - விமலாதித்த மாமல்லன் 25.09.2019

ஒரு நாலைந்து வயது சிறுவனின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கதை. 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை. 

83. நூறுகள் - கரிச்சான் குஞ்சு 23.09.2019

ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு எழுதிய சிறுகதை.

82. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் ( இறுதி பாகம் - 2/2) 21.09.2019

அருமையிலும் அருமையான கதை. பகட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாத ஒரு உன்னத காதலைப் பற்றியது. பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு பட்டினம் சேர்ந்து வாழும் மக்களின் மனதின் அடிநாதமான ஊருக்குப் போகவேண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது பின்னணியில். பட்டினத்தில் வறுமை யாரையும் விட்டுவைக்கவில்லை - நாட்டு வைத்தியனும் டாக்டரும் ரிக்சாக்காரனும் கூட அவதிப்படுவதை நகைச்சுவையோடு சொல்லி நகர்கிறது கதை. படித்து முடித்த...

82. செல்லம்மாள் - புதுமைப்பித்தன் ( முதல் பாகம் - 1/2) 19.09.2019

அருமையிலும் அருமையான கதை. பகட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாத ஒரு உன்னத காதலைப் பற்றியது. பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு பட்டினம் சேர்ந்து வாழும் மக்களின் மனதின் அடிநாதமான ஊருக்குப் போகவேண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது பின்னணியில். பட்டினத்தில் வறுமை யாரையும் விட்டுவைக்கவில்லை - நாட்டு வைத்தியனும் டாக்டரும் ரிக்சாக்காரனும் கூட அவதிப்படுவதை நகைச்சுவையோடு சொல்லி நகர்கிறது கதை. படித்து முடித்த...

81. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் 17.09.2019

மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்குட்டி முட்டத் தள்ளுகிறது. அன்பு கிடைத்ததும் வழிக்கு வருகிறது.

80. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி 15.09.2019

குளங்களில், ஆற்றுப்படுகைகளில் மீன் பிடிப்பதில் வல்லவரான தாத்தாவுக்குத் துணையாக அவரது பேரனும் செல்கிறான். வெற்றிலை இடித்துத் தருவது, வலையை சீர்படுத்துவது, கண்ணியை சரி செய்வது போன்ற வேலைகளை பேரன்தான் பார்த்துக்கொள்கிறான். ஆனாலும், ‘தாத்தாவைப் போல தானும் மீன்பிடிப்பதில் வல்லவனாக வர வேண்டும்’ என்பதே அவனுடைய இலக்காக இருக்கிறது. சில நாட்களாக தாத்தாவின் தூண்டிலில் மீன்கள் சிக்குவதாகத் தெரியவில்லை.  தலைமு...

79. இருளப்பசாமியும் 21 கிடாயும் - வேல.ராமமூர்த்தி 13.09.2019

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒருபுறம் கல்விக் கூடங்களில் ஆங்கில  மொழி கற்பிக்கப்பட்டு அரசாங்கப் பணிக்கான ஆள்சேர்ப்பு நடந்தது.  மற்றொருபுறம் சரியாகக் கல்வி கிடைக்காதவர்கள் தங்களின் குலத்தொழிலைத்  தொடர்ந்து வந்தனர். வறுமையின் காரணத்தால் சில சாதியினர் கொலை, கொள்ளை,  திருட்டு போன்ற செயல்களையும் செய்து வந்தனர். அவர்களை ஒடுக்க அல்லது  சீர்திருத்தம் செய்ய 1871ஆம் ஆண்டில் இந்தியா முழுமையும் குறிப்பிட்ட சில  ...

78. அணி - எஸ்.பொன்னுதுரை 08.09.2019

ஒரு முடி வெட்டும் தொழிலாளி கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டே, தன் தொழிலையும் பார்த்துக்கொண்டு, பல செய்திகளை வேலையோடு வேலையாகச் சொல்லும் உத்தி அருமை. ஈழத் தமிழ் மணக்கும் இந்தக் கதையை படிக்க முயற்சித்திருக்கிறேன். ஈழத் தமிழர்கள் பொருத்தருள்க!!

77. கடிகாரம் - நீல.பத்மநாபன் 06.09.2019

ஓடாத கடிகாரத்தின் பின்னால் ஓடும் மனம். நோய் என்ன என்று ஆராயாமல் ஆன்டிபயாடிக் எழுதிக்கொடுக்கும் டாக்டர். தீராத வலியில் தத்தளிக்கும் ஒருவன் கரையேற ஒரு கடிகாரத்தைப் பற்றிக் கொள்கிறான். அதன் துடிப்பே தன் உயிர்த் துடிப்பு என்றிருக்கிறான். . . .

76. தனுமை - வண்ணதாசன் 04.09.2019

கைவிடப்பட்டது இந்தக் கதையில் காதல் மட்டுமே! பாவம் அநாதையாக நிற்கிறது!

75. கடிதம் - திலீப்குமார் 02.09.2019

பிள்ளைகளால் சரியாக கவனிக்கப்படாத ஒரு ஏழைக் கிழவர் மற்றொரு பணக்கார கிழவருக்கு கடிதம் எழுதுகிறார். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை, தன் கடைசி ஆசைகளை, மகன் மருமகள்களைப் பற்றியெல்லாம் எழுதுகிறார். உண்மையில் வேதனைப் பட்டாலும் அடியோடும் அங்கத நடையினால் நம்மை புன்னகைக்கவும் வைக்கிறார் திலீப்குமார்.

Hallgasd a(z) தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories podcastot a Replaióban

Rádió és podcastok egy alkalmazásban - ingyen és regisztráció nélkül. Telepítsd még ma, és ne maradj le a premierről

Letöltés a Google Play-ről

A Replaio nem podcastkiadó; a műsorok nevei, borítóképei és hanganyagai a szerzőiket illetik, és nyilvános RSS-csatornákon keresztül terjednek.